Tuesday, March 29, 2011


வாசித்ததில்  நேசித்தது





என் நண்பர் சிவா துபாய் ல் இருக்கிறார். என்னுடன் ஆரம்ப பள்ளியில்
இருந்து மேல்நிலைப்பள்ளி வரை என்னுடன் படித்தவர் அவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அது எனக்கு பெருஞ்செய்தியாகவே
எனக்கு பட்டது அதை நீங்களும் படியுங்கள்.


தமிழ் நாட்டில் வாழ்வதற்கு உண்டான தகுதிகள்



நீங்கள் படித்தவரா ? ..............
உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா ?.............
டேக்ஸ் அதிகம் கட்டுபவரா ?...........
சொந்த தொழில் செய்பவரா ?.................

அப்படியானால் நீங்கள் புத்திசாலி இல்லை

ஆமாம் ........ நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் புத்திசாலி இல்லை

ஏனென்றால்

நாங்கள் படிக்காதவர்கள் .......
சொந்த வீடு , தொழில் எதுவுவுவும் ........ இல்லை .........
பரம ஏழை ..........

ஆனால்

வாழ்வதற்கு வீடு ............
மாதம் தோறும் 35 கிலோ அரிசி
அதை பொங்கி திங்க காஸ் அடுப்பு ........
அரைத்து திங்க கிரைண்டர் , மிக்சி ......
இதற்க்கு ஏற்ப மளிகை சாமான்கள் .....
தீபாவளி பொங்கலுக்கு துணிகள் .....
காலை உணவு முடித்து பகல் பொழுது கழிய மாலை வரை வண்ண தொலைகாச்சி பெட்டி ...
இடையே அரட்டை அடிக்க செல் போன் ....
இரவு வந்தா மலிவு விலை மது , இலவச மின்சாரம் ....
பிறகு சும்மானச்சுக்கும் போரடிச்சா 100 நாள் வேலை ( இஷ்டம் இருந்தா .. போன போவுது )

எங்கள் குழந்தைகள் படிக்க ... இலவச பஸ் பயணம் , சைக்கிள் , மதிய உணவு ,, லேப்டாப் ... உதவி தொகை ....

அவர்கள் கல்யாண செலவு , பிறகு புள்ள பேருக்கு ஊக்க தொகை ,..

பிறகு எதுக்குங்க நாங்க உங்கள மாதிரி கஷ்ட படனும்
நாங்க செய்வது தினமும் இரண்டு வேலை ....

ஒன்னு எங்க காலை கடனை நாங்களே முடிக்கணும் ,
இரண்டு நைட் சமா சரத்தே நாங்களே முடிக்கணும்
( ரொம்ப கஷ்டமான வேலை )

பிறகு 5 வருசத்துக்கு ஒரு முறை போய் ஒரு பட்டனை அழுதிட்டு வந்தா

எங்களுக்கு எல்லாமே வீடு தேடி வந்திடும்

இவ்வளவு நல்வங்கள .. தமில் நாட்டில் மட்டுமே பார்க்கமுடியும் ...


என்னவோ போங்க நீங்க எல்லாம் கஷ்டபடுறத எங்களாலே சகிக்க முடியலே ...

சீக்கிரம் நீங்களும் எங்களோட சேர்ந்துடுவீங்க ....

நிச்சயமா ... எங்க குலதெய்வம் .. முனியப்பா சாமி சத்தியம் ... குலதெய்வம் பக்கத்துக்கு உங்களுக்கு துணையா இருக்கும்


என்னவோ நான் சொல்லறத சொல்லிட்டேன் .. அப்புறம் கஷ்ட படறதும் படா ததும் உங்க இஷ்டம் ...

உங்களுக்கு புத்தி சொல்லறளவுக்கு நான் ஒன்னும் பெரிய புத்திசாலி இல்லை

ஏனென்றால் நான் படிக்காதவன்....... பரம ஏழை ......



