Monday, August 28, 2017

நமக்கு நாமே பிக் பாஸ்
பரிசல் கிருஷ்ணா

நம் டாஸ்க் நம் கையில்!  30 நாளும் தொடர்ந்து இவற்றில் இருக்கும் விஷயங்களைச் செய்து வந்தால், வாழ்க்கையில் ஓஹோ ஆஹா மாற்றங்கள் கியாரன்டி!

1.குறைந்தது 3  கி.மீ வாக்கிங்.


2. மன அழுத்தம் இருந்தால், அந்தக் கணமே அதை ஒரு நண்பரை அழைத்துப் பகிர்ந்து கொள்வேன்.

3. இரவு 8 மணிக்கு முன்பு டின்னர்.

4. குறைந்தது 30 நிமிடம் ஏதாவது உடற்பயிற்சி.

5. இரண்டு பழ வகைகளையாவது சாப்பிடுவேன்.

6. 8 மணி நேரமாவது தூக்கம்.

7. காலை உணவை மிஸ் பண்ண மாட்டேன்.

8. ஒருவேளை உணவாவது குடும்பத்தாரோடு சாப்பிடுவேன்.

9. நாள் முழுவதும் எந்த வடிவிலும் வெள்ளை சர்க்கரை உட்கொள்ள மாட்டேன்.

10. உண்ணும் உணவில் பாதியாவது காய்கறிகள் இருக்கும்.

11. இரண்டு வகையான இயற்கைப் பழரசங்கள் அருந்துவேன்.

12. இன்றைய உணவில் கீரை நிச்சயம் இருக்கும்.

13. ஒவ்வொரு 2மணி நேரத்திற்கும் குறைந்தது 300 மி.லி தண்ணீர் குடிப்பேன்.

14. நடந்தே செல்ல முடிகிற தூரத்திற்காக எந்த வாகனத்தையும் உபயோகிக்க மாட்டேன். 

15. அழைப்புகளை ஏற்பது தவிர்த்து, இன்றைக்குக் காலை 11 மணிக்கு முன்னதாக என் செல்போனைத் தொடமாட்டேன்.

16. கடும் கோபம் வரும் தருணம் வாய்த்தால், அதைச் சிரித்துக் கடப்பேன்.

17. பிடித்த புத்தகத்தில் 50 பக்கங்களாவது படிப்பேன்.

18. உறங்கும் முன் என் செல்போனை சமையல் அறையில் வைத்துவிட்டு, காலையில்தான் எடுப்பேன்.

19. கழிவறையில் செல்போன் பயன்படுத்த மாட்டேன்.

20. கடந்த ஆறு மாதமாகப் பேசாத ஒரு நண்பரை அழைத்து 30 நிமிடமாவது பேசுவேன்.

21. எனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவரை அழைத்து, நிறைகளைச் சொல்லிப்  பாராட்டுவேன்.

22. இன்று எந்த எலெக்ட்ரானிக் உபகரணங்களையும் பயன்படுத்த மாட்டேன்.

23. இன்று முழுவதும், முடிந்தவரை மௌனமாக இருப்பேன்.

24. காபி, டீ, சிகரெட் இந்த மூன்றும் இன்றைக்கு இல்லை.

25. இன்று முழுவதும் தொலைக்காட்சியைத் தவிர்ப்பேன்.

26. தொடர்ச்சியாக இரண்டுமணி நேரம் குடும்பத்தாரோடு அமர்ந்து கலந்துரையாடுவேன்.

27. மூன்று வேளை உணவையும் சரியான நேரத்தில் உண்பேன்.

28. செல்போனை வீட்டில் வைத்துவிட்டு குடும்பத்தாரோடு வாக்கிங் போவேன்.

29. நூலகம், பூங்கா மாதிரியான ஓர் இடத்திற்குச் சென்று ஒருமணி நேரம் ஒன்றும் சிந்திக்காமல் அமர்ந்திருப்பேன்.

30. நண்பர் ஒருவரிடம் இந்த மாதம் முழுவதும் இவற்றை எப்படி நான் பின்பற்றினேன் என்பதை ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொண்டு அவரையும் பின்பற்றச் சொல்வேன்.


 ஃபாலோ பண்ணுங்க பாஸ்.. லைஃப் நல்லாருக்கும்!

Wednesday, June 7, 2017

தினம் 3 பேரீச்சம் பழம்... பலன்கள் பல!


`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - பைபில் 
பேரீச்சை... பனை வகையைச் சேர்ந்த இந்த மரத்தை அதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைவான பலன் தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிடுவதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம். ஃப்ரெஷ்ஷாகவோ, உலர்த்தியோ எப்படிச் சாப்பிட்டாலும் ஏராளமான பலன்களை அள்ளித்தருகின்றது. உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.
 

மலச்சிக்கல் தீர்க்கும்!

'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.
 
இரும்புச்சத்து அதிகரிக்கும்! 

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. 
இதயத்தை இதமாக்கும்!
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. 
இன்ஸ்டன்ட் எனர்ஜி!
பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். 
எலும்பை வலுவாக்கும்!
இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. 
நினைவாற்றல் பெருக்கும்!
இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.  

கூடுதல் பலன்கள்!
* தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.
* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும். 
* பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும்.
* பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும். 
* வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.

