Friday, December 21, 2012

தமிழினத்தந்தையின் இறுதி மணித்துளிகள் 

நன்றி: ஆனந்த விகடன்


 
வேப்பேரியில்  காலை 9 மணி. ஓர் ஓரத்தில் பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 9595 எண் உள்ள வேன் நிற்கிறது. வேனுக்கு மேல் சக்கர நாற்காலி மடங்கிக்கிடக்கிறது. ஆகஸ்ட் மாதம் பெரியாருக்கு இந்த வேன் வழங்கப்பட்டது. வேனின் ஒரு கதவை மேடைபோல மாற்றி, பொதுக் கூட்டங்களில் அதிலேயே அமர்ந்து அவர் பேச வசதி செய்யப்பட்டு இருந்தது. 19-ம் தேதி தி.நகரில் கடைசியாக நடந்த பொதுக் கூட்டத்தில், இந்த வேனில் அமர்ந்துதான் பேசினார் பெரியார்.பேச்சின் இடையில் திடீரென்று அவர், ''ஐயோ... அம்மா...'' என்று உரத்த குரலில் வலி தாங்காமல் வேதனையுடன் கூவினார். கூட்டமே திடுக்கிட்டு ''என்ன... என்ன?'' என்று வேனை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், பிறகு பெரியார் எப்படியோ சமாளித்துக்கொண்டு நீண்ட நேரம் பேசினார்.
 சிந்தாதிரிப்பேட்டையிலும் பெரியாருக்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கே சந்தடி அதிகம் என்று அவர் தங்குவதற்காகப் பெரியார் திடலிலேயே பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டது.பெரியார் அந்த பங்களாவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார். ''இவ்வளவு பெரிய பங்களா எனக்கு எதற்கு?'' என்று அங்கே தங்க மறுத்துவிட்டார். பிறகு, விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியே இல்லமாயிற்று. பெரியார் தங்கியிருந்த இடம் எளிமையாகக் காட்சி தருகிறது. காலியாக உள்ள பெரியார் கட்டிலின் எதிரே, சோகமே உருவாக மணியம்மை அமர்ந்திருந்தார்.
 
பொதுக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் இரவு 7-30 மணிக்குப் படுக்கச் சென்றுவிடுவார் பெரியார். காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவார். கொதிக்கக் கொதிக்க ஒரு கப் காபி சாப்பிடுவார். பிறகு, சற்று நேரம் கழித்து இரண்டு இட்லி, மலைப்பழம் சாப்பிடுவார். பழங்களில் மலைப்பழம்தான் பெரியாருக்குப் பிடித்தது. பிற்பகல் 12 மணிக்குக் குறைவான சோறுடன் மட்டன் சாப்பிடுவார். சாதம் குழைவாக இருக்க வேண்டும். மட்டன் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு மூன்று கறி வகைகள் கூடாது. ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும்.
 
சரியாக 2.30 மணிக்கு 'அம்மா’ என்று மணியம்மைக்குக் குரல் கொடுப்பார். காபி வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு காபிதான். இடையே வேறு எதுவும் சாப்பிட மாட்டார். ஆனால், கழகத் தொண்டர்கள் அன்புடன் கொடுப்பதை மட்டும் சாப்பிடுவது உண்டு. ஒரு வேளைதான் சாப்பாடு. உணவுக்குப் பிறகு, கட்டித் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவார். இனிப்புகளை பெரியார் நிறையச் சாப்பிடுவார். இறுதி வரை அவருக்கு சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ வரவில்லை. ஹெர்னியா தொல்லை மட்டும் பல ஆண்டுகளாக இருந்தது.
பெரியாருக்குப் பற்கள் கிடையாது. ஆனால், அவர் பேசுவதையோ, சாப்பிடுவதையோ பார்த்தால் அது தெரியாது. ஈறு பலமாக இருந்தது. முறுக்குகளைக்கூட பெரியார் மென்று சாப்பிடுவார்.
 
கடைசி நாட்கள்...
டிசம்பர் 21-ம் தேதி வட ஆற்காடு பயணம் தொடங்க இருந்தார் பெரியார். ஆனால், 20-ம் தேதி பிற்பகல், ஹெர்னியா தொல்லையால் வலி கண்டு சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அச்சமே இல்லாத பெரியாருக்கு, ஊசி குத்திக் கொள்வது என்றால் மட்டும் குழந்தைகளைப் போலப் பயம். ''பார்த்துக் குத்துங்க...'' என்று சொல்வார். சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவுடன், அந்த அறையில் இதற்கு முன்பு யார் இருந்தார்கள், அந்த நபருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்றெல்லாம் விசாரித்துஇருக்கிறார். ஏனோ, வேலூருக்குச் சென்று சிகிச்சை பெறவே அவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே, 21-ம் தேதி பிற்பகல் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.
 
வேலூரில் சேர்த்தவுடன் ஓர் இன்ஜெக்ஷன் போட்டிருக்கிறார் டாக்டர் பட். உணவு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அன்று இரவு நன்றா கத் தூங்கியிருக்கிறார். மறுநாள் 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்து, பேப்பர்களைப் படித்திருக்கிறார். ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். தூங்குவதற்காகத் தூக்க மருந்து கலந்த ஊசி போடப்பட்டது.
 
பிற்பகல் 2 மணிக்கு 'வீரமணி’ என்று அழைத்து, வயிற்றில் வலி மிகுதியாக இருப்பதாக டாக்டரிடம் சொல்லும்படி கூறி இருக்கிறார். வீரமணி டாக்டரை அழைத்து வந்தார். வாயு வினால் வலி இருக்கலாம் என்றும், எனிமா கொடுத்து வயிற்றைக் காலிசெய்தால் சரியாகும் என்றும் கூறிய டாக்டர், எனிமா கொடுத்தார். வயிறு சுத்தமான பிறகு, பெரியாருக்கு வலி குறைந்திருக்கிறது. அன்று இரவு 8 மணி வரை சரியாக இருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பெரியாருக்குத் திடீரென்று மூச்சு வாங்கியது. தூங்கும்போது வாய் மூலம் சுவாசிக்கும் பழக்கம் உள்ளவர் பெரியார். அதனால் தொண்டைச் சளி கட்டிக்கொண்டு சிரமப்பட்டு இருக்கிறார். டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்தவுடன் சற்று சரியாயிற்று.
 
23-ம் தேதி தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் தூக்க நிலையில் இருந்திருக்கிறார். ஆனால், உணர்வு இழக்கவில்லை. மணியம்மை குளுகோஸ் கொடுத்தபோது, 'என்ன அய்யா, வாயில ஊத்தணுமா? நீங்களே கையில எப்பவும் மாதிரி வாங்கிச் சாப்பிடுங்களேன்’ என்று கூறியபோது, பெரியார் கையில் வாங்கி குளுகோஸ் குடித்தார். புரை ஏறியிருக்கிறது. தலையில் தட்டிக்கொண்டார். 'எதையாவது சாப்பிட்டால் தாடியை அழுத்தமாகத் துடைத்துக்கொள்வதுபோல அப்போதும் துடைத்துக்கொண்டார்’ என்றார் வீரமணி.
23-ம் தேதி இரவு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பல முறை பேசி கெஞ்சிக் கெஞ்சி ஆக்ஸிஜன் டியூப்பை பெரியாரின் மூக்கில் வைத்தார் டாக்டர் ஜான்சன். ஆனால், பெரியார் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார். கடைசியில் முகமூடி போன்று இருக்கும் ஆக்ஸிஜன் குழாயைப் பொருத்தினார்கள்.
 
