Tuesday, March 23, 2021


விலங்குகள் தற்கொலை செய்துகொள்வதோ மற்றவர்கள்மீது தீ வைப்பதோ இல்லை. ஆனால், அவை மனித இனத்தில் நடக்கின்றன. காதல் திருமணம் செய்துகொள்கிற ஒரு பெண் ஏன் அல்லலுறுகிறாள், அவள் ஏன் தற்கொலையை நாடுகிறாள் என்பதைச் சொல்வதுதான் ‘செல்லாத பணம்’ நாவல். காதலே எப்படிக் கொலைக்கருவியாக மாறுகிறது என்பதைச் சொல்லும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 1994-ல் ‘கோவேறு கழுதைகள்’ நாவல் வெளியானபோதே எனக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாக அளிக்கப்பட்டாலும் விருது, மகிழ்ச்சி அளிக்கிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குப் பிறகு சாகித்ய அகாடமி விருது பெறும் இரண்டாவது திராவிட இயக்க எழுத்தாளர் நான். இந்த விருதைத் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன்.”

- இமையம்

Tuesday, January 5, 2021

கலைஞர் தந்தது 


1971வேளாண்மை பல்கலைக்கழகம் 

1989 கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் 

1990 மனோன்மணியம் பல்கலைக்கழகம் 

1996 அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 

1997ல் பெரியார் பல்கலைக்கழகம் 

2001 உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் 

2008 கல்வியியல் பல்கலைக்கழகம் 

2008 கடல்சார்பல்கலைக்கழகம் 

எம்ஜீஆர் மற்றும் கலைஞர் மூன்று திருமணங்கள் செய்தவர்கள் தான். 

ஆனால், கலைஞரின் திருமணங்கள் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன ஏன்? 

முழுமுதற்காரணம் கலைஞரைப்போல அவருக்கு வாரிசுகள் இல்லை. 

மேலும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிக்கு முன்பே சிக்கி சின்னாபின்னமாகமல் மறைந்துவிட்டார். 

முக்கியாமானது என்னவென்றால்... கலைஞரை பார்ப்பனுக்கு பிடிக்காது. இன்றுவரை பெரும்பான்மையான ஊடகம் பார்ப்பன்னர்கள் மற்றும் பார்பண அடிவருடிகளிடம் இருக்கிறது. 

கலைஞர் இறந்த பின்னும் அரசியலில் அவரை நிலை நிறுத்த ஸ்டாலின் கனிமொழி மற்றும் அழகிரி (பாவம் சேர்த்து கொள்வோம்) இருக்கிறார்கள். 

கலைஞருக்கு தளபதி மு க ஸ்டாலின் போல எம் ஜி ஆருடைய வாரிசு இப்போது இருந்தால் நிலைமை வேறுவிதமாக இருக்கும். 

சரி விடுங்கள் விஷயத்திற்கு வருவோம்!!! 

எம் ஜி ஆருக்கு சட்டப்படி மூன்று மனைவிகள் இருந்தனர்... 

முதல் திருமணம் 

எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். 

இரண்டாவது திருமணம் 

அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தாக கருதப்பட்டார் அல்லது தள்ளி வைக்கப் பட்டார். 

மூன்றாவது திருமணம் 

1948 மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி 

எம்.ஜி.ஆர் இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். 

அவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. 

அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக எம்.ஜி.ஆரும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. 

அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதி பட் கைகளில் கிடைத்தன. 

கணபதி பட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். 

எம்.ஜி.ஆர் அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். 

கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர் தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். 

இத்திருமணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணனும் நடிகருமான எம்.ஜி. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். 

எனினும் எம்.ஜி.ஆரின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே எம்.ஜி.ஆரும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 

12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் எம்.ஜி.ஆரும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர். 

மற்றபடி எம் ஜி ஆருக்கும் நடிகைகளான ஜெயலலிதா, மஞ்சுளா, லதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

ரொம்ப லேட்டா தான் எல்லோர்க்கும் தெரியும்... அது ஓர் கொட்டை இல்லாத பழம் என்று.

Monday, December 14, 2020



























நான் பாரதி வந்திருக்கிறேன்
பாரதி யார்? என்று
சிலர் கேட்பது என் காதுகளில் விழுகிறது
உங்கள் கேள்வியிலேயே பதிலுண்டு

ஆம்
பாரதியாரென்றும் என்னை அழைப்பர்
இன்னும் விளங்கவில்லையா?

மதம் கொண்ட யானையினால்மரித்துப்போன 
மகா கவி என்று பெயரெடுத்தவன்
எட்டையபுரத்திலிருந்து இன்னொரு முறை
எழுந்து வந்திருக்கிறேன்
 
இப்போது ஏன் மறுவருகை என்று
என்னை நீங்கள் கேட்டால்?

