Friday, March 30, 2012

நான் நுகர்ந்த  சொற்பூக்கள்


வாழ்தலும் இருத்தலும்


நூறில்
தொண்ணூறு விளம்பரங்கள்
சுத்தம்பற்றியதானவை
குழந்தையின் பின்புறம் முதல்
கழிவறை பீங்கானின் உட்புறம் வரை.
நுண்ணோக்கி வழியே
நெளியும் கிருமிகள்.
தெரு மண் புழுதியில் வெற்றுடம்போடு
உருண்டு புரண்டு கிழிந்து
கிழிசலுக்கு ஊசியாய்
மண்ணையே பூசி விளையாடிய
ஆதி வீதிச் சிறார்
மருத்துவமனை முகவரியும் அறியார்.
நொடிக்கொரு தரம் ஹேண்ட் வாஷில்
கை கழுவும் கான்க்ரீட் மைந்தர்கள்
மூன்று வயதிலேயே
மூக்குக் கண்ணாடியோடு.
அதிர்ந்தடங்கி அயர்ந்து
அலைவரிசை மாற்றினால்
அங்கும் போய்க்கொண்டிருக்கிறது
செயற்கைக் கருவூட்டல்
மருத்துவமனை விளம்பரம்!

- பிரகாசிகை

250 கோடியில் ௨௨ நாடுகள் சுற்று பயணம் செய்திருக்கிறார் நம் ஜனாதிபதி ப்ரிதிபா பாட்டில்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வழக்கம் போலவே இதுவரை இருந்த ஜனாதிபதிகள் போலவே எவரும் செய்யாத சாதனையை செய்து விட்டார் இவ்வளவு மக்கள் பணத்தை செலவழித்து ( நம் அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் உட்பட) இவர்களுக்கு மனசாட்சி இருக்குமா இருக்காதா........................

Tuesday, March 27, 2012

வாசித்ததில் நேசித்தது

பிள்ளைகளின் பார்வையில் அப்பா!




 4 வயதில் - எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்.

 6 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும்.

10 வயதில் - அப்பா நல்லவர்; ஆனால் சிடுமூஞ்சி.

14 வயதில் - எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி.

16 வயதில் - கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர்.

18 வயதில் - சரியான எடக்கு மடக்குப் பேர்வழி.

20 வயதில் - இவரோட பெரும் தொல்லை; எங்கம்மா எப்படி இந்த ஆளோட  
                         குப்பை கொட்றாங்க?

30 வயதில் - என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு.
                        அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம்.

40 வயதில் - எங்கப்பா எங்களைக் கட்டுபாடா வளர்த்தார்.
                         நானும் அப்படிதான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.

50 வயதில் - அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்?
                         எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.

55 வயதில் - எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் 
                         செய்திருக்கிறார். அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது.

60 வயதில் - எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்.