Monday, January 26, 2026

 ரேபீஸ் தடுப்பூசி அவசியம்!



கடந்த 10 ஆண்டுகளில் 255 பேர் ரேபீஸ் தாக்கி உயிரிழந்திருக்கிறார்கள். இதில் 70 இறப்புகள் வளர்ப்பு நாய் கடித்ததால் ஏற்பட்டவை. 2024-ல் மட்டும் 4,80,483 பேர் நாய்க் கடிக்கு ஆளாகி, 47 பேர் ரேபீஸ் பாதித்து உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 10 பேர் வளர்ப்பு நாய் கடித்து ரேபீஸுக்கு ஆளானவர்கள்.

ரேபீஸ் பாதித்தவர்களுக்குத் தொண்டையில் இருக்கும் தசையும், மார்பில் இருக்கும் தசையும் முடங்கிவிடும். எதையும் விழுங்க முடியாது. மூச்சும் விட முடியாது. இழுத்து இழுத்து மூச்சு விடுவார்கள். ரேபீஸ் வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது. அதனால்தான் ரேபீஸ் மரணங்கள் மிகவும் கொடூரமானதாக இருக்கின்றன. ரேபீஸ் பாதித்த நாய்களுக்கும் இதுதான் நிலை. நாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவரும் நிலையில், ரேபீஸ் பற்றிய அச்சம் மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது


நாய் கடிப்பதற்கு முன்னால் பத்து அறிகுறிகளையாவது காட்டும். நட்புணர்வோடு ஒரு நாய் வருகிறதென்றால் தலை குனிந்து பொறுமையாக அண்ணாந்து உங்களைப் பார்க்கும். வாலை மென்மையாக ஆட்டும். குனிந்து குனிந்து வரும். காதுகள் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம் மடங்கும். கோபமாக வரும் நாயின் காதுகள் முன்னால் தூக்கி பின்னால் மடங்கும். முன்பல்லை முதலில் காட்டும். அதன் பிறகே உறுமும். ஆனால் இதெல்லாமே பத்து விநாடிகளில் நடந்து முடிந்துவிடும்’’ என்கிறார் கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் நிபுணர் விஜயபூரணி.

‘‘அறிமுகமில்லாத தெருவில் செல்லும் போது நாய்களின் கண்களைப் பார்க்கவே கூடாது. அப்படிப் பார்த்தால் ஏதோ அச்சுறுத்தல் வருகிறது என்று கருதி தற்காப்பு நடவடிக்கையில் இறங்கிவிடும். அதேபோல் குட்டி போட்ட நாய்களின் பக்கமே செல்லக் கூடாது. குறிப்பாக குட்டிகளைத் தொடவே கூடாது. எவ்வளவு சாதுவான நாயும் ஆக்ரோஷமாகி விடும். ரேபீஸ் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு வருபவர்கள் இரண்டு வகைதான். ஒன்று, குடி போதையில் நாயிடம் வம்பு செய்தவர்கள். இரண்டாவது, குழந்தைகள். போதையில் இருந்தவர்களுக்கு நாய் கடித்தது நினைவிலேயே இருக்காது. தடுப்பூசி போட மாட்டார்கள். குழந்தைகள் நாய் கடித்ததை வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்று சொல்லாமல் விட்டுவிடுவார்கள்.

எல்லா நாய்க்கடியும் ரேபீஸ் நோயை உருவாக்குவதில்லை. ஆனால், எல்லா நாய்க்கடிக்கும் மூன்று டோஸ் ரேபீஸ் தடுப்பூசி போட்டாக வேண்டும். ரேபீஸ் நாய்தான் கடித்தது என்று தெரிந்தால் காயத்தைச் சுற்றி `ரிக்’ எனப்படும் Immunoglobulin ஊசி போட வேண்டும்.

ரேபீஸ் பாதித்த நாய் கூட்டமாக வராது. தனியாகத்தான் வரும். வாயில் எச்சில் வடியும். பொதுவாகவே நாய் கடிக்க வரும்போது முதுகைத்தான் காண்பிக்க வேண்டும். ஒருவேளை கீழே விழுந்துவிட்டால் இரண்டு கைகளாலும் கழுத்தை மூடிக்கொள்ள வேண்டும். தலையை வயிற்றுக்கு அருகில் கொண்டு போய் பந்துபோல ஆகிவிடவேண்டும். முகம், கழுத்து, கை மூன்றையும் பாதுகாத்துவிட வேண்டும். ரேபீஸ் உள்ள நாய்கள் இந்தப் பகுதிகளில் கடித்தால் நேரடியாக மூளை பாதிக்கப்படும். இதில் வழக்கத்தைவிட 50% ரிஸ்க் அதிகம்

தெருநாய், வளர்ப்பு நாய், பூனை, குரங்கு என எந்த விலங்கு கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.=*

நாய் கடித்த இடத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்களுக்குக் குழாய்த் தண்ணீரில் கழுவ வேண்டும். கடித்த இடத்தில் கட்டு போடக்கூடாது. சுண்ணாம்பு, காபித்தூள் போன்றவற்றைப் பூசக்கூடாது.=*

கடிபட்டவுடன் முதல் தவணை, 3-ம் நாளில் இரண்டாம் தவணை, 7-ம் நாளில் மூன்றாம் தவணை, 28-ம் நாளில் நான்காம் தவணை என முறைப்படி தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.=*

காயம் கடுமையாக இருந்தால், ‘இம்யுனோக்ளோபுலின்செலுத்திக்கொள்ள வேண்டும்.=*

நாய் உட்பட எல்லா வளர்ப்புப் பிராணிகளுக்கும் முறைப்படி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.=*