Monday, October 12, 2020




ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை வைத்து அந்தக் குடும்பத்தின் அரசியல் பின்னனியை ஓரளவு கணித்துவிடலாம்

1950-55 களின்  இங்கர்சால், பெர்னாட்சா, லெனின், ஸ்டாலின், ஜீவா போன்ற பெயர்கள்

1960கள்  ராஜேந்திரன், சோழன், மாறன், சேரன், இளங்கோவடிகள், தொல்காப்பியன், நக்கீரன், திருவள்ளுவன், தமிழரசன்  போன்ற பெயர்கள்;

1970 களில் அண்ணாதுரை, சம்பத், கருணாநிதி, வீரமணி, நெடுஞ்செழியன் போன்ற பெயர்கள் எந்த வீட்டிலாவது இருந்தால் அது நிச்சயமாக திராவிடர் கழக  அல்லது திமுக குடும்பமாக பெரும்பாலும் இருக்கும்.  

காரணம் என்ன தெரியுமா?

அந்த  இயக்கங்களின் பொதுக்கூட்டங்கள் என்பது மாலை நேர வகுப்புகளுக்கு நிகரானதாக இருந்து. 

உலக வரலாறுகள், இலக்கியங்கள் என அத்தனை அறிவு சார்ந்த தகவல்களை சொல் நயத்துடம் பாடம் நடத்திய பொதுக்கூட்டங்கள் ஏராளம். 

இந்த வரிசையில் தான் 1984ஆம் ஆண்டுக்கு பிறகு பல திமுககாரர்களின் வீடுகளில் சூட்டிய பெயர் பிரபாகரன். 

இப்பவும் பிரபாகரன் என்ற பெயருடைய முப்பது வயதை தொட்டவர்களின் தகப்பனார்கள் பெரும்பாலும் திமுககாரராகவே இருப்பார். அது வெறும் பெயரல்ல. உணர்வின் அடையாளம். மற்றவர்களைப் போல ஃபேக் ஐடிக்கு வைத்துக் கொண்ட பெயர் அல்ல.  

யாருக்கு யார் ஈழ உணர்வை ஊட்டுவது? 

கஞ்சா கடத்தல், சாயாரம் கடத்தல் மாதிரி செய்தி கடத்தல் கேள்விப்பட்டு இருக்கீங்களா? 

இப்போது போல வாட்ஸ் அப், முகனூல் இல்லை. 

இலங்கையில் நடக்கும் போரின் படங்கள் கோடியக்கரை வரை வரும். 
அதனை சிவகாசிக்கு கொண்டு சென்று போலீஸுக்கு தெரியாமல் அச்சடிக்க வேண்டும். அச்சடிக்கப்பட்ட படங்களை ஊர் ஊராக அனுப்ப வேண்டும். 

இதெல்லாம் யார் செய்தது?

இன்று வெவ்வேறு இயக்கத்தில் இருக்கலாம் ஆனால் அன்று திமுகவில் அல்லது திமுகவின் ஆதரவு பெற்ற அமைப்புகளில் இருந்தவர்கள் மட்டுமே செய்தனர். 

1970களில் பிறந்தோருக்கு அரசியல் புரியத் தொடங்கிய காலத்தில் நன்கு தெரிந்த  அரசியல்வாதிகள் என்றால் தலைவர் கலைஞரை தெரியும். 

அவருக்கு எதிரி என்ற முறையில் MGRஐ தெரியும். அதன் பின் தெரிந்த ஒரே பிரபலம் பிரபாகரன். 

1990களில் பதின்ம வயதையொத்த பலர்  பள்ளிக்கூட, கல்லூரி நாட்களில் பிரபாகரன் பற்றி பெருமைப் பேசாதவர்கள் உண்டா? 

நிச்சயம் வாய்ப்பே இல்லை.  

அந்தளவுக்கு பிரபாகரனின் பிம்பம் கட்டியமைத்ததில் , அதை கட்டிக்காத்ததில் திமுகவிற்கும், தலைவர் கலைஞருக்கும் பெரும்பங்கு உண்டு. 

பிரபாகரனின் இறுதி நாட்கள் வரை அவரும் கலைஞரை வாய் தவறியும் தவறாக பேசியதில்லை. தலைவரும் பிரபாகரனை தவறாக பேசியதில்லை.  இருப்பினும் இன்று சிலர் பிரபாகரனுக்கு எதிராக பதியப்படும் பதிவுகளுக்கு யார் காரணம்? 

பிரபாகரனுக்கு மரியாதை வாங்கித் தருகின்றோம் என ப்ரொபைலில் பிரபாகரன் படத்தை வைத்துக் கொண்டு கலைஞரை, திமுகவை திட்டியதின் விளைவு தான்.  

தமிழ் தேசியவாதிகளால் பிரபாகரனுக்கு இழிவை மட்டுமே தேடித்தர முடியும் என்பது இப்போதாவது புரிகின்றதா? 

இவர்கள் கலைஞரை திட்டவில்லை என்றால் உடன்பிறப்புகளால் பிரபாகரன் என்ற அந்த பிம்பமும் உடையாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.  

கலைஞரை சாடுவதற்காக, திமுகவை திட்டி குறை சொல்வதற்காக கையில் எடுக்கப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் கூர் மழுங்கிப் போனது. 

கண்ணதாசனின் வனவாசம் பற்றி பேசுவார்கள். ஆனால் அதே கண்ணதாசன் பத்தாண்டு கால பிரிவிற்கு பின்னர் வரத்தப்பட்டு கலைஞர் என் காதலன், நீயே கலைஞன், 

நீயே கவிஞன், 

நியே தலைவன் என எழுதியதும்,  தனக்கு இரங்கல் கவிதை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதையும் இவர்கள் தெளிவாக மறந்து மறைத்து விடுவார்கள்.இவர்கள் எதையுமே தேடி வாசிக்கவில்லை என்பது தான் இங்கு பிரச்சனை. 

அடுத்து காமராசரை  ஆயுதமாக கையில் எடுத்தார்கள். 

தமிழகத்தில் அதிகமாக அணைக்கட்டினார் என்று அடுத்த ஆயுதம் எடுத்தார்கள்

எண்ணிப்பார்த்த போது திமுக ஆட்சிகாலத்தில் தான் அதிக அணைகள் கட்டப்பட்டன என வரலாற்று பூர்வமாக நிருபீக்கப்பட்டது. 

மதிய உணவைத் தாண்டி பெருந்தலைவர் காமராசரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ன எனக் கேட்ட போது 

கலைஞரை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டினார்களே தவிர திடடங்களை என்ணுவதற்கு விரல் விட முடியாமல் நின்றார்கள். 

அடுத்து எம்.ஜி ஆருக்கு புரட்சி வேசம் போட்டு கையில் வீரவாள் கொடுத்து நிறுத்தினார்கள். 

ஆனால் இந்திராகாந்தியின் அச்சுறுத்தலுக்கு பயந்த அதிபுரட்சிதலைவருக்கு , திரைக்கு வெளியே தைரியம் என்பதே கிடையாது. புரட்சி வெடி நமத்துப்போனது

இப்படியாக கண்ணதாசன், காமராசர்,  எம்.ஜி.ஆர் ,  நெடுமாறன், சர்க்காரரியா கமிஷன் என்ற ஆயுதங்கள் எல்லாம் கூர் மழுங்கி போன நிலையில் தான் தற்போது பிரபாகரன் என்ற ஆயுதத்தை ஏந்துகிறார்கள்

கலைஞருக்கு  எதிராக இதுப்போன்ற ஆயுதங்களை ஏந்தினால் அதிகபட்சமாக ஒரு தேர்தல் வெற்றியை வேண்டுமானால் தடுக்கலாம்

ஆனால் சமூகநீதி பெறும் போராட்டம்  மட்டும் தோற்கவே தோற்காது. 

காரணம் 95வயதுவரை கலைஞர் இதுபோல பல அவதூறுகளையும் வதந்திகளையும் தாக்குதல்களையும் அனாசியமாக கடந்து வந்தவர்

இவர்களுக்கு காமாராசர், கண்ணதாசர், எம்.ஜி.ஆர் பிரபாகரன் ஆகியோர் எல்லாம் ஆயுதங்களே தவிர அவர்கள் மீது அன்போ, அக்கறையோ துளியளவும் இல்லை 

2009 - 2010 ல் முகநூலில் பயணிக்க தொடங்கிய கலைஞர் பிரபாகரன் பிம்பத்தை உடைத்ததில்லை

பிரபாகரனை படத்தை முகப்பில்  வைத்து கொண்டு அரசியலில் அறுவடைசெய்ய  முயற்சி செய்கிறார்கள்

ராஜிவ் மரணத்தின் போது திமுகவினரை தவிர வேறு எவனாவது பாதிப்புக்கு உள்ளானீர்களா? 

பிறகென்ன இன உணர்வை பற்றி பாடம் நடத்துறீங்க. 