Thursday, June 1, 2017


வெந்நீர்... உடலுக்கு உரம்


நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நம் பாரம்பர்ய மருத்துவம் கூறுகிறது. 
நீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் சிறந்தது என்கிறது சித்த மருத்துவம். அதைத்தான், மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்று தேரையர் தனது 'பிணி அணுகா விதி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை நீர் சேர்த்துக் கலந்தும் நெய்யை உருக்கியும் சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். மேலும், இயற்கை மருத்துவத்தில் வெந்நீரின் மகிமை பற்றி பேசும் ஏராளமான பாடல்கள் காணக்கிடக்கின்றன.
அப்படி பதார்த்த குண சிந்தாமணியின் ஒரு பாடலில்,
`நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளியேப்பம்
வஞ்சமுற வந்த வயிற்றுநோய் - விஞ்சியே
வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர்
ஆழாக்குட் கொள்ள அறும்' என்று குறிப்பிட்டுள்ளது.
`வெந்நீர் அருந்துவதால் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மறைந்து உணவு செரிமானமாகும். எந்த வகையான தலைவலியாக இருந்தாலும், மிதமானச் சூடுள்ள வெந்நீரைக் குடித்தால், நரம்புகளுக்கு இளக்கம் கொடுத்து, தலைவலியைக் குறைக்கும். அடிக்கடி வெந்நீர் குடித்துவருவதால் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். வாய்வுப் பிரச்னைகள் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்’ என்று கூறுகிறது இந்தப் பாடல். 
இது தவிர, வெந்நீர் குடிப்பதால், மலச்சிக்கல் தீரும்; உடல் எடை குறைக்க உதவும்; உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்; சளி, இருமல், தொண்டைப்புண் நீங்கும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; நரம்பு மண்டலத்தைச் சுத்திகரிக்கும்; பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க் கால வயிற்றுவலி நீங்கும்; முதுமையைத் தள்ளிப்போடும்; தோல் நலத்தைப் பாதுகாக்கும்; தொற்றுநோய்க் கிருமிகளை வெளியேற்றும்; முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்; பொடுகுத் தொல்லை நீங்கும்; முடியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும். 
இவை மட்டுமல்லாமல், `வெந்நீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறுபடும்’ என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. அதன்படி, தங்கப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றிவைத்துக் குடித்தால் வாத நோய், சுவையின்மை, உடல் உஷ்ணம், வெப்புநோய் போன்றவை நீங்கும்.
வெள்ளிப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி வைத்துக் குடித்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். இரும்புப் பாத்திரம் ரத்தச்சோகை நீங்கச் செய்யும். நரம்புகள் உறுதியாகும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடிப்பதால் விக்கல், பித்தநோய், காதுவலி, வாந்தி, மயக்கம், உடற்சூடு, வயிற்றுப்புண் போன்றவற்றைத் தீர்க்கும். உதாரணமாக ஒரு லிட்டர் நீர் எடுத்துக்கொண்டால் அதை கால் லிட்டராகும் வரை காய்ச்சிக் குடித்தால் உடற்சூடு நீங்கும். அரை பங்காகும் வரை காய்ச்சிய நீரை குடித்தால் வாதம், பித்தம் விலகும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் குடித்தால் வாதம், பித்தம், கபம் பிரச்னைகள் நீங்கும். மூன்றில் ஒரு பங்காகும் வரை காய்ச்சிய நீரைக் குடித்தால், உடல்சூட்டைக் குறைக்கும்; கடுமையான ஜுரம், வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம், கபம் பிரச்னைகளைப் போக்கும்.
எட்டில் ஒரு பங்காகும்வரை காய்ச்சிய நீரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் குடித்து வந்தால், உடல் சூட்டைக் குறைக்கும்; நாவறட்சி, அல்சர், பித்தவெடிப்பு பாதிப்புகளை நீக்கும். அதேபோல, சாப்பிடுவதற்கு முன்னர் வெந்நீர் குடித்தால் உடல் இளைக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் பசியை மட்டுப்படுத்தும். சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடிப்பது ஜீரண உறுப்புகளைத் தூண்டி, செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

சுகுணா திவாகர், படங்கள்: ஏ.சிதம்பரம், வி.ஸ்ரீனிவாசலு

ஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு தொடங்க இருக்கிற நேரத்தில் வந்திருக்கிறது ‘நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை’ என்கிற மோடி அரசின் அறிவிப்பு. 
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கியே மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்மீது தாக்குதல், மாட்டிறைச்சியை விற்பவர்களாக, சாப்பிடுபவர்களாகத் தாங்கள் சந்தேகப்படு பவர்களை எல்லாம் அடித்து உதைத்தல் எனப் `பசுவதைத் தடுப்பு' என்னும் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்தனர் சிலர். உத்திரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் கிராமத்தில் முகமது இக்லாக் என்னும் இஸ்லாமியரைக் கொலை செய்தனர். மாட்டுத்தோலை உரித்ததற்காக நாட்டின் பல பகுதிகளில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினர். இப்போது அவர்கள் கையிலேயே சட்டத்தைத் தந்திருக்கிறார் மோடி.
இந்துத்வா அரசியலை முன்னெடுக்கிற வர்களின் அரசியல் ஆயுதங்களில் ஒன்று ‘பசுவதைத் தடுப்பு’. 
‘பசுவதைத் தடுப்புச் சட்டம்’ என்ற பெயரில் கொண்டுவராமல் ‘சந்தைகளில் இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்கத் தடை’ என்று   தந்திரமாக ச் சட்டம்  கொண்டுவந்திருக்கிறார் மோடி! 

‘பசு புனிதமானது’ என்கிற மதவாத அரசியல்தான் இதன் அடிப்படை. பசுவைப் புனிதமாகக் கருதி அவற்றைக் காப்பதே இந்தியக் கலாசாரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பசு புனிதமா? 
- வேதகாலத்தில் உயர்சாதியினரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா தொடங்கி அம்பேத்கர் வரை பலர் சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

- விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான ஆர்கியம் அல்லது மதுபர்கம் என்று மிகப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு சடங்கு குறித்துப் பிற்கால வேத நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. 

- விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள்’ என்ற பொருள் தரும் அதிதினிர் (Athithinir) என்ற சொல் ரிக் வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது. திருமண விழாவின்போது பசு பலி தரப்பட்டது குறித்து ரிக்வேதப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. 

- ஆட்சியாளர்களோ, மரியாதைக்குரியவர்களோ விருந்தினர்களாக வந்தால், மக்கள் காளைகளையோ, பசுக்களையோ பலியிட்டார்கள் என்று அய்த்தரேய பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்கிறார் ஆய்வாளர் டி.என். ஜா. ‘புனிதப்பசு என்னும் கட்டுக்கதை’ என்று ஒரு நூலே எழுதியிருக்கிறார் அவர்.


- மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் மட்டுமல்ல, ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்களும் மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பேசுகின்றன” என்கிறார் டி.என்.ஜா. 
மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல் ஆகியவற்றுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய மருத்துவ நூல்களான சரக சம்ஹிதமும் சுஸ்ருதா சம்ஹிதமும்  

*அப்படியானால் எப்போது பசு புனிதமாக்கப்பட்டது?* 


- வேள்விகளில் மாடுகள், குதிரைகள் போன்றவை பலியிடப்பட்டன. இந்த வேள்விகளால் கால்நடைச் செல்வங்கள் அழிவதைப் பௌத்தம் கடுமையாக எதிர்த்தது. ஒருகட்டத்தில், வைதீகத்தைவிட பௌத்தத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்தது. 

- பௌத்தத்தைவிடத் தங்களை மேலானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் காட்டிக்கொள்வதற்காகவே பிராமணர்கள் முற்றிலுமாக இறைச்சி உண்ணுவதைக் கைவிட்டனர்’ 

- ஆடு, கோழி சாப்பிட்டு மாட்டிறைச்சியை விலக்கிவைத்த சாதி இந்துக்கள், மாட்டிறைச்சி உண்ணும் தீண்டத்தகாதவர்கள் என மூன்று பிரிவுகள் உருவாயின” 


- இன்றளவும் பசுவைப் புனிதமாகக் கருதும் கலாசாரம் என்பது வட இந்தியாவில்தான் செல்வாக்குடன் இருக்கிறதே தவிர, தென்னிந்தியாவில் அத்தகைய மனப்போக்கு குறைவே. காரணம், ‘பசு புனிதம்’ என்று சொல்லி மாட்டிறைச்சியை விலக்கிவைத்த கலாசாரத்தைத் தமிழ் இலக்கியங்கள் எதிலும் பார்க்கமுடியாது. 

- புலையன் ஆவுரித்துத் தின்றான்,  பாணன் கன்றை உரித்துத் தின்றான்' என்று நற்றிணையிலும், வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர், விருந்தினர்க்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச் சோறும் கொடுத்தனர் என்கிற செய்திகளும்கூட சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்களில் விவரிக்கப்படுகின்றன. 

- உழவர்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு பதிவுசெய்கிறது” என்கிறார் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் சில இடைநிலைச் சாதியினர் மாட்டுக்கறி உண்கின்றனர். பெரும்பாலான இடைநிலைச் சாதியினர் மாட்டிறைச்சி உண்பதில்லை. 
- கேரளாவிலோ தலித்துகள், முஸ்லிம்கள் மட்டுமல்ல, பெரும்பாலான இந்து இடைநிலைச் சாதியினரும் மாட்டிறைச்சி உண்கின்றனர். மீனும் மாட்டு மாமிசமும் கேரளாவின் அடையாள உணவுகள். எனவே 'பசு புனிதம்' என்பது ஒட்டுமொத்த இந்துக்களின், இந்தியர்களின் கலாசாரம் அல்ல.
- ‘பசு புனிதம்’ என்பது வடமாநிலங்களில் இந்து உயர் சாதியினரின் நம்பிக்கையாக மட்டும் இருந்தது. ஆனால், அதை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலாக மாற்றியது தொடக்ககால இந்துத்துவ வாதிகள். 1881-ல் முதன் முறையாக ‘கோரக்‌ஷண சபா’ என்ற முதல் பசுப்பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கினார், ஆரிய சமாஜத்தைத் தோற்று வித்த தயானந்த சரஸ்வதி. தொடர்ச்சியாக ஆரிய சமாஜம், இந்துமகா சபா, ஜனசங்கம் என்று இந்துத்துவ அமைப்புகள் பசுப்பாதுகாப்பு அரசியலை முன்னெடுத்தன.

விவசாயத்துக்காகத்தானா?
- தங்களுடைய மதவாத அரசியலை மறைக்க ‘கால்நடைகளைக் காக்கவும் விவசாயிகளைப் பாதுகாக்கவும்தான் இந்தத் தடை’ என்கிறார்கள் மோடி பக்தர்கள். 


- டெல்லியில் பல நாட்களாக நிர்வாணப் போராட்டம் வரை நடத்திய தமிழக விவசாயிகளைச் சந்திக்க முன்வராத நரேந்திர மோடி, ‘விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் மாட்டிறைச்சித் தடையைக் கொண்டுவருகிறார்’ என்று சொல்வதை நம்புவது, ‘கேப்பையில் நெய்தான் வடிகிறது’ என்று ஒப்புக்கொள்வதற்குச் சமம். 



- பால் வற்றிப்போன, வயதான மாடுகளைப் பராமரிப்பதற்கு என்ன வழி என்பதற்கு இதுவரை பசுப்பாதுகாப்பாளர்களிடம் எந்த பதிலும் இல்லை. 

- பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் இருந்து மேற்குவங்கம் வழியாகத் திருட்டுத்தனமாக வங்காளதேசத்துக்கு ஆண்டுக்கு ஒரு கோடி கால்நடைகள் (அதன் மதிப்பு 3,126 கோடி) கொண்டுசெல்லப்படுகின்றன. 


- பசுப்பாதுகாப்பு’ என்பதற்குப் பால் உற்பத்தி முதன்மைக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பின்படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்தரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவுக்கும் குறைவாகவே உள்ளது.
- இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அசாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கிறது. 

 - மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால், பசுவதை தடைசெய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. 

- பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன. 2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின்படி,  `ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வந்துள்ளது. 

- புதிய தடைச் சட்டத்தின்படி ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்குதான் கால்நடைகளை விற்கவேண்டுமாம். வயதான, பால் சுரக்காத மாட்டை ஒரு விவசாயியிடம் இன்னொரு விவசாயியிடமிருந்து ஏன் வாங்கப்போகிறார்?