எதிலாவது இச்சமூகம் மாறியிருக்கிறதா
என்று பார்க்கும் ஆசையில்தான் வந்தேன் இப்படி!
 
இக்கணம் வரை இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன்

இப்போது யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ்போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற
எம் தமிழ் சூழ் நிலம் நிற்கிறேன்

ஓடி விளையாண்ட பாப்பாக்களே
ஓய்வறியா இவ்வுலகத்தில் 
ஓயாது பெற்றோர் கனவு மெய்ப்பிக்க
ஆடி ஆடி ஓடி ஓடி தேடி தேடி
தீர்த்துவைக்கும் கைநூல் பொம்மையாய்
சுற்றி சுற்றி வெற்றி நோக்கியே சுழன்றதால்
அப்பாலகர் இழந்த பால் பருவம் கண்டு

ஓடி விளையாடு உன் வீட்டுக்குள்ளே
என்றா நான் பாடினேன்? என்று கேட்க தோணுது

மாதர் உம்மை உணர்ந்து விட்டீர்
மடமையை மாதரே கொளூத்துகிறீர்
கல்வியில் சிறந்து ஓங்கவே     
கண்டம்விட்டு கண்டம்கூட பாய்கிறீரே
என்றெண்ணும் வேளையில்

பால் வேட்கையில் பாலியல் வேட்டைக்கு
பலியாகும் பால்பருவ மழலைக்கு
பாகுபாடு பார்த்தே பாவம் பார்ப்பது சரியா?

மாட மாளிகை மாதருக்கும்
மண்குடிசை மாதருக்கும் ஓரே மானம்
என்று உணரா மாதரே நீ மாற
மாதரென்றால் எல்லோரும் மாந்தரே என்று
இன்னோர் கவிபாட எனக்கு தோணுது  
 
 
காதலை கொண்டாடிய நான்
காதலியை கண்ணம்மாவாக்கினேன்
கண்ணம்மா காதலர்களின்
பொதுவுடைமை பெண்பாலானாள்
கண்ணப்பன்களை ஆண்பாலாக்கி
பெண்டிருக்கு பொதுவுடைமை செய்யாதது
என் பிழையல்ல

நான் வெறும் கோடிட்டேன்
என்பின்னே சாலையிட
என்னைப்போல் கவி வருவானென்று
நினைத்தே அப்பிழை விட்டேன்
 
இன்றோ 
இங்கே சட்டம் போட்டு 
காதல் சமைக்கின்றீர்
சைவெமென்றும் அசைவமென்றும்
சாதியென்றும் மதமென்றும்
விதவித பண்டங்கள் பல வண்ணங்களில்
உண்போருக்கோர் சுயம்
உண்டோருக்கோர் பயம்
இலைமுன் இருப்போருக்கோர் ஐயம்
எடுக்கவோ கடிக்கவோ
என்று யோசிப்பதற்கா காதலுணவு
 
பரந்துவிரிந்த இந்த பாரில்
காதலால் வந்தது உயிரினங்கள்
அதற்கு மூலக்கூறுகளூம் இருந்ததில்லை
வாய்ப்பாடுகளும் இல்லை
இலக்கணங்களும் இல்லை
அதை குறிக்க இலக்கங்களும்
இதுவரை இல்லை இனியும் இல்லை

காதல் இயற்கை 
அது மானுட நிலை
என்று புரியாத பதர்களுக்கு
காதலால் ஆன கவிதைகளை
நிறைய எழுதாமல் விட்டுவிட்டோமே
என்றழுகத்தோணுது

காக்கையையும் குருவியையும்
மானுட சாதியாய் ஆக்கிய நான்
அம்மானிடமோ சந்துக்கொரு சாதி 
சங்கம் தமிழுக்கல்ல சாதிக்கென்று  கண்டு  
காக்கையையும் குருவியையும்
ஏன் நான் கட்டிப்பிடித்த கழுதையையும்கூட
பறவையாய் விலங்காய் பறந்தும் திரிந்தும்
பாரெங்கும் பழையபடி பண்பாய் வாழச்சொல்ல தோணுது
 

எங்கு காணினும் சக்தியடா
என்று சொன்னதை 
எப்படி எடுத்துக்கொண்டதோ?
இந்த மனித புத்தி
சக்தியை மத யுத்தியாக்கிய
இச்சைவ சவர்க்கர்கள் கண்டு
எனக்கோர் பயம்
 
எங்கேனும் இன்னோர் மதம் பிடித்த ஆணை
என்னை ஏறி மிதிக்கும்
என் பயம் எனை சூழ்ந்தாலும்
 