உங்க உடம்பில் இருக்கும் ஈழ சொரனைக்கும் கலைஞர் தான் தகப்பன்

காரணமின்றி கலைஞரை எதிர்த்த ஜெயலலிதாவும் பிரபாகனும் மறைந்த தேதி நமக்கு தெரியாமல் தான் வரலாறு நிறைவடைந்துள்ளது. 

உண்மையான வரலாற்றை வாசித்து விட்டு வாருங்கள்.

பிரபாகரன் நினைவுநாள் என்றால் அவரது புகழ்பாடுவதை செய்திருக்க வேண்டும். 

அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராசர் ஆகியோரின் பிறந்தநாள், நினைவுநாள் ஆகியவற்றை நாங்களும் அனுசரிக்கின்றோம். அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அவர்களின் பேச்சுகள் எழுத்துகள், விவாதங்கள் என தேடிதேடி எழுதுகின்றோம் 

ஆனால் யாரையும் தரக்குறைவாக பேசுபதற்கு எந்த பட்டத்தையும் பயன்படுத்தி தலைக்குனிவை ஏற்படுத்தவில்லை.   

சேரர், சோழர்,பாண்டியன் நாங்கள் படித்த வரலாறு பிரபாகரன் நாங்கள் பார்த்த வரலாறு.

இப்படியாக எழுத நினைவேந்தல் செய்தோம். 

நாங்களும் பிரபாகரனுக்கு வீர வணக்கம் செய்தவர்கள் தான்.

2010, 2011 களில் இந்த மே17, மே18 தினங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது.  

2011ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். காலை 8மணிக்கு வேலையிடத்தில் அமர்ந்த படி முகநூலில் சில பதிவுகளை வாசித்த போது கண்ணீரை அடக்கமுடியாமல் மறைவிடம் தேடி , ஓடிச்சென்று கதறி இருக்கின்றோம் அரைநாள் விடுப்பெடுத்து வீட்டுக்கு சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் 

மாலை நேரத்தில் குடும்பத்துடன் பிரபாகரனுக்கு மலரஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். 

அந்தளவுக்கு எங்களுக்குள் இருந்த ஈழ  உணர்வுகளை வரிகளில் பிரதிபலித்தோம்.  

இறுதியாக 
2012, ஆகஸ்ட் 11ம் தேதி, ஈழம் என்ற சொல்லை  உச்சரிக்கத் மத்திய அரசுத் தடை விதித்த போது உயர்நீதி மன்றத்தை அனுகி 24 மணி நேரத்தில் அந்த தடையை உடைத்த காரணத்தால் தான் இன்று ஈழம் என்ற சொல்லை எழுதிக் கொண்டிருக்கின்றீர்கால்

விடுதலைப்புலிகள் இயக்கிற்கு தடை விதித்த போது "சிறுத்தைகள் உலவலாம், புலிகள் உலவக் கூடாதா?" என கேட்டவர் கலைஞர். 

பார்ப்பன வீட்டுப் பெண்களும் இன்று மொட்டைப்பாப்பாத்தியாக  வீட்டிற்குள் முடங்வில்லை அதற்கு காரணம் பெரியார் என்பது போல 

நாம் ஏந்தும் பிரபாகரன் படத்துக்கும், ஈழம் என்ற சொல்லுக்கும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். 

- Saravanaprabhum umayal

 


அடேய் 
சனிய சகுனி சங்கிகளே!
தற்குறி வடக்கூரான்களே

நடத்தை சரியில்லாதது
பெண்ணை பலாத்காரம் செய்ய தகுதியாடா?
ஒழுக்கம் குறைந்தால்!
அடித்து உதைக்கலாமாடா?
வல்லுறவு செய்யலாமாடா?
படுகொலை செய்யலாமாடா?

அப்படியென்றால்
எங்கள் பிள்ளை 
எட்டு வயது ஆசீஃபாவிடம்
எந்த ஒழுக்கம் சரியில்லடா?
எந்த நடத்தை சரியில்லடா?
நீ கும்பிடும் சாமி முன்னால்
அப்படி சித்ரவதை செய்ய?

அப்படிப்பட்ட ஒழுக்கசீலரா
நீங்களும் இந்துத்துவமும்?

தலைவெட்டி தண்டனை தரும் வளைகுடா தேசத்தின்
சட்டத்தை கேலி பேசும்
இந்துத்துவ யோக்கியதை
அதைவிட கொடியதென்பது
எங்களுக்கு மட்டுமே தெரியும்

விலைமகனோ
விலைமகளோ 
யாராய் இருந்தாலும் விருப்பமில்லாமல்
அருகே கூட செல்லக்கூடாத
நாகரீகம் எப்பதான்டா 
உங்க சங்கி மூளைக்கு
உரைக்கப்போவுது

விருப்பப்பட்ட பொண்ணையே
மூக்கறுத்தவன் ராஜ்யத்தின்
காட்டுமிராண்டி கரசேவகர்கள் 
வாலிருக்கும் மந்திகள்தான் நீங்கள் என்று எங்களுக்கு
நிரூபித்துவிட்டீர்கள்

உங்கள் வாலும் கோலும் 
வெட்டப்படும் நாளும்
வந்துகொண்டே இருக்கிறது

வாலோ கோலோ
சுருட்டி மேலேறி 
ஒய்யாரமாய் அமர்ந்து 
ஓம்காரம் ஓதலாமென்று
நீங்கள் நினைப்பதற்குள் 
கொய்து சிதைக்கப்படும் 
வாலும் கோலும்
சிரத்துடன் சேர்த்தே

செத்துப்போன எங்கள்
மகள்கள் ஆன்மா வாள்(ல்)

தமிழகத்தில் நீங்கள் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்கள்














நியூ சன்ரைஸ், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், விழுப்புரம். 
Special : பாப்கார்ன்

குணா சுக்குகாபி, மானாம்பதி, திருப்போரூர். 
Special : சுக்குகாபி

பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை, கும்பகோணம். 
Special : காபி

முராரி ஸ்வீட், கும்பகோணம். 
Special : பூரி, பாஸந்தி, 

ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. 
Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்

ஹோட்டல் உஷா ராணி,  வேம்படிதாளம், சேலம். 
Special : மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா

மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே. 
Special : முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா

ராஜூ ஆம்லேட், பரோடா ஓல்ட் பத்ரா ரோடு. 
Special : ஆம்லேட்

ஷஹ்ரன் ஹோட்டல், ஹைதராபாத் சார்மினார் கோபுரம். 
Special : லஸ்ஸி பலூடா

முதலியார் கடை, மதுரை தேவர் சிலை அருகே
Special : முட்டை இட்லி

R.ரெங்கநாதன் கரம் கடை, ஜவஹர் பஜார் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு, கரூர். 
Special : சீம் பால் கட்டி

AJJ மஸ்கோத் அல்வா, முதலூர், தூத்துக்குடி. 
Special : மஸ்கோத் அல்வா

காளத்தி கடை கிழக்கு மாட வீதி, மைலாபூர். 
Special : ரோஸ் மில்க்

கந்தன் தட்டு வடை செட், சேலம் பஜார் தெருவில்
கோயம்புத்தூர் ஜுவல்லரி பின்புறம் 
Special : தட்டு வடை செட்.

கௌரி மெஸ், ராம் நகர், கோவை. 
Special : சிக்கன் கிரேவி, பூ மீன்

'மங்களாம்பிகா' இட்லி, கும்பகோணம். 
Special : மிளகாய்ப் பொடி, இட்லி

JB சவுத்திரி பாதாம் பால் கடை, மேற்கு மாசி வீதி, மதுரை. 
Special : பாதாம் பால்

ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை அழகர் கோவில் ரோடு, தல்லாகுலம். 
Special : பரோட்டா

112 இலக்கம், மதுரை காமராஜர் சாலை, பழைய குயவர் பாளையம் சாலை, அழகர்கோவில். 
Special : தோசை

NNK மற்றும் NNR, அம்மாபேட்டை, சேலம் TVK ரோட்டில். 
Special : எசென்ஸ் தோசை

திண்டுக்கல் சிவா பிரியாணி, வேணு பிரியாணி இருக்கும் அதே தெரு. 
Special : மிளகு கொழம்பு

தேவர் ஹால் பஸ் ஸ்டாப், திருச்சி மெயின் கார்ட் கேட், கெயிட்டி, திருச்சி. 
Special : ரவா பொங்கல்

மௌலானா பேக்கரி, கூத்தாநல்லூர். 
Special : தம்ரூட்

உடுப்பி கிருஷ்ண விலாஸ், சிதம்பரம். 
Special : கத்திரிக்காய் கொத்சு

ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூர் பாலக்காடு ரோட்டில்
Special : இட்லி

SRR கபே, திருவாரூர் பேருந்து நிலையம். 
Special : கலவை சாதங்கள்

வாசன், திருவாரூர். 
Special : பாதாம்அல்வா

உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால், 17, டான்சி நகர் , இரண்டாவது தெரு,  தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி. 
Special : போளி, மற்றும் இனிப்பு வகைகள்.