- விவசாயிகள் மாடுகளை வளர்க்கவே முடியாத சூழல் உருவாகுமானால் அது இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான உற்பத்தியை பெரிய அளவில் பாதிக்கும். இறைச்சி, பால் மற்றும் பால்பொருள்களையும் கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் உருவாகும். 
- 2016ஆம் ஆண்டுக் கணக்கின்படி உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவும் பிரேசிலும்தான் முதலிடம் வகிக்கின்றன . 

- முஸ்லிம் பெயரில் இந்த ஏற்றுமதி நிறுவனங்களை நடத்துபவர்களில் கணிசமானவர்கள் உயர்சாதி இந்துக்கள்’ என்பது அம்பலப்படுத்தப்பட்டு, ‘உள்ளூரில் பசுவதைத் தடுப்பு, வெளிநாட்டில் ஏற்றுமதியா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

- ஒருவேளை, வீம்புக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் தடை விதித்தால், அது பொருளாதாரத் தற்கொலையாகத்தான்  இருக்கும். 

*விவசாயிகளை அழிக்கும், கால்நடைகளையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் முட்டாள்தனம் இவை இரண்டும் இணைந்ததுதான் மோடியின் ‘இறைச்சிக்குத் தடை'ச் சட்டம். மொத்தத்தில், இந்தத் தடை நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு*

Wednesday, May 31, 2017

உலகை நடுநடுங்க வைத்த ஹேக்கர்ஸ்!

ஜெ.அன்பரசன்

லகம் முழுவதும் தற்போது அனைவரையும் கதிகலங்க வைத்துவருகிறது ரான்சம்வேர். இது இணையத்தில் உலவி அதன் மூலம் கணினிகள் ஹேக் செய்து வருகின்றன. அப்படி ஹேக் செய்யப்பட்ட கணினியின் மொத்த தகவல்களையும் திருடி வைத்துக்கொண்டு கணினியைச் செயலிழக்கச் செய்து வருகின்றனர். அப்படி செயலிழக்கவைக்கப்பட்ட கணினிகளை மறுபடியும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் அந்த ஹேக்கர்களுக்கு பிணையத் தொகையாகத் தரவேண்டும். இதுவரை சுமார் 150 நாடுகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கணினிகளை இது தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரான்சம்வேர் ஆனது வானகிரிப்ட், டபிள்யூகிரை ஆகிய ஃபார்மெட்டுகளில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. 
உலகில் இதுவரை நடந்த சைபர் அட்டாக்குகளில் இதுதான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.  ஆனால், இந்த ரான்சம்வேரை எந்த நாட்டைச் சேர்ந்தவர் உருவாக்கினார், எப்படி பரப்பிவருகிறார் என்பது போன்ற தெளிவான உண்மைகள் இதுவரை கண்டறியப்படவில்லை. ரான்சம்வேர் ஹேக்கிங் போல இதற்கு முன் சில வைரஸ்களைப் பரப்பிவிட்டு உலகை நடுங்கச் செய்த அதிமுக்கியமான ஹேக்கர்களைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். டெக்னாலஜி இன்றளவு இல்லாத காலத்திலேயே வைரஸ்களால், இவர்கள் உலகை எந்த அளவுக்கு உலுக்கியுள்ளார்கள் என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ராபர்ட் மோரிஸ் :
கம்ப்யூட்டர் உலகின் முதல் வைரஸ் ராபர்ட் மோரிஸ் உருவாக்கிய 'மோரிஸ் வைரஸ்'தான். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1988-ம் ஆண்டு கார்னல் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது இந்த வைரஸை உருவாக்கினார். சாதாரண வைரஸாக உள்நுழைந்து மொத்த கம்ப்யூட்டரையும் காலி செய்துவிடும் இந்த மோரிஸ் வைரஸ். இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் 3 நாள்களுக்குள் உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கம்ப்யூட்டர்களின் தகவல்களைத் திருடி, அனைத்தையும் செயலிழக்கச் செய்துவிட்டார் மோரிஸ். 'இன்டர்நெட் எங்கெல்லாம் வீக்காக இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்' என்று கைது செய்யப்பட்டபோது சொன்னாராம் மோரிஸ். இதனால் 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், 'ஹேக் செய்து பிறர் கம்ப்யூட்டரை நம்மால் கட்டுப்படுத்தவும் முடியும்' என அனைவருக்கும் புரிய வைத்தவரும் மோரிஸ்தான்.
டேவிட் எல்.ஸ்மித் :
இப்போது ரான்சம்வேரால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான 'பேட்ச்' ஃபைலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை நிறுவிக்கொண்டால் ரான்சம்வேரிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அறிவுரையும் வழங்கி வருகிறது. ஆனால், ஒருகாலத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பையே ஹேக் செய்து அந்த நிறுவனத்தை மட்டுமல்லாமல், அந்த நிறுவனத் தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைவரையும் அலறவிட்டவர்தான் டேவிட் எல்.ஸ்மித். 1999-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ் வேர்டை குறிவைத்து உருவாக்கப்பட்ட வைரஸின் பெயர் 'மெலிஸ்ஸா வைரஸ்'. இந்த வைரஸ் மெயிலில் வரும். அட்டாச் செய்யப்பட்ட எம்.எஸ்.வேர்டு ஃபைல் கொண்ட மெயிலைத் திறந்தாலே போதும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய மொத்த ஜாதகமும் டேவிட் கைக்கு போய்விடும். அதோடு இதே வைரஸ் ஃபைல், உங்கள் மெயிலிலிருந்து தானாகவே 50 பேருக்கு ஃபார்வர்ட் ஆகிவிடும். அந்த 50 பேர் அந்த ஃபைலைத் திறந்தால், அவர்கள் கணக்கிலிருந்தும் தலா 50 பேருக்குச் செல்லும். இவரால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 80 மில்லியன் டாலர்.
ஜோனதன் ஜேம்ஸ் :

