Friday, February 25, 2011


ஆசை நூறுவகை
காதல் வைபோகமே
ஒரு கூட்டு கிளியாக
பூங்காற்று திரும்புமா
நீ  கொடுத்தத திருப்பி கொடுப்பேன்

நீங்கள் இயற்கை எய்தியது
செய்தி கிட்டியதும்
சட்டென்று ஒரு வினாடியில் தோன்றிய
பாடல்கள்தான் மேலே குறிப்பிட்டவை
நல்ல குரலும், சூழ்நிலைக்கேற்ப பாடுவதும்
தமிழ் உச்சரிப்பும் இருந்த ஒரு குரல்
மெல்ல ஒலி இழந்து
உயிரும் இழந்தது
வாலிபத்தின் வாசலில்
பல நேரங்களில்
என்னை மெய் மறக்க
செய்த உன் குரலுக்கு
நன்றி


திரையும்  கலையும்

Peepli  Live (ஹிந்தி)


என்னடா ஹிந்தி படம்லாம் பாத்து எழுத ஆரம்பிச்சுட்ட  ன்னு நெனக்க வேண்டாம் இங்கிலீஷ் Subtitle உதவியுடன் பார்த்தேன்.

இந்தியாவில் விவசாயிகள்  வாழ்க்கை   நிலையை செவிட்டுல அறையுராப்ல நகைச்சுவையும் , கிண்டலும், கேலியுமா அதிகமா சிந்திக்க வைத்தும் படம் எடுத்திருக்கிறார்கள்.

நத்து வும் அவரது மூத்த சகோதரரும் கடனை திருப்பி அடைக்காததல் அவர்கள் நிலம் பறிபோகும் நிலை. உதவி கேட்டு கட்சி அலுவலகம் செல்ல அங்கே... இருக்கும் பெரிய மனிதர்கள்  இவர்களை கேலியும் கிண்டலும் செய்ய... ஒரு கட்டத்தில் .....Government  ல ஒரு scheme  இருக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் ஒரு லட்ச ருபாய் தருவார்கள். என்று சொல்கிறார்கள். அதை இவர்கள் இருவரும் ...மிக சீரியஸ் ஆக எடுத்து கொண்டு மூத்தவர் இளையவரை அதாவது  நததுவை நீ தற்கொலை செய்து கொள் நான் குடும்பத்தையும் மற்றவர்களையும் பார்த்து கொள்கிறேன் என்று சொல்கிறார்.  இந்த விஷயத்தை ஒரு டீ கடையில் வைத்து Government  ல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் ஒரு லட்ச ருபாய் தருவார்கள். என்று சொல்கிறார்கள் அங்கு பின்னால் நிற்கும் ஜன மோட்சா  என்ற லோக்கல் பத்திரிகை நிருபர் அதை செய்தியை வெளியிட. அது election  நேரமாகையால் ஒரு பெரிய தொலைகாட்சி நிறுவனம் பேட்டியெடுக்க நினைக்கிறது. மற்றும் அவர்களது தற்கொலையை ஒளிபரப்ப நினைக்கிறது. அது ஆங்காங்கே பரவி... Peepli  என்கிற இவர்களது கிராமம், மற்றும் நத்து  காலைக்கடன் சென்றால் கூட கேமராவால் தொடரப்படுகிரார்கள்.இதற்கிடையில் லோக்கல் வேட்பாளர்களால் இலவச தொலைகாட்சி அளிக்கப்படுகிறது. அது வீட்டில் ஒரு மூலையில் அப்படியே கிடக்கிறது. முதல்வர் வந்து சந்திக்கிறார். இதில் பெரிய வேடிக்கை என்னெவென்றால் நமது விவசாய மந்திரி  படம் முடியும் வரை நமக்கு இன்னும் ஹை கோர்ட் ஆர்டர் வரல என்று சொல்வதுதான். இறுதியில் ஒரு ஊடகம், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் பிடியில் நத்து. அங்கு செல்லும் ஜன மோட்சா நிருபர் அங்கு செல்ல நடக்கும் பிரச்சனையில் அவர் இறக்க . நத்து காணமல் போய்விட. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் நத்து இறந்து விட்டார் என்று சொல்கிறது. திரை இருள்கிறது. அடுத்து நகரத்தில் விழிக்கிறது. அங்கு நத்து கட்டிட வேலையில் அமர்ந்திருக்கிறார். திரையில் எழுத்துக்கள் மேலே ஊர்ந்து செல்கிறது. விவசாயிகள் கிராமத்தில் இருந்து வெளியேறும் புள்ளி விவரத்துடன். யோசிக்க வைக்கிறது. நத்து பாத்திரத்தில் நடித்த மற்றும் அவரது அண்ணன் பாத்திரத்தில் நடித்தவர்கள் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். நத்து பாத்திரத்தில் நடித்தவருக்கு அப்படியே நம் மயில்சாமி நடிகரின் சாயல். மற்ற எல்லோருமே நிறைவாக செய்திருக்கிறார்கள். நம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியை எச்சரிக்கையை சொல்லும் ஒரு திரைப்படம். அமீர்கான் ஒரு சமூக பொறுப்புள்ள கலைஞன். அவரின் தாரே சமீன் பர். போலவே இதுவும் ஒரு நல்ல படம்.