A -1 ஹோட்டல், பெருமாள்புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி. 
Special : சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்

வசந்த பவன், பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி. 
Special : மதிய உணவு மற்றும் பரோட்டா

PLA கிருஷ்ணா இன், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில். 
Special : பாயசம் மற்றும் அப்பளம்

தேவர் ஹோட்டல், ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர். 
Special : பருப்பு உருண்டை குழம்பு

அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. 
Special : இட்லி

வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. 
Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன்ஃப்ரை

ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. 
Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்

கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. 
Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..

டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. 
Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்

சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. 
Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை

வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. 
Special : காரப்பொறி

ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். 
Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நான்

மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. 
Special : சாப்பாடு

படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். 
Special : முயல்கறி ஸ்பெசல்

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. 
Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்

தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. 
Special : பரோட்டா

மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. 
Special : போண்டா பஜ்ஜி

அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. 
Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. 
Special : ஆப்பம், தேங்காய் சட்னி

கடுக்கன் விலாஸ், வஉசி பூங்கா அருகில், ஈரோடு. 
Special : கம்மங்கூழ், ராகிக் கூழ், தயிர் வடை, மசால மோர்

ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. 
Special : சிக்கன் 65

திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையம் 
Special : தோசை, ஆப்பம்

ரயிலடி சுப்பையா மெஸ், தஞ்சை. 
Special : ஏழு வகை சட்னியுடன் சுவை மிக்க இரவு சிற்றுண்டி

பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. 
Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை

பிங்க்பெர்ரி, 100 ஃபீட் ரோடு, தூபன்ஹள்ளி, இந்திரா நகர், பெங்களூர். 
Special : தயிர்கிரீம்

குணங்குடிதாசன் சர்பத், கீழவாசல், தஞ்சாவூர். 
Special : பால் சர்பத்

கௌரி சங்கர் ரசவடை, வடசேரி, நாகர்கோவில். 
Special : ரசவடை

ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை, மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ ஆவணி மூல வீதியில், மதுரை. 
Special : கிழங்கு பொட்டலம்

A.V.K மீன் சாப்பாட்டு கடை, ஆர்காட் ரோடு, L.V பிரசாத் ரோடு. 
Special : மீன் சாப்பாட்டு

குஞ்சான் செட்டி கடை, மன்னார்குடி. 
Special : காராபூந்தி, மைசூர்பாக்.

டெல்லி ஸ்வீட்ஸ், மன்னார்குடி. 
Special : முந்திரி அல்வா

ரோஜா மார்க் இனிப்புகள், கும்பகோணம். 
Special : ஸ்பெஷல் கமர்கட் பொரி உருண்டை, கடலை உருண்டை

ரத்னா கபே, திருவல்லிக்கேணி. 
Special : சாம்பார்

சங்கர விலாஸ், கீழ ஆண்டார் வீதி, திருச்சி. 
Special : பூரி, கடப்பா

தஞ்சாவூர் மெஸ், மேற்கு மாம்பலம், சென்னை. 
Special : பூரி,கடப்பா

பார்த்தசாரதி விலாஸ், மேலவிபூதி பிரகாரம், திருவானைக்கா கோயில். 
Special : நெய் தோசை

சொசைட்டி பால்கோவா, மணப்பாறை. 
Special : பால்கோவா

இத்தாலியன் பேக்கரி, கும்பகோணம், தஞ்சை அய்யம்பேட்டை. 
Special : டீ, காபி, பிஸ்கட்

கோபு ஐயங்கார் கடை, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவில். 
Special : சீவல் தோசை

சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.

காபி பேலஸ், எல்லையம்மன் கோயில் தெரு, தஞ்சாவூர். 
Special : டீ, காபி. வடிந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலான டிக்காஷனை உபயோகிப்பதில்லை.

ராவ்ஜி தள்ளுவண்டி பிரியாணி கடை, திருச்சி பெரிய கடைவீதி. 
Special : பிரியாணி

காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. 
Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்

பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். 
Special : அடப்பிரதமன் 

சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. 
Special : தேங்காய் பால்

மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். 
Special : காரட் கேக்

பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. 
Special : இஞ்சி டீ 

கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. 
Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.

பர்மா பாய் கடை, கோவை. 
Special : பரோட்டா பெப்பர் லெக்

எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. 
Special : ஃபுல் மீல்ஸ்

ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. 
Special : ஃபுல் மீல்ஸ்

Barbeque Nation, கோவை டவுன் ஹால். 
Special :  Unlimited Barbeque

மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. 
Special : முட்டை பூரி

கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. 
Special : ஃபுல் மீல்ஸ்

பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். 
Special : ஆப்பம், சாம்பார் பொடி

SMS ஹோட்டல், கோவை, 
Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை

கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. 
Special : ஃபுல் மீல்ஸ்

அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. 
Special : அனைத்து வகை சிற்றுண்டி

ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. 
Special : பிரியாணி, குஸ்கா

MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். 
Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை

CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். 
Special : வறுத்த கோழி

நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். 
Special : சிறு தானியங்கள் உணவு

பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. 
Special : பிரியாணி

ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. 
Special : பிரியாணி, அரி பத்திரி

லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. 
Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு

ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. 
Special : 12 வகை வெரைட்டி  சாத வகைகள்

சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. 
Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. 
Special : குருமா, பரோட்டா

கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். 
Special : மீன் குழும்பு, கைமா வடை

அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. 
Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு

குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். 
Special : அசைவ சாப்பாடு

சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. 
Special : அளவுச் சாப்பாடு

வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. 
Special : அனைத்து வித தோசைகள்

பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. 
Special : அனைத்து வித தோசைகள்

கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்

கண்ணணண் கறி விருந்து, கோவை. 
Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்

சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. 
Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்

ஃபுட் கார்டன், RS Puram, கோவை. 
Special : தயிர் பூரி

குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. 
Special : தயிர் பூரி

வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்

உமர்கையாம், லலிதா ஜுவல்லரி, தி.நகர். 
Special : எண்ணெய் கத்தரிக்காய், தாள்ச்சா  முஸ்லீம் வீட்டு பிரியாணி

மாமு கார்டன் ஹோட்டல், பரமக்குடி. 
Special : சைனீஸ் உணவு

சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. 
Special :  பள்ளிபாளையம் சிக்கன்

சீனியப்பா ஹோட்டல், கீழக்கரை. 
Special : பரோட்டா, சால்னா

ஜெய் சக்தி சைவ ஹோட்டல், கோவில்பட்டி.  
Special : நிறைய மிளகு போட்டு CHETTINAADU சூப் 

ஃப்ளெமிங்கோ ஹோட்டல், வேளச்சேரி 100 அடி பை பாஸ் ரோடு. 
Special : சாப்பாடு

மாயாபஜார், சேலம். 
Special : நான்வெஜ் ஹோட்டல்,

மாமன் பிரியாணி, ஈரோடு பன்னீர் செல்வம் பார்க். 
Special : பிரியாணி

அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். 
Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.

செந்தில் மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. 
Special : மதுரை மட்டன் சுக்கா

மீனாட்சி மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. 
Special : மதுரை மட்டன் சுக்கா

கதிர்வேல் வாத்துக்கடை, வேலூர் பரமத்தி. 
Special : வாத்துமுட்டை ஆம்லெட்

பார்டர் ரஹ்மத் புரோட்டாக்கடை, தென்காசி. 
Special : பெப்பர்சிக்கன், பெப்பர்காடை

பொன்னுசாமி ஹோட்டல், ராயபேட்டை. 
Special : நெத்திலி ப்ரை, சிக்கன் லாலிபாப்

தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். 
Special : பரோட்டோ

தோசா கார்னர், சேலம் அத்வைத் ஆஸ்ரமம் ரோடு. 
Special : அனைத்து வித தோசைகள்

செல்வம் ஹோட்டல், சேலம் அப்சரா மேடு. 
Special : பரோட்டா சால்னா

ராணி டிபன் ஸ்டால், கரூர். 
Special : கொத்து பரோட்டா

தேவர் மெஸ், சுங்கராம வீதி, பாரீஸ். 
Special : பரோட்டா குருமா:

மாருதி ஹோட்டல், சுசீந்திரம். 
Special : ஃபுல் மீல்ஸ்

டைமண்ட் டீ ஸ்டால், பழனி பஸ் ஸ்டாண்ட். 
Special : டீ

ராயல் புரோட்டாஸ், கரூர்-பள்ளபட்டி. 
Special : அனைத்து வித புரோட்டா

ஹோட்டல் சத்தார்ஸ், தஞ்சாவூர். 
Special : பிரியாணி

சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. 
Special : பிரியாணி

ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். 
Special : கடல் மீன் உணவு

ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா

செல்லம்மாள் மண்பானை உணவகம், திருச்சி புத்தூர் திரவுபதி அம்மன் கோவில் எதிரில். 
Special : ஃபுல் மீல்ஸ்

