திரையும் கலையும்
Peepli Live (ஹிந்தி)
என்னடா ஹிந்தி படம்லாம் பாத்து எழுத ஆரம்பிச்சுட்ட ன்னு நெனக்க வேண்டாம் இங்கிலீஷ் Subtitle உதவியுடன் பார்த்தேன்.
இந்தியாவில் விவசாயிகள் வாழ்க்கை நிலையை செவிட்டுல அறையுராப்ல நகைச்சுவையும் , கிண்டலும், கேலியுமா அதிகமா சிந்திக்க வைத்தும் படம் எடுத்திருக்கிறார்கள்.
நத்து வும் அவரது மூத்த சகோதரரும் கடனை திருப்பி அடைக்காததல் அவர்கள் நிலம் பறிபோகும் நிலை. உதவி கேட்டு கட்சி அலுவலகம் செல்ல அங்கே... இருக்கும் பெரிய மனிதர்கள் இவர்களை கேலியும் கிண்டலும் செய்ய... ஒரு கட்டத்தில் .....Government ல ஒரு scheme இருக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் ஒரு லட்ச ருபாய் தருவார்கள். என்று சொல்கிறார்கள். அதை இவர்கள் இருவரும் ...மிக சீரியஸ் ஆக எடுத்து கொண்டு மூத்தவர் இளையவரை அதாவது நததுவை நீ தற்கொலை செய்து கொள் நான் குடும்பத்தையும் மற்றவர்களையும் பார்த்து கொள்கிறேன் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை ஒரு டீ கடையில் வைத்து Government ல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் ஒரு லட்ச ருபாய் தருவார்கள். என்று சொல்கிறார்கள் அங்கு பின்னால் நிற்கும் ஜன மோட்சா என்ற லோக்கல் பத்திரிகை நிருபர் அதை செய்தியை வெளியிட. அது election நேரமாகையால் ஒரு பெரிய தொலைகாட்சி நிறுவனம் பேட்டியெடுக்க நினைக்கிறது. மற்றும் அவர்களது தற்கொலையை ஒளிபரப்ப நினைக்கிறது. அது ஆங்காங்கே பரவி... Peepli என்கிற இவர்களது கிராமம், மற்றும் நத்து காலைக்கடன் சென்றால் கூட கேமராவால் தொடரப்படுகிரார்கள்.இதற்கிடையில் லோக்கல் வேட்பாளர்களால் இலவச தொலைகாட்சி அளிக்கப்படுகிறது. அது வீட்டில் ஒரு மூலையில் அப்படியே கிடக்கிறது. முதல்வர் வந்து சந்திக்கிறார். இதில் பெரிய வேடிக்கை என்னெவென்றால் நமது விவசாய மந்திரி படம் முடியும் வரை நமக்கு இன்னும் ஹை கோர்ட் ஆர்டர் வரல என்று சொல்வதுதான். இறுதியில் ஒரு ஊடகம், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் பிடியில் நத்து. அங்கு செல்லும் ஜன மோட்சா நிருபர் அங்கு செல்ல நடக்கும் பிரச்சனையில் அவர் இறக்க . நத்து காணமல் போய்விட. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் நத்து இறந்து விட்டார் என்று சொல்கிறது. திரை இருள்கிறது. அடுத்து நகரத்தில் விழிக்கிறது. அங்கு நத்து கட்டிட வேலையில் அமர்ந்திருக்கிறார். திரையில் எழுத்துக்கள் மேலே ஊர்ந்து செல்கிறது. விவசாயிகள் கிராமத்தில் இருந்து வெளியேறும் புள்ளி விவரத்துடன். யோசிக்க வைக்கிறது. நத்து பாத்திரத்தில் நடித்த மற்றும் அவரது அண்ணன் பாத்திரத்தில் நடித்தவர்கள் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். நத்து பாத்திரத்தில் நடித்தவருக்கு அப்படியே நம் மயில்சாமி நடிகரின் சாயல். மற்ற எல்லோருமே நிறைவாக செய்திருக்கிறார்கள். நம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியை எச்சரிக்கையை சொல்லும் ஒரு திரைப்படம். அமீர்கான் ஒரு சமூக பொறுப்புள்ள கலைஞன். அவரின் தாரே சமீன் பர். போலவே இதுவும் ஒரு நல்ல படம்.
No comments:
Post a Comment