Tuesday, July 31, 2012

ரு கழுதையையும் ஒரு நாயையும் பற்றிய கதை இது.
'உள்ள யாரோ போறாங்க. நீ குரைச்சு நம்ம முதலாளியை எழுப்பு'' என்றது கழுதை.
 அது பழக்கப்பட்ட வாசனைதான். நீ ஒண்ணும் கவலைப்படவேண்டாம். எனக்குத் தெரியும். எப்ப குரைக்கணும்னு'' இது நாய்.
' அவன் கையிலப் பாரு. எவ்ளோ பெரிய கம்பி வெச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன்''
கழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது
'நீ இப்ப குரைக்கப் போறியா இல்லையா?''
 முடியவே முடியாது. உள்ளே முதலாளியோட சின்னக் குழந்தை தூங்குது. நான் குரைச்சு குழந்தை முழிச்சுட்டா ராத்திரி முழுக்க அழுதுக்கிட்டே இருக்கும். பாவம். நான் மாட்டேன்பா''
நாய் சோம்பல் முறித்தபடி வசதியாகப் படுத்துக்கொண்டது. கழுதைக்குக் கோபம் தலைக்கு ஏறியது. உள்ளே நுழைந்த மனிதர் கதவுப் பக்கம் போகவே தன் எஜமானரை எழுப்பக் கழுதை தன் வழக்கமான குரலில் கத்தத் தொடங்கியது. கழுதை போட்ட சத்தத்தினால் குழந்தை விழித்து அழத்தொடங்கியது
கழுதை கத்துவதைக் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு எஜமானன் தன் வீட்டுக்கு வந்த அந்த மனிதரை வீட்டுக்குள் அனுப்பி விட்டு 'நேரம் கெட்ட நேரத்தில் கத்தியதற்காககழுதையை நாலு சாத்து சாத்தினார். அவர் உள்ளே போனதும் நாய் சொன்னது, 'அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செஞ்சாப் போதும். மத்தவங்க வேலையில தலையிட்டுக் குழப்பம் விளைவிச்சா தனக்கே கேடு விளையும்!''

Thursday, July 19, 2012



நல்லவர்
ல்லோரும்
எல்லோருக்கும் நல்லவரில்லை
யாரோ ஒருவர்
யாருக்காகவோ
வேண்டுதல் செய்கிறார்
சபிக்கவும் செய்கிறார்
கொலைகாரனுக்கும்
கொல்லப்பட்டவனுக்கும்
இருவேறு நியாயங்கள்
எடுக்கப்பட்டதற்கும்
கொடுக்கப்பட்டதற்கும்
ஏதோ ஒரு காரணம்
எல்லாத் தீர்ப்புகளிலும்
ஒருவர் சிரிக்கிறார்
மற்றொருவர் அழுகிறார்
நீங்கள்
மழையை ரசித்த தருணங்களில்
குடிசை இல்லாதவர்கள்
குளிரில் நடுங்குகிறார்கள்
விற்கிறவனுக்கும்
வாங்குகிறவனுக்கும்
ஏதோ ஒரு தேவை
உடம்பை விற்ற பணத்தில்
உடைகளும் வாங்கப்படுகின்றன
சொல்லப்படாமலும்
ஏற்கப்படாமலும் - சில
மன்னித்தல்கள்
மனதிலே விக்கி நிற்கின்றன
கர்ணனின் பார்வையில்
துரியோதனன்...
திரௌபதிக்கு...?
எல்லோருக்கும்
எல்லோரும் நல்லவரில்லை.
- தஞ்சை சூர்யா


சிக்னல்
ச்சை விளக்கைப்
பிச்சை எடுக்கின்றன
சிக்னலில்
வாகனங்கள்.
- கே.வி.முத்து

Thursday, July 12, 2012

செய்தியும் சிந்தனையும்


23 B›W• LÖ¦ CPjLÛ[ ŒWT Bp¡VŸ Rh‡†ÚRŸ° CÁ¿ SPef\‰ 6½ XyN• Bp¡VŸL· Gµ‰f\ÖŸL·

மிக மிக வேதனையான விஷயம். ஆசிரியர்கள் பாடம் நடத்த ப.எட என்ற ஒரு தேர்வு எதற்கு. இந்த தேர்வு மூலம் அரசாங்கத்துக்கு வருமானம் மட்டுமே. ஒரு சாதாரண கணக்கு போடுவோம்

விண்ணப்ப படிவம் 100 ருபாய்
நுழைவு கட்டணம் 500 ருபாய்
மொத்தம்           600 ருபாய்

650000 பேருக்கு  390000000 ருபாய்

இதில் எங்கே அரசாங்கம் தன்னுடைய பணத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு சம்பளம் தருகிறது? அவர்களுடைய பணத்தை வாங்கி அவர்களுக்கே தருகிறது. இதில் ஆசிரியர்களை பற்றி நம் முதல்வர் மிக மோசமாக விமர்சனம் செய்கிறார்.

இந்த தேர்வின் பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளுங்கள்.