முத்துபிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. 
Special : பரோட்டா 4 வகை சால்னா

தீன், தஞ்சாவூர். 
Special : சிக்கன் முர்தாபா

சார்மினார், ராயப்பேட்டை. 
Special : தந்தூரி சிக்கன்

கணேஷ் மெஸ், ஆண்டிபட்டி. 
Special : பூசணிப் பொரியல்

ஆனந்தாஸ் ஹோட்டல், ராஜபாளையம். 
Special : ஃபுல் மீல்ஸ்

சலாமத் ஹோட்டல், அண்ணாசாலை, சென்னை. 
Special : சுக்கா பரோட்டா

தங்கையா ஸ்வீட் ஸ்டால், திசையன்விளை. 
Special : மஸ்கோத் அல்வா

ஶ்ரீ சாய் உயர் தர சைவ உணவகம், தஞ்சாவூர் மெயின் ரோடு, திருச்சி. 
Special : ஆனியன் ஊத்தப்பம் 

கதிரவன் ஹோட்டல், ஸ்ரீவில்லிப்புத்தூர். 
Special : காபி

ஆள் ரீம், திருவல்லிக்கேணி. Special : பிரியாணி

தாஸ் ஜிகர்தண்டா, பெரியகுளம் ரோடு, தேனி பழைய பஸ்ஸ்டாண்ட். 
Special : ஜிகர்தண்டா

டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. 
Special : சாப்பாடு

சாய் கப்சப், RS PURAM, கோவை. 
Special : இஞ்சி டீ:

இளநீர் சர்பத் கடை, பெல் ஹோட்டல் எதிரில், மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு. 
Special : இளநீர் சர்பத்

ஸ்ரீ விநாயக ஸ்வீட் காரம், குருக்கத்தி. 
Special : எள்ளுருண்டை

அரசன் மெஸ் மண்பானை சமையல், திருநெல்வேலி, மதுரை பைபாஸ் சாலை. 
Special : அன் லிமிட்டட் சாப்பாடு  

ஸ்ரீ கிருஷ்ணபவன், கும்பகோணம் ரயில் நிலையம் வெளியேறும் பாதை. 
Special :  அனைத்து வித தோசைகள்

நாயர் மெஸ், திருவல்லிக்கேணி. Special : மட்டன் குழம்பு வஞ்சிரம் வறுவல் 

ஆந்திரா கரீ ஹோட்டல், தங்க ரீகல் தியேட்டர், மதுரை. 
Special : தட்டு இட்லி

அழகப்பா செட்டிநாடு மெஸ், GST மெயின்ரோடு, சானடோரியம், சென்னை. 
Special : குஸ்கா

அழகி பிரியாணி ஹோட்டல், ஒக்கேனக்கல் மெயின் ரோடு. 
Special : அன்லிமிடட் பிரியாணி 

பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை. 
Special : பஃப் பரோட்டோ 

ஜானகிராமன் சைவ உணவகம், திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகே. 
Special : அனைத்து வித தோசைகள்

Jacob's Kitchen, காதர் நவாஸ் கான் ரோடு, கானாடுகாத்தான். 
Special : உப்புகறி, மண்பானை மீன் குழம்பு 

பிரேமா மெஸ், தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட். 
Special : கானத்துவையல், எள்ளுத்துவையல்

அண்ணாமலை சைவ ஹோட்டல், நெல்லை காந்திமதி கோவில். 
Special : மதிய சாப்பாடு, பிரண்டை துவையல்

அஜித் மீன் ஹோட்டல், நாகர்கோவில். 
Special : ஃபுல் மீன் மீல்ஸ்

அக்பர் மெஸ், பெரியமேடு. Special : மட்டன் பிரியாணி

வெங்கடேஷ்வரா ஹோட்டல், அப்பத்தூர். Special : சமோசா

பரமக்குடி பரோட்டா, பரமக்குடி பஸ் ஸ்டான்ட் எதிரில். 
Special : சால்னா

JMS சர்பத் கடை, திண்டுக்கல். 
Special : சர்பத்

ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், 
திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்

சார்லஸ் ஹோட்டல், மதுர நரிமேடு அரசன் சுவீட்ஸ் அருகில். 
Special : பரோட்டா, 3 கூட்டு சால்னா

பைவ் ஸ்டார் இரவு ஹோட்டல், சின்னசேலம். 
Special : தோசை, நாலு வகை சட்னி

மொஹைதீன் பிரியாணி, பல்லாவரம். 
Special : பிரியாணி

போஜன், சூளைமேடு சிக்னல். 
Special : சோலா பூரி

ரிலாக்ஸ் காபி பார், திண்டுக்கல். 
Special : வடை, குருமா

பட்ஸ் ஹோட்டல் டீ, தாம்பரம் பஸ்டாண்ட் உள்ளே. 
Special : Tea

ஹரிஷ் பேக்கரி உப்பு ரொட்டி, நாகூர். 
Special : உப்புரொட்டி, தம்ரூட் 

சபரீஷ் ஹோட்டல், மதுரை சென்னை சில்க்ஸ் அருகே. 
Special : ஹைதரபாத் பிரியாணி :

கேரளா மெஸ், திருச்சி அஹ்மத் பிரதர்ஸ்கு பக்கத்து சந்து. 
Special : பரோட்டா வித் சில்லி

காந்தி கடை சால்னா, பரமக்குடி. 
Special : பரோட்டா :

குறிஞ்சி ஹோட்டல், இராம்நாட். 
Special : பரோட்டா, நெய் மீன் கறி

அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். 
Special : ஃபுல் மீல்ஸ்

மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. 
Special : சிந்தாமணி சிக்கன்

அல் ரீம் ஹோட்டல், திருவல்லிக்கணி. 
Special : ஸ்பெசல் பிரியாணி, ப்ரைடு ரைஸ்

புளியமரத்துக்கடை, ஶ்ரீவில்லிபுத்தூர். 
Special : ஸ்பெஷல் பால்கோவா

ஸ்ரீ அன்பு பவன், கோபி பஸ் நிலையம், கோபி. 
Special : ஃபுல் மீல்ஸ்

தனசேகர் சிக்கன் சென்டர், முத்துநாயக்கன்பட்டி. 
Special : சிக்கன்

தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். 
Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா

செட்டியார் கடை, திருப்பூர். 
Special : டயனமைட் சிக்கன் :

Aachi Chetinad Hotel ஹோட்டல், ஈரோடு டெலிபோன் எக்ஸ்‌சேன்ஜ். 
Special : மூளை பிரட்டல்

BL ரெஸ்டாரன்ட், கரூர். 
Special : காரசட்னி இட்லி :

கண்ணன் ஹோட்டல், மதுரை புதூர் சர்ச். 
Special : மூளை ஃப்ரை

அம்மன் மெஸ், கோபிச்செட்டிபாளையம் சீதாலட்சுமி மண்டபம் அருகில். 
Special : சைவம் அசைவம் உணவு

சுதா மெஸ், குமாரபாளையம். 
Special : அசைவம் வீட்டு சாப்பாடு :

பத்மா மெஸ், விழுப்புரம் கலெக்டர் ஆஃபீஸ் அருகில். 
Special : அனைத்து வித தோசைகள், ஃபுல் மீல்ஸ்

சுல்தான் பிரியாணி, சங்கரன்கோவில். 
Special :  பிரியாணி

கரம் மது கரம் ஸ்டால், கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில், கரூர். 
Special : Sweets

ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். 
Special : மட்டன், குடல்பிஃரை

சிவா சில்லி, கரூர் செங்குந்தபுரம். 
Special : மீன், சில்லி சிக்கன், பிரியாணி

மிட்நைட் மசாலா ஹோட்டல், கோடம்பாக்கம். 
Special : லஞ்ச், டின்னெர்.

