Saturday, September 2, 2023

 கலைஞர் எனும் பேராளுமை

இந்தியாவில் கலைஞருக்கு நிகரான ஆட்சியாளர்கள் மிகச்சிலரே. கலைஞரின் பலம் பெரியாரின் சமூகநீதி சிந்தனைகளையும் அண்ணாவின் அரசியல் சிந்தனைகளையும் முற்றாகச் செரித்து தனது ஆளுமையின் பகுதியாக்கிக்கொண்டதுதான். அவரால் எந்த நிலையிலும் இவர்களின் சிந்தனைப் புலம் துறந்தோ, மறந்தோ இயங்கவே முடிந்ததில்லை. அரசியல் சமரசங்களிலும் அவர்களின் அடிப்படைகளை அவர் கைவிட்டாரில்லை.


ஆட்சியாளராக கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட முயல்வது வியர்த்தம். ஒற்றை வரியில் சொல்லலாம். இன்று தமிழ்நாடு கண்டிருக்கும் அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்களின் ஒவ்வொரு இழையிலும் அவரது பங்களிப்பு இல்லாமல் இருக்கவே இருக்காது. 
மாநில சுயாட்சி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 
ஜாதி மறுப்பு திருமணங்களுக்குச் சலுகை, 
மகளிர் 30% (இப்போது 50%) உள்ளாட்சி ஒதுக்கீடு சிறப்புரிமைகள், 
மூன்றாம் பாலினத்தவர் அங்கீகாரம், 
துறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் என்று அது நீளும். 

மாற்று ஆட்சியாளர்களது ஓரிரு மக்கள் நலம் சார்ந்த முன்னெடுப்புகளைச் செழுமைப்படுத்துவதே அவர் பாணி/ பணி. குறிப்பாக சமூகநீதி- இடஒதுக்கீடு தளத்தில் அவர் செய்த மாற்றங்கள் பெரிது. உண்மையைச் சொன்னால் சமூகநீதிக் கோட்பாட்டின் வேரில் வெந்நீர் ஊற்ற முனைந்த பிற ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, மக்களைத் திரட்டியும், சட்டப் போராட்டங்களை நடத்தியும் தடுத்தவர் கலைஞர். ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தபோது செயல்பட்டும், ஆட்சியில் இல்லாதபோது ஆட்சியாளர்கள் பெரியார்/ அண்ணா கோட்பாடுகளை விட்டு விலகியபோது தடுத்தும் ஐம்பதிற்கும் மேலான ஆண்டுகளாக ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தொடர்ச்சியை உறுதி செய்தவர் கலைஞர்.

சமூகநீதி ஆட்சியென்பதால் ஒரு சாராருக்கு மட்டுமான ஆட்சியல்ல கலைஞருடையது. 

பொது விநியோகத் திட்டம், 

பேருந்துகள் அரசுடைமையாக்கம், 

கூட்டுறவுத்துறை விரிவாக்கம், 

கிராமப்புறம் முழுதும் ஆரம்ப சுகாதார மையங்கள், 

மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி, 

அனைத்து ஜாதியினருக்குமான சமத்துவபுரம், 

தொழில்துறை வளர்ச்சிக்காக ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டை, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், 

ஸ்பிக் போன்ற அரசு-தனியார் கூட்டுத்துறை, 

எல்காட், 

மாநில அரசின் கணினிக் கொள்கை, 

சென்னை - மதுரை - கோவை என டைடல் பார்க்குகள், 

கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை, 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை, 

தமிழில் கற்றோருக்கு முன்னுரிமை... 

இலவசங்கள் என இழித்துரைத்துவிட்டு இன்று இந்தியாவே பின்பற்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் எனும் திராவிட சிந்தனைச் சிற்பியே. வாய் ஓயாமல் பெரியார், அண்ணா பெயரை உச்சரித்து ஈரமுள்ள / நன்றியுள்ள மக்கள் நெஞ்சில் தனக்கும் அவர்களுக்குமான நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர்.

No comments:

Post a Comment