24-ம் தேதி துயரம் மிக்க அந்தப் பொழுது விடிந்தது. 'பல்ஸ்’ குறைந்து டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள். காலை 7-10 மணிக்கு மசாஜ் செய்து, இதயத்தை இயங்கச் செய்ய முயன்றார்கள். நேரிடையாக இதயத்துக்கு ஊசி போட்டார்கள். 7.22-க்கு பெரியாரின் உயிர் மெதுவாகப் பிரிந்தது.
 
''யார் இறந்தாலும் அழக் கூடாது என்பது அய்யாவின் கொள்கை. உயிர் பிரிந்த அய்யாவின் சடலத்தை அம்மா (மணியம்மை) அவர்கள் அப்படியே சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். பின்னர், 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் அய்யா அவர்கள் அவருக்கு அளித்த புடவையை எடுத்துவந்து, அவர் கால் மீது வைத்துவிட்டு அப்படியே நின்றார். அவர்கள் அப்படி நிற்பதைக் கண்டு சம்பத் உட்பட நாங்களும் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றோம். அங்கே பேரமைதி நிலவியது. பிறகு, அந்தப் புடைவையைக் காலடியில் இருந்து எடுத்து உடனே உடுத்திக்கொண்டார். எல்லோ ரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, பெரியாருடைய கறுப்புச் சட்டையையும் கைலி யையும் கொண்டுவரச் செய்து, அவற்றை அய்யா அவர்களுக்கு அணிவித்தார். பெரியார் உடல் அருகே அசையாமல் அமர்ந்திருந்த அம்மா, வேனில் உடலை ஏற்றி வேலூரைவிட்டுப் புறப்பட்டவுடன் துக்கம் தாளாமல் கணவரின் காலடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு கதறித் தீர்த்துவிட்டார்.''
 
உணர்ச்சிமிக்க இந்த நிகழ்ச்சியைக் கண்கள் கலங்கக் கூறினார் விடுதலை வீரமணி

Friday, December 14, 2012

இ-மெயில் தமிழன்!
மெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்...
 
இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று.
http://www.vikatan.com/av/2012/12/zjuyja/images/avp84b.JPG
தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை.இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில்.
'டைம்பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல், 'வாஷிங்டன் போஸ்ட், 'நியூயார்க் டைம்ஸ்எனப் பிரபல மீடியாக்கள்'இமெயிலைக் கண்டுபிடித்தவர்எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்தி பெற்றதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (Smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இமெயிலையும் மதிப்பிட வேண்டும்!'' என்று வர்ணிக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் விஷ§வலைசேஷன் (Systems Visualization) மற்றும் கம்பேரடிவ் மீடியா ஸ்டடீஸ்(Comparative Media Studies) ஆகிய இரு துறைகளில் பேராசிரியராக இருக்கும் சிவா அய்யாதுரை,நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வுசெய்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்... அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை).
 
ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய மிக நீண்ட 'ஸ்கைப்உரையாடல் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ''ஹாய் பாரதி... வணக்கம்'' என்று அன்புத் தமிழுடன் வந்து அமர்கிற சிவா அய்யாதுரைக்கு 48 வயது.
 
''நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கு இருந்தீர்கள்?''
''ஹா...ஹா... என் அப்பா அய்யாதுரைக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர். அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பரமன்குறிச்சி. இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே எனக்குப் படிப்பின் மீது மிகப் பெரிய ஆர்வம் உண்டாகியது.மும்பையில் வசித்த எங்கள் குடும்பம், என்னை மேற்கொண்டு நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதைப் போன்ற... ஒரு சம்மர் கிளாஸில் 'ஃபோர்ட்ரான் 4 ­(FORTRAN IV) என்ற புரொகிராமிங் மொழியைக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்ததால், பள்ளியைவிட்டு நிற்கப்போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரியில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துகொண்டு இருந்தார். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணினி வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் முயற்சி யில் இருந்தார். அவர் என்னைத் தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். சவால் நிறைந்த அந்தப் பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.
 
அப்போது அந்த மருத்துவ மனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 'மெமோரண்டம்எழுதுவார்கள். நோயாளிபற்றிய விவரம், மருத்துவர்பற்றிய விவரம், டூ, ஃப்ரம்,சப்ஜெக்ட் எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோ ரண்டத்தை அங்கு இருக்கும் தபால் பெட்டி மூலம் மருத்துவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே மின்மயப்படுத்த வேண்டும்.அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கணினியில் இருந் தும், மற்றொரு கணினிக்கு எலெக்ட்ரானிக் வடிவத் தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.
 
இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இமெயில் சிஸ்டம். 'ஃபோர்ட்ரான் 4மொழியில் 50 ஆயிரம் வரிகள்கொண்ட அந்த புரொகிராமை எழுதியபோது எனக்கு வயது14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு இமெயில் (email) என்று பெயரிட்டேன். எலெக்ட்ரோ மெயில் என்பதன் சுருக்கம் அது. 'ஃபோர்ட்ரான் 4மொழியில் ஒரு புரொகிராமில் அதிகபட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன் படுத்த முடியும் என்பதாலும்,இமெயில் என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்தப் பெயரை வைத்தேன்.அகராதியில் அதற்கு முன்பு இமெயில் என்ற வார்த்தையே கிடையாது!''
 
''ஆனால்,டேவிட் க்ராக்கர், ரே டாமில்சன் ஆகியோர் பெயர்கள்தான் இமெயில் கண்டுபிடித்தவர்கள்பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றனவே?''
''அதெல்லாம் அப்போது. நான்தான் இ மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.1978-ம் ஆண்டு உலகின் முதல் இமெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரொகிராமிங் கோடு, இப்போதும் ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடிச் சாட்சியாக இருக்கிறார்.
டேவிட் க்ராக்கர் கண்டுபிடித்தது 'டெக்ஸ்ட் மெசேஜ்அனுப்பும் தொழில்நுட்பத்தை.ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா?அதைப் போல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதைக் கண்டறிந்தார். அதை இமெயில் என்று சொல்ல முடியாது. அதோடு ஒப்பிடுவதானால், நாம் தந்தி அனுப்புவதைத்தான் இமெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். மாறாக, இமெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராஃப்ட்ஸ், டு, ஃப்ரம், சப்ஜெக்ட், டேட்,பாடி, சிசி, பிசிசி, கம்போஸ், அட்டாச்மென்ட்ஸ், க்ரூப்ஸ், உள்ளிட்ட 86 வகையான இ மெயில் புரொகிராம்களை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இமெயில் சிஸ்டம்.ரே டாமில்சன் இமெயிலில் இன்று பயன்படுத்தும் '@குறியீட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை.''
 
