Monday, January 26, 2026

 ரேபீஸ் தடுப்பூசி அவசியம்!



தெருநாய், வளர்ப்பு நாய், பூனை, குரங்கு என எந்த விலங்கு கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.=*

நாய் கடித்த இடத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்களுக்குக் குழாய்த் தண்ணீரில் கழுவ வேண்டும். கடித்த இடத்தில் கட்டு போடக்கூடாது. சுண்ணாம்பு, காபித்தூள் போன்றவற்றைப் பூசக்கூடாது.=*

கடிபட்டவுடன் முதல் தவணை, 3-ம் நாளில் இரண்டாம் தவணை, 7-ம் நாளில் மூன்றாம் தவணை, 28-ம் நாளில் நான்காம் தவணை என முறைப்படி தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.=*

காயம் கடுமையாக இருந்தால், ‘இம்யுனோக்ளோபுலின்செலுத்திக்கொள்ள வேண்டும்.=*

நாய் உட்பட எல்லா வளர்ப்புப் பிராணிகளுக்கும் முறைப்படி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.=*


Saturday, September 20, 2025

வாசித்ததில் நேசித்தது 



"அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் ...?

1. பள்ளிக்கு பஸ் பாஸில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.
2.பள்ளியில் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.
3. அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவார்கள்.
4.இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
5. பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான்.
6. சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான்.
7. கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
8. வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.
9. தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.
10. அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.
11. IT-டைடல் பார்க்கில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.
12. நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
13. சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான்.
14. காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
15. அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்..
16. அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.
17. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழால் பயன்பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
18. 1974 க்கு பிறகு இட ஒதுக்கீட்டில் அரசு வேலையை வாங்கி மூன்று தலைமுறைகளாக அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
19. 1989 க்கு பிறகு மத்திய அரசு பணிகளில் பணியில் அமர்ந்து அதன் மூலம் தேச பக்தனாக மாறியவன் கலைஞரே திட்டுவான்
20. உழவர் சந்தை என்கிற ஒப்பற்ற திட்டத்தை கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டிருப்பவர்
கலைஞரை திட்டுவார்
21. இலவச மின்சாரத்தால் ஆயிரங்களிலும் லட்சங்களிலும் மின்சார கட்டணத்தை சேமித்தவர்கள் கலைஞரை திட்டுவார்கள்
22.1974 இருந்து எல்லா கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளையும் பொது விநியோக முறையையும் அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
23. 55 வருடங்களுக்கு முன்பே வீட்டுக்கு குடிநீர் வசதியை பெற்று அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்.
24. இந்தியாவிலேயே அற்புதமான சாலை வசதிகளை 60 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
25. ஜாதி மத சமூக வித்தியாசம் இல்லாமல் முதல் தலைமுறையில் பட்டதாரியானா
கலைஞர் கருணாநிதியை பிடிக்காது
என்ன செய்வது இவை அனைத்தும் #கலைஞரின் ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமலே திட்டுவான். 🖤❤️

Sunday, July 27, 2025

இஸ்லாமிய வெறுப்பும் இந்துத்துவமும்

தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
கோல் கும்பஸ் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
சிவப்பு கதவுகள் = முஸ்லிம்களால் செய்யப்பட்டவை;
ஏவுகணை = முஸ்லீமால் உருவாக்கப்பட்டது (டாக்டர் கலாம்);


இந்தியா கேட் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
இந்தியாவின் நுழைவாயில் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
ஹவுரா பாலம் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
பாராளுமன்ற மாளிகை = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
ராஷ்டிரபதி பவன் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
வடக்கு-தெற்கு தொகுதி = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
கன்னாட் பிளேஸ் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது..... (கட்டப்பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.)
அரசியலமைப்பு = எஸ்சி உருவாக்கப்பட்டது (டாக்டர் அம்பேத்கர்);


அப்படியென்றால் இந்தியாவில் இந்த புண்ணிய பிராமணர்கள் என்ன செய்கிறார்கள்?
- நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
நாடு, மதம், கலாச்சாரம், நாகரிகம், சமூகம் ஆகியவற்றை பலவீனப்படுத்துகிறது!
நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கி வருகின்றனர்.
- நாட்டை உடைத்திருக்கிறார்கள்!
நாட்டுச் செல்வம், மதப் பயம் என்ற பெயரில் கோயில்களில் வசூல் செய்து வருகின்றனர்!


