Saturday, April 30, 2011

நிகழ்வும் தகவலும்


உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்………


  • ஒக்டோபஸ்சின் மூளையில் சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.
  • நத்தைகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியவையாகும்.



  •  ராஜ நாகத்தின் விஷம் மிகவும் அபாயகரமானதாகும். ராஜ நாகத்தின், 1கிராம் விஷமானது 150 பேரைக் கொல்லக்கூடியதாகும்.
  • சுண்டெலிகளின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 650 தடவைகளாகும்.

  • மின்மினிப்பூச்சிகளில், ஆண் மின்மினிப்பூச்சிகளே பறக்ககூடியவையாகும்.
  • பூனைக்குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் காணப்படும்.
  • உலகில் மிகச்சிறிய கிளி இனமாக பிக்மி (Pygmy) கிளிகள் விளங்குகின்றன. இந்த இன கிளிகளின் சராசரி நீளம் 8சென்ரி மீற்றர்கள் ஆகும்.

  • இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனமாக அவுஸ்திரேலியாவின் கியா இன கிளிகள் விளங்குகின்றன.
  • குதிரைகள், எலிகள் ஆகியனவற்றினால் வாந்தியெடுக்க முடியாது. இதன் காரணத்தினால்தான் எலிகளுக்கு விஷம் வைத்து அவற்றின் தொல்லையினை கட்டுப்படுத்த முடிகின்றது.

  • உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்
வாசித்ததில்  நேசித்தது




டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.


01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.


நான் இன்னா நெனக்கிரேன்னா

பெண்கள் சொல்றதெல்லாம் தட்டாம முகம் சுளிக்காம மானம் ஈனம் ரோஷம் பாக்காம செய்ற / இருக்குற காதலன் நல்ல காதலன் அதே போல் செய்ற / இருக்குற கணவன் நல்ல கணவன்.