இன்னும் எங்கோ சில கங்கு வெப்பம்
சுள்ளென சற்றே சுட்டும் ஒளி வீசி எறிகிறது
நான் பற்றவைத்த தீ குஞ்சுகள் அவை
என் எழுத்தை கவிதையை
சரியாய் புரிந்து எரிந்து சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்
அவை இருக்கும் நம்பிக்கையால்தான்
 
தேடிச்சோறு நிதந்தின்று- பல
சின்ன்ஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடி துன்பமிக உழன்று-பிறர்
வாட பல செயல்கள் செய்து-நரை
கூடி கிழப்பருவ மெய்தி- கொடுங்
கூற்றுக் கிரையெனபின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று இன்னும் சத்தமாய்
கத்தி கவிபாட தோணுது

திரும்ப திரும்ப வருவேன்
வெந்து தணிந்த அநீதிக்காடு காணும்வரை

- ரெபி

-  

Wednesday, December 9, 2020

மார்பக வரிச்சட்டம்

குஷ்பு வானதி தமிழிசை மற்றும் வரலாறு தெரியாத சங்கி வகையறாக்களின்

கவனத்திற்கு!

இந்தியாவில் எத்தனையோ
விசித்திரமான சட்டங்கள்
இருந்தது அதில் ஒன்று தான்
இந்த மார்பகவரி சட்டம்

1800 களில் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட
திருவனந்தபுரம் கன்யாகுமரி
போன்ற கேரளா பகுதிகளில்
தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பக வரி செலுத்தி ஆக
வேண்டும் என்று சட்டம்
இருந்தது

இது நாடார், சர்வர், ஈழவர்
முக்குவர், புலையர் என்ற
18 தாழ்த்தப்பட்ட ஜாதியினர்
மீது சுமத்தப்பட்டது

இது உயர் ஜாதி நம்பூதிரிகள்
பிராமணர்கள், நாயர்கள்
ஆகியோருக்கு மரியாதை
செலுத்தும் விதமாக இந்த முலைவரி சட்டம் அமுலில் இருந்தது.

பெண்கள் மேலாடைகளே அணியக்கூடாது தங்களின் மார்பகங்களின் அளவிற்கு
ஏற்ப வரி செலுத்தவேண்டும்

இந்த ஜாதிக்கொடுமைக்கு
எதிராக போராடிய வீரபெண்
நாங்கிலி  30 வயது அழகு தாழ்த்தப்பட்ட பெண்  வரி கட்ட மறுத்து போராடினாள்

திருவாங்கூர் அரசு இவளுக்கு இரட்டை வரி
விதித்ததன் காரணம் இவள் மார்பகங்கள் சற்று பெரிதா
இருந்ததால்

பலமுறை வற்புறுத்தியும்
வரி கட்ட மறுத்தாள்
இறுதியில் வரி வசூல்
செய்யும் பார்வாத்தியார்
நாங்கிலியின் வீட்டிற்கு 
வந்துவிட்டார் கூட்டத்தோடு

நாங்கிலி  ஒரு நிமிடம் காத்திருங்கள் என்று உள்ளே சென்றவள்
வாழை இலை எடுத்து வந்து
விரித்தாள் தன்னுடைய மார்பகங்களை அறுத்து வைத்தாள். அப்படியே கீழே சரிந்து உயிர் நீத்தாள் அந்த மானமிகு வீரபெண்.

அவள் இறந்ததும்  அவள் வாழ்ந்த ஊர் முலைச்சிபரம்பு
என்று அழைக்கப்பட்டது

இன்று அதன் பெயர்
மாற்றப்பட்டு மனோரமா காவலர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நாங்கிலி இந்த தேசத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றின் முதல் அத்தியாயம்.

மனுதர்மத்திற்கு வக்காலத்து
வாங்கும் மனிதர்களே உங்க
மனசாட்சியை கேளுங்கள்

தமிழை அமுதென்றறிவது

ஒருதுளி அது மா கடல்
நீந்தி முத்தெடுப்பது உன் மதி

ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் இலை என்று பெயர்

அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை கீரைஆகின்றது.

மண்ணிலே படர்கின்றவை கொடிவகை இலைகளுக்குப்
பூண்டு என்று பெயர்

அறுகு, கோரை முதலிய இலைகள் புல் ஆகின்றன

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்கு பெயர் தழை

நெல், வரகு முதலியவற்றின் இலைகள் தாள் ஆகும்.

 சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளின் பெயர்  மடல்

கரும்பு, நாணல் போன்ற இலைகளின் பெயர் தோகை

தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகளுக்கு 
ஓலை என்று பெயர் 

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களில் இலக்கணம் மட்டுமல்ல,
தாவரவியல் அறிவியலும் 
அடங்கி இருக்கிறது.