1987 - போஃபர்ஸ் பீரங்கி ஊழல், 960 கோடி
1992 - பங்கு ஊழல், 5,000 கோடி.
1994 - சர்க்கரை ஊழல், 650 கோடி
1995 - முன்னுரிமை ஒதுக்கீடு ஊழல், 5,000 கோடி
1995 - சுங்க வரி மோசடி, 43 கோடி
1995 - கப்லர் ஊழல், 1,000 கோடி
1995 - தினார் / ஹவாலா ஊழல், 400 கோடி
1995 - மேகாலயா வன ஊழல், 300 கோடி
1996 - உர செவ்வக ஊழல், 1,300 கோடி
1996 - தீவன ஊழல், 950 கோடி
1996 - யூரியா ஊழல், 133 கோடி
1997 - பீகார் நில ஊழல், 400 கோடி
1997 - மியூச்சுவல் ஃபண்ட் ஊழல், 1,200 கோடி
1997 - சுக்ராம் டெலிகாம் ஊழல், 1,500 கோடி
1997 - SNC மின் திட்ட ஊழல், 374 கோடி
1998 - உதய் கோயல் விவசாய விளைபொருள் ஊழல், 210 கோடி
1998 - தேக்கு மரக்கன்று ஊழல், 8,000 கோடி
2001 - டால்மியா பங்கு ஊழல், 595 கோடி
2001 - UTI ஊழல், 32 கோடி
2001 - கேதன் பரிக் பத்திர ஊழல், 1,000 கோடி
2002 - சஞ்சய் அகர்வால் வீட்டு முதலீட்டு ஊழல், 600 கோடி
2002 - கல்கத்தா பங்குச் சந்தை ஊழல், 120 கோடி
2003 - முத்திரை ஊழல், 20,000 கோடி
2005 - ஐபிஓ காரிடார் ஊழல், 1,000 கோடி
2005 - பீகார் வெள்ளப் பேரிடர் ஊழல், 17 கோடி
2005 - சார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், 18,978 கோடி
2006 - பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், 1,500 கோடி
2008 - கருப்புப் பணம், 2,10,000 கோடி
2008 - சத்யம் ஊழல், 8,000 கோடி
2008 - ராணுவ ரேஷன் ஊழல், 5,000 கோடி
2008 - ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிரா, 95 கோடி
2008 - ஹசன் அலி ஹவாலா ஊழல், 39,120 கோடி
2009 - ஒரிசா சுரங்க ஊழல், 7,000 கோடி
2009 - அரிசி ஏற்றுமதி ஊழல், 2,500 கோடி
2009 - ஜார்க்கண்ட் சுரங்க ஊழல், 4,000 கோடி
2009 - ஜார்க்கண்ட் மருத்துவ உபகரண ஊழல், 130 கோடி
2010 - ஆதர்ஷ் வீடு ஊழல், 900 கோடி
2010 - உணவு தானிய ஊழல், 35,000 கோடி
2010 - பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல், 2,00,000 கோடி
2011 - காமன் வெல்த் ஊழல், 70,000 கோடி


இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை, எந்த முஸ்லீமும் இல்லை, எந்த கிறிஸ்தவரும் இல்லை, எந்த SC, ST, OBC களும் இல்லை, இந்த மோசடிகள் அனைத்தும் போலி தேசபக்தியுள்ள பிராமண-பனியாக்கள் என்று அழைக்கப்படுபவர்களால் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மேல், இடஒதுக்கீட்டால் நாடு பின்னோக்கிப் போகிறது என்று இந்த அயோக்கியர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்

Monday, February 3, 2025

ரஜினிகாந்தும்  தமிழக அரசு மருத்துவமனையும் 

திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு , Aortic aneursym ஏற்பட்டது, அதற்கான சிகிச்சை முடிந்து நேற்று நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .

அதைப்பார்த்த பலரும் " காசு இருப்பவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு போலாம்.

காசு இல்லாத ஏழைகள் அரசு மருத்துவமனைக்குத் தான் போகனும். அங்கே இந்த நோயை கண்டுபிடிப்பார்களா ? சரியான சிகிச்சை கிடைக்குமா ?  என்று கமெண்ட் செய்தனர்.

நேற்று மதியம் ஒரு முதியவர், காய்ச்சல் சளி இருமலுக்கு சிகிச்சை பெற என் கிளினிக் வந்திருந்தார்.

கையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சைப்பெற்ற நோட்டை வைத்திருந்தார் .

அதை வாங்கி பார்த்ததில் , எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

Diagnosis : Aortic aneursym with hematoma என்று எழுதியிருந்தது.

திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட அதே aortic aneurysm என்ற நோயை, இந்த முதியவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் diagnosis செய்து, சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களும் diagnose செய்யப்படும். அதற்குரிய சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும்.

2014ல் நான் கிளினிக் தொடங்கிய சமயத்தில் Vildagliptin 50mg என்ற சுகர் மாத்திரையின் விலை ₹25 .

தற்போது அதே மாத்திரை, வடுவூர் PHC ( அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்) வாங்கி சாப்பிடுவதாக ஒரு பாட்டி தனது நோட்டைக் காட்டினார். அதில் VILDAGLIPTIN 50MG என்று எழுதியிருந்தது.

கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் PRO PL என்ற பவுடரின் விலை ₹695.

B PROTIN, D PROTIN போன்ற உலக பிரசித்தி பெற்ற பவுடர்களை தயார் செய்யும் BRITISH BIOLOGICALS எனப்படும் நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த PRO PL பவுடர்.

இதைத்தான் தமிழக அரசு இலவசாமாக, பாட்டில் பாட்டிலா தராங்க.

- Dr Suriya Prakash Post

வாசித்ததில் நேசித்தது


சாக்ரடீஸை படியுங்கள்' என்ற போது நீங்கள் கிரேக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'கார்ல் மார்க்ஸை படியுங்கள்'என்ற போது நீங்கள் யூதனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள்' என்றபோது நீங்கள் ஜெர்மானியனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'விளாடிமிர் லெனினை படியுங்கள்" என்றபோது நீங்கள் ரஷ்யனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள்' என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஜான் லாக்கை படியுங்கள்' என்ற போது நீங்கள் சுதந்திரவாதியா? என்று கேள்வி எழுப்பவில்லை

'ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள்' என்றபோது நீங்கள் கியூபனா? என்று கேள்வி எழுப்பவில்லை

'நெல்சன் மண்டேலாவை படியுங்கள்' என்ற போது நீங்கள் தென் ஆப்பிரிக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள்' என்ற போது நீங்கள் அமெரிக்கனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'மார்ட்டின் லூதர் கிங்கை படியுங்கள்' என்ற போது நீங்கள் நீக்ரோவா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'சார்லஸ் டி கோளலை படியுங்கள்' என்ற போது நீங்கள் பிரெஞ்சுக்காரனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

'வில்லியம் வாலஸை படியுங்கள்' என்ற போது நீங்கள் ஸ்காடிஷ்ஸா?' என்று கேள்வி எழுப்பவில்லை..

'மாவோ சேதுங்கை படியுங்கள் என்ற போது நீங்கள் சீனனா? என்று கேள்வி எழுப்பவில்லை..