''ஆனால்,இமெயிலைக் கண்டறிந்தவர் நீங்கள்தான் என்பது ஏன் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை?''
''அமெரிக்காவில் பலருக்குத் தெரியும். ஒருவேளை தமிழ்நாட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். 1981-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்ற இமெயிலுக்கான 'காப்பிரைட்ஸ்இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கு கண்டுபிடிப்பு என்பது வேலையின் ஒரு பகுதி. ஆனால், எனது கண்டுபிடிப்பை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சர்ச்சை ஏற்படுத்தக் காரணம், புலம் பெயர்ந்த; கறுப்பு நிறத் தோல் உடைய; 14 வயதுச் சிறுவன் ஒருவன்... இமெயிலைக் கண்டுபிடித்தான் என்பதை இவர்கள் நம்ப மறுப்பது தான். 50 ஆயிரம் வரிகளைக்கொண்ட ஒரிஜினல் புரொகிராமிங் கோட் வெள்ளைத் தோல் உடைய ஒருவரிடம் இருந்தால், இந்தச் சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை!''
 
''இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?''
''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்டி. ஆய்வில் ஈடுபட்டு இருந்தபோது, கிளின்டன் அமெரிக்க அதிபர். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இமெயில்கள் வந்து குவியும். அதை நிர்வகிக்கும் வேலை சிக்கலானதாக இருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகைவாரியாகப் பகுத்துப் பிரிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை.147 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் கண்டறிந்த 'எக்கோ மெயில் (Echo Mail) என்ற தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. பிறகு, இந்த 'எக்கோ மெயிலைஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். இன்று 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம், உலகின் மிக முக்கியமான நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகக்கொண்டு இருக்கிறது. அதுபோக, வேறு சில நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்கத் தபால் துறையில் எனது புதிய இமெயிலிங் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது லாபகரமாக மாறியது. அப்போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைக் கொண்டாடின.ஆனால், எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். அதே சமயம், அங்கு எனக்குக் கிடைத்தவையோ கசப்பான அனுபவங்களே...'' 
 
''என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டீர்கள் என்று அறிகிறேன்...''
''ஆம்,உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) துறையில் என்னைக் கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன் சிங். சில காலம் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர்.நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழலே அங்கு இல்லை.இதைப் பற்றி 'கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரம் வேண்டும்என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4,000 விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது பெரிய விவாதமானது.உடனே, இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி, திடீரென ஒரு நாள் என் வீடு முடக்கப்பட்டது. நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறுஎன்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கு இருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது!''
 
''உங்கள் பேச்சை வைத்துக் கேட்கிறேன்... நீங்கள் சயின்டிஸ்ட்டா, கம்யூனிஸ்ட்டா?''
''எம்.ஐ.டி-யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.இலங்கையில் நம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த சமயத்தில், அப்போது இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவை எதிர்த்து இங்கு போராடியது உட்பட. 'த ஸ்டூடன்ட்என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். அதனால், நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட். இன்று தொழில்நுட்பத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும் செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராகக் கைகோத்துக்கொள்கின்றன. சமீபத்தில், எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தடைசெய்து ஒடுக்க முயன்றதே இதற்குச் சிறந்த உதாரணம்!''
 
''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?''
''எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும். அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக மாறி மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதைக் கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு. இன்றைய கார்ப்பரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலை யும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோ ருக்கும் கைவராத கலை என்பதைப் போலச் சித்திரிக்கிறது.ஆனால், அப்படி அல்ல. உலகத்தில் ஆயிரமாயிரம் சாம்ஸ்கிகள், சிவாக்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி சொல்லும் வாசகத்தையே இங்கும் சொல்கிறேன்: புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்!''

Sunday, November 25, 2012

 70 கோடி செங்கல்லில் ஜனாதிபதி மாளிகை ! -
 
 
இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை’யாகத்தான் இது உருவாக்கப்பட்டது.
 
தற்போது ஜனாதி பதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளிகை, இந்தியா சுதந்திரம் பெற்ற போது `அரசு இல்லம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. நாடு 1950-ல் குடியரசானபோது `ராஷ்டிரபதி பவன்’என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.

புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, பழைய ரெய்சினா, மால்ச்சா கிராமங்களில் இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நான்காண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர், கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில், 1929-ம் ஆண்டு, மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).
கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.
மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.
மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.
இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.
மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும், 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.
முதலில் குடியேறியவர்கள் ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர்
ஜெனரலான ராஜாஜி, ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு வசித்தார்.
 
விருந்தினர்கள், பணியாளர்கள் தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி, இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர் விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும், அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே, மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள்
தங்குகிறார்கள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 
மொகலாயத் தோட்டம் ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன்’ எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மலர்களுமாய் 342 ஏக்கர்களுக்குப் பரந்திருக்கும் மொகலாயத் தோட்டம், ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது.
 
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட் டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத்தோட்டம், உலக முழுவதி லும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது.

Friday, November 23, 2012

தர்மபுரிக் கலவரமே கடைசியாக இருக்கட்டும்..!
 
நன்றி: ஆனந்த விகடன். மற்றும் தமிழருவி மணியன் 
 
'நான் ஓர் இந்துவாகப் பிறந்தது என்னை மீறிய செயல். அதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அப்போது என் கைகளுக்கு இல்லை. இந்துவாகப் பிறந்ததால், ஏராளமான இன்னல்​களையும் இழிவுகளையும் அனுபவித்து ​விட் டேன். இனி நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்பது மட்டும் சர்வநிச்சயம்’ என்று ஒருமுறை தன் இதயத்தின் சுமையை இறக்கி வைத்தார் அண்ணல் அம்பேத்​கர். 'சமத்துவமின்மையே! உன் பெயர்தான் இந்து மதமா?’ என்று அவர் கேட்ட கேள்வி, இன்று பல கோடி நெஞ்சங்களில் பாறையாய்க் கனக்கிறது.
 
'நாங்கள் போராடுவது பணத்​துக்கும் அதிகாரத்துக்கும் அல்ல. எங்கள் விடுதலைக்கும், வாழ்வுரிமையை மீட்பதற்கும்தான் போராடுகிறோம்’ என்று வேதனையோடு வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். 'இந்திய அரசமைப்புச் சட்டப்படி, தீண்டாமை தடுக்கப்பட்டு விட்டது. ஆனால், எம் மக்கள் மோசமாக நடத்தப்படுவதும், அவமானத்துக்கு உள்ளாவதும், அநியாயமாய்த் தாக்கப்படுவதும், அவர்களது வீடுகள் எரிக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வன்முறைக்குப் பலியாவதும் இன்றளவும் நின்று விடவில்லை’ என, அன்று அம்பேத்கர் சொன்ன​தற்கு, கீழ்வெண்மணியில் இருந்து தர்மபுரிக் கலவரம் வரை கட்டியம் கூறுகின்றன.
பொறுக்க முடியாத வலி
யும், சகிக்க முடியாத இழிவும் அம்பேத்கரை மதம் மாறச்செய்தன. அவருடன் சேர்ந்து 1956-ல் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தலித்துகள் புத்த மதத்தைத் தழுவினர். ஆனாலும், இன்றுவரை கோடிக்கணக்கான தலித்துகள் இந்துக்களாகவே நீடிக்கின்றனர். உலகின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் யூதர்கள் தங்கள் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தனித்திருக்கவே விரும்பி அழிவுக்கு ஆளாயினர். ஆனால், தலித் பெருமக்களோ இந்துக்களுடன் இணைந்து வாழ விரும்பியே இழிவுக்கு ஆட்பட்ட​னர்.
 