சுப்பையா இட்லி கடை, தஞ்சாவூர் JUNCTION. 
Special : இட்லி

கோபால்நாயுடு ஹோட்டல், இளம்பிள்ளை. 
Special : ஃபுல் மீல்ஸ்

ராவியத் ஸ்வீட் பேலஸ், வள்ளல் சீதக்காதிரோடு, கீழக்கரை. 
Special : ஸ்பெஷல் தொதல்

கற்பகம் ஹோட்டல், திருச்சி தேவர்ஹால் எதிர்புறம். 
Special : இட்லி, தோசை, சாம்பார்

ஸ்ரீபிரியா மெஸ், காரைக்குடி. 
Special : நாட்டுக்கோழி கிரேவி 

ஹோட்டல் ராமன், சீர்காழி புத்தூர் சாலை. 
Special : மீன் வறுவல், இறா வறுவல்

வீட்டு இட்லி, மதுரை அலங்கார் தியேட்டர் அருகில். 
Special : வீட்டு இட்லி, ஃபுல் மீல்ஸ்

ஹோட்டல் அர்ச்சனா, மதுரை. 
Special : நண்டு தோசை :

கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். 
Special : அசைவச் சாப்பாடு

முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். 
Special : அசைவ சாப்பாடு

செல்லமணி டிபன் கடை, தேனி. 
Special : 5 வகை சட்னி, பணியாரம்

செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், சிவகிரி. 
Special : ஐஸ்கிரீம்

அ1 மெஸ், கோவில்பட்டி. 
Special : அசைவ சாப்பாடு

இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. 
Special : இட்லி

திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. 
Special : அடை சுண்டல்

மாரீஸ் ரெஸ்டாரண்ட், இரத்தினமங்கலம், வண்டலுர் டூ கேளம்பாக்கம் ரோடு. 
Special : :ஃபுல் மீல்ஸ்

கண்ணன் ஹோட்டல், திருச்சி மத்திய பேருந்து நிலையம். 
Special : பாதம் பால்

தென்பனை, உளுந்தூர்பேட்டை. Special : இயற்கைமுறை குளிர்பானக் கடை

ராணி விலாஸ், செக்கானூரனி. 
Special : குடல் குழம்பு, குழி ஆம்லெட், ரத்த பொரியல்

வீட்டுச் சாப்பாடு, அய்யம்பேட்டை தாண்டி 15-2 கிமி, தஞ்சை – கும்பகோணம். 
Special : வீட்டுச் சாப்பாடு

ரோட்டு கடை, சென்னை ஓட்டேரி தாதாஷாமக்கான் பகுதி. 
Special : சுக்கா கபாப், வடை கபாப், வடை வறுவல்

சேகர் கடை இட்லி, மராட்டியர் அரண்மனை அருகில், தஞ்சை. 
Special : இட்லி

பெங்களூர் AL BAK பிரியாணி, மல்லேஸ்வரம், ராஜாஜிநகர். 
Special : பிரியாணி

பாலன் உணவகம், கேணிக்கரை சந்திப்பு, இராமநாதபுரம். 
Special : விதம் விதமான தோசை

ஹோட்டல் சுவை, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட். 
Special : இட்லி, தோசை, பொங்கல் வடை, காபி

பார்டர் கடை, செங்கோட்டை. Special : பிரைடு சிக்கன்

அய்யரக்கா கடை, செங்கோட்டை. 
Special : தயிர்வடை

கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. 
Special : மீன் வறுவல்

HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. 
Special : பிரியாணி

இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். 
Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா

ரோஷன், திருச்சி-தஞ்சாவூர் ரோடு, காட்டூர். 
Special : தந்தூரி

டெல்லி ஸ்வீட்ஸ், கரூர். Special : சூடான சமோசா 

மதுரை ஹரிஸ் மெஸ், சின்ன சொக்கிக்குளம். 
Special : மணக்கும் நெய் மீன் குழம்பு 

ஹோட்டல் ந்யூ இம்ரான், கொடைக்கானல். 
Special : மட்டன் பிரியாணி

போஜனாலாயா, மகாலக்ஷ்மி ப்ளாசா, விழுப்புரம். 
Special : சாப்பாடு

சங்கர் சாட், அண்ணாநகர் சரவணபவன் பின்னால். 
Special : தஹி, பூரி மசாலா, கட்லட்,  சமோசா

SK சைவ-அசைவ உணவகம், பெங்களூரு விவேக் நகர். 
Special : சைவ அசைவ சாப்பாடு

UFM நம்ம வீட்டு சாப்பாட்டுக் கடை, பெருந்துறை. 
Special : கறி சோறு

அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். 
Special : குடல்கறி, தோசை

ஹோட்டல் விருதுநகர் செட்டிநாடு உணவகம், T-நகர். 
Special : சாப்பாடு

ஹோட்டல் வெல்கம், நாயுடுபுரம், கொடைக்கானல். 
Special : பிரியாணி

கோபு ஐயங்கார் ஓட்டல், மதுரை மீனாக்ஷி கோவில். 
Special : தவலை வடை

ஹோட்டல் பிரபு, நாகர்கோவில். 
Special : அசைவம்

ஹோட்டல் விஜயதா, நாகர்கோவில். 
Special : அசைவம்

ஹோட்டல் அரிஸ்டோ, கொடைக்கானல். 
Special : டிபன், மீல்ஸ்

காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள் இருக்கும் ரெஸ்டாரண்ட், மதுரை. 
Special : சைவச் சாப்பாடு

மணி ஐயர் ஓட்டல், திருச்செந்தூர். 
Special : சைவச் சாப்பாடு

பாரதி மெஸ், திருவல்லிக்கேணி. 
Special : கேப்பைக்  கூழ், முளை கட்டிய தாணியங்கள்

பஞ்சு பரோட்டா, பெருந்துறை. 
Special : பரோட்டா, சிக்கன் பிரியாணி

மண்சட்டி சமையல், சங்ககிரி டோல்கேட் அருகே. 
Special : ஃபுல் மீல்ஸ்

முருகபவன், தொப்பூர். 
Special : விதம் விதமான தோசை

தாஜ் ஹோட்டல், மதுரை-ராமேஸ்வரம் மெயின் ரோடு, பரமக்குடி. 
Special : கறிக்கஞ்சி

ஏஒன்மெஸ், கோவில்பட்டி. 
Special : சிக்கன் பிரியாணி,  லாலிபாப், தலைக்கறி

பசுமை உணவகம், சேலையூர். 
Special : கருப்பட்டி காஃபி

NEW MADRAS CAFÉ, சந்தோம். 
Special : மாலையில் சம்சா, சாஸ்

கருப்பையா நாடார் மெஸ், சாத்தூர்.  
Special : கரண்டி ஆம்லெட், டிங் டாங்

துளசி பிரியாணி, திண்டுக்கல். 
Special : நாட்டுகோழி பிரியாணி, புட்டு பரோட்டா

பார்த்தசாரதி விலாஸ், திருச்சி திருவானைக்கோவில். 
Special : நெய் தோசை

விஞ்சை விலாஸ், நெல்லை டவுனில் ஆர்ச் பக்கம். 
Special : விதம் விதமான தோசை

வெங்கடேச பவன், ஸ்ரீரங்கம் கோயில் அருகில். 
Special : சாம்பார் வடை, கீரை வடை

மூர்த்தி கபே, சிதம்பரம். Special : கடாய் சிக்கன்:

ஆண்டவர் அல்வா கடை, திருவையாறு. 
Special : அல்வா

சீனிவாசன் தங்கப்பாண்டியன் கடை, கீழஈரால். 
Special : சேவு, சீனிக் கருப்பட்டி மீட்டாய் 

மங்கள விலாஸ், சேலம். 
Special : மட்டன் சுக்கா

விவேகானந்தா, சேலம்.
 Special : நாட்டு கோழி நெஞ்சு பிரை, முட்டைதோசை

செல்வி மெஸ், சேலம். 
Special : கட்லா மீன் பிரை, மட்டன் பிரியாணி

சேலம் RR பிரியாணி, சென்னை மதுர வாயல், சென்னை. 
Special : பிரியாணி

பராசக்தி நாட்டு கோழி பிரியாணி, சேலம் செவ்வாய்ப்பேட்டை. 
Special : நாட்டுக் கோழி பிரியாணி, வெங்காய சில்லி சிக்கன்

புத்தூர் ஜெயராமன் கடை, சீர்காழி. 
Special : அசைவ உணவு, கெட்டித் தயிர், இறால், சிக்கன்

புத்தூர் ஜெயராமன் கடை, சிதம்பரம். 
Special : அசைவ உணவு

ஹோம் இட்லி கடை, ஈரோடு collector ஆபீஸ் அருகே. 
Special : ரவா இட்லி, விதம் விதமான தோசை

சின்னப் பையன் கடை, சேலம் குகை. 
Special : மட்டன் வறுவல், ஈரல் ஃப்ரை

கந்தவிலாஸ் பரோட்டா, சேலம் குகை.  
Special : சூடான பரோட்டா, கோழிக்குழம்பு

பாவா கடை, அரிசிபாளையம். 
Special : விதம் விதமான தோசை

வெங்கடேஷ்வரா லாலா ஸ்வீட் ஸ்டால், ஶ்ரீவில்லிபுத்தூர். 
Special : பால்கோவா

தொட்டிபட்டியார் ஹோட்டல், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே. 
Special : பெஸ்ட் சிக்கன், மிளகு கிரேவி

சந்திரன் மெஸ், மதுரை தல்லாகுளம். 
Special : அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்

மயிலை கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர். 
Special : விதம் விதமான தோசை

சுல்தான் பிரியாணி, சங்கரன்கோயில், கழுகுமலை ரோட்டில். 
Special : பிரியாணி

கரீம் மெஸ் பிரியாணி, சென்னை பெரியமேடு. 
Special : பிரியாணி

பாட்ஷா பிரியாணி சென்டர், சத்திரம், திருச்சி. 
Special : பிரியாணி

முத்துப்பிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. 
Special : முட்டைமாஸ் பரோட்டா 