ஆனால்

தன் வாழ்நாளில் 46 லட்சம் புத்தகங்களை வாசித்த, உலகின் மிகப்பெரிய வடிவிலான அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த, 15000 பக்கங்களை எழுதி 55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை போதித்த, காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காக போராடிய, சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவிற்குள் போராடிய..

'பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt. அவர்களை படியுங்கள்' என்றால் மட்டும்

ஏன் நீங்கள் தலித்தா?' என்ற மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது?

நன்றி: முனைவா் ம. குமரவேல்
அம்பேத்கர் நினைவலைகள்


நம் எல்லோரையும் குறித்த பெரும்பாலான முக்கியத் தகவல்கள் இணையவெளியில் கசிந்து கிடக்கின்றன. உங்கள் பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம், உங்களது பத்தாவது மதிப்பெண் எல்லாம் சரியாகச் சொன்னாலும் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்.

டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தவிர, எந்த வங்கிப் பணியாளரும் வாடிக்கையாளரை போனில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்கவே மாட்டார்கள். சிக்கலில் இருக்கிறேன் என்று பணம் கேட்டு நண்பரிடம் இருந்துவரும் உள்பெட்டி செய்தி அனைத்துமே மோசடிதான். 

பணம் வேண்டும் என்றால் நண்பர்கள் போனில் அழைப்பார்களே தவிர வெறும் செய்தி அனுப்ப மாட்டார்கள். 

பணம் தர வேண்டும் என செல்பேசியில் வரும் எதையும் நம்பாதீர்கள். ‘நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் பேசுவோம், அல்லது உங்கள் அலுவலகத்திற்கு நானே நேரில் வருகிறேன்’ எனச் சொல்லுங்கள்

ஒருவரிடமிருந்து பணத்தை உடனடியாக மோசடி செய்ய வேண்டுமெனில் அவரை யோசிக்கவிடாமல் செய்ய வேண்டும், இதற்கு இரண்டு உத்திகள் போதுமானவை. முதலாவது அவருக்கு அதீத பயம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

உங்கள் வங்கிக் கணக்கு இன்றுடன் முடக்கப்படுகிறது, நீங்கள் வருமான வரி ஏமாற்றியதால் கைது நடவடிக்கை தொடங்குகிறோம், உங்கள் மகன்/மகள் விபத்தில் சிக்கிவிட்டார், போதைப் பொருள் வழக்கில் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்கள் புகைப்படம் வெளியில் வந்தால் மொத்தச் சமூகமும் சிரிக்கும் என இவையெல்லாம் முதல் உத்தி. போலி லோன் செயலிகளின் கலெக்‌ஷன் பணியாளர்கள் இதைவிட மார்பிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஆனாலும் துளி பயமின்றி, காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.

உங்களுக்கு போனஸ் வந்திருக்கிறது, பரிசு விழுந்திருக்கிறது, ஒரு ரூபாய் இன்வெஸ்ட் செய்தால் நூறு ரூபாய், க்ரிப்டோ முதலீடு,  வீடியோவை லைக் செய்தால் காசு, ஸ்க்ரீன் ஷாட் அனுப்பினால் காசு என சதுரங்க வேட்டை வகையில் அழைப்புகள் வந்தாலே உஷாராகிவிட வேண்டும்

இந்தச் சிறிய தொகையை மட்டும் செலுத்தினால் போதும், இத்தனை லட்சம் உங்களுக்குச் சொந்தம்’ என வரும் அத்தனை அழைப்புகளும் மோசடிதான்.

நம்மைப் பணக்காரனாகவோ, அதிர்ஷ்டசாலியாகவோ ஆக்குவதற்காக எந்த நிறுவனமும் தொடங்கப்படுவதில்லை என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும்.

ஒருவேளை மோசடியில் சிக்கிக்கொண்டீர்கள். முதல் முறை பணத்தை இழந்துவிட்டீர்கள் என்றால், ‘இழந்ததை மீட்கிறேன்’ என மீண்டும் மீண்டும் மோசடியாளர்களுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.