நதிமூலம், ரிஷிமூலம் போன்றே இந்துக்களின் சாதி மூலமும் உயர்ந்ததன்று. இந்து சமூகத்தின் சாதிப் பாகுபாடு ஓர் இழிந்த சாபம். பண்டைய பாரதத்தில் தொழில் வழிபட்ட வருணப் பாகுபாடு இணக்கமான சமூகக் கட்டுமானத்துக்கு அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னாளில் உயர் சாதிகளின் சூழ்ச்சியால் வருணப் பாகுபாட்டில் வந்து சேர்ந்த சாதிப் பிரிவு​கள், சமத்துவத்துக்கும் சகோதரத்​துவத்துக்கும் கல்லறை சமைத்து விட்டன. புத்தர் காலம் தொட்டு இன்றுவரை 2,500 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிப்பாகுபாடு சமூக நீதிக்கு எதிராகவே இயங்கி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட சாதி 'அகமணமுறை’ மூலமாகவே தன் அடையாளத்தை இழந்து விடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. சாதிக்குள்ளேயே நிகழும் மண உறவுகளில்தான் அதனுடைய 'சுத்தத்தன்மை’ பராமரிக்கப்படுகிறது. வேறொரு சாதியின் 'ரத்தக் கலப்பு’ குலத் தூய்மையைக் குலைத்துவிடக் கூடும் என்று ஒவ்வொரு சாதியும் அச்சப்படுகிறது. காதல் திருமணங்கள் மூலமாகவே சாதிக் கட்டுமானம் சரிந்து விடும் என்ற உண்மை, சாதி வெறியர்களை உறங்கவிடாமல் அலைக்கழிக்கிறது. இந்த அச்சமும் அலைக்கழிப்பும்தான் தர்மபுரி சாதிக் கலவரத்தின் அடித்தளம்.
 
இரண்டு வேறுபட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் அன்பால் இணைந்து, காதலில் கலந்து, கருத்தொரு​மித்துக் கணவன் மனைவியாய் வாழத் தொடங்கிய பாவத்துக்கு, நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி காலனிகள் தீக்கிரையாயின. குடிசைகள் கருகிச் சாம்பல் மேடாய் சரிந்து விட்டன. வியர்வை சிந்தி சேமித்த பொருட்கள் பறிபோய்விட்டன. பெண்ணின் தந்தையின் தற்கொலையில் 'சாதித்தூய்மை’ களங்கப்படாமல் தப்பி விட்டது. திட்ட​மிட்ட ஊழித்தாண்டவம் சபிக்கப்பட்ட தலித்து​களின் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து விட்டது.
 
தொகுப்பு வீடுகளில் ஒடுங்கிக் கிடக்க வேண்டிய தலித்துகள், தனிவீடுகள் கட்டி வாழத்தகுமோ? செருப்பின்றி நடக்க வேண்டிய சாதி, மோட்டார் சைக்கிளில் சவாரி வருவது சகிக்கக்கூடியதோ? இரும்பு அணிகலன்களில் அழகு பார்க்க வேண்டிய பெண்மை, பொன்னால் அலங்கரித்துக்கொள்வதைப் பொறுக்கலாகுமோ? கூரையின் கீழே குடும்பம் நடத்தவேண்டிய பஞ்சமர் கான்கிரீட் கட்டடங்களில் கால் பதிக்கலாகுமோ? சாதி இந்துக்கள் என்று பட்டயம் கட்டிக்கொண்டவர்களின் பொறாமைத் தீயில் பொசுங்கி விட்டன மூன்று காலனிகள்.
 
மழைக்கால வேதனையில் மயில் நடுங்குவதாக நினைத்துப் போர்வையால் மூடிய பேகனும், பற்றிப் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தரையில் வாடிக்கிடந்த முல்லைக் கொடிக்குத் தேர் தந்து நடந்து சென்ற பாரியும், மலரில் அமர்ந்து உறவில் மயங்கிய வண்டுகள் மருண்டுவிடக் கூடாதென்று ஓடும் தேரின் மணிநா ஓசையை நிறுத்த முயன்ற சங்க இலக்கியக் காதலனும் வாழ்ந்து மறைந்த தமிழ​கத்தில், தலித்துகளுக்கு எதிராக தர்மபுரிக் கலவரம் நிகழ்த்தப்பட்டது நியாயந்தானா?
 
'ஜீவ ஒழுக்கமாவது ஆண் மக்கள், பெண் மக்கள் முதலிய யாவரிடத்தும் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது’ என்று சமூக நீதிக்குப் பாதை அமைத்துப் பயணித்த வள்ளல் பெருமான், வாடிய பயிரைக் கண்டும் வாடினாரே, அந்த வாழ்க்கை முறையை வளர்த்தெடுக்காத சாதிகள் இருந்தென்ன? இல்லாமற்போயென்ன?
 
'தாழ்த்தப்பட்டவர்’ என்று சொன்னாலே, தாழ்த்தியவர் யார்? என்ற கேள்வி எழுகிறதே! 'ஒடுக்கப்பட்டவர்’ என்று உரைக்கும்போதே, ஒடுக்கியவர் யார்? என்ற வினா விளைவது இயல்புதானே! இந்தக் குலத்தில் பிறந்து இவ்வளவு இழிவுகளைச் சந்திக்க வேண்டும் என்று இறை வனிடம் வரம் வாங்கியா இங்கு வந்தார்கள்?
 
கீழ்வெண்மணியில் விவசாயக் கூலிகள் ஊதிய உயர்வு கேட்டதற்காக 1969-ல் 44 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்டதற்கு யார் காரணம்? தலித் என்பதற்காக மேலவளவு ஊராட்சித் தலைவர் 1997-ல் படுகொலை செய்யப்பட்டதற்கும் எது வெறியை வளர்த்தது? பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளில் 10 ஆண்டுகள் தேர்தலே நடத்தப்படாமல் ஜனநாயக நடைமுறைகள் ஏளனத்துக்கு உள்ளானது எந்த மதத்தின் போத னையால்? கொடியன்குளம், சங்கரலிங்கபுரம், உத்தப்புரம், நாலுமூலைக்கிணறு, மாஞ்சோலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடுகளுக்கு மதமா துணை போனது? கவுண்டம்பட்டியில் ஒரு தலித் வாயில் சிறுநீர் ஊற்றியதும், திண்ணியம் கிராமத்தில் இரண்டு தலித்துகளின் வாயில் மனித மலம் திணித்ததும் மதபோதகர்களின் தூண்டுதலாலா? சில சாதி வெறியர்களின் தவறுகளுக்கும் ஆதாய அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிக்கும் சமயம் என்ன செய்யும்?
 