Thursday, April 21, 2011

தழும்பு





பேகம்பூர் ஸ்டாப்பிங்லாம்  இறங்குங்கப்பா..... பாக்யராஜ் அண்ணன் குரல் கேட்டது...நான் என் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தேன். அம்மா அப்பொழுதுதான் தலைக்கு ஊத்தி முடியை சிக்குநீக்கியால் உருவி விட்டு கொண்டிருந்தார்கள். எனக்கு எப்போதும் என் அம்மாவின் மடியில் படுத்து அல்லது உக்கார்ந்து இருப்பது மிக மிக பிடிக்கும் ஏனென்றால் அது ஒரு தொட்டில் போலவே தோன்றும். நான் விருட்டென்று எழுந்து கொண்டேன். வெளியே வந்து பார்த்தேன். என் அண்ணன் கண்டக்டர் ஆகவும் பாக்யராஜ் அண்ணன் டிரைவர் ஆகவும். முன்னும் பின்னும் இடைவெளி விட்டு இடுப்பில் கயிறு சுற்றி பேரூந்து விளையாட்டு விளையாடுவது கண்டேன். பயணிகளை ஒவ்வொரு தெருவுக்கும் சென்று கட்டாயபடுத்தி இழுத்து வந்திருப்பார்கள் போல. பயணிகள் முகத்தில் கோவமும் பயமும். ஏனென்றால் என் அண்ணன் நண்பர்கள் ஒரு பெரிய பட்டாளம். டிரைவர் பாக்யராஜின் தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களுக்கு பிடித்த வீட்டின் வாசலை ஒரு ஸ்டாப்பிங் அல்லது ஒரு பெரிய ஊராகவே நினைத்து பயணிகளுக்கு எச்சரிக்கை விட்டு கொண்டிருந்தார். பஸ் கொஞ்ச நேரந்தான் நிக்கும் இறங்குரவுங்க இறங்கிக்கங்க...ஓவரா பஸ் போலவே பீல் பண்ணி கொண்டிருந்தார். எங்க அண்ணன் டிக்கெட் கிழித்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து வைத்திருந்தார். இதுல ஒரு ச்செக்கர் வேற வருவாரு அடுத்த தெருவில். இந்த டிக்கெட் எல்லாம் நாங்க பள்ளிக்கு செல்லும் போது பஸ்ல கொடுப்பதை சேகரித்து வைத்தவை. நான் என் அண்ணனிடம் நானும் வர்ரேன்னு கேட்டேன்..உடனே டிரைவர் ....டேய் நீயெல்லாம் ஸ்பீடா எங்க கூட ஓட முடியாது பேசாம இருடான்னு  சொன்னாரு. என் அண்ணன் வேற போடா வீட்ல உக்காரு உன்னால ஓட முடியாதுன்னு சொல்லும்போதே. நான் வீட்டுக்குள்ள  போய் என் அம்மாவை ரெக்கமண்டஷன் க்கு கூட்டிட்டு வந்துட்டேன்...எங்க அம்மா வேண்டாஞ்சாமி பேசாம் இங்க இருடா அவுங்க கூட உன்னால் வேகமா ஓட முடியாதுடான்னாங்க. அப்பறம் என் தொல்ல தாங்காம .. தம்பி இவனையும் சேத்துக்கங்கப்பா....கீழ விழுந்துராம ஓடு சாமின்னு அனுப்பி வச்சாங்க. எங்கண்ணன் மொரச்சுக்கிட்டே ஏறிதொலடா ன்னு நேர் கோட்டுல கயிருக்குள்ள நின்ன பயணிகளோடு நானும் குனிஞ்சு உள்ள போய்ட்டேன். டிரைவருக்கு நான் ஏறினது பிடிக்கல. பல ஸ்டாப்ல கழட்டிவிட பாத்தாங்க. நான் ..ம்ஹூம் நகராப்ள தெரியல. உடனே டிரைவர் எல்லாரும் கம்பிய பிடிச்சுக்கங்க பஸ் பறககபோகுது டாப் கியர் போட்டு ஓட்ட ஆரம்பிக்க. பயணிகள் வேகமா ஓட ஆரம்பிக்க .....என்னால வேகமா ஓட முடியல ...உடனே பஸ்ல இருந்து குதிக்கும் எண்ணத்தில் ஒரு காலை தூக்கி கயிறுக்கு மேலே தூக்கி தாவி தப்பிக்க முயற்சி பண்ண . கயிறு என் பின் முழங்காலை உரசி வேகமா முன்னால் செல்ல கயிறு என் காலை அறுக்க ஆரம்பிக்க கத்த ஆரம்பித்து விட்டேன். டிரைவர் உடனே சடன் பிரேக் போடா பயணிகள் என் மேல் விழ. அலுத்து கொண்டே டிரைவர் மற்றும் நடத்துனரால்  வெளியேற்றப்பட்டேன். உடனே. காலை விந்தி விந்தி இழுத்துக்கொண்டே வீட்டுக்கு  வந்தேன் அம்மா நீ போகும் போதே தெரியும்டா இப்டி நடக்கும்னு சரி உக்காரு ன்னு ஏதோ ஒரு களிம்பு தடவினார்கள்..... ஒரு வாரமா அந்த புண்ணை ஆற விடாம பாத்துக்கிட்டேன்.  எனக்கு மனசுல ஒரு வெறி வந்துச்சி அடுத்த வாரம் நான் கயிறு ரெடி பண்ணி கண்டக்டர் ரெடி பண்ணி பயணிகள் ரெடி பண்ணி டிரைவர் ஆனேன். ஆனா என் பஸ் எல்லைரையும் ஏத்திகிச்சு ....மெதுவாகவும்  போச்சு வேகமாவும் போச்சு...குழந்தைகள் முதல் எல்லைத்தையும் ஏத்திக்கிச்சு அந்த கால வச்சுகிட்டே பன்க்ச்சர் ஆன டயரோட பஸ்ஸ ஓட்டினேன்.நேற்று வேலையின் என்கிரிந்தோ வந்த நீளமான கம்பி என் முழங்காலை உரசி எனது 
பாண்ட்டை கிழித்த பொது தழும்பு தெரிய  தடவினேன்......கீழ விழுந்திடாம ஓடு சாமி ன்னு எங்கம்மாவின் குரல்  அதே தொனியில்  அதே கணீர் குரலில் என் காதுக்குள்ளே கேட்டது.