இப்படிக்கு ..,

தமிழ் நாட்டின் பரம ஏழை

Sunday, March 27, 2011

திரையும்  கலையும்

யுத்தம் செய்

மறுபடியும் பாரதியாரின் பாடல்வரி தலைப்பில் மிஷ்கின் படம். வாழ்க!
ஒரு நல்ல இயக்குனர் என்றால் அனைத்து வகை கதைகளையும் கையாள
தெரிந்தவராக இருப்பதுதான் அவரை தனித்து அடையாளப்படுத்தும். அந்த
வகையில் மிஷ்கின் தனித்து தெரிகிறார். அடுத்து காதலையே பிடித்து தொங்கி கொண்டிருக்கும் ஜல்லியடி இயக்குனர்களுக்கு மத்தியில் வித விதமான பரிமாணங்களை காட்டும் மிஷ்கின் நம் தமிழ் திரை உலகிற்கு புதியவரும் மனதில் பதிபவரும் கூட.  ஆஹா thriller  ஒரு நல்ல thriller  பார்த்த அனுபவம்.  (அதான் ஒரு த்ரில்லர் சக்சஸ்  ஆயிடுச்சே இனிமேலாவது 
செண்டிமெண்ட் பார்த்தாவது த்ரில்லர் எடுங்கப்பா எத்தன நாளைக்கு 
தான் வகை வகையா காதல எடுப்பீங்க) 

கதை ஆரம்பம் சிறிது  குழப்பமடைய கூடியதே கவனமாக கூடவே நாம் நகர வேண்டும். வயதான பெருசுகளின் சபலங்களினால் பலியாகும் இளம்பெண்கள் அதற்கு உடந்தையாய் இருக்கும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் நம் தமிழ் பட கதா நாயகர்கள் .....அதாங்க ரவுடிகள்.
தன் தங்கையை தொலைத்த கதையை மீறாத காவல் துறை அதிகாரி
கொஞ்சம் கொஞ்சமாக கண்டு பிடித்து பறந்து பறந்து சண்டை போடாமல்
நடைமுறை வாழ்க்கை மனிதனாக நீதியை நிலை நாட்டுகிறார். போதும்........
இதோட நிறுத்திக்குவோம்.


இயக்குனர் பாராட்ட பட வேண்டியவர். நல்ல கதை , திரைக்கதை, காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்ந்தெடுத்த விதம். Voyerism  திரையில் கொஞ்சம் கூட நெளியாமல் பார்க்க வைக்கும் காட்சிகளில் இயக்குனர் தெரிகிறார்.
அடுத்து எனக்கு மிக மிக பாராட்ட தோன்றுவது இசை. உண்மையிலேயே.
அறிமுக இசையமைப்பாளர் எவரும் இது வரை தந்திடாத பின்னணி இசை.
நல்ல குத்து பாடல். படத்தில் இல்லாத இளையராஜா சாயலில் மிஷ்கின் பாடிய ஆராரோ பாடல் எனக்கு மிகவும் பிடித்தது ஏன் படத்தில் வைக்கவில்லை இயக்குனருக்கு தான் தெரியும். அனைத்து கதாபாத்திரங்களுமே நிறைவாக செய்திருக்கிறார்கள்.


 இடைவேளை வரை பர பர வென்று நகரும் கதை க்ளைமாக்சை நெருங்க நெருங்க சற்று நீளமாக தெரிகிறது. குத்து பாட்டு மற்றும் மிஷ்கின் ன் கிளிஷே சண்டை காட்சி தவிர்த்திருக்கலாம். மிஷ்கின் கால்களின் காதலன் இம்முறையும் திரையில் தெரிய வைக்கிறார். லக்ஷ்மி மொட்டை தலையில் மிரட்டினாலும் அவர் அயோக்கியர்களை வெட்டும் கண்களின் காட்டும் தீவிரம் கைகளில் தெரியவில்லை இருந்தாலும் மிக நன்று. Y .G ,
அவர்களின் பையன், ஜெயப்ரகாஷ் டாக்டர் நன்றாக நடித்துள்ளார், சேரன், அவரின் சக காவல் துறை நண்பர்கள் ஒரு இடத்தில் பார்த்து கொண்டே இருக்கிறார்கள் அப்புறம் வசனம் பேசுகிறார்கள். இதுவும் மிஷ்கின் ன் பாணி.