ஹேக்கிங் உலகின் முடிசூடா மன்னன். 'காம்ரேட்' என்ற பெயரில் ஹேக்கிங் விளையாட்டைக் காட்டி அமெரிக்காவையே நடுநடுங்கச் செய்தவர். 1999-ம் வருடம் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஆயிரக்கணக்கான சீக்ரெட் மெயில்களைத் திருடினார். பல ராணுவ அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை மொத்தமாக உருவி அமெரிக்க ராணுவத்துக்கு பெரிய தலைவலியை உருவாக்கியவர். நாசாவின் கம்ப்யூட்டர்களை வசப்படுத்தி மூன்று முறை விண்வெளிப் பயண ஆராய்ச்சியை நிறுத்தி சுமார் 2 மில்லியன் டாலர் நஷ்டத்தை நாசாவுக்கு ஏற்படுத்தியவர். யார் இவர்? என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறைப்பிரிவு சல்லடை போட்டு துளைக்க... அந்த 'காம்ரேட்' ஹேக்கர் கண்டுபிடிக்கப்பட்டான். குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டபின் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் நாசாவுக்கு விளையாட்டு காட்டியது ஜோனதன் ஜேம்ஸ் என்கிற 15 வயது சிறுவன். இவன் சிறியவன் என்பதால், அமெரிக்க அரசு தண்டனை அளிக்காமல், எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது. ஆனால், ஜோனதன் ஜேம்ஸ் இதோடு நிறுத்திவிடவில்லை. மக்களின் கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி பண மோசடி செயலில் ஈடுபட்டுள்ளான். இந்த வழக்கின் கீழ் 2008 -ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டான். வழக்கு நடந்துகொண்டிருந்த வேளையில், பல கார்ப்பரேட் நிறுவனங்களும், இணையதளங்களும் ஜேம்ஸ் மீது அடுக்கடுக்கான பல புகார்களைக் கொடுத்தன. இதனால் மனம் வேதனை அடைந்த ஜேம்ஸ் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டான். ஜேம்ஸ் தற்கொலை செய்துகொண்டபோது தி டெலிகிராப் பத்திரிகை கூறியது என்ன தெரியுமா? 'ஒரு அறிவாளியைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொன்றுவிட்டன.'
கேரி மெக்கினோன் :
"வேற்று கிரகவாசிகளைப் பற்றி ஏதேனும் மறைக்கப்பட்ட தகவல்கள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கத்தான் ஹேக் செய்தேன்" என்று இப்போதும் தனது சொந்த நாடான ஸ்காட்லாந்தில் இருந்துகொண்டு சொல்லிவருகிறார் கேரிமெக்கினோன். இவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் போராடி வருகிறது. ஒருவேளை கேரி கைது செய்யப்பட்டால், அவருக்கு அமெரிக்காவில் 70 ஆண்டுகள் சிறை தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகள் சிறை தண்டனையா? அப்படி எதை ஹேக்கிங் செய்தார் என்கிறீர்களா? அமெரிக்காவின் ராணுவ தளத்துக்குள்ளும், நாசா விண்வெளி ஆராய்ச்சிக்குள்ளும் சர்வசாதாரணமாக சென்று வந்தவர் கேரி. ராணுவதளம் மற்றும் நாசாவில் 2001-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டுவரை சுமார் 97 கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் 300-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களின் மொத்த ஃபைல்களையும் அழித்து சுமார் 7 லட்சம் டாலருக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார். விக்கிலீக்ஸிடம் இருப்பதை விட 100 மடங்கு ரகசியங்களைத் தன்வசம் வைத்துள்ளாராம் இந்த கில்லாடி கேரி.
கெவின் பால்சன் :
'டார்க் டேன்ட்டி, என்ற புனைபெயரோடு உலாவந்த கெவின் செய்து வந்தது சற்று நூதன ஹேக்கிங் ரகம். ரேடியோ நிறுவனங்கள் தொடர்ச்சியாகப் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தன. அப்போது அந்த நிறுவனங்களின் தொலைபேசிகளை ஹேக் செய்து முதல் பரிசு பெறுபவராகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு முதல் பரிசுகளைத் தட்டி வந்தார். இதை நூதனமாக செய்து வந்ததால், யாரிடமும் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால், கவனம் வேறுபக்கம் திரும்பி அமெரிக்காவின் உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ-யின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து அத்தனை ரகசியங்களையும் அள்ளிவிட்டார். பின் போலீசாரால் கைது செய்யப்பட்டு 51 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றதோடு, 56,000 டாலர் நஷ்ட ஈடும் கட்டியுள்ளார். அதன் பிறகு வெளிவந்த கெவின் தற்போது 'வயர்டு' என்ற செய்தி இணையத்தின் ஆசிரியராகவும், பெண்கள் மீதான பாலியல் மற்றும் வன்கொடுமை தடுப்பு ஆலோசகராகவும் இருந்து வருகிறார்

Monday, May 22, 2017

நம்மாழ்வாரை  புரிஞ்சுக்கலையே

யற்கையை நேசிக்கும், இயற்கை விவசாயத்தை விரும்பும், இயற்கையைச் சிதைக்கத் துடிக்கும் கரங்களைத் தடுத்து நிறுத்த இன்று வீதியில் போராட இறங்கும் மனிதர்கள் முன்னத்தி ஏராக உச்சரிக்கும் பெயர்... நம்மாழ்வார்.  

கைநிறையச் சம்பளம் கொடுத்த அரசு வேலையைச் `செக்குமாட்டுத்தனம்' என்று உதறித் தள்ளியவர் நம்மாழ்வார். செயற்கை உரங்களை அள்ளித்தெளித்து புதுப்புது நோய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற `பசுமைப் புரட்சி'க்கு எதிராக நின்று, விவசாயிகளைக் காடு, மேடு, கரட்டு எங்கும் அலைந்து சந்தித்து, `இயற்கை விவசாயத்துக்கு வாங்கப்பா' என்று மன்றாடியவர். டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குகிற மீத்தேன் எடுக்கும் திட்டத்தை, பம்பரமாகச் சுழன்று போராட்டம் மூலம் களமாடி தடுத்து நிறுத்தியவர்.





















