Wednesday, January 25, 2012

பாதையே இல்லாத அடர்ந்த காட்டில், கொடிய மிருகங்களுக்கு இடையேயும் நச்சு அரவங்களுக்கு இடையேயும் அணைகட்டும் பணியை அயராது தொடர்ந்தவன்.

18.06.1890ல் கடுமையான பேய் மழையினால் அணைக்கட்டுப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட காட்சியைக் கண்டு, கோ வெனக் கண்ணீர்விட்டுக் கதறி அழுதவன்.
1893-ல் இந்தப் பகுதியில் ஏற்பட்ட காலராவினால் நூற்றுக்கணக்கில் உயிர்கள் பலியாகின. அதில் பென்னி குயிக்குடன் பணியாற்றிய 45 ஆங்கில உயர் அதிகாரிகளும் இறந்துவிட்டனர். இறப்பும் இழப்பும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபோதும், அணை கட்டும் பணியைக் கைவிடாது தொடர்ந்தவன்.

ஆங்கில அரசு, பெரியார் அணைக்கட்டைக் கட்ட முடியாது என்று கைவிட்ட நேரத்திலும், தொடர்ந்து பணி செய்து அணை கட்ட உறுதி கொண்டவன்.
நிதி இல்லாதபோது லண்டனில் உள்ள தன் சொத்து, நகைகளை விற்று நிதி கொண்டுவந்து அணை கட்டி தென் தமிழகத்துக்குப் பாசனம் கொடுத்துப் பசி போக்கியவன்.

இன்று தென் தமிழகத்தில், நாங்கள் பாசனம் பெற்றுப் பசியாறுவது மட்டும் அல்ல, தவித்த வாய்க்குத் தண்ணீர் அருந்துவதும் இந்தத் தவப் புதல்வனின் தியாகத்தால்தான்.
தியாகம் குறைந்து அருவருக்கத் தகுந்த சுய நலமும் பேராசையும் நிரம்பிப்போன நம் தேசத்தில், எங்கிருந்தோ வந்து நமக்கு வாழ்வளித்த இந்தப் புனிதனைப் பெருமைப்படுத்த எங்கள் அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்று இரண்டு, மூன்று மாதங்களாக எண்ணி இருந்தோம். இந்த மகத்தான மனித னுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்ற மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
இவரது நாட்குறிப்பில் எழுதப்பட்டதாகக் குறிப்பிட்ட வாசகம்


'இப் புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒரு முறை நான் இப் புவி யில் வரப்போவது இல்லை

No comments:

Post a Comment