Sunday, February 20, 2011

திரையும் கலையும்


ஆடுகளம்

Aadukalam Review

எனக்கு தெரிந்து  பாலு மகேந்திரா வின் சீடர்கள் தான் ஒரு கதையை மிக மிக நுணுக்கமாக அணு அணுவாக பிரித்து மேய்கிறார்கள். அவரின் சீடர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வந்துள்ள ஆடுகளம் அதை நிரூபிக்கிறது. எனக்கு அவர் திரைப்படத்தில் காட்டியுள்ள (முக்கியமாக கிராபிக்ஸ் உதவியுடன் ) சேவல் சண்டைக் காட்சி நேரில் பார்த்த அனுபவம் உண்டு. என்னுடன் Polytechnic  College  இல் Physics  Lecturer  ராக
பணிபுரிந்த நண்பரின் குலதெய்வம் கோயில் கிடா வெட்டுக்கு நாங்கள் உணவு வெட்ட போயிருந்த போது அங்கு ஒரு பெரிய பந்தல் போட்டு நிறைய சேவல் த்யாராயும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்தது.( திண்டுக்கல்  அருகே அம்மா பட்டியில் இன்றும் நடக்கிறது)  ஆட்கள் பந்தயம் வேறு கட்டிக்கொண்டு இருந்தார்கள். நான் ஏண்டா காமெராவை எடுத்துட்டு வரலையே ன்னு வருத்தப்பட்டேன். சரி படத்தைப்பற்றி பேசுவோம்.


கதை இப்போதைய Trend மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் சேவல் சண்டை அதை வைத்து நடக்கும் பந்தயம், வன்மம், பகை,துரோகம்  இதில் ஒரு காதல்( திணிக்கப்பட்ட... தேவையில்லாத.. அது இல்லையென்றாலும் கதை பாதிக்கப்பட போவதில்லை.). தொழில் குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தம். ஆனால் சீடனுக்கு தெரியாம.


பிளாஷ் பேக்   யுக்தி இல்லாமல் யாருமே இப்போது காதல் சொல்லுவதில்லை. வெற்றி மாறனும் அதையே பயன் படுத்தி இருக்கிறார். வசனம் அப்படியே மதுரை வழக்கு. படத்தில் கதையின் நாயகன் பெயர் கருப்பு.  படம் பார்க்கும் நம் காலடியிலும் கருப்பு கருப்பா ஏதோ...அட முடி. ஏன்னா  மசுரு...ன்ற  சொல்.. அடிக்கடி. மேலும் ஏகப்பட்ட ஒலியற்ற  கெட்ட வார்த்தைகள்.(நமக்குதான் நெறைய தெரியும்ல)
ஒளிப்பதிவு அதிகமாக இருளை படம் பிடித்திருக்கிறது அப்படியே.
தனுஷ் நல்ல நடிகர், அவர் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அவர் ஏன் இந்த படிக்காதவன்....குடிக்காதவன்னு, குட்டி...ஜட்டி னு நடிக்கிறார். எனக்கு தெரிந்து சமீபமா இப்படியொரு நரித்தனமான வில்லன் கதா  பாத்திரத்தை யாரும் படைக்கவில்லை. ஈழத்து கவிஞர் அருமையாக செய்திருக்கிறார்.தனுஷின் நண்பன், நிக்கோலஸ், மற்றும் கிஷோர்...இவர்கள் மனதில் நிற்கிறார்கள். எனக்கு நாயகி பற்றி எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. வெள்ளாவி வச்சு வெளுத்து ஏதாவது விளம்பர போர்டில் தொங்க விட வேண்டியதுதானே. இந்த கதைக்கு தேவையே இல்லை. அதுவும் செவப்பா சும்மா கும்முன்னு இருந்தாதான் நடிகையாம்..ஓகே ஓகே. அதுல இருவருக்கும் காதல் வருவது...நம்புங்கப்பா. இசை அய்யய்யோ பாடல் மட்டும் கேட்கலாம். ஜி.வி. பிரகாஷ். பின்னணி இசை  எல்லாம்  புதிதாகவும் இல்லை மனதில் பதிவாகவும் இல்லை.