மதுரை வைத்தியநாத அய்யர் தலைமையில் மீனாட்சி கோயிலில் ஜூலை 8, 1939 அன்று ஆலயப் பிரவேசம் வெற்றிகரமாக நடந்தது. ஆனால், 75 ஆண்டுகளுக்குப் பிறகும் சில ஆலயங்களில் தலித்துகளின் பிரவேசம் சாதி இந்துக்களால் தடுக்கப்படுவதில் யாருக்குச் சம்மதம்? தலித்துகள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று, கடவுள் கனவில் தரிசனம் தந்து திருவாய் மலர்ந்தாரா? 'இறைவனைச் சிந்திக்கும் ஒருவனைக்கூடத் துன்பம் தாக்குமெனில், அத்தகைய இறைவனால் என்ன பயன்? அந்தக் கடவுளைப் பசிபிக் பெருங்கடலில் வீசி எறிந்து விடுங்கள்’ என்று, சான்பிரான்சிஸ்கோவில் விவே கானந்தர் முழங்கியதை நம் தலித்துகள் முதலில் யோசிக்கட்டும்.
 
சுடுகாட்டில்கூடச் சாதி சமத்துவம் இல்லாத தேசம், நரகத்தைவிட மோசமானது. தலித்துகளின் பிணங்களைப் பொதுச்சுடுகாடுகளில் எரிக்கவும், புதைக்கவும் அனுமதி இல்லையெனில், சுதந்திர இந்தியாவில் அவர்கள் அடைந்த வாழ்வியல் உரிமைகள்தான் எவை? தீண்டாமைச் சுவர்களும், தனி மயானப் பாதையும், இரட்டைக் குவளையும் இன்றும் தொடர்ந்தால், நாகரிக சமுதாயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் அந்த தலித் மக்களுக்கு ஆதரவாகக் கரம் நீட்ட வேண்டாமா? தலித் பிள்ளைகள் படிக்கும் அரசுப்பள்ளிகளில் சாதி இந்துக்களின் குழந்தைகளைச் சேர்க்க மறுப்பதும், தலித் பெண்கள் சமைக்கும் சத்துணவு மையங்களில் சிறுவர்களைச் சாப்பிடாமல் தடுப்பதும் தமிழ்ப் பண்பாடா?
 
பஞ்சமி நிலம் பறிப்பு, பராமரிப்பின்றிப் பழுதடைந்து கிடக்கும் தொகுப்பு வீடுகள், சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு, மின் பற்றாக்குறை, குழி விழுந்த சாலைகள், தரமற்ற பள்ளிக் கல்வி, மருந்து இல்லாத மருத்துவமனைகள், மோசமான கழிப்​பிடங்கள் என்று தலித்துகள் வாழ்க்கை வாகனம் புறக்கணிப்புப் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கிறது. இந்திய சுதந்திரத்தின் பயன் இவர்களுக்கு இல்லையா? இந்த ஆதித்தமிழர்களுக்குத் தேவை நம் ஆறுதல் வார்த்தைகள் அன்று; படிநிலைச் சமூகத்தின் இறுக்கமான பிடியிலிருந்து விடுதலையும், பூரணமான வாழ்க்கை உரிமைகளும்தான் அவர்களின் அவசரத் தேவைகள்.
 
இந்து மதம் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த​போது அரங்கேற்றப்பட்ட தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. ஆனால், அந்தக் கொடுமைகள் இப்போது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்படுவது இல்லை. பார்ப்பனர் தனித் தீவாக ஒதுங்கி விட்டனர். இன்று 'சாதி இந்துக்கள்’ என்ற பட்டயத்தைச் சுமப்பவர்கள் பார்ப்பனர் அல்லாதோரே! தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது இல்லை. எந்தப் பார்ப்பனரும் 'தீண்டாமைச் சுவர்’ எழுப்புவது இல்லை. எல்லா இழிவுகளையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள் 'பார்ப்பன ஆதிக்கம்’ என்ற பழைய பஞ்சாங் கத்தையே புரட்டுகின்றனர். பிராமணர் அல்லாதார் இயக்கங்களால் சாதி ஆதிக்கம் வேறு வடிவங்களில் வளர்ந்திருக்கின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. தமிழகத்தில் இன்று 86 வகைகளில் தீண்டாமை வலம் வருவதாக ஓர் ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
 
'இந்துக்களின் வரலாற்றில் ஏதோவொரு காலநிலை​யில் புரோகித வர்க்கம் மற்ற திரட்சியில் இருந்து தன்னைத்தானே சமூக வகையில் விலக்கிக் கொண்டது. கதவடைப்புக் கருத்தின் (closed door policy) வாயிலாகத் தன்னைத்தானே ஒரு சாதியாக அது உருவாக்கிக் கொண்டது. சமுதாய உழைப்புப் பிரிவினை விதிப்படி ஏனைய வர்க்கங்கள் சில மிகப் பெரியனவாகவும், மற்றவை மிகச் சிறியனவாகவும் சிதறுண்டு போயின. இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமுமே ஆகும்’ என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதை அனைவரும் உணர்ந்தால் நல்லது.
 
சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த தமிழினம் இன்று இனவுணர்வையும், மொழிப் பற்றையும் முற்றாகப் புறந்தள்ளி விட்டு, மலிவான கட்சிஅரசிய​லிலும், சமூக நீதிக்குத் தடைச்சுவராக விளங்கும் சாதி உணர்விலும் சங்கமித்து விட்டதுதான் மிக மோசமான அவலம். சாதிகளுக்கு இடையே பகையை வளர்ப்பதை விடவும் பண்பாடற்ற, பாவகரமான செயல் வேறொன்றும் இல்லை என்பதை எல்லாச் சாதித் தலைவர்களும் முதலில் உணர வேண்டும். ஒவ்வொரு சாதியையும் வாக்கு வங்கியாகத் தங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் போக்கில் இருந்து தலைவர்கள் விடுபட வேண்டும். கதியற்ற மக்களுக்குத் தொண்டு புரிவதுதான் உண்மையான சமயத்தின் சாரம் என்பதை மதவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
'என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்ற எண்ணத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்ற மகாத்மா காந்தி, 'தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்த மாட்டேன்’ என்று பிரகடனம் செய்தார். 'இந்தியாவின் உயர்சாதி மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மியின் சவம் போன்று நீங்கள் இருக்கிறீர்கள். 'நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர் வெறுத்து ஒதுக்கிய மக்களிடம்தான் இந்தியாவின் எஞ்சியுள்ள வீரிய சக்தி தரிசனம் தருகிறது. நீங்கள்தான் உண்மையில் நடமாடும் பிணங்கள்’ என்று சினத்துடன் சபித்தார் சுவாமி விவேகானந்தர்.
 
