சிவப்பு பாடல்கள்
இந்திய திரை இசையில் இது ஒரு புதிய முயற்சியே!
முழுக்க முழுக்க சிவப்பு இசையை ஹிப் ஹாப் பாணியில்
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்
ஒரு சாதாரண இசை ரசிகனால்
இந்த பாடல்கள்
கம்யூனிஸ்ட் கட்சி, மகஇக, தமுஎச, மாவோயிஸ்ட் ஆகியோரின் இன்ன பிற இயக்கங்களின் பிரச்சார பாடல்களாக புரிந்து கொள்ளப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
ஆனால்
கறுப்பர் இன மக்கள் தங்கள் இருப்பை எதிர்ப்பை காட்ட
கலையை கையிலும் குரலிலும் காட்டி
ஒரு புதிய இசை வடிவத்தை (ஹிப்ஹாப்) கொண்டுவந்தனர்
இன்றுவரை அது உலகெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
அதே போல திரைக்கலையை
மக்கள் விடுதலைக்கான மகத்தான ஊடகமாக
பயன்படுத்துவர்களால்தான்
இது போன்ற ஒரு இசைத்தொகுப்பை
வெளியிட முடியும்
அதனால் இது ஒரு புதிய முயற்சியே
எனக்கு இந்த பாடல்களை கேட்கும் போது
கவிஞர் இன்குலாப் எழுதிய பாடல்களாகவே தோன்றியது
பரவாயில்லை இன்குலாப் இன்னும் சாகவில்லை...
எப்படியோ யார்மூலமாகவோ
தன்னை கொஞ்சம் மிச்சம் விட்டே சென்றுள்ளார்
ஒரு காதல் பாடலைத்தவிர மற்ற அனைத்து பாடலும்
சிவப்பும், உழைப்பும், உரிமையும் பெருங்குரலெடுத்து
நாடி நரம்புகளில் பரவி ரீங்காரமிடுகிறது.
ஒரு காதல் பாடலைத்தவிர
பெரிய ஞானமுள்ள இசை எதுவும் எந்த பாடலிலும்
தெரியாவிட்டாலும்.
சொல்லவந்த கருத்தை தூக்கி சுமக்கவே
இசை நடந்து வருகிறது.
ஞானமுள்ள இசை இல்லையென்றாலும்
"யார்வச்சது யார்வச்சது ஓன் சட்டமடா
இங்கு வாழ்வென்பதும் சாவென்பது நெலமட்டுமடா "
பாடல் அருமை அருமை அருமையிலும் அருமை
இந்த பாடலில் வரும் டோலாக்கும், தபேலாவும்
அடி பின்னி பெடலெடுக்கிறது...
அந்த பாடகரின் குரல் அதைவிட
வழுக்கி உயர்ந்து நெகிழ்ந்து தவழ்ந்து உரத்து
ஓங்கி ஒலிக்கிறது...
இந்த பாட்டில் பக்தி பாடலைப்போல
மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல
பஜன் பாடல் போலவே ஒலிக்கிறது
ஆம்
அநீதிக்கு எதிரான சிந்தனையும் பக்தி போல்தான்
போர்க்குரலும் பஜனை போல்தான்
தலைக்குள் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும்
ஒலித்துக்கொண்டே இருக்கும்
வார்த்தைகளாய் வாய்வழியே வெடித்துக்கொண்டே இருக்கும்
நிக்கல் நிக்கல் பாடல்
படத்தில் ஸ்டெர்லைட் காப்பர் திட்டத்தை
நினைவு படுத்தினால் நன்றாக இருக்கும் என்று
ஒரு நப்பாசை.
இந்த படம் எப்படியிருந்தாலும் இருக்கட்டும்
இந்த பாடல் காட்சிகளில் ரஜினி அவர்கள் நடித்தாலே போதும்
அவர் உடல்மொழியும் பாணியும் புதிய பரிமாணத்தை
நமக்கு காட்டும் என்பது நிச்சயம்
கடைசியாக
மகேந்திரன் படங்களில்
மற்றும் வெகு குறைவான
பழைய படங்களில்
தளபதி படத்தில்
கபாலியில்
ஒரு நல்ல நடிகராக ரஜினியை பார்த்தது.
ஏனெனில்
நம் ரசனையால்
சீரழிக்கப்பட்ட
சீரழிந்த
ஒரு நல்ல கலைஞன்
ரஜினிகாந்த்
மீண்டு வா
மீண்டும் வா
கலைஞனே
ரஜினிகாந்தே
No comments:
Post a Comment