Friday, October 22, 2010

நண்பர்களே நலம்
நலமென்றே நம்புகிறேன்
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல
எந்திரனுக்குஏன்தான் இப்படி விளம்பரமும் ....இத்யாதிகளும்
அது ஒரு சினிமா அவ்வளவே
Holywood தரம் தரம் னு சொல்றாங்க
ஆமா holywood studio வில்தான் வொர்க் பண்ணுனாங்க ...
அப்பறம் Holywood மாதிரி வராம Plywood மாதிரியா வரும்....

போஸ்டர் மற்றும் என்னெனமொஅ த்துக்கு பாலபிஷேகம் அது இது ன்னு
ம்ம் ஹூம் வாய்ப்பே இல்ல..... எவ்வளவு கூட்டம் .................

இலங்கை தமிழன் பிரச்சனைக்கு எந்திரன் ஒரு நல்ல தீர்வு இல்ல.....
ராஜபக்ஷவ நிக்க வச்சு அவன்..........த்த வாங்கி குடிக்கலாம்.....புத்தியே வராது நமக்கு

குடிதண்ணீ இல்ல.... ஒரு ரூபா அரிசி....தண்ணி பாட்டில் 19 ருபாய் .... பால் 12 ருபாய்.....
நாமெல்லாம் நாசமாத்தான் போகப் போறோம்

இதுல ஷங்கர் இந்தியாவின் James Cameron ஆம்
ஹேய் மம்மி பாவம் ன்னு வடிவேல் சொல்லுவாரே அது மாதிரி

ஹேய் சினிமா பாவம்

Saturday, October 2, 2010

நண்பர்களே
நலம் நலமே விளைக
நேற்று வெள்ளிக்கிழமை மாலை எந்திரன்படம் பார்த்தேன். நம்ம ஊருல முதல் நாள் முதல் ஷோ பார்க்கிறதுல எனக்கு பிரியமெல்லாம் இருந்தது இல்ல. இங்க இர்லாந்து ல இது சாத்தியம் ஏன்னா குறைவான தமிழர்கள், அதுனால நமக்கு முதல் நாள் முதல் ஷோ பாத்தாச்சு. ireland ல dublinla stillorgan ன்ற place ல இருக்குற Ormande Cinemas complexla பார்த்தோம்.

பெரும்பாலான பேருக்கு ரஜினி பிடிக்கும் அதுவுமில்லாம எங்களுக்கு theatre ல படம் பாக்கணும்னா தமிழ் படம் வந்தால்தான் போகனும்னு ஆசை இருக்கும். நேற்று working day வேற. கூட்டம் பாதி theatre தான் full ஆச்சு.

எந்திரன்

உண்மையிலேயே நம்ம இந்தியன் சினிமாவுல இப்பிடி ஒரு படம் இது வரை யாரும் எடுக்கவில்லை. ( logic எல்லாம் தூக்கிபோடுங்க லாஜிக் பாத்தா படம் ஊத்திக்கும் ..... )

முதல் ல தமிழ் ல ஒரு science fiction story - இயக்குனர் ஷங்கர் க்கு பாராட்டுக்கள் .

அடுத்து தமிழ் சினிமா தான் இனி இந்தியன் சினிமாக்கு Address னு சொல்றமாதிரி டெக்னாலஜி ல கலந்து கட்டிவெளுத்து கட்டியிருக்கும் அனைத்து Technecians பாராட்டுக்கள் ..பெருமையுடன்.

முதல்ல வெகு வருடங்களுக்கு பிறகு ரஜினி director's actor ஆக மாறியிருக்கிறார் ஏன்னா Introducing song இல்ல. ஒரு scientist ஆக Casual அக அறிமுகமாகிறார். ஒரு Screw டிரைவர் வைத்துக்கொண்டு இருக்கும் போது சிரிப்புதான் வருகிறது. ரோபோ உருவாக்கத்தில் assistant resarch scientist ஆக சந்தானமும், கருணாசும் சிரிப்பும் வரல ஒன்னும் வரல . அதான் ரோபோ ரஜினி தான் comedy portion எல்லாம் அவரே பாத்துக்கிறார்.

அந்த lab படத்தோட budget க்கு சின்னதுதான். படத்தின் முதல் பாதி interesting. இரண்டாம் பாதி slow வா ஆரம்பித்து சற்று போர் அடித்து கடைசி 30 Minutes Tamil சினிமாவுக்கு எழுந்து கை தட்ட வைத்துவிட்டார்கள்.

கதை எங்கு நடக்கிறதுன்னு தயவுசெய்து சொல்லுங்கப்பா.

இந்த வயதில் ரஜினியின் உழைப்பும் நடிப்பும் வீண் போகவில்லை. வாழ்த்துக்கள் ரஜினி சார். இந்த ஓவரா பந்தா விடுற மட்டித்தனமான நடிகர்களுக்கு தேவல. Scientist ரஜினி யின் Make up Worst. பாட்டு Scene ல மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். Robo ரஜினி nice graphics train shots கொஞ்சம் தெரிகிறது. பட் கிளைமாக்ஸ் simply superb. ஐஸ்வர்யா ராய் Close up போகாமல் இருந்துருக்கலாம். அவுங்க dance movements... ம்ம்ம் கும்ம்னு இருக்கு. அவ்வளவா நடிப்புக்கு இடமில்லாமல் போய்விட்டது. கலாபவன் மணி வரும் காட்சி தேவை இல்லாதது. பாடல் காட்சி திணிப்புக்காக வைத்தது போல் ஆகிவிட்டது. Robo villain ஆக மாறி விட்டதால் இன்னொரு வில்லனை கொன்று விட்டார்கள். பாவம்.
cinematography திரைக்குள் இழுத்து செல்கிறது.
Choreography creative இல்லை. வழக்கமான dance ரோபோக்களையம் டான்சர் ஆக மாற்றி இருக்கிறார்கள்.

Music நம்ம தமிழ் சினிமாக்களில் பாடல் காட்சிகளுக்கு மட்டும் தான் music director வேலை என்று நினைப்போம். அனால் BGM தான் மிக மிக முக்கியம். A.R.ரஹ்மான் இரண்டிலும் நல்ல வொர்க் பண்ணியிருக்கிறார். ஆனால் என் அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் BGM Play ஆகும் போது ஒரு மூன்று தடவை இது Russian National Anthem music என்று சொல்லிகொண்டிருந்தார்.

ஆர்ட் director சாபு cyril work really great. அவர் நடிக்கவும் செய்றார்.

graphics காட்சிகள் ஒரு Hollywoood கம்பெனி நம்ம கற்பனைத்திறனுக்கு வடிவம் கொடுத்தது ரொம்ப பெருமை படவேண்டிய விஷயம்.

எந்திரன் ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமே. தமிழில் ஒரு science fiction படத்துக்கான நல்ல ஒரு தொடக்கம்.

பாடல்கள் நன்றாகவே இருந்தாலும் அது கதையின் போக்கை கெடுக்கும். வாய் அசைத்து பாடி எடுப்பது அது தனி track...