'இந்த நாட்டில் லட்சோப லட்சம் ஏழை மக்கள் பசிப்பிணிக்கும், அறியாமைக்கும் இரையான​வர்களாக இருக்கும் வரையில், அவர்​களுடைய உழைப்பின் பயனைக்கொண்டு கல்வி கற்று, அவர்களைக் கவனிக்காமல் இருக்கும் ஒவ்வொரு மனிதரையும் நான் துரோகி என்றே சொல்வேன். துன்பத்தில் ஆழ்ந்துள்ள ஏழைகளை வதைத்துப் பெற்ற பணத்தைக்கொண்டு சொகுசாக அலைந்து திரிபவர்கள் பசியில் வாடும் 20 கோடி மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டால், அவர்களை நன்றி கெட்ட பாதகர்கள் என்றே பறை சாற்றுவேன்’ என்று நெஞ்சக் கனல் தெறிக்க முழங்கினார் அந்த ஆன்மிகத் துறவி.
 
'சகல மனிதரும் சகோதரர். மனுஷ்ய வர்க்கம் ஓருயிர். இப்படியிருக்க, நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசாரச் சுவர்கள் கட்டி, நான் வேறு சாதி; அவன் வேறு சாதி. எங்கள் இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. அவனை சாதிப்பிரஷ்டம் பண்ண வேண்டும் என்பது சுத்த மடமை’ என்று எழுதி, சாதி வேற்றுமையை அகற்ற வாழ்க்கை முழுவதும் எழுத்து வேள்வி நடத்தினான் பாரதி. ஆனால், தமிழகத்தின் தலித் தலைவர்களுக்கோ இந்த காந்தியும், விவேகானந்தரும், பாரதியும் என்றால் கசக்கின்ற வேம்பு, முதலில் கசப்பது முடிவில் இனிக்கும் என்பதை அவரறியார்!
 
தமிழினமே! தர்மபுரிக் கலவரமே கடைசியாக இருக்கட்டும். தலித்துகளே ஆதித் தமிழர்கள். அவர்கள் அனைவருமே உண்மை உழைப்பாளிகள். அவர்களுடைய உழைப்பின்றி எந்த சாதி இந்துவுக்கும் உயர்வில்லை. அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் வரை நம் இனத்தின் பண்பாட்டுக்கு எந்தப் பெருமையும் இல்லை!

Thursday, October 11, 2012

இரு வியாபாரிகள்


 
ரு வியாபாரி காசுக்காக ஜென் தத்துவங்களைப் போதித் துக்கொண்டு இருந்தான். அவனி டம் ஜென் கற்க ஒரு ஏழை மது வியாபாரி வந்தான். ஜென் வியாபாரி முன்பணம் கேட்டான். அதற்கு ஏழை வியாபாரி தன்னி டம் பணம் இல்லை என்றும், அதற்குப் பதிலாக மதுவைத் தருவதாகவும் கூறினான். 'சரி, உன்னிடம் உள்ள மதுவில் பாதி யைக் கொண்டுவா' என்றான் ஜென் வியாபாரி. மது வியாபாரி யும் அவ்வண்ணமே செய்தான். மதுவை வாங்கிக்கொண்ட ஜென் வியாபாரி, நாளை முதல் வகுப்பு தொடங்கும் என்று சொன்னான். ஏழை வியாபாரி மறு நாள் பாடம் படிக்க வந்தான். ஜென் வியாபாரி அப்போது நிறைய மது அருந்தி முழு போதையில் இருந்தான். 'குருவே, ஜென் என்றால் என்ன?' என்றான் மது வியாபாரி.
 
அதற்கு குரு சொன்னான்: 'எது இருக்கிறதோ அது இல்லா மலும் எது இல்லையோ அது இருந்துகொண்டும் இல்லாதிருக் கிற நிலை மாறாமலும் மாறிக் கொண்டும் இருக்கின்றபோது மலரும் பூவின் மீதமரும் வண்டின் பறத்தல்தான் ஜென்.'
 
குருவின் போதையைப் புரிந்துகொண்ட மது வியாபாரி, 'குருவே, இதைச் சொல்வது நீங்களா, மதுவா?' என்றான்.
 
'நான் வேறு, மது வேறா?' என்றான் குரு. ஏழை வியாபாரிக்கு அக்கணமே ஞானம் பிறந்தது.
 
ஹிட்லர் ஹீரோவா?
 
பாரதி தம்பி
 
 
டந்த இரு வாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு சிறிய துணிக் கடை அகில உலகக் கவனம் ஈர்த்தது. பல ஐரோப்பிய ஊடகங்கள் அந்தக் கடையைக் கடுமையாகக் கண்டித்து எழுதின. காரணம், அந்தத் துணிக் கடையின் பெயர்... ஹிட்லர்!
 
ராஜேஷ் ஷா என்பவர் திறந்த அந்தக் கடை யூதர்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. '60 லட்சம் யூதர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று ஒழித்த அரக்கன் ஹிட்லர். அந்தப் பெயரை மாற்றுங்கள்’ என்று முறையிட்டனர். அவரோ அதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், 'எனக்கு ஹிட்லர் என்பவர் யார் என்றே தெரியாது. என் பங்குதாரரின் தாத்தா கண்டிப்பானவர் என்பதால், அவரை ஹிட்லர் என்று அழைப்பார்கள். கடைக்குப் பெயர் வைக்கும்போது அது ஞாபகம் வந்தது. பெயர் கவர்ச்சியாக இருந்ததால், ஹிட்லர் என்று வைத்தோம். இங்கு உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் யாரும் இந்தப் பெயரை எதிர்க்கவில்லை. நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? பெயரை மாற்ற முடியாது'' என்றார். இதற்கு இடையே செய்தி பரவி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் நாடுகளில் வாழும் யூதர்கள் அந்தக் கடையின் பெயரை மாற்ற வேண்டும் என்று போராடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது விவகாரம். ஆனால், ராஜேஷ் ஷாவோ, ஓசியில் உலக அளவில் விளம்பரம் கிடைப்பதாகச் சொல்லிச் சிரித்தார். அதற்கு ஏற்ப அந்தச் சின்ன கடையைத் தினமும் மீடியாக்கள் மொய்த்தன. ஒரு கட்டத்தில், யூதர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து, இஸ்ரேல் அரசு நேரடியாகத் தலையிட்டு இந்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க... உள்ளூர் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கடைக் குப் படையெடுத்ததும் வேறு வழியின்றி கடையின் பெயரை மாற்ற ஒப்புக்கொண்டு இருக் கிறார் ராஜேஷ்.

Friday, October 5, 2012

பறை இசையில் காதலும் சாத்தியம் என்கிறது புத்தர் கலைக் குழு!

''சாதி மறுப்புத் திருமணத்தைப் பண்ணு
அப்பதான் சக்கிலியனும் பாப்பாத்தியும்
ஒண்ணோட ஒண்ணு
தமிழன், தமிழன்னு பீத்துற கண்ணு
தலித்தும் தமிழன்தான்
கல்யாணம் பண்ணு!''
 