நம்மாழ்வார் ஊர் உலகமெல்லாம் கால் தேய நடந்து போய் இயற்கை விவசாயத்துக்குப் பலரை மாற்றிக்கொண்டிருந்தபோது, அவரின் மனைவி அவர்களது சொந்த நிலத்தில் 10 ஆண்டுகள் செயற்கை விவசாயம்தான் செய்து வந்தார்! 

``அவரு உயிரோட இருந்தப்போ ஒரு துளி சுயநலம் இல்லாம வாழ்ந்து, இயற்கை விவசாயத்துக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிடணும்னு சொல்லித் தொண்டைத் தண்ணி வத்தக் கத்தினாரு. ஆனா, அவரை அப்போ கொஞ்ச பேருதான் ஆதரிச்சாங்க. `இந்தக் கிழவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேல? எங்கள நட்டத்துல தள்ளப் பார்க்கிறார்'னு  அவச்சொல் பேசினாங்க. அதுல நானும் ஒருத்தி. அவர் கொடுத்த காசை மிச்சம் புடிச்சு வாங்குன மூன்று ஏக்கர் நெலத்துல 10 வருஷம் செயற்கை விவசாயம்தான் பார்த்தேன். அவரோட இறப்புக்கு அப்புறம், அவரோட முரண்பட்ட பலரும் அவரோட அருமை தெரிஞ்சு இப்போ இயற்கை விவசாயத்துக்குத் திரும்புறதைப்போல, அவர் கொள்கைக்கு எதிரா செயல்பட்டதை நினைச்சு நானும் இப்போ வருந்துறேன்'' என்று உள்ளுக்குள் உதைக்கும் ஆற்றாமையோடு பேசுகிறார், நம்மாழ்வாரின் மனைவி சாவித்திரி அம்மாள். `அவர் இல்லையே' என்ற ஏக்கம் குரலிலும் ஒலிக்கிறது. 

``என் குடும்பம் ஓரளவு வசதியானது. அதனால, எனக்கு வசதியான மாப்பிள்ளையைப் பார்த்தாங்க. ஆனா, `சாதாரண குடும்பமா இருந்தாலும், அரசாங்க வேலையில இருக்கிற மாப்பிளையாப் பாருங்க'னு சொல்லிட்டேன். அப்படித்தான், என்னோட அத்தை இவரை எனக்குப் பேசி, கட்டி வச்சாங்க. 

சடங்கு, சம்பிரதாயங்களை முறையா கடைப்பிடிக்கிற வழக்கம் எங்களுக்கு. 

ஆனா இவரோ, பகுத்தறிவுப் பேசி, தாலி கட்ட மாட்டேன்னு சொல்லிட்டாரு. `நான் அவங்களுக்குத் தாலி கட்டணும்னா, பதிலுக்கு அவங்க எனக்குத் தாலி கட்டணும்'னு இவரு குதர்க்கமா பேச, 1964-ம் வருஷம் வெறும் மோதிரம் மட்டும் மாத்தி என்னை மனைவியா ஏத்துக்கிட்டாரு.

முதல் ராத்திரியில என்கிட்ட, `எங்க அண்ணன்கள் ரெண்டு பேரும் அவங்க  மனைவிகளைக் கோபத்துல அடிப்பாங்க. அதைப் பார்த்து பார்த்து வளர்ந்த நான், பெண்களை மதிக்கணும், அவங்களைப்போல அடிக்கக் கூடாதுனு உறுதி எடுத்துக்கிட்டேன். அந்த மரியாதைக்கான ஆரம்பம்தான், உங்களுக்கு நான் தாலி கட்டாதது'ன்னார். புது மாப்பிள்ளையா இருக்கிறப்போ எல்லா ஆம்பளைங்களும் சொல்ற வசனம்தானேனு நெனச்சேன். ஆனா, அவரோட வாழ்ந்த வாழ்க்கையில ஒரு தடவைகூட என்னை கைநீட்டி அடிச்சதில்ல. அவ்வளவு ஏன்? கோபமா பேசுனதில்ல; `நீ, வா, போ'னு ஒருமையிலகூட கூப்பிடமாட்டாரு, `வாங்க, போங்க'னுதான் பேசுவாரு. கடைசிக் காலம் வரை அப்படித்தான். 

அவருக்கு 400 ரூபாய் சம்பளம். இப்போ ஒரு லட்சம் மாதிரி அப்போ அதோட மதிப்பு. அதுல அஞ்சு ரூபாய் மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை அப்படியே என்கிட்ட வந்து கொடுத்துடுவாரு. அதுல அப்படி இப்படி மிச்சம் பண்ணியும், இருக்குற நகைகளை அடகு வெச்சும், ஊருல மூணு  ஏக்கர் நெலம் வாங்கிப் போட்டேன். அங்கதான் எங்க ஒரே மக மீனா பொறந்தா. நாலு வருஷம் ஒழுங்கா வேலைக்குப் போனவரு, ஒருநாள் தயங்கித் தயங்கி என்கிட்ட வந்து, `உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்'னு மென்னு முழுங்கினாரு. `நான் வேலையை விட்டுட்டேன்'னு  படீர்னு  சொன்னாரு. எனக்கு பக்குனு ஆயிட்டு. `ஏன்?'னு கேட்டேன். `எனக்கு செக்கு மாடாட்டம் வேலை பார்க்கப் பிடிக்கல. செயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவா நான் விவசாயம் படிச்சேன்?'னு  ஏகப்பட்ட வேதாந்தம் பேசினாரு. `சோத்துக்கு என்ன பண்றது?'னு  கேட்டேன். `சமாளிச்சுக்கலாம்'ன்னாரு.

