செய்தியும் சிந்தனையும்
இன்னும் நமக்கு உறைக்கப்போவதில்லை. இயற்கையை சீண்ட சீண்ட
நாம் இன்னும் அழிந்துதான் போகப்போகிறோம். பூமி வெப்பமயமாதல் பற்றி, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றி, விலங்குகள் பாதுகாப்பு பற்றி,
முதியோர்கள் பாது காப்பு பற்றி, விவசாயம் பாதுகாப்பு பற்றி, இன்னும் கொஞ்ச வருஷத்தில் வரபோகிற உணவு பஞ்சம் பற்றி, இனி ஒரு உலகப் போர் தண்ணீருக்கா பற்றி.... பேசுவது நாகரீகமாக, பொழுது போக்குக்காக,
அல்லது இவையெல்லாம் அடுத்தவருக்கு,.... இப்படி அசட்டையாக இருப்போமானால்.. நமக்கு வரபோவது உயிரிழப்புகளும், மற்ற இத்யாதிகளுமே.
நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இதனை கணிக்க முடியும், வெற்றி கொள்ள முடியுமா? யோசிப்போம். வாய்ப்பே இல்லை. வாய்ப்பு இருந்தால்.
முன்னறிவிப்பு கொடுத்தே ஜப்பானில் இவ்வளவு அழிவு வந்திருக்குமா.
சிட்டுக்குருவி பார்க்க முடிகிறதா
சட்டை கழட்டி பட்டாம்பூச்சி பிடிக்க முடிகிறதா
மண் வாசனை மணக்கிறதா நாறுகிறதா
நம் சட்டியில் நம் சோறா அல்லது பர்கரா, பிசாவா
வானம் பார்த்த பூமியா வானமே பார்க்காத பூமியா
புத்தகத்தில் மட்டும்தான் பார்க்கும் விலங்குகளா
முற்றத்தில் கூடு கட்டுபவை பறவைகளா கொசுக்களா
காடுகளா அல்லது கழித்து கட்டபபடும் அணுமின் நிலையங்களா
மழை வந்து நாளாச்சா வருசமாச்சா
மலைகளா அல்லது மரங்கள் சிரைத்த மொட்டைத்தலைகளா
வானமா அல்லது அவை கரும்புகை சுவாசிக்கும் பீரங்கி மூக்குகளா
தண்ணீர் பாக்கெட்டிலா பக்கெட்டிலா எதுவோ? தண்ணீர் தானா?
உறங்க ஊமையான ஒரு நாள் கிடைக்கிறதா
நெல் செடியிலா மரத்திலா? கேள்வி தோன்றுகிறதா?
ஆறுகளில் படகுப்பயணமா பாதப்பயணமா?
உங்களின் ஒருமூச்சு பயணம் நிறுத்தங்களை கொண்டதா?
இந்த கேள்விகளை நானும் நீங்களும் கேட்டு பெரும் பதிலை பொறுத்து
நம் வாழ்க்கை முறையை இயற்கையோடு தொடங்குவதா வேண்டாமா
என்று முடிவு செய்ய வேண்டும்.
இயற்கையை கொண்டாடுவோம்
சுற்றுபுறத்தை காப்போம்
என்னால் முடிந்த அளவு இவ்வுலகுக்கு
கெடுதல் இல்லாத உயிராய் இருப்பேன்
என்று உறுதி கொள்வோம்.
அதற்கு இயற்கையை புரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment