Thursday, April 21, 2011

தழும்பு





பேகம்பூர் ஸ்டாப்பிங்லாம்  இறங்குங்கப்பா..... பாக்யராஜ் அண்ணன் குரல் கேட்டது...நான் என் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தேன். அம்மா அப்பொழுதுதான் தலைக்கு ஊத்தி முடியை சிக்குநீக்கியால் உருவி விட்டு கொண்டிருந்தார்கள். எனக்கு எப்போதும் என் அம்மாவின் மடியில் படுத்து அல்லது உக்கார்ந்து இருப்பது மிக மிக பிடிக்கும் ஏனென்றால் அது ஒரு தொட்டில் போலவே தோன்றும். நான் விருட்டென்று எழுந்து கொண்டேன். வெளியே வந்து பார்த்தேன். என் அண்ணன் கண்டக்டர் ஆகவும் பாக்யராஜ் அண்ணன் டிரைவர் ஆகவும். முன்னும் பின்னும் இடைவெளி விட்டு இடுப்பில் கயிறு சுற்றி பேரூந்து விளையாட்டு விளையாடுவது கண்டேன். பயணிகளை ஒவ்வொரு தெருவுக்கும் சென்று கட்டாயபடுத்தி இழுத்து வந்திருப்பார்கள் போல. பயணிகள் முகத்தில் கோவமும் பயமும். ஏனென்றால் என் அண்ணன் நண்பர்கள் ஒரு பெரிய பட்டாளம். டிரைவர் பாக்யராஜின் தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களுக்கு பிடித்த வீட்டின் வாசலை ஒரு ஸ்டாப்பிங் அல்லது ஒரு பெரிய ஊராகவே நினைத்து பயணிகளுக்கு எச்சரிக்கை விட்டு கொண்டிருந்தார். பஸ் கொஞ்ச நேரந்தான் நிக்கும் இறங்குரவுங்க இறங்கிக்கங்க...ஓவரா பஸ் போலவே பீல் பண்ணி கொண்டிருந்தார். எங்க அண்ணன் டிக்கெட் கிழித்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து வைத்திருந்தார். இதுல ஒரு ச்செக்கர் வேற வருவாரு அடுத்த தெருவில். இந்த டிக்கெட் எல்லாம் நாங்க பள்ளிக்கு செல்லும் போது பஸ்ல கொடுப்பதை சேகரித்து வைத்தவை. நான் என் அண்ணனிடம் நானும் வர்ரேன்னு கேட்டேன்..உடனே டிரைவர் ....டேய் நீயெல்லாம் ஸ்பீடா எங்க கூட ஓட முடியாது பேசாம இருடான்னு  சொன்னாரு. என் அண்ணன் வேற போடா வீட்ல உக்காரு உன்னால ஓட முடியாதுன்னு சொல்லும்போதே. நான் வீட்டுக்குள்ள  போய் என் அம்மாவை ரெக்கமண்டஷன் க்கு கூட்டிட்டு வந்துட்டேன்...எங்க அம்மா வேண்டாஞ்சாமி பேசாம் இங்க இருடா அவுங்க கூட உன்னால் வேகமா ஓட முடியாதுடான்னாங்க. அப்பறம் என் தொல்ல தாங்காம .. தம்பி இவனையும் சேத்துக்கங்கப்பா....கீழ விழுந்துராம ஓடு சாமின்னு அனுப்பி வச்சாங்க. எங்கண்ணன் மொரச்சுக்கிட்டே ஏறிதொலடா ன்னு நேர் கோட்டுல கயிருக்குள்ள நின்ன பயணிகளோடு நானும் குனிஞ்சு உள்ள போய்ட்டேன். டிரைவருக்கு நான் ஏறினது பிடிக்கல. பல ஸ்டாப்ல கழட்டிவிட பாத்தாங்க. நான் ..ம்ஹூம் நகராப்ள தெரியல. உடனே டிரைவர் எல்லாரும் கம்பிய பிடிச்சுக்கங்க பஸ் பறககபோகுது டாப் கியர் போட்டு ஓட்ட ஆரம்பிக்க. பயணிகள் வேகமா ஓட ஆரம்பிக்க .....என்னால வேகமா ஓட முடியல ...உடனே பஸ்ல இருந்து குதிக்கும் எண்ணத்தில் ஒரு காலை தூக்கி கயிறுக்கு மேலே தூக்கி தாவி தப்பிக்க முயற்சி பண்ண . கயிறு என் பின் முழங்காலை உரசி வேகமா முன்னால் செல்ல கயிறு என் காலை அறுக்க ஆரம்பிக்க கத்த ஆரம்பித்து விட்டேன். டிரைவர் உடனே சடன் பிரேக் போடா பயணிகள் என் மேல் விழ. அலுத்து கொண்டே டிரைவர் மற்றும் நடத்துனரால்  வெளியேற்றப்பட்டேன். உடனே. காலை விந்தி விந்தி இழுத்துக்கொண்டே வீட்டுக்கு  வந்தேன் அம்மா நீ போகும் போதே தெரியும்டா இப்டி நடக்கும்னு சரி உக்காரு ன்னு ஏதோ ஒரு களிம்பு தடவினார்கள்..... ஒரு வாரமா அந்த புண்ணை ஆற விடாம பாத்துக்கிட்டேன்.  எனக்கு மனசுல ஒரு வெறி வந்துச்சி அடுத்த வாரம் நான் கயிறு ரெடி பண்ணி கண்டக்டர் ரெடி பண்ணி பயணிகள் ரெடி பண்ணி டிரைவர் ஆனேன். ஆனா என் பஸ் எல்லைரையும் ஏத்திகிச்சு ....மெதுவாகவும்  போச்சு வேகமாவும் போச்சு...குழந்தைகள் முதல் எல்லைத்தையும் ஏத்திக்கிச்சு அந்த கால வச்சுகிட்டே பன்க்ச்சர் ஆன டயரோட பஸ்ஸ ஓட்டினேன்.நேற்று வேலையின் என்கிரிந்தோ வந்த நீளமான கம்பி என் முழங்காலை உரசி எனது 
பாண்ட்டை கிழித்த பொது தழும்பு தெரிய  தடவினேன்......கீழ விழுந்திடாம ஓடு சாமி ன்னு எங்கம்மாவின் குரல்  அதே தொனியில்  அதே கணீர் குரலில் என் காதுக்குள்ளே கேட்டது.

No comments:

Post a Comment