குமார் மெஸ், மதுரை தல்லாகுளம். 
Special : விரால்மீன் வறுவல், அயிரை மீன் 

அரசன் மெஸ் மண்பானை சமையல், நெல்லை மதுரை பைபாஸ் சாலை. 
Special : அன் லிமிட்டட் சாப்பாடு:

சுகுணா விலாஸ், திருசெங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே. 
Special : முயல் ரோஸ்ட்

ஹோட்டல் ட்ராபிக் ஜாம், திருச்சி மலைக்கோட்டை, பரோட்டா, மூனு வித க்ரேவி 

பார்த்தசாரதி தோசை, திருச்சி திருவானைக்கோவில். 
Special : நெய்தோசை, விதம் விதமான தோசை

ஸ்டார் பிரியாணி, வாலாஜா டோல்கேட், ஆற்காடு. 
Special : பிரியாணி

டெல்லி வாலா, மேலக் கோபுர வாசல், மதுரை. 
Special : சப்பாத்தி, பூரி, இனிப்பு, கார வகைகள்

மித்தாய் மந்திர் ஹோட்டல், வட பழனி முருகன் கோவில், சென்னை. 
Special : சைவ உணவு

மோகன் போஜனாலயா, தெற்காவணி மூல வீதி, மதுரை. 
Special : உணவு வகைகள்

காந்திராம்ஸ் ஹோட்டல், உடுமலைபேட்டை. 
Special : தயிர் வடை, சாம்பார் வடை

செந்தில் ஹோட்டல், உடுமலைபேட்டை. 
Special : மஷ்ரூம் fry, மஸ்ரூம் க்ரேவி, முட்டை பரோட்டா

இம்பாலா ஹோட்டல், திருச்சி. 
Special : பிரியாணி

புகாரி, திருச்சி. 
Special : பிரியாணி

குறிஞ்சி ஹோட்டல், திருச்சி. 
Special : எள் மிளகாய்ப்பொடி, பூண்டு மிளகாய்ப்பொடி,

கிராண்ட் ஹோட்டல், திருச்சி. 
Special : பிரியாணி

கொளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. 
Special : பிரியாணி

இனாம்குளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. 
Special : பிரியாணி

அரிஸ்டோ ஹோட்டல், திருச்சி. 
Special : கைமா சமோசா

ஆர்ய பவன், கிருஷ்ணகிரி. 
Special : பாதுஷா, பால்கோவா

கதிரவன் மெஸ், தேரடி, ஸ்ரீவில்லிப்புத்தூர். 
Special : சைவ சாப்பாடு

ரகுமானியா ஹோட்டல், விருத்தாசலம். 
Special : வான் கோழி பிரியாணி

அர்ச்சனா ஹோட்டல், விருத்தாசலம். 
Special : சைவச் சாப்பாடு

ஹோட்டல் சற்குரு, புதுச்சேரி. 
Special : சைவ உணவு

ஹோட்டல் ஸ்ரீகாமாட்சி, E.C.R. இந்திரா காந்தி சிலை, புதுச்சேரி. 
Special : அசைவம், மதிய உணவு

ஹோட்டல் மனோ, சக்ரவர்த்தி தியேட்டர், நாகர்கோவில். 
Special : கொத்து பரோட்டா

லின்ஸ் ஹோட்டல், நாகர்கோவில். 
Special : கொத்து பரோட்டா

நொண்டிக்கடை, கன்னியாகுமரி. 
Special : மீன் குழம்பு

ஹோட்டல் நாசர், மார்த்தாண்டம். 
Special : சிக்கன் ஃப்ரை

ஹோட்டல் ஜூப்ளி, வடசேரி, நாகர்கோவில். 
Special : கொத்துக் கோழி

கிருஷ்ணா விலாஸ், காஞ்சிபுரம். 
Special : சாம்பார் இட்லி, விதம் விதமான தோசை

ராயல் ஹோட்டல், அபிராமி தியேட்டர் எதிரில், ஈரோடு. 
Special : எண்ணையில் பொரித்த புரோட்டா

கண்ணதாசன் மெஸ், தி-நகர் நடேசன் பார்க், சென்னை. 
Special : கொத்து பரோட்டா

சந்திரன் மெஸ், தல்லாகுளம். 
Special : நெய்மீன் வறுவல், அயிரைமீன் குழம்பு

குமார் மெஸ், தல்லாகுளம். 
Special : அயிரை மீன் குழம்பு, விரால்மீன் வறுவல்

அம்மா மெஸ், தல்லாகுளம். 
Special : நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல், மட்டன் கோலா 

அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி. 
Special : மட்டன் சுக்கா, கரண்டி ஆம்லேட் 

அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண். 
Special : நெய்மீன் வறுவல், இறால்மீன் வறுவல்

அம்சவல்லி ஹோட்டல், கீழவாசல். 
Special : மட்டன் பிரியாணி

பனமரத்து பிரியாணி கடை, தல்லாகுளம். 
Special : புலாவ் போன்ற பிரியாணி

சரஸ்வதி மெஸ், பெரியார் சிலை அருகில், தல்லாகுளம். 
Special : மட்டன் பிரியாணி

ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப், தல்லாகுளம். 
Special : மீன் சாப்பாடு

திண்டுக்கல் வேலு பிரியாணி, தல்லாகுளம். 
Special : மட்டன் பிரியாணி

கோனார் மெஸ், சிம்மக்கல். 
Special : கறி தோசை, வெங்காய சட்னி, விதம் விதமான தோசை

குமார் மெஸ், தல்லாகுளம், மாட்டுத்தாவணி. 
Special : இட்லி, முட்டை வழியல் 

ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம். 
Special : பரோட்டா, சுவரொட்டி குடல் வறுவல்

அஜ்மீர் மஹால், கோரிப்பாளையம். 
Special : முட்டை பரோட்டா

சிங்கம் பரோட்டா கடை, பீபீ குளம். 
Special : முழுக்கோழி வறுவல் 

ஜானகிராமன் ஹோட்டல், திலகர் திடல். 
Special : மட்டன் சுக்கா

சுதா பை நைட், ரிசர்வ் லைன். 
Special : முட்டை பரோட்டா

கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. 
Special : பட்டர் சிக்கன்

பஞ்சாபி தாபா, தல்லாகுளம். 
Special : பட்டர் நான், தந்தூரி சிக்கன்.

பரோட்டா கடை, ஆவின் சிக்னல், மதுரை. 
Special : பரோட்டா

ஆர்ய பவன், மதுரை. 
Special:மசாலா பால், லஸ்ஸி (இரவு)

அம்ஸவல்லி, மதுரை. 
Special : பிரியாணி, ஆப்பிள் பால்

ஜாஃபர் ஹோட்டல், மதுரை. 
Special : பிரியாணி

ஹோட்டல் தமிழ்நாடு, காமராஜர் சாலை, மதுரை. 
Special : கொத்து புரோட்டா

ஹோட்டல் அருளனாந்தம், மதுரை. 
Special : மட்டன் சுக்கா, அயிரை மீன்

ஓல்ட் மார்டன் ரெஸ்டாரன்ட், மதுரை. 
Special : இட்லி

ஸன்கு வாலா, மதுரை. 
Special : ரொட்டி, மாம்பழ ஜூஸ்

குமார் மெஸ், மதுரை. 
Special : போன் லெஸ் நண்டு

கோபு ஐயங்கார் ஹோட்டல், மதுரை. 
Special : வெள்ளை ஆப்பம், காரத் துவையல்

வின்சென்ட் பேக்கரி, மேற்கு மாசி வீதி, மதுரை. 
Special : இஞ்சி பிஸ்கட்

முதலியார் கடை, கோரிப்பாளையம், மதுரை. 
Special : இட்லி, காரச் சட்னி

குரு பிரசாத் ஹோட்டல், மதுரை. 
Special : சில்லி பரோட்டா

கணேஷ் மெஸ், மதுரை. 
Special : சோயா குழம்பு

புதூர் மீனாக்ஷி பவன், மதுரை. 
Special : வறுத்த சிக்கன் லெக் பீஸ்

ஹோட்டல் அபிராமி, சிம்மக்கல், மதுரை. 
Special : பூரி, கிழங்கு மசாலா

ஸ்ரீ ராம் மெஸ், மதுரை. 
Special : அன் லிமிட்ட் மீல்ஸ்

போஸ் கடை, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. 
Special : இட்லி, விதம் விதமான தோசை

கணேஷ் மெஸ், மேலப்பெருமாள் மேஸ்திரி ரோடு, மதுரை. 
Special : புல் மீல்ஸ்

மாடர்ன் ரெஸ்டாரென்ட், மதுரை. 
Special : தோசை, வட இந்திய உணவு வகைகள்

சபரீஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை. 
Special : நெய்ப் பொங்கல், அல்வா, விதம் விதமான தோசை

முருகன் இட்லி கடை, இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில், மதுரை. 
Special : இட்லி, விதம் விதமான தோசை

லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, திருநெல்வேலி. 
Special : அல்வா

சங்கர் காபி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. 
Special : உழுந்து வடை

ஐயப்பா தோசை கடை, பாண்டிய வெள்ளாளர் தெரு, மதுரை. 
Special : விதம் விதமான தோசை

விசாலம் காபி, தல்லாகுளம், மதுரை. 
Special : காபி

இளநீர் சர்பத், மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே, மதுரை. 
Special : இளநீர் சர்பத்

Wednesday, October 7, 2020

 தற்கொலை உணர்வு வந்தா அப்பா அம்மாவை யோசிங்க!