பறை இசையை எங்கும் பரப்புவதே இவர்களின் வாழ்நாள் நோக்கம். ''பறை, சாவுக்கான கலை இல்லை; அது வாழ்வுக்கான கலை. பறை, ஒரு சாதிக்கான கலை இல்லை. அது ஆதிக்கம் அறுக்க வந்த ஆதிக் கலை. ஆனால், நடைமுறை யில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே பறை இசைக்க வற்புத்தப்படுகின்றனர். ஏன், ஒரு வன்னியர், தேவர், பிள்ளைமார், செட்டியார், ஐயர், நாடார், கவுண்டர், நாயக்கர் இவர்கள் எல்லாம் பறை இசைக்கக் கூடாதா? இந்த ஆதிக் கருவி நம் அனைவருக்கும் சொந்தம். வாருங்கள், சாதி ஒழிப்பின் முதல் அடியைப் பறை முழக்கத்துடன் தொடங்கிவைப்போம்!'' - அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் மணிமாறன். 'புத்தர் கலைக் குழு’வை உருவாக்கி, ஊர் ஊராகத் தன் குழுவினருடன் பறை இசையைப் பரப்பிவருபவர். இவருடைய மனைவி மகிழினி பாடல்கள் பாட, மகன்கள் சமரன், இனியன் பறை முழக்கம் செய்ய... மொத்தக் குடும்பத்தையும் குழுவில் இணைத்துக்கொண்டு, வேடந்தாங்கலில் இருந்து எல்லாத் திசைகளுக்கும் பறக்கிறது இந்தக் குழு!

Thursday, October 4, 2012

வாசித்ததில் நேசித்தது 
 
மின்வெட்டு... நிஜப் பின்னணி!
 
சமஸ்
து 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால். தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது. இப்படி எல்லாம் நடக்குமாஎன்று தானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின் சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78. ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங் களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.
 
மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.
 
கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி யின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.
நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்?
 
புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.
 
ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக, பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளைபரப்புகின்றன.
 
இந்தக் கொடுமை எல்லாம் கொசுக்களுக்குத் தெரிகிறதா என்ன? போர்வையைப் போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினாலோ கொசு கடிக்கிறது!

காரணத்தைத் தேடுகிறது அரசு!
மின்சாரம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கும் சா.காந்தி, தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர். மின் துறைச் சீர்கேடுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துபவர்.
''அரசு மின் வாரியங்கள் - ஊழியர்களின் திறமையற்ற செயல்பாடுகள் தானே மின் துறை தனியார்மயமாக்கப்படக் காரணம்?''
''இவ்வளவு பெரிய நாட்டில் வலு வான மின்சாரக் கட்டமைப்பை உருவாக்கியது யார்... அரசு மின் வாரியங்கள்தானே? தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், 1971-ம் ஆண்டிலேயே 99 சதவிகிதக் கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசென்றுவிட்டோம். 1992-2008-க்கு உட்பட்ட 16 ஆண்டுகள் மின்வெட்டே இல்லாத மாநிலம் இது. ஆனால், 1989-க்குப் பின் பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதையுமே அரசு கொண்டுவரவில்லை. தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுக் காரணத்தைத் தேடுகிறது அரசு!''

''அப்படி என்றால் மின் வாரியங்களின் நஷ்டத்துக்கு என்னதான் காரணம்?''
''அரசின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம். பத்து ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி மூன்று ரூபாய்க்குக் கொடுக்க வேண்டும் என்றால், நஷ்டம் வராமல் என்ன செய்யும்? முதலில் இது லாப - நஷ்டக் கணக்கு பார்க்கும் வணிகத் துறை இல்லை. உலகம் முழுவதும் மக்கள் நல அரசுகள் மின்சாரத்தைச் சேவைத் துறையாகத்தான் வைத்திருக்கின்றன!''

''நவீன உலகின் உயிர்நாடியான மின் துறையை அரசு தனியார்மயமாக்க விரும்புகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''
''தனியார்மயத்தின் வருகைக்குப் பிறகுதானே 1.76 லட்சம் கோடி ஊழல், 1.86 லட்சம் கோடி ஊழல்களை எல்லாம் பார்க்கிறோம்? தனியார்மயம் எங்கு புகுத்தப்படுகிறதோ, அங்கே ஊழல் திளைக்கும். மின்சாரம் என்பது காசு கொழிக்கும் வளம்!''

Thursday, September 27, 2012

மதராசி வக்கீல் !
 
களத்தில் இறங்கி மக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு சமூகப் போராளியின் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் ஒருபோதும் 'நான்’ என்பது துருத்திக்கொண்டு நிற்காது. எந்தச் சூழலிலும் அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவது இல்லை. 68 வயதாகும் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அப்படி ஓர் அற்புதம்!
 
மணிக்கணக்காகப் பேசினாலும் உரையாட லில் ஓர் இடத்தில்கூட 'நான்’ என்று ஒரு தடவைகூட உச்சரிக்க மாட்டார். திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் கடந்த 45 ஆண்டுகளாக ரத்தினம் ஆற்றி வரும் களப் பணிகள்... ஆர்வம் உள்ள எல்லோருக்கும் அரிச்சுவடி. மேலவளவு படுகொலை, அத்தியூர் விஜயா, மனித மலத்தை வாயில் திணித்த திண்ணியம் வன்கொடுமை... இப்படி ஒடுக்குமுறைகள் நிகழும் இடங்களில் இவரைக் காணலாம். நைந்த செருப்பு, ஒரு பழைய சூட்கேஸ்... இவைதான் ரத்தினத்தின் உடைமைகள். இவற்றோடு நீதிக்கான நீண்ட பயணத்தை நிகழ்த்தும் மனிதர்.
''விருத்தாசலத்தில் முருகேசன் என்ற தலித் பையன், கண்ணகி என்ற வன்னியர் பெண்ணைக் காதலிக்கிறார். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து, அந்தப் பெண்ணைத் தன் உறவினர் வீட்டில் தங்கவைக்கிறார். பெண்ணைக் காணவில்லை என்றதும் தேடுகின்றனர். முருகேசன் மீது சந்தேகம் வந்து, அடித்துச் சித்ரவதை செய்கிறார் கள். அவர் வலியைப் பொறுத்துக்கொண்டு, 'எனக்குத் தெரியாது’ என்கிறார். உடனே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தோண்டிவைத்திருந்த 300 அடி ஆழக் குழிக்குள் முருகேசனைக் கயிற்றில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடுகின்றனர். உயிர் பயத்தில் உண்மையைச் சொல்கிறார். உடனே, உறவினர்கள் சென்று கண்ணகியை அழைத்து வருகிறார்கள். அந்த இடைவெளியில் ஊரில் விறகுகள் அடுக்கி எரிப்பதற்கு மயானம் தயார் செய்யப்படுகிறது. பெண்ணை அழைத்து வந்தது முருகேசனின் சித்தப்பா. அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, மற்றவர்கள் சேர்ந்து முருகேசனுக்கும் கண்ணகிக்கும் வாயில் விஷத்தை ஊற்றுகின்றனர். அவர்கள் குடிக்காமல் துப்பவே, காதில் விஷத்தை ஊற்றி இருவரையும் கொல்கிறார்கள். கண்ணகியை மட்டும் வன்னியர் சுடுகாட்டில் எரித்துவிட்டு, முருகேசனை வேறு ஓர் இடத்தில்வைத்து எரிக்கிறார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த கூட்டம் கலைந்து செல்கிறது. எதுவுமே நடக்காததுபோல அடுத்த நாளில் இருந்து இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.
இது ஏதோ கற்காலத்தில் நடந்தது அல்ல.
 