Sunday, April 3, 2011

செய்தியும் சிந்தனையும்


இந்திய கிரிக்கெட் அணியின் இல்லை இல்லை சோத்துக்கே இல்லாட்டினாலும் கிரிக்கெட் ல் ஜெயித்தால் நாமே ஜெயித்தது போல் இருக்கும் ஒவ்வொரு இந்தியனின் கனவும் நிஜமாகிப் போனது. மறுபடியும்
நாட்டுக்காக விளையாடும் மன நிலையே ஜெயித்துள்ளது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இறுதி விளையாட்டில் Man  of  the  match award கௌதமுக்கு கிடைத்திருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்தான் அணியின் சிக்கலான சூழ்நிலையை விடுவித்தவர். பரவாயில்லை தோணியும் சுய விளம்பரத்துக்கான விளையாட்டை எப்போதும் ஆடதவராகவே தெரிகிறார். எனவே அவர் வாங்கியதில் ஒன்றும் வருத்தமில்லை. நான் நினைத்தது போலவே யுவராஜ் Man  of  the  Series  அவரது பெற்றுள்ளார். எனக்கு ஒரு வருத்தம் முத்தையா முரளிதரன் பந்தை பொரிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அவர் மேல் ஒரு விளையாட்டு வீரரா ஒற்றும் வருத்தமில்லை ஆனா அவரை என்னால் ஒரு தமிழனாக பார்க்கவே முடியாது. காரணம் மக்களுக்கு பயன்படாத விஞ்ஞானம் தேவையே இல்லை என்பது போல். இது வரை தமிழர்களின் நலனில் அல்லது அவர்கள் மரணத்தில் கூட வருத்த படாத உள்ளம் அவருக்கு. பாப் மர்லே  தன இசைத்திறமையின் மூலம் மக்கள் விடுதலைக்கு வழி வகுத்தார். முரளி ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் அவ்வளவே. கல்யாணம் செய்யும் பொது மட்டும் நம் தமிழ்நாட்டில் வந்து பெண் எடுத்தார். எப்படியோ போகட்டும். தோணி கையால் உலககோப்பை வாங்கியது மிக சந்தோசம். சந்தோசம் சந்தோசம்.
அவர்கள் எல்லாம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்.

ஆனால் அதே நேரத்தில்

அரசாங்கம் இவர்களை கௌரவ படுத்துகிறேன் என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் பரிசுகளை பணத்த நிலத்தை வாரி இறைப்பது வருத்த்தமளிக்கிறது. ஏனென்றால் உலகத்திலேயே மிக மிக பணக்கார கிரிக்கெட் போர்டு நம் ICC தான். இத்தனைக்கும் அவர்கள் நம் அரசாங்கத்துக்கு கட்டு படாதவர்கள். மற்ற விளையாட்டு துறை இப்படியா
என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒரு அரசாங்கத்துக்கு கட்டு படாத போர்டு க்காக விளையாடும் வீரர்களுக்கு ஏன் நம் அரசாங்க பணத்தை செலவழிக்க வேண்டும். மேலும் நம் நாட்டு மற்ற விளையாட்டு வீரர்களை நினைத்து பாருங்கள் எத்தனையோ குறிப்பாக ஒலிம்பிக் ல் விளையாடிய
வீரர்கள் பலர் சோத்துக்கே கஷ்டபடுகிறார்கள். ஒரு அரசாங்க வேலைக்கு நாய் படாத பாடு படுகிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

இப்படி ஏதாவது கேட்டால் நம்மை திட்டுவார்கள். உங்களுக்கெல்லாம் நல்லதே தெரியாத என்று. எப்படியோ போங்க......