நன்றி ஆனந்த விகடன்


2018... நீட் தேர்வு முடிவு வெளிவந்த நாளில் மீடியா வெளிச்சத்தில் திளைத்தவர் அழகுலட்சுமி. “கோவையைச் சேர்ந்த ஹோட்டல் காவலாளியின் மகள் நீட் தேர்வில் வெற்றி” என்ற செய்தி எல்லாச் சேனல்களிலும் ஒளிர்ந்தது. சமீபத்தில் நீட் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதையொட்டி, ‘நீயா நானா’வில் அழகுலட்சுமி பேசிய வீடியோவும் வாட்ஸப்பில் வைரலானது. அழகுலட்சுமி இப்போது எப்படியிருக்கிறார்? பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றேன்!

பரபரப்பான கோவைப் பூ மார்க்கெட் பகுதியில், இடைவெளியே இல்லாமல் ஒடுங்கியிருக்கும் ஒரு வீட்டில் அழகுலட்சுமியைச் சந்தித்தேன். டபுள் டியூட்டி முடிந்து தொய்ந்துபோய் வந்திருந்தார் அழகு லட்சுமியின் அப்பா சிவக்குமார். தாய் செல்வி சமையல் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் கிளாஸில் மூழ்கியிருந்த அழகுலட்சுமி, சிறிய இடைவேளை விட்டு நம்முடன் பேசத் தொடங்கினார்

“அப்பா ஹோட்டல்ல செக்யூரிட்டி. அம்மா இன்னொரு ஹோட்டல்ல சர்வர் நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். ப்ளஸ் 2-ல 1120. நான்தான் ஸ்கூல் பர்ஸ்ட். நல்ல மார்க் வாங்கறதால, அதை கரெக்டா பயன்படுத்திக்கணும்னு எம்.பி.பி.எஸ் கனவு வந்துச்சு. நீட்டோட முதல் பேட்ச்ல நான் எழுதியிருக்கேன். ஒரு மாசம் கோச்சிங் போனேன். முதல்முறை ரொம்பவே பயந்துட்டுதான் எழுதினேன். 202 மார்க் எடுத்தேன். அது பாஸ் மார்க்தான். ஆனா, எம்.பி.பி.எஸ் கிடைக்கல

ரெண்டாவது தடவ நல்ல மார்க் எடுக்கணும்னு ஒரு வருஷம் கோச்சிங் போனேன். இன்ஸ்டிட்யூட்ல பேசி பீஸ் கம்மி பண்ணச் சொன்னோம். அவங்க கம்மி பண்ணின பீஸ கட்டக்கூடப் பணம் இல்ல. எங்க ஸ்கூல் ஹெச்.எம் பாதி, நாங்க பாதி போட்டு பீஸ் கட்டினோம். இந்தமுறை 316 மார்க் எடுத்தேன். ரெண்டு தடவையும் எனக்கு எம்.பி.பி.எஸ் கிடைக்கலை. பி.டி.எஸ் தான் கிடைச்சுது. அதுவும் பிரைவேட் காலேஜ்ல. கணக்கு பண்ணிப் பார்த்தா, அதுக்கும் கிட்டத் தட்ட எம்.பி.பி.எஸ் பீஸ்தான் ஆகுது.

எம்.பி.பி.எஸ்தான் கனவுங்கறதுல நான் உறுதியா இருந்தேன். கடைசியா ஒருமுறை முயற்சி பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா, கோச்சிங் போக காசு இல்ல. வீட்லயும் வேணாம்னு சொன்னாங்க. அப்பறம் ஆனந்த விகடன்ல என்னப்பத்தி வந்த செய்திய பார்த்துட்டு, கோச்சிங் பீஸ் கட்ட ஒரு என்.ஜி.ஓ உதவி பண்ணினாங்க. இந்தமுறை 420 மார்க் எடுத்தேன்.

எம்.பி.பி.எஸ் சீட்டைப் பொறுத்தவரை, கவுன்சலிங் முதல் மூணு நாளுக்குள்ள இருந்தாதான் கிடைக்கும். எனக்கு நாலாவது நாள்தான் கவுன்சலிங். அப்பவே இந்த முறையும் சீட் கிடைக்காதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால, கவுன்சலிங் போகலை. இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் என்னால் எம்.பி.பி.எஸ் கனவை விட முடியல. ஏற்கெனவே, என்னோட சீனியர் ஒருத்தங்க உக்ரைன்ல எம்.பி.பி.எஸ் படிச்சுட்டிருந்தாங்க. அவங்ககிட்ட பேசினேன். எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல செலவாகும்னு சொன்னாங்க. ஏற்கெனவே கோச்சிங்குக்கு பீஸ் கட்டின என்.ஜி.ஓ கிட்ட பேசினேன். அவங்க, என்னோட ஆர்வத்தப் பார்த்து, ‘பாதிச்செலவை மட்டும் நாங்க ஏத்துக்கறோம்’னு சொன்னாங்க. இப்ப நான் உக்ரைன்ல எம்.பி.பி.எஸ் சேர்ந்து ஒரு வருஷம் ஆச்சு” என்றவர் தன் பெற்றோரைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

ஒருவழியா எம்.பி.பி.எஸ் படிக்கறது சந்தோஷமா இருந்தாலும் நீட்ல பாஸாகியும் சீட் கிடைக்கலங்கறப்ப ரொம்ப உடைஞ்சுட்டேன். ரெண்டு வருஷம் உழைச்சதுக்கு எந்தப் பலனும் இல்லை.

நான் 2017-ல ஸ்கூலிங் முடிச்சேன். அப்பவே எனக்கு சீட் கிடைச்சிருந்தா, இந்நேரம் நான் எம்.பி.பி.எஸ் பைனல் ஸ்டேஜ்ல இருந்திருப்பேன். ஆனா, இப்பதான் நான் எம்.பி.பி.எஸ் பர்ஸ்ட் இயர் முடிச்சிருக்கேன். இதுக்கப்பறம் பி.ஜி படிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அதெல் லாம் முடிக்க இன்னும் பல வருஷம் ஆகும். அப்பா, அம்மா அதுக்கு இன்னும் அதிகமா உழைக்கணும். அப்பா ஹார்ட் பேஷன்ட். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. சுகரும் இருக்கு. கொரோனா வால அம்மாக்கு முன்ன மாதிரி வேலை இருக்கறதில்ல. அப்பாவோட வருமானத்துல தான் குடும்பம் நடந்துட்டி ருக்கு. தொடர்ந்து, தேர்வு எழுதி சீட் கிடைக்காதப்ப, எனக்கும் தற்கொலை யோசனை வந்துச்சு. ஆனா, நாம போனா அப்பா, அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சேன். அந்த வலிய அவங்களால தாங்கிக்க முடியாது. தற்கொலை உணர்வு வரும் எல்லோருமே, கொஞ்சம் அவங்க அப்பா அம்மா பத்தி யோசிங்க” என்று அழகுலட்சுமி சொன்னபோது குறுக்கிட்ட செல்வி, “டிவில வர நியூஸ பார்க்கவே முடியல. யாரும் அப்படிப் பண்ணாதீங்க சாமி” என்றார்.

மீண்டும் தொடர்ந்த அழகுலட்சுமி, ‘’நான் நீட் எக்ஸாம் ஹால்ல சீரியஸா எக்ஸாம் எழுதறப்ப, என் காதுல டார்ச் அடிச்சுப் பார்த்தாங்க. ஆனா, சில இடங்கள்ல போலியா ஆள்மாறாட்டம் பண்ணியெல்லாம் நீட் எழுதியிருக்காங்க. எதைத் தடுக்கணுமோ அதைப் பண்ணாமே, சம்பந்தமே இல்லாம மாணவர்களை ஸ்ட்ரெஸ் ஆக்கிட்டு இருக்காங்க. அப்புறம் சி.பி.எஸ்.இ தரத்துக்கு, நம்ம பாடத்திட்டத்தையும் மாத்தினா இன்னும் உதவியா இருக்கும். முக்கியமா, சீட்களை அதிகரிச்சு, பீஸ் தொகையையும் கம்மி பண்ணணும். இதையெல்லாம் சீக்கிரமா பண்ணுனா, என்னை மாதிரி சூழ்நிலைல இருந்து வரவங்களுக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும்.”

