Monday, February 3, 2025

ரஜினிகாந்தும்  தமிழக அரசு மருத்துவமனையும் 

திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு , Aortic aneursym ஏற்பட்டது, அதற்கான சிகிச்சை முடிந்து நேற்று நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .

அதைப்பார்த்த பலரும் " காசு இருப்பவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு போலாம்.

காசு இல்லாத ஏழைகள் அரசு மருத்துவமனைக்குத் தான் போகனும். அங்கே இந்த நோயை கண்டுபிடிப்பார்களா ? சரியான சிகிச்சை கிடைக்குமா ?  என்று கமெண்ட் செய்தனர்.

நேற்று மதியம் ஒரு முதியவர், காய்ச்சல் சளி இருமலுக்கு சிகிச்சை பெற என் கிளினிக் வந்திருந்தார்.

கையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சைப்பெற்ற நோட்டை வைத்திருந்தார் .

அதை வாங்கி பார்த்ததில் , எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

Diagnosis : Aortic aneursym with hematoma என்று எழுதியிருந்தது.

திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட அதே aortic aneurysm என்ற நோயை, இந்த முதியவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் diagnosis செய்து, சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களும் diagnose செய்யப்படும். அதற்குரிய சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும்.

2014ல் நான் கிளினிக் தொடங்கிய சமயத்தில் Vildagliptin 50mg என்ற சுகர் மாத்திரையின் விலை ₹25 .

தற்போது அதே மாத்திரை, வடுவூர் PHC ( அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்) வாங்கி சாப்பிடுவதாக ஒரு பாட்டி தனது நோட்டைக் காட்டினார். அதில் VILDAGLIPTIN 50MG என்று எழுதியிருந்தது.

கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் PRO PL என்ற பவுடரின் விலை ₹695.

B PROTIN, D PROTIN போன்ற உலக பிரசித்தி பெற்ற பவுடர்களை தயார் செய்யும் BRITISH BIOLOGICALS எனப்படும் நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த PRO PL பவுடர்.

இதைத்தான் தமிழக அரசு இலவசாமாக, பாட்டில் பாட்டிலா தராங்க.

- Dr Suriya Prakash Post

No comments:

Post a Comment