ரோமன் ஹாலிடே', `மை ஃபேர் லேடி' போன்ற படங்களில் நடித்த ஆட்ரி ஹெபர்ன், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை. 1950-ம் ஆண்டுகளில் யுனிசெஃப் நிறுவனத்தில் நடைபெற்ற பல்வேறு நற்பணிகளில் பங்குகொண்டவர். அவர் தனது அனுபவத்தில் இருந்து சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்.
கண்கள் அழகாக இருக்க வேண்டுமா? உங்களைச் சுற்றி உள்ளவர்களின் நல்ல தன்மைகளைக் காணுங்கள்.
மெல்லிய உடல் வேண்டுமா? உங்களின் உணவை, பசித்தவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள். எப்போதும் சந்தோஷத்தையும் சிரிப்பையும் உடன் வைத்திருங்கள்.
சிரிப்புதான் ஆரோக்கியத்தின் முதற்படி. ஒப்பனை செய்துகொள்வதால் உங்கள் முகம் மட்டும்தான் அழகாக இருக்கும். ஆனால், மனம் அழுக்காக இருந்துகொண்டு முகம் அழகாக ஒளிர்வது தவறு அல்லவா?
அழகான கூந்தல் வேண்டும் என்றால், உங்களின் கூந்தலை, ஒரு குழந்தை தனது பிஞ்சு விரல்களால் தினமும் ஒருமுறை கோதிவிடட்டும்.
எவரையும் துச்சமாக நினைக்காதீர்கள்; பொருட்களைவிட அவசியம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மனிதர்கள்.
உங்களுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. அதில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று பிறருக்கு என்பதை நீங்கள் உணர வேண்டும்'
No comments:
Post a Comment