நன்று மிஷ்கின் Keep  it  up . அடுத்து வேற Genre  முயற்சி பண்ணுங்க. வாழ்த்துக்கள்.


குறிப்பு.
இந்த படம் வெளி வருவதற்கு முன்பே Memories  of  murder  என்ற கொரிய படத்தின் Copy  என்று Blog  லும், Face  Book லும்  , Message  லும். வறுத்து எடுத்து
விட்டார்கள்  நம்மவர்கள். என்னைப்பொருத்த வரை பார்க்காமலே முடிவுக்கு
வருவது படைப்பாளிகளை காயபடுத்தும். மேலும்  வெளி வந்த பின்பும
Even   சாரு நிவேதிதா கூட இந்த படம்  மேலே சொன்ன கொரியப் படத்தின்
டப்பிங் என்று சொல்லியிருந்தார். நந்தலாலா படத்தில் சில காட்சிகள்
கிக்குஜிரோ  படத்தின் சாயலின் இருந்தது. ஆனால் இந்த படம்
Memories  of  murder ஐ போன்று உள்ளதா ..... எனக்கு அப்படி தோன வில்லை
கீழே அந்த படத்தின் Link  வைத்துள்ளேன் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஆனால் ஒன்று  Memories  of  murder  படமும் நன்றாக இருந்தது.

Friday, March 25, 2011

செய்தியும் சிந்தனையும்




தேர்தல் என்னும் தேர்வு வந்து விட்டது. இதுதாங்க உண்மையிலேயே
Public  Exam . எல்லோரும் கலந்துக்கிறோம்ல. கையில் கரும்புள்ளி வைத்து நாட்டில் இருக்கும் கரும்புள்ளி அழிக்க நேரம் நெருங்கி வந்து விட்டது. சூட்டோடு சூடாக ஒட்டு போட வேண்டாம் உட்கார்ந்து யோசிப்போம் தினமும் கிடைக்கும் நேரத்தில். யாரோ எவரோ வரட்டும் நமக்கென்ன என இருக்க வேண்டாம். நம் வரிப்பணத்தில் நமக்கு திட்டங்களை நிறைவேற்றி
அதை சொந்த பணத்தில் செய்தது போல் காட்டிகொல்பவர்களை அடையாளம் காட்டிக்கொடுப்போம் . இன உணர்வை ஓட்டுக்காக மட்டும் உரசி பார்ப்பவர்களை விரட்டியடிப்போம் . ஆயிரம் கொடுத்து பல ஆயிரம் திருட நாமே உடந்தையாக இருக்க வேண்டாம். வேட்பாளரின் ஜாதியை மறுத்து நீதியை காப்போம். இலவசங்களை மறுப்போம் நம் பொருளை நம் உழைப்பில் வாங்க வேலை உருவாக்கிகளை ஆதரிப்போம் . ஆண், பெண், திருநங்கைகள் உரிமைகளை செயல்படுத்த நினைப்பவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம். விவசாயிகளை விவசாயத்தை காப்பவர்களை ஆதரிப்போம். அனைவருக்கும் ஒரே கல்வி ஒரே கட்டணம்
செயல் படுத்துபவர்களை கண்டு கொள்வோம்..................................................................


நெறையா இருக்குங்க ....எதுவுமே நம்பிக்கை இல்லையா
49 ஓ போடுவோம்.  அல்லது சுயேட்ச்சைக்கு போடுவோம். ஐயையோ எல்லோரும் இப்படி போட்டா யாருமே வரமுடியாதே.


இது வரைக்கும் செஞ்சவவீங்க வச்சுருந்த நாடு இனிமே ஒன்னும் குடி மூழ்கி போயிட போவதில்லை. நல்லாத்தான் இருக்கும். ................................


இதில் காமராஜர்...கக்கன்..ஜீவா .மற்றும் மறைந்த நம் தலைவர்களை நான் சொல்லவில்லை.........இப்போதிருக்கும் ஒரு சில கம்யூனிஸ்ட் தலைவர்களும் அடக்கம்.


