தூய்மை = கமிகட்ஸு
கார்க்கிபவா
ஒவ்வொரு சென்னைவாசியும் ஒரு நாளில் முக்கால் கிலோ குப்பையை உருவாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் இந்தியாவிலேயே சென்னைக்குத்தான் முதலிடம். ஆனால், ஜப்பானின் கமிகட்ஸு நகரமோ வேறொரு விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. `உலகின் முதல் `ஜீரோ வேஸ்ட்’ கம்யூனிட்டி' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தத் தூய்மை நகரம்.
இந்த நகரத்தில் வாழும் 1,700 பேருமே குப்பைகளைக் கையாள்வதில் செம எக்ஸ்பெர்ட் கில்லாடிகள். `Reduce, Reuse, Recycle’ - அதாவது குப்பைகள் உருவாக்குவதைக் குறைப்பது, பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது, மறுசுழற்சிக்கு உள்ளாக்குவது... இவையே இந்த நகரவாசிகளின் தூய்மைத் தாரக மந்திரம். அப்படி என்னதான் செய்கிறார்கள் கமிகட்ஸு நகரத்தில்?
34 வகையான குப்பைத்தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். பேப்பர், பிளாஸ்டிக் தொடங்கி செல்போன், இரும்பு வரைக்கும் அனைத்துக்கும் தனித்தனிக் குப்பைத் தொட்டிகள். ஒரு கன்டெய்னரில் இருந்தே பொருட்களைப் பிரித்தெடுக்க உலகம் திணறும்போது, ஒரு நகரத்தின் குப்பையை இவ்வளவு துல்லியமாகப் பிரித்து கையாள்வதுதான் கமிகட்ஸு மக்களின் சிறப்பு.
இப்போது ஊரின் மொத்த குப்பையில் 20 சதவிகிதம் மட்டுமே நிலத்தில் கொட்டப்படுகின்றன. மற்றவை அனைத்தும் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்த 20 சதவிகிதத்தையும் ஜீரோ நிலைக்குக் கொண்டுவர திட்டம் இருக்கிறதாம். `அது சாத்தியமானால், கமிகட்ஸு உலகின் சொர்க்கம்' என்கிறார்கள்.

ஊர் நிர்வாகம், குப்பைகளைப் பிரிக்கும் எந்த ஒரு வேலையையும் செய்வது இல்லை. காரணம், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குப்பைகள் பிரிக்கப்பட்டே வருகின்றன.
நகரின் எல்லைக்குள் ஒரு தொழிற்சாலை கட்டி, குப்பைகளை மறுசுழற்சிக்கு எடுத்துக்கொண்டு, அதில் இருந்து உடைகள், பரிசுப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள்.
பயன்படுத்தப்படாத பொருட்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கவேண்டியது இல்லை. உடனே நகர நிர்வாகத்தின், `கிரேய்க் லிஸ்ட்’டில் சேர்த்துவிடலாம். வேண்டியவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஒரு பொருளின் மதிப்பு எந்த வகையிலும் குறையாமல் இந்த சிஸ்டம் பார்த்துக்கொள்கிறது.
13 ஆண்டுகளாக இதை வெற்றிகரமாக நடத்திவரும் கமிகட்ஸு நகருக்கு, உலகமெங்கிலும் இருந்து மாணவர்கள் வந்து வேஸ்ட் மேனேஜ்மென்ட் பற்றி பாடம் கற்கிறார்கள். இதற்காகவே இங்கு ஒரு அகாடமி நடத்தப் படுகிறது. `ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாற்றத்தைத் தொடங்கினால் மட்டுமே இந்தத் தூய்மைத் திட்டம் சாத்தியம்’ என்கிறது கமிகட்ஸு அகாடமி.
வீடு கட்டத் தேவையான பொருட்களைக்கூட, பழைய கழிவுகளில் இருந்தே தயாரிக்கிறது கமிகட்ஸு நகரம்.

நகரத்தின் கழிவு மேலாண்மையை `ஜீரோ வேஸ்ட் அகாடமி’ கண்காணிக்கிறது. இந்த அகாடமி, உலகமெங்கும் இருந்துவரும் பார்வையாளர்களுக்கு என, தனி பயணத் திட்டங்களையும் நடத்துகிறது. இரண்டு இரவுகள் + மூன்று பகல்கள் நம்மை ஜப்பானில் இருக்கும் கமிகட்ஸு நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அந்த நகரின் சிறப்புகளை விவரித்து, பார்வையிடவும் அனுமதிக்கிறார்கள். ஆண்டு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் கமிகட்ஸுக்கு வந்து கழிவு மேலாண்மையைப் பற்றி அறிந்துகொண்டு செல்கிறார்கள்.
குப்பைகள் உருவாவதைத் தவிர்ப்பது நவீன உலகில் சாத்தியம் இல்லை. உருவாகும் குப்பைகளை வெற்றிகரமாகக் கையாள்வதில் இருக்கிறது தூய்மையின் சூட்சுமம். அதற்கு `தூய்மை இந்தியா' எனப் பெயர் வைத்தால் மட்டும் போதாது. செயல்படவும் வேண்டும். எப்படிச் செயல்பட வேண்டும் எனத் தெரிய வேண்டும் என்றால், எங்கெங்கோ செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கமிகட்ஸுக்கு ஒருமுறை சென்று வரட்டும்
No comments:
Post a Comment