வெற்றி மாறன் ஆடிய களம். அருமையான களம். அதகளம்.

Friday, February 18, 2011

நான் எழுதி கிழித்தவை

      
 ஹை க்கு(திரை)
நான் படித்து 
தெரிந்து கொண்ட விலங்கு 
வரிக்குதிரை. 

செய்தியும் சிந்தனையும்


விலைவாசி கடுமையாக உயர்கிறது.வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களைத் திணற வைக்கிறது.எங்கும் ஊழல் தொற்று வியாதியைப் போல் பரவிக் கிடக்கிறது. ஆட்சியில் இருப்பவரோ சர்வாதிகார உச்சியில் திளைக்கிறார்.முப்பதாண்டுகளுக்கு மேலாக இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத மக்கள் என்ன செய்வார்கள்?  அதைத்தான் செய்திருக்கிறார்கள் எகிப்திய மக்கள்

எகிப்திய மக்களே உங்களோட ...த்திரத்த கொஞ்சம் எங்களுக்கு குடுங்க அப்பகூட எங்களுக்கு புத்தி வராது.

-------------------------------------------------------------------------------



எத்தனை  பூஜ்யங்கள் போட வேண்டும் என்று மக்களைக் குழம்பித் தவிக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.  'ஊழல்களின் பாட்டி'யாக அதையும் தாண்டியதாக 'எஸ் பேண்டு' விவகாரம்  சொல்கிறது!  மண்ணைக் காக்கும் ராணுவத்தில் லஞ்ச பேரம்,  நல்ல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் பகல் கொள்ளை.  சர்வதேசப் பெருமையைச் சேர்த்துக் கொடுக்க வேண்டிய விளையாட்டில் கொள்ளையோ கொள்ளை.  விண்ணில் வலம் வரும் செயற்கைக்கோளையும் ஊழல் வட்டமடிக்கிறது. விஞ்ஞான முறையில் ஊழல்

எப்பூடி ஏய் வாடா வாடா உன் ஊழலுக்கும் என் ஊழலுக்கும் சோடி போட்டுக்குவோம்

-------------------------------------------------------------------



என் இசை வாரிசாக யாரையும் சொல்ல விரும்பல - இளையராஜா
யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் அருளியது.


நன்றாக இருந்த இசை நிகழ்ச்சியின் நெருடல்கள்

1 . ஹரிசரண் பேசும்போது யுவன் ....தமிழ் ல பேசு என்று சொல்லி கொண்டே வந்தார். அடுத்த நொடியே... அவர் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார்.

2 . இசை நிகழ்ச்சியின் கொடுமையே இளையராஜாவும் யுவனும் பண்ணிய ஒரு அலம்பல் இசைக்கொடுமை. இளையராஜா எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.... வாயை திறந்து ஏதாவது பேசாமல் இருந்தாலே போதும். you  means ..... ராஜா நீங்கள் தமிழில் பாடினாலே போதும்.....நீங்களும் ஏன் இப்படி இங்கிலீஷ் தெரியும்னு  காட்டிக்கிறீங்க.. அதுவும் you  means   ரொம்ப ஓவர் grammer  பாருங்கப்பா

3 பார்வையாளர்கள் நன்றாக இருந்தால் கண்டிப்பாக once  more  அல்லது தயிரோ  கேட்பார்கள். நீங்களே இம்...சத்தம் பத்தல..... இம் இம் என்று ....... தமிழ் நாட்டின் ஒவ்வொரு கிட்டத்தட்ட எல்லோரும் ஹீரோயசம் நோய்க்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம்.


Friday, February 11, 2011


இவ் வலைப்பூவின் வாசகனே வாசகியே ( ஹி ஹி ஆசைதான்)
வாசிப்பை நேசிப்பவர்களே
வணக்கம்!

இவ் வலைப்பூவில் இனி
என் கவிதைகளையும் இடலாம்
என்று எண்ணியிருக்கிறேன் ....