அழகுலட்சுமியின் கசப்பான அனுபவம் மற்ற மாணவர்களுக்கு வராமல் தடுப்பதும் தவிர்ப்பதும்... ஒட்டுமொத்த சமூகத்தின் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது


Saturday, October 3, 2020



எனக்குப் பெரியாரைப் பிடிக்காது ப்ரோ.

ஏன் ப்ரோ ?

கடவுள் இல்லை. கடவுள் இல்லை. 
கடவுள் இல்லவே இல்லைன்னு சொன்னார் ப்ரோ.

நீங்க கடவுளைப் பார்த்திருக்கீங்களா ப்ரோ ?

இல்ல ப்ரோ.

அதைத்தான் ப்ரோ அவரும் சொன்னாரு. 
போங்க ப்ரோ... போய் யோசிங்க. அதுக்குத்தான் மூளை இருக்கு.

ப்ரோ... நீங்க ட்விஸ்ட் பண்ணி சீட்டிங் பண்றீங்க. 
அது ஒரு ஃபீல் ப்ரோ. நம்பிக்கை.

அப்டியா ப்ரோ ? 
எல்லாருக்கும் ஒரே கடவுள் , ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே சாதின்னு 
சமமா இருந்தா பரவால்ல ப்ரோ. ஆனா ஆளாளுக்கு ஒரு நம்பிக்கையை வச்சிட்டு உயர்வு தாழ்வு பேசிட்டு அடிச்சின்னு சாகறீங்களே ப்ரோ.

மனுஷங்க இப்டி பண்றதுக்கு கடவுள் என்ன ப்ரோ பண்ண முடியும் ?

மனுஷங்களை இப்டி அடிச்சினு சாக வைக்கிறது கண்டிப்பா கடவுளா இருக்க முடியாது. ஏற்கனவே சொன்னதையே மறுபடியும் சொல்றேன். மூளை இருக்கு. யோசிங்க ப்ரோ.

என்ன இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கைத் தேவைப்படுது ப்ரோ. 
அது என் பர்சனல். உணர்வுகள்.

அப்டியா ப்ரோ? அப்ப ஏன் இன்னொரு மதத்தை வெறுக்கறீங்க ? 
இன்னொருத்தன் கும்பிடும் வேற சாமியை வேண்டாம்னு ஒதுக்கறீங்க ? 
இன்னொரு மனுஷனை வேற சாதின்னு சொல்லி வேறுபடுத்தி ஒதுக்கறீங்க ? அவங்களுக்கெல்லாம் மனசு இருக்காதா ?
உணர்வுகள் இருக்காதா ? 
மனசு புண்படாதா ?

அப்டி இல்ல ப்ரோ... என்ன இருந்தாலும்,

அடே சங்கி நாயே, 
மூளை இருக்கா இல்லையா ? 
எங்கிருந்துடா வரீங்க ? தாலி அறுக்க...

Wednesday, September 9, 2020















50 வருசமா திராவிடம் தமிழுக்கு என்ன செஞ்சதுனு தெரியனும். அதானே?

1.எழுத்துச் சீர் திருத்தம்
2.இலக்கிய பரவல்
3.புதுக்கவிதை புரட்சி
4.நாடகத் தமிழ் வளர்ச்சி
5.பரவலாக்கப்பட்ட பழந்தமிழர் இலக்கியம்
6.இந்தியை எதிர்த்து தமிழின் ஆளுமையை நிலைநாட்டல்
7.உலகத் தமிழ் மாநாடுகள்
8.புதுச்சொல் அறிமுகம்
9.செம்மொழி அங்கீகாரம்
10.தமிழிலே பெயர் பலகை கட்டாயம்
11.வள்ளுவர் கோட்டம்
12.வள்ளுவர் சிலை
13.சிலப்பதிகார அருங்காட்சியகம்(பூம்புகார்)
14.தமிழ் எண்முறை உள்ளீடு வளர்ச்சி
15.கணினி எழுத்துரு அறிமுகம்
16.கீழடி அகழாய்வு முடிவுகளை அறிவித்தல்
17.செம்மொழிப் பூங்கா
18.இரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழியை இடம்பெற வைத்தல்
19.தேசிய தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த சட்டப்போராட்டம்
20.தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு அரசு முறை விருதுகள்
21.மாநிலப் பிரச்சனைகளை தீர்த்து நட்புறவு மேம்பட பெங்களூரூவில்
திருவள்ளுவர் சிலை நிறுவுதல்
22.அலி போன்ற பெயர்களை ஒழித்து திருநங்கை சொல் புகுத்தல்
23.ஊனமுற்றோர் சொல்லுக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் பெயர் அளித்தல்
24.விதவை என்ற பெயருக்கு பதிலாக கைம்பெண் என மாற்றுதல்
25.தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் துவக்கம்
26.ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கு நிதி அளித்தல்
27.பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம்
28.இன்ஜினியரிங் படிப்பில் தமிழ்வழியை அறிமுகம் செய்தல்
29.தமிழ்வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு
30.செம்மொழி தமிழாய்வு நிறுவனம் துவக்கம்
31.உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
32.கோயில்களில் தமிழ்மொழியில் அர்ச்சனை
33.தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைத்தல்
34.தமிழ் ஓலைச்சுவடிகளை கணினிமயமாக்கல்
35.டால்மியாபுரம் என மாற இருந்த பெயரை கல்லக்குடி என்ற தமிழ் பெயரையே போராடி நிலைநாட்டியது
36.மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது
37.மதராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது
38.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் துவக்கப்பட்டது
39.தொல்காப்பிய பூங்க திறப்பு
40.வாகன பதிவெண்களை தமிழ் மொழில் எழுத சட்ட அங்கீகாரம்
41.இளம்அறிவியல் படிப்பபில் பயிற்று மொழி தமிழ்
42.தமிழ் தாய் கோயில் கட்டப்பட்டது
43.பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் துவக்கம்
44.ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டல்
45.கிறிஸ்து ஆண்டுக்கு பதிலாக திருவள்ளுவர் ஆண்டை அரசிதழில் வெளியிடல்
46.கொரோணா காலத்தில் wfh, இணைய வகுப்பை போல 1999ஆம் ஆண்டு உலகத்
தமிழ் இணைய மாநாடு
47.பேருந்துகளில் திருக்குறள் கட்டாயம்
48.பேரவையின் துவக்கத்தில் அவைத்தலைவரின் திருக்குறள் உரை
49.குறிஞ்சி நில மரபணு பூங்கா துவக்கம்
50.மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம்
51. இந்தியாவில் முதல் முறையாக கணினி அறிவியல் பாடம் அறிமுகம்.அதுவும்
தமிழில்!!

இன்னும் பல சாதனைகள்

ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கு செய்த ஐம்பத்தி ஒன்னு காரியங்களை அடுக்கிவிட்டேன். தமிழை வஞ்சிக்காது வாழ வைத்த திராவிடத்தை போல வேறு இயக்கம் தான் உலகத்தில் உண்டோ
நான் மேல சொன்னதுல ஒன்னாவது பாஜக தமிழ் மொழிக்கு செஞ்சு இருக்குமா?

ஆம்.தமிழ் திராவிடத்தின் குடும்ப சொத்து.

 












திராவிடம் என்ன செய்தது ?

இட ஒதுக்கீட்டில்
படித்து விட்டு
திராவிட இயக்கம்
என்ன செய்தது என்பர்
மதக் கலவரமற்ற
சூழலில் வாழ்ந்து கொண்டு
பெரியார் மண்ணா என
ஏளனம் செய்வர்
உடல் நலிவுற்றால்
கோவில் செல்லாது
மருத்துவமனை சென்று விட்டு
நாத்திகத்தை நக்கல் செய்வர்
அடிப்படை கட்டமைப்பில்
உயர்ந்து நிற்கும் தமிழகத்தை
திராவிடத்தால் வீழ்ந்ததாய்
வீண் பழி சுமத்துவர்
இந்தி பேசும்
மாநிலங்களை விட
தமிழ்நாடு வளர்ந்திருந்தாலும்
இந்தி புகழ் பாடுவர்
தன் பெயருக்குப் பின்
ஜாதிப்பெயர் போட்டுக் கொள்ள
சங்கடப் பட்டுக் கொண்டே
பெரியாரை நாயக்கர் என்பர்
தன் தாத்தனுக்கும் பாட்டிக்கும்
ஏன் கல்வி மறுக்கப்பட்டது
என கேள்வி கேட்காமல்
கேரளாவில் கர்நாடகாவில்
யாரும் படிக்கவில்லையா என்பர்
ஆடு மேய்த்தவரின்
பிள்ளைகளை
IPS ஆக்கியது தான்
திராவிட இயக்கத்தின் சாதனை
IPS-களை
ஆடு மேய்க்க
அனுப்பியது தான்
ஆரியத்தின் சாதனை ...

- பாசு ஓவியச்செல்வன்