Monday, May 25, 2020

அர‌சிய‌ல் ப‌ழ‌கு


கபாலி ‌ திரைப்ப‌ட‌த்தில்  ஒரு வசனம் வ‌ரும்

காந்தி க‌த‌ர்  சட்டை போட்டதிலேயும் அம்பேத்க‌ர் கோட்டு போட்ட‌திலேயும் ஒரு அர்த்தம் இருக்கு எல்லாம் அர‌சிய‌ல்* என்று

இந்த‌ வ‌ச‌ன‌த்தை அந்த‌ திரைப்ப‌ட‌த்தில் பேசிய‌ அந்த ந‌டிக‌ருக்கு என்ன‌த்த‌ புரிஞ்சுதோ தெரிய‌ல‌, ஆனா அந்த‌ அர‌சிய‌ல் என்ன‌ என்று
தெரிந்துகொள்வோம்

ஜி.டி.நாயுடு அவர்களுடைய வழக்கு ஒன்று அப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 

அதை ஒரு வழக்கறிஞராக ஏற்று ந‌ட‌த்தி முடித்துக் கொடுத்தவர் பாபாசாகேப் Dr. அம்பேத்கர் அவர்கள்.

அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறைய பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்தார் ஜி.டி.நாயுடு.

அதற்கு ஜிடி நாயுடுவிடம்
பாபாசாகேப் சொன்னார் இந்தப் பணம் எனக்கு வேண்டாம், அதற்கு பதிலாக நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயண செலவையும், தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றார்

ஜி.டி.நாயுடுவும் அதை மகிழ்ச்சியோடு சம்மதித்தார் 

பாபாசாகேப் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில்தான் ரூம் புக் பண்ணுவார் ஜி.டி.நாயுடு.

அவரிடம் எதாவது கேட்டால் 
பாபாசாகேப் என் விருந்தாளி, அத்தோடு அவரை வரவேற்று விருந்து உபசரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று சொல்லி அருகே இருந்து சிற‌ப்பாக‌ அவ‌ரை பார்த்துக்கொள்வார்

ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை "தி இந்து" பத்திரிக்கை ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்க வந்திருந்தார்

பேட்டியின்போது ரிப்போர்ட்ட‌ர் கேட்டார் இப்படி டாக்டர் அம்பேத்கர் அவ‌ர்க‌ளே, காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை. ஆனால்  நீங்களோ இவ்வ‌ள‌வு ஆடம்பரமான இடத்தில் தங்குகிறீர்கள்
மேலும் எப்போதுமே கோட் சூட் அணிந்து கொண்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்?

அதற்கு பாபாசாகேப் சிரித்துக் கொண்டே பதிலளித்தார் இப்படி

காந்தி அவர்கள் பல்வேறு வகை ச‌மூக‌ உளவியலால் பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியல் ரீதியில் தாக்குகிறார். காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறாரே என்று எண்ணும் எம் ம‌க்க‌ள், நாம் சட்டை போடால் என்ன‌ போடாவிட்டால் என்ன என்று எண்ண‌ த‌லைப்ப‌டுகிறார்க‌ள். ஏற்கனவே சட்டைகூட‌ போடாத எம் மக்கள், வாழ்விய‌ல் முன்னேற்ற‌ம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள், பிற‌கு எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்..?"

"நான் கோட் சூட் அணிகிறேன், மிக‌வும் விலையுயர்ந்த டை மற்றும் ஷூ போடுகிறேன். மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன். என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க உளவியலாக அவனின் மனம் தயாராகும், க‌டுமையாக‌ உழைப்பான். சட்டையே போடாமல் திரிந்தவன் புத்தாடை உடுத்துவான். வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான் என்றார் அண்ண‌ல்.

இதேபோல் எம்ஜிஆரும் சொல்லியிருக்கிறார்

ரிக்‌ஷாக்காரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது எம்ஜிஆரிடம் பத்திரிக்கையாளர்கள்
கேட்டார்கள் இப்படி
எந்த ஊரில் இப்படி ரிக்‌ஷாக்காரர்கள் டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணி ஷூ போடுகிறார்கள் என்று

அதற்கு எம்ஜியார் சொன்னார் இப்படி நான் டிப்டாப்பா உடைகள் அணிவதை பார்த்து அவர்களும் நாமும் இப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணம் வரும் அதனால்தான் இப்படி உடை போட்டிருக்கிறேன் என்றார் சிரித்துக்கொண்டே

எப்படி பார்த்தாலும்

உடையும் ஒரு அரசியல்