நான் கவிதைகளுக்கு புதியவன்
ஆனால் கவிதைகளை ரசிப்பவன்
அதன் ருசியை முற்றுப்புள்ளி வரை
முகர்ந்து சுவைக்க சிறிது தெரியும்.
ஆனால்
இலக்கியமாகவோ
இதிகாசமாகவோ
இலக்கண கோடுகள் வரையவும்
மீறவும் தெரியாது...

ஒவ்வொரு கவிதையும்
ஒரு தலைப்பிரசவம் போலவே
எனக்கு தெரியும்.
உண்மையிலேயே
என் தலை
கவிதைத் தலையையும் உடலையும்
பிரசவிக்க வேண்டும்
ஏற்கனவே குருவித்தலையில் பனங்காய் போலே
சோம்பேறித்தனம் தின்னும் உடலாய் நானிருப்பதால்
எழுதுவதில் நான் உண்மையிலேயே ஒரு ஏழை.
என் சிந்தனையையும் கற்பனையையும்
எழுத நினைக்கையில்
வறுமைக்கோட்டிற்கு அதல பாதாளத்தில்
தொங்கி கொண்டிருப்பேன்.

எழுந்து  வர
ஏழு தலை முறை
காத்திருக்க வேண்டும்

அப்படி எழுந்து வந்து
எழுதிய அல்லது
எ.................ழு...........தி........................ய............
என் கவிதைகளில்
செத்துப்போன செதில்கள் இருக்கலாம்
உதிர்ந்து போன இறகுகள் இருக்கலாம்
தொலைந்து போன காலங்கள் இருக்கலாம்
இறந்து போன இயற்கை இருக்கலாம்
கடந்து போன காதல்கள் இருக்கலாம்
.....................................................................
அப்படியென்றால் உன் கவிதைகளில்
உயிர் இருக்காதா என்று
நீங்கள்
எள்ளுவது என் காதை திருகுகிறது
வலிப்பதைக் கூட
சொல்லி விடுகிறேன்
எழுதினால் இன்னும் வலிக்கும்....
சரி
என்னென்னவோ இருக்கலாம்

நிகழ்ந்தவை நினைக்கக்கூடாதவை
இனி நிகழ்பவை
நினைத்துப்பார்க்க கூடாதவை
நிகழ்ந்து கொண்டிருப்பவையோடு
கரைந்து விடுவதை
விரும்புகிறவன் நான்.

இறந்த காலங்களிலும்
வருங்காலங்களிலும்
வாழ்வதை விட
தற்போது ஒவ்வொரு நிமிடமும்
மரித்து கொண்டிருக்கும்
இறப்பில் களிப்பு இருக்கிறது
ஏனென்றால்
மரணம்
உண்மை உரைப்பவை
ஞானம் விதைப்பவை.

வலைப்பதிவில்
வரும் கவிதைகள்
என் கர்ப்பம்
அல்லது அடைக் காத்தல்.
என் கூடு முழுதும்
கனவு முட்டைகளே
ஆகவே எழுதுவது
என் பிரசவம்.

கூர்ந்து வாசிக்க அவசியமில்லாத
நெருக்கமான தமிழில்
நெருக்கி எழுதாமல்
விசாலமான திட்டமிட்ட
தமிழ்ததெருவாய் உருவாக்க
முயற்சிக்கிறேன்
முடிந்த அளவு
என் கவிதைத்தெருவுக்கு
ஒரு தடவை வந்துட்டு
போங்க......
ஆனால் என் தெரு
கொஞ்சம் பாம்புத்தெருவாகவே  இருக்கும்.

பிழைகள் தமிழை தடுத்தால்
வரிகளின் சொற்கள்
உணர்வுகளை உறுத்தினால்
விசைப்பலகையில் விரல்களை
மெலிதாக தட்டிட்டு போங்க.....
அதை குட்டாகவோ
அடுத்த கவிதைக்கு மெட்டாகவோ
என்னை மெருகேற்றி கொள்கிறேன்.

நன்றி உங்கள்
வாசிப்பு பொறுமைக்கு.
------------------------------------------------------------ஏண்டா டேய்! கவிதை எழுதப்போறேன் னு
ரெண்டு வரில சொல்றதை விட்டுட்டு
மவனே என்னத்தையோ  எழுதி சாகடிக்கிறியே டா.............
நீயெல்லாம் நல்லாவே இருக்க .....ச்சீ .................எழுத மாட்டேடா....

பொலம்புறது என் காதுல விழுகுது...
கெளம்புறேன்  நான் ........................