‘சிறிய தொகை... இதைத் தந்தால் போதும், முந்தைய தொகையும் சேர்த்து கிடைத்துவிடும்’ எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெருந்தொகையை மோசடி செய்வதுதான் நவீன மோசடிகளில் மாறாமல் இருக்கும் ஓர் உளவியல் உத்தி.

முதலில் முதலீடு செய்த ஐம்பதாயிரத்தை மீட்க மீண்டும் ஒரு ஐம்பதாயிரம், இப்போது ஒரு லட்சத்தை மீட்க மீண்டும் ஒரு லட்சம் என உங்கள் கவனத்திற்கு வராமலே ஐந்து லட்சத்தை இழந்திருப்பீர்கள். சிறுகச் சிறுக சேமித்தால் எப்படிப் பெரும் பணம் சேருமோ, அதுபோலவே சிறுகச் சிறுக இழந்தாலும் பெரும் பணம் இழப்பு நேரும்,

ஆகவே மோசடியில் ஒருமுறை பணம் இழந்துவிட்டால், புகார் தந்துவிட்டு ‘போனது போனதுதான்’ எனக் காவல்துறை நடவடிக்கைக்காகக் காத்திருங்கள். மோசடியாளர்கள் மீண்டும் அழைத்துப் பணம் கேட்டு மிரட்டுவார்கள், கெஞ்சுவார்கள், கோபமூட்டுவார்கள், அவர்களது எண்ணை பிளாக் செய்துவிடுங்கள். முதல்முறை இழந்த மன வலி இருக்கத்தான் செய்யும். ஆனால், இரண்டாவது முறை, மூன்றாவது என அனுப்ப அனுப்ப, மொத்தக் கையிருப்பும் கரைந்து வாழ்வு விரக்தியாகிவிடும்.

அதுபோலவே சமூகத்தை இணைத்திருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களே இப்போது விலகியிருக்கக் காரணமாக இருக்கின்றன. சதா நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருக்கும் மனிதர்கள் தெரிவதில்லை. தெரியாத விஷயங்களுக்குப் பணம் அனுப்பும்போது, ஒரு நண்பரிடமாவது கேட்டு, அதுகுறித்த தெளிவுபெற்ற பிறகு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

மேலும் எத்தனை சட்டங்கள் வந்தாலும், தண்டனைகள் கடுமையானாலும், இந்த இணைய வேதாளங்கள் விக்ரமாதித்தனைப் போல நம் முதுகில் அனுதினமும் ஏறத் துடித்துக்கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் மோசடி அழைப்புகள் மூலம் உங்களைக் குறி வைப்பார்கள். அழைப்பை ஏற்ற முதல் நொடியில், ‘ஆளை விடு சாமி, இது மோசடி' என நீங்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும் 

விழிப்புணர்வே மோசடிகளுக்கு எதிரான ஓர் ஆயுதம்! 

Saturday, August 31, 2024

தேங்கிய நீர்  பாக்டீரியாக்களின் பண்ணை 



நாம், நம் உடல் தகுதி (Fitness) குறித்து அக்கறை காட்டுகிறோமா?

இந்தியாவில் வசிப்பவர்களில் பாதிப் பேர் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமலும், உடல் தகுதி இல்லாமலும் இருக்கிறார்கள்’ என்று ‘லான்செட்’ எனும் பிரபல மருத்துவ ஆய்விதழ் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தந்திருக்கிறது. 

ஆண்களில் 42 சதவிகிதம் பேரும், பெண்களில் 57 சதவிகிதம் பேரும் உடல்ரீதியாகச் செயலற்றவர்களாக இருக்கிறார்கள். 