முடிந்தால் தேடிக்கூறு பிற மொழியில் இவ்வாறெல்லாம் இருக்கிறதென்று சான்றுடன்

இனி நாங்கள் தமிழெக்கென்று
நிறமுண்டு தனியே அதற்கு
ஒரு குணமுண்டு என்று
கூவப்போவதில்லை

முடிந்தால் ஆடு இல்லை ஓடு


 சார் Racism ஒங்கள ரொம்ப கஷ்டப்டுத்துது ஒத்துக்கிறோம்

நம்ம ஊர்ல இன்னொன்னு பண்றோமே Castism 
அப்டினா என்ன?

ஏன்னா 

Racism பாக்குற வெள்ளக்காரன் எந்த வெள்ளக்காரியையும் காதல் பண்ணலாம், கல்யாணம் பண்ணலாம்

Racism பாக்கப்படுற கருப்பரும் எந்த கருப்பியையும் காதல் பண்ணலாம், கல்யாணம் பண்ணலாம்

இதில் சில சமயம் வெள்ளைகாரன் கூட கருப்பிய கருப்பன்கூட
வெள்ளைக்காரிய காதல் பண்றான், கல்யாணம் பண்றான் ஆனால் South Asians எப்பிடிப்பா இருக்கோம்?

ஆனால் நம்மூரில்???????

நாம் படித்தும், வேலைக்கு
வெளிநாட்டுக்கு வந்தும்
இங்குள்ள பெரும்பாலான சமத்துவத்தை பார்த்தும் கொஞ்சமும் திருந்தாமல் 

அங்குள்ள அதே Castismஐ 
Digital Clubsஸா, websitesஸா, Facebookல், Twitterல் தூக்கி சுமக்கும்
அதே South Asians தான் நாம எல்லோரும் இல்லை
ஆனால் பெரும்பாலோர்

இந்த அறிவியல் பரிணாம வளர்ச்சிக்கெல்லாம் பெயர்
என்னப்பா? Racismமா?

நமக்கு வந்தா ரத்தம்!

நாம சொல்லும் SouthAsiaல் 
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு வந்தா தக்காளி சட்னியாப்பா

முதலில் நம்ம யோக்கியதை
என்னவென்று பார்ப்போம்
அப்பால Racism பத்தி நாம பேசலாம் South Asians

கடந்த  2  ஆண்டுகளில்



வைரமுத்துவின் கருத்து  இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் விஜய் திரைப்படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!

நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

சுகி சிவம் பேசிய கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து
இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்

இந்து மனம் புண்பட்டதால் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்

இந்து மனம் புண்பட்டதால் 
எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!
இந்து மனம் புண்பட்டதால் 
பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

இந்து மனம் புண்பட்டதால் 
பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

இந்து மனம் புண்பட்டதால் 
அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!

இது போல கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று 7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.

இவர்கள் இப்படி திட்டமிட்டு திசை திருப்பி வருவதால்
மத்திய அரசு மாநில அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத்துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.

அவைகளின் பட்டியல் கீழே
- நீட் தேர்வு
- ரஃபேல் ஊழல்
- இந்தி திணிப்பு
- விலைவாசி உயர்வு
- கீழடி ஆய்வு முடக்கம் 
- வேலைவாய்ப்பின்மை
- காவல் துறை அராஜகம்
- புதிய மீன்பிடி கொள்கை
- OBC இட ஒதுக்கீடு பறிப்பு
- பணமதிப்பிழப்பு தோல்வி
- GST வரி மற்றும் வரிஉயர்வு
- தூத்துக்குடி படுகொலை
- பெட்ரோல் டீசல் விலை    
   உயர்வு
- கேஸ் சிலிண்டர் விலை 
   உயர்வு
- 5 மற்றும் 8 வகுப்பு 
   பொதுத்தேர்வு
- எட்டு வழிச்சாலைக்கு 
   புதிய வடிவம்
- காவிரி மேலாண்மை 
   உரிமை பறிப்பு
- 2020 புதிய சுற்றுச்சூழல் 
  தாக்க மதிப்பீடு
- தமிழக பணியில் வட 
  இந்தியர் நியமனம் 
- புதிய கல்வி கொள்கை 
  என்ற குலக்கல்வி
- காவிரி டெல்டா பகுதி 
  கார்ப்பரேட்டுகளுக்கு 
  தானம்

எனறு அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.

தமிழகம் மக்கள் அனைவரும் குழம்பி விடாமல், சுயமாக தெளிவாக சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றில்
கவனம் செலுத்த வேண்டும்.

தினந்தோறும்  நம்மை திசை திருப்பும் பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழகம்
உத்திர பிரதேசத்தைப்போல் பின்னடைவை சந்திக்கும்