வியாபாரி ஒருத்தன் குடும்பத்துடன் பிக்னிக் போனான்.போன இடத்தில் படகுச் சவாரி செய்யும் போது அவனது செல்போன் ஏரிக்குள் விழுந்துவிட்டது. செல்போன் போனதில் வியாபாரிக்கு ரொம்ப வருத்தம். ஏரி ஓரத்திலிருந்து கடவுளிடம் வேண்டினான்.‘கடவுளே என் செல்போனை தயவுசெய்து எனக்கு கிடைக்கச் செய்’ என்று மனம் உருகி வேண்டினான். என்ன ஆச்சர்யம்! அவனது பிரார்த்தனையைக் கேட்ட கடவுள் அவனுக்கு உதவ ஒரு தேவதையை அனுப்பினார்.

வந்த தேவதை சட்டென்று தண்ணீருக்குள் மூழ்கி ஒரு செல்போனை எடுத்துவந்தது. விலையுயர்ந்த ப்ளாக் பெரி செல்போன் அது.

“இதுவா உன் செல்போன்?” என்று தேவதை கேட்க, ‘இல்லை’ என்று வேகமாக தலையசைத்தான் வியாபாரி.

தண்ணீருக்குள் மீண்டும் மூழ்கிய தேவதை,மிக நவீனமான ஐபோனை எடுத்து வந்து, ‘இந்த போனா?’ என்று விசாரித்தது. அதுவும் தனது இல்லை என்று மறுத்துவிட்டான் வியாபாரி.

மூன்றாவது முறை மூழ்கிய தேவதை, மிகச் சாதாரண, தேய்ந்த, பழைய செல்போன் ஒன்றை எடுத்து வந்தது.அதைப் பார்த்ததும் வியாபாரிக்கு சந்தோஷம்.

“இதான் என் போன், இதான் என் போன்” என்று கத்தினான்.

தேவதைக்கு ரொம்ப ஆச்சர்யம்.

“அவ்வளவு விலையுயர்ந்த போனையெல்லாம் காட்டினேன். அதெல்லாம் வேண்டாம்னுட்டு இந்த சாதாரண போனை கேட்கிறியே, இதுல அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டது.

அதற்கு வியாபாரி சொன்ன பதில் என்ன தெரியுமா?

“அதெல்லாம் விலையுயர்ந்ததா இருக்கலாம், ரொம்ப நவீனமா இருக்கலாம்.ஆனா அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது. இதில்தானே என்னுடைய உறவினர்கள், நண்பர்கள், வியாபாரத் தொடர்புகள் என எல்லா முக்கியமான செல்போன் எண்களும் இருக்கிறது. இவர்கள் இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை

Saturday, February 5, 2011

The King's Speech
File:Kings speech ver3.jpg
12 ஆஸ்கார் award களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அருமையான படம். Queen  எலிசபெத் ன் தந்தை பற்றிய ஒரு படம். அவர் அவரின் தந்தையை இழந்த பின்  அவரது சகோதரர் ஒரு விவாகரத்தான பெண்ணை மணந்து கொண்டதனால் அரியணைக்கு தகுதி இழக்கிறார். எனவே இவர் அந்த பதவிக்கு வருகிறார். இது ஒன்றும் புதுசு இல்லையே. விஷயமே இவருக்கு திக்கு வாய் என்பதுதான். உணர்ச்சிவசப்படும் போதும் அடிக்கடி அந்த பிரச்சனையால் மிக மனம் நொந்து கோவபபடுகிறார். ஆனால் இவரின் மனைவி இவரை மிக அக்கறையாகவும் ஊக்கப்படுத்தும் ஒரு பாத்திரத்தில் வருகிறார். தனது இந்த குறைபாடை குரல் பயிற்சியாளர் ஒருவரின் அன்பான , அக்கறையான, ஊக்கபடுதுதலின் மூலம் எப்படி வெற்றி கொண்டு நாஜி படைகளை எதிர்த்து போரிடும் தன் நாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த பேச்சை அளிக்கிறார் என்பதை மிக மிக அழகாக திரைப்படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, நடிப்பு, உடையமைப்பு, படத்தொகுப்பு, இசை எல்லாமே அருமை. எனக்கு சோர்வாகவே தெரியல. நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.. கீழே அதன் link வைத்துள்ளேன் ........முயற்சி செய்யவும்

http://www.sockshare.com/file/FUTHGAEWC1WGG08