மன்னிக்கணும் நேர்மையும் நீதியும் கொண்ட ஐயாக்களே  

Saturday, March 19, 2011

கண்களும்,கவர்ந்ததும்

    You the fish, can you smile? - Fun Animals3353735084 7fcc1c472b o 100+ Funny Photos Taken At Unusual Angle [Humor]   image

Saturday, March 12, 2011

செய்தியும் சிந்தனையும்


இன்னும் நமக்கு உறைக்கப்போவதில்லை. இயற்கையை சீண்ட சீண்ட
நாம் இன்னும் அழிந்துதான் போகப்போகிறோம். பூமி வெப்பமயமாதல் பற்றி, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றி, விலங்குகள் பாதுகாப்பு பற்றி,
முதியோர்கள் பாது காப்பு பற்றி, விவசாயம் பாதுகாப்பு பற்றி, இன்னும் கொஞ்ச வருஷத்தில் வரபோகிற உணவு பஞ்சம் பற்றி, இனி ஒரு உலகப் போர் தண்ணீருக்கா பற்றி.... பேசுவது நாகரீகமாக, பொழுது போக்குக்காக,
அல்லது இவையெல்லாம் அடுத்தவருக்கு,.... இப்படி அசட்டையாக இருப்போமானால்.. நமக்கு வரபோவது உயிரிழப்புகளும், மற்ற இத்யாதிகளுமே.

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இதனை கணிக்க முடியும், வெற்றி கொள்ள முடியுமா? யோசிப்போம். வாய்ப்பே இல்லை. வாய்ப்பு இருந்தால்.
முன்னறிவிப்பு கொடுத்தே ஜப்பானில் இவ்வளவு அழிவு வந்திருக்குமா.

சிட்டுக்குருவி பார்க்க முடிகிறதா
சட்டை கழட்டி பட்டாம்பூச்சி பிடிக்க முடிகிறதா
மண் வாசனை மணக்கிறதா நாறுகிறதா
நம் சட்டியில் நம் சோறா அல்லது பர்கரா, பிசாவா  
வானம் பார்த்த பூமியா வானமே பார்க்காத பூமியா
புத்தகத்தில் மட்டும்தான்  பார்க்கும் விலங்குகளா
முற்றத்தில் கூடு கட்டுபவை பறவைகளா கொசுக்களா
காடுகளா அல்லது கழித்து கட்டபபடும் அணுமின் நிலையங்களா
மழை வந்து நாளாச்சா வருசமாச்சா
மலைகளா அல்லது மரங்கள் சிரைத்த மொட்டைத்தலைகளா
வானமா அல்லது அவை கரும்புகை சுவாசிக்கும் பீரங்கி மூக்குகளா
தண்ணீர் பாக்கெட்டிலா பக்கெட்டிலா எதுவோ? தண்ணீர் தானா?
உறங்க ஊமையான ஒரு நாள்  கிடைக்கிறதா 
நெல் செடியிலா மரத்திலா? கேள்வி தோன்றுகிறதா?
ஆறுகளில் படகுப்பயணமா பாதப்பயணமா?
உங்களின் ஒருமூச்சு பயணம் நிறுத்தங்களை கொண்டதா?

இந்த கேள்விகளை நானும் நீங்களும் கேட்டு பெரும் பதிலை பொறுத்து
நம் வாழ்க்கை முறையை இயற்கையோடு தொடங்குவதா வேண்டாமா
என்று முடிவு செய்ய வேண்டும்.

இயற்கையை கொண்டாடுவோம்
சுற்றுபுறத்தை காப்போம்
என்னால் முடிந்த அளவு இவ்வுலகுக்கு
கெடுதல் இல்லாத உயிராய் இருப்பேன்
என்று உறுதி கொள்வோம்.
அதற்கு இயற்கையை புரிந்து கொள்வோம்.


