கடந்த பெருமழையில் `செல்ஃபிபுள்ள’ யாகத் தன்னைத்தானே சுத்தம் செய்துகொண்ட கூவத்தை மீண்டும் சாக்கடையாக மாற்றிவிட்டு, கோடை மழைக்கே பயந்து, வானிலை அறிக்கையையும் வாசற்படியையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த 21 -ம் நூற்றாண்டிலும் கூவத்தைச் சரிசெய்யவே முடியாது என்பவர்களுக்கு 19 -ம் நூற்றாண்டு லண்டன் தேம்ஸ் நதியின் `மகா நாற்றம்’ (Great Stink) மகா பாடம்.
1858 -ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேம்ஸ் நதியில் இருந்து வீச ஆரம்பித்த துர்நாற்றம் லண்டன் மக்களை மண்டைகாயவைத்திருக் கிறது. நகரமயமாதலின் முன்னோடியாக உருவாகிவந்த லண்டனின் கழிவுகளை, எந்தத் திட்டமும் இல்லாமல் தேம்ஸ் நதியில் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். விளைவு, `மியாஸ்மா' என்கிற கொடும் நாற்றம்; காலரா போன்ற வியாதிகள். அரசாங்கம் குழப்பத்தில் தவித்தபோது அதைச் சரிசெய்ய தானாக முன்வந்தவர் ஜோசப் பஸல்கெட் (Joseph Bazalgette) என்கிற சிவில் இன்ஜினீயர்.
1859 -ம் ஆண்டில் ஆரம்பித்து 1875 -ம் ஆண்டு வரை 15 வருடங்களுக்கு மேல் `தனி ஒருவனாக’த் திட்டமிட்டு, கழிவு அகற்றும் பெரிய குழாய்களையும் அண்டர்கிரவுண்டு கால்வாய்களையும் பல பம்பிங் ஸ்டேஷன் களையும் படம் வரைந்து, பாகம் குறித்து, கட்டிமுடித்து லண்டனையும் தேம்ஸையும் காப்பாற்றியிருக்கிறார். பள்ளமான பகுதிகளையும் மேடான பகுதிகளையும் இணைத்து, கழிவுகளைக் கொண்டுசெல்ல அவர் உருவாக்கிய டிசைன்கள் இன்றும் வேலைசெய்வதைக் கண்டு, இந்த நூற்றாண்டு பொறியாளர்கள் வியக்கிறார்கள். வரலாற்று ஆசிரியர் பீட்டர் அக்ரியோட், பஸல்கெட்டை ‘லண்டனின் ஹீரோ’ எனப் புகழ்ந்தார்.
கழிவு மேலாண்மை தொடர்பாக பஸல்கெட் எழுதிய குறிப்புகள், குண்டு தொகுப்புகளாக லண்டன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சிவில் இன்ஜினீயரிங் ஆவணக் காப்பகத்தில் இன்றும் உள்ளன. நமக்குத் தேவை... தீரமான, உண்மையான, திறமையான பஸல்கெட்டுகள்

No comments:
Post a Comment