நான் கோச்சுக்கிட்டு ஊருக்கு வந்துட்டேன். ஆனா, அவரு வந்து,  என்னை சமாதானப்படுத்தி கூட்டிட்டுப் போனாரு. களக்காடுங்கிற ஊருல பெல்ஜியம் நாட்டு தனியார் கம்பெனி இயற்கை விவசாயப் பண்ணை வச்சுருந்தாங்க. அதுல வேலைக்குச் சேர்ந்து 10 வருஷம் வேலை பார்த்தாரு. அப்புறம், தருமபுரியில உள்ள மலையில் மோட்ராகிங்கிற கம்பெனியில மூணு  வருஷம் வேலை பார்த்தாரு. நாடோடி மாதிரி நானும், என் மகளும் அவரு பின்னாடி போனோம். ஆனா அதையும் விட்டுட்டு, எங்களை சொந்த மாவட்டமான தஞ்சைக்கே அழைச்சுட்டு வந்துட்டாரு. அங்கே, `குடும்பம்'னு ஒரு  இயற்கை விவசாய வழிகாட்டி அமைப்பை ஆரம்பிச்சு, 10 வருஷம் இயற்கை விவசாய வழிமுறைகளை பிரசாரமா செஞ்சாரு. 

`இந்த மனுஷனை நம்பினா, பொண்ணையும் கட்டிக்கொடுக்க முடியாது, குடும்பமும் கரை சேராது'னு நெனச்சு, நான் ஊருல வாங்கிப் போட்ட மூணு ஏக்கர் நெலத்துல விவசாயம் பண்ணினேன். என்னையும் அவர் இயற்கை விவசாயம் பண்ணச் சொல்லி வற்புறுத்தினாரு. ஆனா, நான் கேக்கல!

 அவருக்கு மக மீனா மேல கொள்ளை பிரியம். `நேருவுக்கு இந்திராபோல, எனக்கு மீனா. அவளை ரஷ்யா வரை அனுப்பிப் படிக்க வைப்பேன்'னு  அடிக்கடி சொல்வாரு. நான்தான், `ஒத்தப் புள்ளையை அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்'னு மறுத்துட்டேன். 

கடந்த எட்டு வருஷத்துக்கு, முன்னாடி கரூர் வானகத்துல 65 ஏக்கர் பொட்டல்காடு நிலத்தை வாங்கி, அதை சோலையாக்கணும்னு முனைப்புக்கு வந்தபிறகு, அவர் வீட்டுக்கே வர்றதில்லை. எப்பவாச்சும் இந்த வழியா போகும்போது, `நான் இன்னைக்கு வீட்டுக்கு வர்றேன்'னு  சொல்லிட்டு வருவாரு. அரை மணி நேரம் இருந்துட்டு கிளம்பிடுவாரு. இதனால, நான் என் மக வீட்டுலேயே இருந்தேன்.

`குடும்பத்தை விட்டுட்டு நாடோடியா, இப்படி கருத்து  சொல்லிட்டு திரியுறாரே?'னு அவர் மேல வருத்தமா இருக்கும்தான். ஆனா, அவரை சொந்தம், அக்கம்பக்கம் யாராச்சும் ஏசினா பொசுக்குனு கோபம் வந்துடும். பிலுபிலுனு  அவங்ககிட்ட சண்டைக்குப் போயிருவேன். அவரு குடும்பத்தை மறந்து போனாலும், எல்லார்கிட்டயும் என்னைப் பத்தி பெருமையா பேசிக்கிட்டேதான் இருந்திருக்கார். 

நான் விவசாயம் பார்த்தப்போ, ஒரு தடவை அடி உரத்துக்குப் பதில் எருக்கஞ்செடிகளை போட்டு பயிர் செஞ்சேன். நல்ல மகசூல். அதைப் பத்தி எல்லார்கிட்டயும் பெருமையா பேசி இருப்பார்போல. சமீபத்துல மாமல்லபுரத்துல உள்ள ஒரு அமைப்பு அவருக்கு விருது கொடுத்தாங்க. அதை வாங்கப் போனேன். அப்போ அங்க பலரும், `நீங்க செயற்கை விவசாயம் பண்ணினாலும், எருக்கஞ்செடிகளை போட்டு சிறப்பான மகசூல் எடுத்ததை அய்யா எங்ககிட்ட பலதடவை பெருமையா சொல்லி இருக்கார்'னு  சொன்னாங்க. அப்படியே உருகிப்போயிட்டேன்.

அவர் இறந்தப்ப வந்த கூட்டத்தை பார்த்தப்போதான், `இந்த மனுசன் வாழ்ந்த வாழ்க்கைய நாம புரிஞ்சுக்கலையே'னு  மனசை அறுத்துப் போட்டிருச்சு. அதுவும், பலநூறு இளைஞர்கள், இளம் பெண்களெல்லாம் வந்து அழுதப்ப, `நம்மாழ்வார் மனைவி'ங்கிற பெருமையை, கர்வத்தை முதல் முறையா நான் உணர்ந்தேன். ஆனா,  அப்போ அவரு  மூச்சில்லாத உடலாயிட்டாரேனு வெடிச்சு அழுதேன். 

இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும் ஒவ்வொருத்தருக்கும் அவரு தலைவன். 

பல ஆயிரம் இளைஞர்களும், இளைஞிகளும் அவர் கொள்கையால ஈர்க்கப்பட்டு, எந்தக் கட்சி சாயமும் இல்லாம அவரைக் கொண்டாடுறதைப் பார்க்குறப்போ நம்பிக்கையா இருக்கு. முதல்முதலா கோயில்பட்டியில அவர் வளர்த்த பாகற்கொடிபோல, இன்றைய சந்ததிகிட்ட புது நம்பிக்கையை வளர்த்தெடுத்திருக்காரு. 

இப்போ இயற்கை விவசாயத்துக்கு ஆதரவா எடுக்கப்படுற ஒவ்வொரு அடியிலயும் அவரை என்னால பார்க்க முடியுது. அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன், அவரை எனக்கு எவ்வளவு தேடுதுங்கிறதை சொல்றதுக்கு இப்போ அவரு இல்ல. இருந்தாலும், இந்த நெனப்பெல்லாம்தான் எனக்கு இப்போ ஜீவனா கெடக்குது!'' 