Wednesday, March 9, 2011


நான் எழுதி கிழித்தது




எதிரும் புதிருமாய் நான்.
எனெக்கென தோன்றும்
கேள்விக்கணைகள்  எப்போதும்
நிழல் போல துரத்துகிறது.
ஆனால் அடைக்கப்பட்ட
மூளையின் வளைவுகளில்
நகரும் படிமங்களாய்.
என் கேள்வியின் நிழல் கருப்பு அல்ல
வெள்ளையும் அல்ல...
மனிதனின் நிறங்களை தின்னக்கூடியவை. 
எதிர் தோன்றும் நிகழ்வுக்கேற்ப
வேண்டுமென்றே நிறம் மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி கேள்விகள்
ஏன் நான் இப்படி?
அதற்கும் உடனே ஒரு தர்க்கம்.
நான் என் கேள்விக்கான பதிலை 
கேட்கும் போதே 
அது இன்னொரு கேள்வியை 
தலைக்கு வெளியே பிதுக்குகிறது.
நான் உண்மையிலேயே எனக்கான எதிர்தான்.
இதற்கான விடை
என் கேள்விகளின் ஆரம்ப புள்ளியில்
ஆரம்பிக்கிறது ...
ஒவ்வொரு புள்ளியாக இணைக்கையில்  
எனது அலங்கோலம்
கோலமாகவே தெரிகிறது
புள்ளிகள் இல்லாததாய்!
சிக்கலான சிந்தனையாய்!
புரிகிறது நான் புதிர் என்று
எப்போது என்ன  நினைப்பேன்?
என்ன  செய்வேன்?
எனக்கு தெரிய விளைகையில்  
மறுபடியும் கிடைக்கிறது
கேள்வி என்று சொல்லக்கூடிய பதிலும்  
பதில் என்று சொல்லக்கூடிய  கேள்வியும்
என் சிலந்திவலை மூலையில்
நேர் கோட்டில்
வளைந்து வளைந்து ஓடுகிறது
தொடர் ஓட்டமாய்
கையில் கேள்விக்கோலுடன்.
ஆம்!
நான் எனக்கு எதிர்தான்.
நான் எனக்கு புதிர்தான்.
மற்றவனுக்கு?
மனநலமற்றவன்தான் .






Saturday, March 5, 2011

சில Funny (பன்னி) த்தனமான கேள்விகள்
என்னிடம் சில கேள்விகள் உள்ளன (ரொம்ப நாட்டுக்கு முக்கியம்). இது போல் உங்களுக்கு கண்டிப்பா தோனிருக்கும். தோணினா பதில் அனுப்புங்க)



முகத்திலோ அல்லது உடம்பிலோ மென்மையான முடியை ஏன் பூனை முடி என்கிறோம் ( பூனைக்கு ராயல்டி கொடுத்தமா

யாராவது கேள்வி கேக்கும்போது ஏன் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து தட்டிக்கொண்டே மேல் மூளையை பார்க்கிறோம் ( எவனும் அங்க உக்காந்து எடுத்து குடுக்குறானா

theatre ல் இடைவேளையின் போது..ஏன் நண்பனிடம் ... இனிமேல்தாண்டா கதையே என்கிறோம் ( இதுவரைக்கும் என்னத்த பாத்த)


நல்லா அழுதுகிட்டு இருக்கும்போது கொட்டாவி வந்தா என்ன செய்வீங்க.. தொடர்ந்து அழ முடியும்னு நெனக்கிறீங்க? ( விட்டு விட்டு அழுப்பா)


கறிக்கோழி விலை ரூ.150௦ என்று brailer  கோழியை சொல்லுகிறவர்கள் 
ஏன் மற்ற கோழிக்கு எலும்பு கோழி விலை ரூ.75 என்று போடுவதில்லை  


நாட்டு கோழி விலை போடுகிறவர்கள். நாட்டின் பெயரையும் போடலாமே.
(நமக்கு தான் தேசபற்று அதிகமே இந்தியக் கோழி மட்டும் சாப்பிடுவோம்)

ஏன் Comedien கள் மட்டும் Bomb  போடுகிறார்கள்.( கதாநாயகர்கள் அடக்கி வச்சுக்குவான்களோ)

அவன் அம்மணக்குண்டியா இருக்கான்னு சொல்றோமே 
உண்மையை சொல்லுங்க அது மட்டுமா அம்மணமா இருக்கு)