உடல் செயல்பாடு இல்லாத இந்த நிலைமை 2000-ல் 22.3% என இருந்தது. 2022-ல் இது 49% என்று உயர்ந்தது. இந்த நிலைமை நீடித்தால், 2030-ல் இந்தியாவில் 60% பேர் போதுமான உடல் தகுதி இல்லாமல், பலவித நோய்களின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள்’ என்று அந்த ஆய்வறிக்கை கவலைப்படுகிறது.

இந்த ஆய்வின்படி, போதுமான உடல் உழைப்பும் உடல் செயல்பாடும் இல்லாத மக்கள் வசிக்கும் 195 உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 25 வருடங்களில் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்களும் பக்கவாத பாதிப்புகளும் 50% அதிகரித்திருக்கின்றன. 

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியாகவும், நுரையீரல் நோயாளிகளின் எண்ணிக்கை 5.5 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. 

2016-ல் மட்டும் 2.8 கோடி பேர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கிறார்கள். 1990-ல் புற்றுநோயால் இறந்தவர்கள் 5.5 லட்சம் பேர். இந்த எண்ணிக்கை இப்போது 10.6 லட்சமாக உயர்ந்திருக்கிறது. 

இந்தப் பேராபத்துகளுக்கு, உடல் செயல்பாடு குறைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடல் இயக்கம் ஏன் அவசியம்?

‘வளர்ந்தவர்கள் அனைவருக்கும் தினசரி 45 நிமிடம் நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் பயிற்சி உள்ளிட்ட ஒரு காற்றலைப் பயிற்சி (Aerobic exercises) அவசியம். அல்லது வாரத்துக்கு 150 நிமிடம் முதல் 300 நிமிடம் வரை நடைப்பயிற்சி அவசியம்' என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிது. 

குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் தினமும் 60 நிமிடம் உடற்பயிற்சி தேவை. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அம்மாக்களுக்கும்கூட இது பொருந்தும். இதன்படி செய்தால், அவர்கள் உடல் தகுதி பெறுவது மட்டுமல்லாமல், மனநலமும் உறுதியாகும். வாழ்க்கைத் தரம் உயரும். 

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களைத் தவிர்க்கலாம். 30% அகால மரணங்களைத் தடுக்கலாம். 8% மனச்சோர்வு மற்றும் மறதி நோயிலிருந்தும் தப்பிக்க முடியும். 

மூத்தோருக்கு எலும்பும் தசைகளும் வலிமை பெற்றுவிடும் என்பதால், நடை தள்ளாட்டமும் தரையில் விழுவதும் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.


தற்போதைய வாழ்க்கைமுறை மாற்றங்களும் உடல் செயல்பாடு குறைந்து போனதற்குக் காரணம்'' என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் ருடிகர் க்ரெச். ‘‘

அமர்ந்தே பார்க்கும் வேலைகள் அதிகமாகி வருகின்றன. ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ஆன்லைன் ஷாப்பிங்கில் இறங்கினோம். 

இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைப்பேசி பொத்தானைத் தட்டி, ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்து விடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக் கொண்டோம்.

கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைப்பேசியைக் கொடுத்து, இணையவழி கற்றலுக்குப் பழக்கப்படுத்தினோம். அவர்கள் கைகளிலிருந்து கைப்பேசியை இப்போது வாங்க முடியவில்லை. வெளியில் விளையாடச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். 

பெரியவர்கள் ‘வீட்டிலிருந்து வேலை’ செய்ய ஆரம்பித்தோம். கொரோனா முடிவுக்கு வந்த பின்னும், நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ கோட்பாட்டை நம் தலையில் கட்டின. வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வதை ஒப்பிடும்போது அமர்ந்தே வேலை செய்வது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இது நம் ஆரோக்கியத்துக்குக் குழி பறிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?’' 

காத்திருக்கும் ஆபத்துகள்

உடல் செயல்பாடு குறைவதால் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மறதி நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் தாக்குவது அதிகரிக்கும். மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றால் அகால மரணங்கள் அதிகரிக்கும்

2020-க்கும் 2030-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் 50 கோடி மக்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.