இன்மையில் உணரப்படும் அன்பு வலிமிகு அழகு. ஒரு கண்ணில் காதலும் ஒரு கண்ணில் கண்ணீருமாகச் சிரிக்கிறார் சாவித்திரி அம்மாள்

Wednesday, May 3, 2017

லிப்பிகா சிங்நான்கு தேசிய விருதுகள்


லிப்பிகா சிங் டராய். ஒடிஸாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர். தனது ஏழு வருடகால திரைப் பயணத்தில் நான்கு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருதுகள் பட்டியலில், லிபிக்காவின் `த வாட்டர்ஃபால் (The Waterfall)' ஆவணப்படம், `சிறந்த கல்விப் படம்' என்ற பிரிவில் விருது வென்றுள்ளது. 

`ஹூ' என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த லிப்பிகாவுக்கு ஃபேஸ்புக் வழியாக வாழ்த்துத் தெரிவித்தேன். உற்சாகமாக உரையாட ஆரம்பித்தார்.




``ஒரு பழங்குடிப் பெண்ணாக லித்திகா வளர்ந்த சூழல் எப்படிப்பட்டது?''

 ``ஒடிஸாவில் இருக்கிற மயுர்பஞ்ச் என்ற குக்கிராமத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை வங்கி ஒன்றில் பணி புரிந்தார். அதனால் அடிக்கடி பணியிட மாறுதல் இருக்கும். அது எனக்கு பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது. பட்டப் படிப்பை விசாகப்பட்டினத்தில்  முடித்த பின்னர், புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஆடியோகிராஃபி படித்தேன். 

என் வீட்டுச்சூழலால் பழங்குடிப் பெண் என்பதற்கான இட ஒதுக்கீடோ, கல்வி உதவித்தொகையோ எப்போதும் அவசியமாக இருந்ததே இல்லை. ஆனாலும், என் நிறத்தால்  நான் பிறந்த இனத்தால் தினசரி வாழ்வில் பின்னடைவுகளையும் மிகமோசமான பாகுபாடுகளையும் சந்தித்திருக்கிறேன். 

முதன்முதலாக பள்ளி விழா ஒன்றில் நடனமாடும்போது, நன்றாக நடனம் ஆடும் நான் பின் வரிசையிலும், நடனம் ஆடத் தெரியாவிட்டாலும் நல்ல நிறமாக இருந்த பெண் மையத்திலும் நிற்கவைக்கப்பட்டோம்.  நம்மைச் சுற்றி இருக்கிற பாகுபாடுகளை உணரத் தொடங்கியது அப்போதிருந்துதான். அப்போது இருந்தே இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ளும், மன தைரியத்தை எனக்கு நானே ஊட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். 

எனக்கு தேசிய விருது கிடைத்ததைக்கூட இட ஒதுக்கீட்டில் பெற்றதாகக் கேலி செய்கிறவர்களை இப்போதும் எதிர்கொள்கிறேன். 

சில இடங்களில் நான் பெண், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவள் உள்ளிட்ட அடையாளங்கள் ஏற்படுத்தும் தடைகளால் ஓர் கடுமையான அழுத்தத்தை உணர்கிறேன். அதிலிருந்து வெளிவந்தாலும், அந்த அழுத்தத்தை அனுமதிப்பதை  என் பலவீனம் என நினைக்கிறேன்.'' 


``அடுத்தடுத்து வெல்லும் தேசிய விருதுகள் பற்றி?''

``முதல் தேசிய விருதை ‘காருட்’ என்கிற படத்தின் சவுண்ட் இன்ஜினீயரிங் வேலைக்காகப் பெற்றேன். அடுத்ததாக, எனக்கு மியூஸிக் கற்றுத்தந்த, சங்கீதத்தை சேவையாகச் செய்துவந்த என் ஆசானின் குரலைப் பதிவிட நினைத்தேன். அவரைத் தேடிச் சென்றபோது அவர் உயிருடன் இல்லை. அச்சமயத்தில், நான் இயக்குநர் ஸ்ரீ மணி கவுல் படத்தில் சவுண்ட் இன்ஜினீயராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவர்தான், ஆசிரியரைப் பற்றி ஆவணப்படம் எடுக்கச் சொல்லித் தூண்டினார். அப்படி உருவானதுதான் ‘A Tree A Man A Sea’. அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அந்தப்படம். 

அடுத்த முயற்சி, `ட்ராகன் ஃப்ளை மற்றும் ஸ்நேக்’ ஆவணப்படம். நகர வாழ்வில் இருக்கும் ஒரு பள்ளி மாணவி விடுமுறையில் கிராமத்துக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள், அவள் வளர்ந்த பின், கிராமத்துக்குச் செல்ல இயலாத அவள் சூழல் மற்றும் ஏக்கத்தைப் பேசும் படம். அதுவும் எனக்கு சிறந்த இயக்குனருக்கான தேசியவிருதை பெற்றுத்தந்தது. 

இதோ இம்முறை தேசிய விருது வென்றிருக்கும் ‘த வாட்டர்ஃபால்’, பள்ளி விடுமுறையில் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள கிராமத்தில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் பற்றியது. இயற்கையை ரசித்தபடி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் பற்றிப் பேசித் திரியும் அவர்கள், அரசின் அறிவிப்பால் நீர்வீழ்ச்சி அழியும் நிலை வரும்போது என்ன செய்கிறார்கள் என்பதே கதை. ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 700 பள்ளிகளில் திரையிடப்பட உள்ளது.''

``ஆவணப்பட தயாரிப்பாளராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?''

``படம் தயாரிப்பதற்கான பணம்தான் சவால்.  அதைத்தாண்டி பெரிய சவால்கள் எதுவும் இல்லை. சமீபத்தில் ‘ஸ்டோரீஸ் அரவுண்ட் விட்ச்சஸ்’ என்ற, சூனியம் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தேன். படத்துக்காக அந்த மாந்திரீக உலகைச் சேர்ந்த பல பகுதிகளுக்கும் சென்றது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். என்னுடைய பட வேலைகளில் பெரும்பங்கை நானே செய்துவிடுவதால் அனைத்தும் என் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். இங்கு நானே பாஸ்.