அவனுக்கு காக்கா வலிப்பு ன்னு சொல்றோமே ( காக்காவுக்கு தெரிஞ்ச கடுப்பாகாதா)

ஷிட் னு சொன்னா ஆங்கில அறிவுன்னு  பாக்குறோம் ஏன் பீ ன்னு சொன்னா மூஞ்சிய சுளிக்கிறோம். ( ஏய் போப்பா.... அவுங்கல்லாம் ரொம்ப ரீசண்டானவுங்க)

பன்னிக்குட்டியை மோதிருச்சுனா வண்டியை வித்துர சொல்றாங்களே. பன்னிகுட்டியை அடிச்ச அரசுபேருந்த Goverment  யார்ட்ட வித்துருக்கும்
(வேற ஸ்டேட் ல வித்து status  ஐ  காப்பாத்திருக்குமோ)

ஏன் ஆண்களெல்லாம் குழந்தையை வலப்பக்கமும் பெண்களெல்லாம் இடப்பக்கமும் தூக்கி வைத்து கொள்கிறார்கள்.
( எப்டியோ தூக்குரான்களே அத பாருடா)


அவள் முணுக்குன்னா மூஞ்சிய தூக்கிவச்சுககுவா னு சொல்றோமே. மூஞ்சிய தூக்கிட்டா அவ உயரமா தெரியுவாளா? ( ஒட்டகசிவிங்கிடா உருப்புடாதவனே)


ஏன் திரைப்படத்தில் ஒளிஞ்சிருந்து ஒட்டு கேட்பவர்கள் முடிந்ததும் ம்ம்ம்... என்று தலையை ஆட்டுகிறார்கள்.
( அப்படியா இரு சொல்லிக்குடுக்குரேன் சொல்றாங்களாம்)


ஏன் சில பெண்கள் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு கிளாஸ் ல் கொஞ்சம்
மிச்சம் வைக்கிறார்கள் ( ஏம்ப்பா மண்டியா இருக்கும்ல )

  
அறிவியல் ஆசிரியர்களில் ஏன் பெரும்பாலோர் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். ( தெளிவா பாத்து நடத்தனும்ப்பா)


தெருவில் பிச்சை எடுக்கும் பலரை ஏன் இவரெல்லாம் ஒருகாலத்துல
பெரிய ஆளுன்னு தெரியாமலேயே Build  up கொடுக்கிறோம். ( ஏதோ நம்மளால முடிஞ்சது)


ஏன் இளையராஜாவின் ரசிகர்கள் மட்டும் அவரின் சம கால இசையமைப்பாளர்களை விட A .R .ரஹ்மானின் மேல் கோவம்
அடைகிறார்கள். ( ஏம்ப்பா sound க்கும் இசைக்கும் வித்யாசம் இருக்குப்பா...

சினிமாவில் கதா நாயகன் ஜட்டியை காண்பிக்கும் பொழுது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிற ஜட்டியையே காண்பிக்கிறார்கள்
( ஜட்டி போட்டால்தானே அழுக்காவதற்கு)

சளி பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க பிடிச்சிருந்தா வச்சுக்க வேண்டியதுதான எதுக்கு துப்புறாங்க.

 

 (தொடரும்)

Friday, March 4, 2011

செய்தியும் சிந்தனையும்

எனது நண்பர் ஒருவர் பஹ்ரைனில் இருக்கிறார் ( உடனே வடிவேல் மாதிரி.. சார்ஜாவா, அபிதாபியானு கேட்டு கிண்டல் பண்ணாதீங்க.) அவர் பெயர் லக்ஷ்மி நாராயணன். அவர் என்னுடன் பள்ளியில் பயின்றவர். அவர் எனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். அதை அவர் நகைச்சுவையாக எண்ணி அனுப்பியிருந்தார். ஆனால் அது எனக்கு நகைச்சுவையையும் இசைச்சுவையையும் அளித்தது. இசைக்கு மொழி இனம் நாடு ...எதுவும் இல்லை ரசனை மட்டும் இருந்தால் போதும் என்று தலையில் குட்டியது..
கீழே அதை கொடுத்துள்ளேன் கேட்டு பார்த்து இன்புறுக என் அன்பர்களே.