திரையும் கலையும்
ஆடுகளம்
எனக்கு தெரிந்து பாலு மகேந்திரா வின் சீடர்கள் தான் ஒரு கதையை மிக மிக நுணுக்கமாக அணு அணுவாக பிரித்து மேய்கிறார்கள். அவரின் சீடர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வந்துள்ள ஆடுகளம் அதை நிரூபிக்கிறது. எனக்கு அவர் திரைப்படத்தில் காட்டியுள்ள (முக்கியமாக கிராபிக்ஸ் உதவியுடன் ) சேவல் சண்டைக் காட்சி நேரில் பார்த்த அனுபவம் உண்டு. என்னுடன் Polytechnic College இல் Physics Lecturer ராக
பணிபுரிந்த நண்பரின் குலதெய்வம் கோயில் கிடா வெட்டுக்கு நாங்கள் உணவு வெட்ட போயிருந்த போது அங்கு ஒரு பெரிய பந்தல் போட்டு நிறைய சேவல் த்யாராயும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்தது.( திண்டுக்கல் அருகே அம்மா பட்டியில் இன்றும் நடக்கிறது) ஆட்கள் பந்தயம் வேறு கட்டிக்கொண்டு இருந்தார்கள். நான் ஏண்டா காமெராவை எடுத்துட்டு வரலையே ன்னு வருத்தப்பட்டேன். சரி படத்தைப்பற்றி பேசுவோம்.
கதை இப்போதைய Trend மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் சேவல் சண்டை அதை வைத்து நடக்கும் பந்தயம், வன்மம், பகை,துரோகம் இதில் ஒரு காதல்( திணிக்கப்பட்ட... தேவையில்லாத.. அது இல்லையென்றாலும் கதை பாதிக்கப்பட போவதில்லை.). தொழில் குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தம். ஆனால் சீடனுக்கு தெரியாம.
பிளாஷ் பேக் யுக்தி இல்லாமல் யாருமே இப்போது காதல் சொல்லுவதில்லை. வெற்றி மாறனும் அதையே பயன் படுத்தி இருக்கிறார். வசனம் அப்படியே மதுரை வழக்கு. படத்தில் கதையின் நாயகன் பெயர் கருப்பு. படம் பார்க்கும் நம் காலடியிலும் கருப்பு கருப்பா ஏதோ...அட முடி. ஏன்னா மசுரு...ன்ற சொல்.. அடிக்கடி. மேலும் ஏகப்பட்ட ஒலியற்ற கெட்ட வார்த்தைகள்.(நமக்குதான் நெறைய தெரியும்ல)
ஒளிப்பதிவு அதிகமாக இருளை படம் பிடித்திருக்கிறது அப்படியே.
தனுஷ் நல்ல நடிகர், அவர் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அவர் ஏன் இந்த படிக்காதவன்....குடிக்காதவன்னு, குட்டி...ஜட்டி னு நடிக்கிறார். எனக்கு தெரிந்து சமீபமா இப்படியொரு நரித்தனமான வில்லன் கதா பாத்திரத்தை யாரும் படைக்கவில்லை. ஈழத்து கவிஞர் அருமையாக செய்திருக்கிறார்.தனுஷின் நண்பன், நிக்கோலஸ், மற்றும் கிஷோர்...இவர்கள் மனதில் நிற்கிறார்கள். எனக்கு நாயகி பற்றி எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. வெள்ளாவி வச்சு வெளுத்து ஏதாவது விளம்பர போர்டில் தொங்க விட வேண்டியதுதானே. இந்த கதைக்கு தேவையே இல்லை. அதுவும் செவப்பா சும்மா கும்முன்னு இருந்தாதான் நடிகையாம்..ஓகே ஓகே. அதுல இருவருக்கும் காதல் வருவது...நம்புங்கப்பா. இசை அய்யய்யோ பாடல் மட்டும் கேட்கலாம். ஜி.வி. பிரகாஷ். பின்னணி இசை எல்லாம் புதிதாகவும் இல்லை மனதில் பதிவாகவும் இல்லை.
வெற்றி மாறன் ஆடிய களம். அருமையான களம். அதகளம்.
No comments:
Post a Comment