Thursday, July 7, 2016

தாய்ப்பால் உண்மைகள்




















குழந்தை பிறந்து ஓர் ஆண்டு வரை கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் புகட்டி வருவதன் மூலம், தாய்க்கு சினைப்பை, கர்ப்பப்பை, மார்பகப் புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சர்க்கரைநோய், உடல்பருமன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைக்கான வாய்ப்பும் குறைகிறது.



தாய்ப்பால் புகட்டும்போது தாயின் உடலில் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதை அன்பு ஹார்மோன் என்றும் சொல்வார்கள். தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் அன்பு மேலும் நெருக்கம் அடையவும், தாயின் மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது. இது அமைதியான மனநிலையை தாய்க்கு அளிக்கிறது.

தாய்ப்பாலில் வாழ்வளிக்கும் ஊட்டப் பொருட்கள் உள்ளன. ஆன்டிபாடீஸ், வெள்ளை அணுக்கள் மற்றும் செரிமானத்துக்கான என்சைம்கள் என பல முக்கியப் பொருட்கள் உள்ளன. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.


தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் ஒரு நாளைக்கு தோராயமாக 300 முதல் 500 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. தாய்க்கு உடல் எடை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.



தாய்ப்பாலில் 300-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன.



குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது, சுவாசப் பாதை நோய்த்தொற்று, காது நோய்த்தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. எதிர்காலத்தில், டைப் 1, டைப் 2 சர்க்கரை நோய், உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு, ஆஸ்துமா, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது

No comments:

Post a Comment