சில வருடங்களுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் நடந்தது தான். முருகேசனும் கண்ணகியும் செய்த தவறு என்ன? காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் அவ்வளவு பெரிய குற்றமா? முருகேசன் இன்ஜினீயரிங் படித்தவர். கண்ணகி பி.காம். படித்தவர். ஒரு கிராமப்புற தலித் குடும்பத்துப் பையன் இன்ஜினீயரிங் வரை படிப்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. கடைசியில் சாதி வெறி முருகேசனைக் காவு வாங்கிவிட்டது. படித்துவிட்டால் சாதி இழிவு நீங்கிவிடும் என்று சொல்வது எத்தனை அபத்தமானது?'' - ரத்தினத்தின் குரலில் கோபம் தெறிக்கிறது.
 
தமிழ்நாட்டு தலித்துகள் மீதான மிக மோசமான அடக்குமுறைக்குச் சான்றாக இருக்கும் சம்பவம் மேலவளவு முருகேசன் படுகொலை. தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட மேலவளவு ஊராட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதும் வெற்றிபெற்றதும்தான் முருகேசன் செய்த ஒரே தவறு. விளைவு... உள்ளூர் ஆதிக்கச் சாதி வெறியர்களால் முருகேசனும் இன்னும் ஐந்து தலித்துகளும் பட்டப்பகலில் பேருந்தை வழி மறித்து வெட்டிக் கொல்லப்பட்டார்கள். வெட்டி எடுக்கப்பட்ட முருகேச னின் தலையை ஒரு கிலோ மீட்டர் தள்ளி வீசினார்கள். மொத்த இந்தியாவையும் அதிரவைத்த இந்தப் படுகொலையில் தலித் மக்களுக்காகக் களம் இறங்கி உச்ச நீதிமன்றம் வரையிலும் சட்டப் போராட்டம் நடத்தி 17 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தவர் ரத்தினம். தற்போது மதுரையில் இருந்து செயல்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் என்ற கிராமம்.
 
''என் அப்பா ஒரு சிறு விவசாயி. திருச்சி தேசியக் கல்லூரியில் பி.காம். படித்தேன். பாடப் புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் படிக்கப் படிக்க... மக்களுக்காக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. வீட்டில் என்னை எம்.பி.பி.எஸ். படிக்கவைக்க ஆசைப்பட்டார்கள். எனக்குச் சட்டம் படிக்க ஆசை. 'இரண்டையும் படித்துவிட்டு மக்களுக்காக உழைப்போம்’ என்ற எண்ணத்தில் சென்னைக்கு சட்டம் படிக்கப் போனேன். அங்கு சமூக அக்கறையுடன் செயல்படும் பல தோழர்கள், அமைப்புகளின் தொடர்பு கிடைத்தது. நிறையப் பேசுவோம், எழுதுவோம். 'புது நிலவு’ என ஒரு பத்திரிகை நடத்தினோம். பாக்கெட் சைஸில் 'சுட்டி’ என்ற பத்திரிகை நடத்தி, அது 22 ஆயிரம் பிரதிகள் விற்றது.
 
சட்டக் கல்லூரியில் தமிழில் பாடத்திட்டம் கொண்டுவரச் சொல்லி சட்டமன்றத்தில் போய்ப் போராடினோம். உடனே, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, 'தமிழில் பாடம் நடத்தப்படும். ஆனால், தேர்வுகள் ஆங்கிலத்தில் நடக்கும்’ என்றார். எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்?! மறுபடியும் அதற்குப் போராடி தமிழிலேயே தேர்வும் எழுதலாம் என அறிவிக்கவைத்தோம்.
குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தப்படுவதற்கு எதிராக வேலைகள் பார்த்தோம். இப்போது வள்ளுவர் கோட்டம் இருக்கும் இடம் ஒரு குடிசைப் பகுதிதான்.
 
கல்லூரி முடிந்ததும் வீட்டில் திருமணப் பேச்சு நடத்தினார்கள். 'நான் சொத்து சேர்க்கும் வக்கீல் கிடையாது. நான் இப்படித்தான் இருப்பேன். யாராவது சம்மதித்தால் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.
அதன் பிறகு, தருமபுரி பகுதியில் வால்டர் தேவாரத்தின் மோசமான மனித உரிமை மீறல் களுக்கு எதிராக வேலை பார்த்தோம். பல வழக்குகள், போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் என மாநிலம் முழுவதும் சுற்றித் திரிந்தேன். பிறகு, நண்பர்கள் அழைப்பின் பெயரில் குஜராத் துக்குச் சென்றேன். அங்கு, பரோடாவுக்கும் சூரத்துக்கும் நடுவே ப்ரூச் மாவட்டத்தில் ஒரு மலைக் கிராமத்தில் பழங்குடி மக்களிடையே
வேலை பார்த்தோம். காவல் துறையும் வனத் துறையும் சேர்ந்துகொண்டு பழங்குடி மக்கள் மீது விருப்பம்போல பொய் வழக்குகளைப் போடுவார்கள். ஒருமுறை, புதிதாகத் திருமணம் முடித்திருந்த ஒரு பழங்குடிப் பெண்ணைக் காவல் துறையினரும் வனத் துறையினரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிவிட்டார்கள். அடிமைகளைப் போல ஒடுக்கப்பட்டுஇருந்த பழங்குடி மக்களுக்கு, இதற்கு எதிராகப் போராடி நியாயம் பெறலாம் என்று நம்பிக்கை தந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தோம். அந்த வழக்கு குஜராத்திலும் டெல்லியிலும் பெரிய அளவுக்குப் பேசப்பட்டது. என்னை 'மதராசி வக்கீல்’ என்று சொன்னார்கள். ஐந்து போலீஸ்காரர்களுக்கு 10 வருடங்கள் தண்டனை வாங்கிக்கொடுத்தோம். நான்கு வருடங்கள் குஜராத்தில் இருந்துவிட்டு மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன்!'' நினைவுகள் அழைத்துச் செல்லும் திசையில், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டே போகிறார் ரத்தினம்.
''
 
நம் நாட்டின் சாதிய அமைப்பு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கிறது. எல்லா சாதிக்காரர்களும் தனக்கும் கீழே ஒரு சாதி இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகச் சாதி ஒழிந்தால்தான் அந்த இழிவு போகுமே தவிர, தனக்கு மேலே இருக்கும் சாதி ஆதிக்கத்தை மட்டும் தனியே ஒழிக்க முடியாது. இப்போது உள்ள ஒடுக்கப்பட்டோர் கட்சிகள் எல்லாமே, தலித் மக்களை வைத்து அரசியல் செய்து பிழைக்கின்றன. உண்மையில் அந்தக் கட்சிகள் சாதி இருப்பதை விரும்புகின்றன. சாதி ஒழிந்துவிட்டால், அவர்களால் பிழைக்க முடியாது. தலித்துகளின் வாயில் மனித மலத்தைத் திணித்த திண்ணியம் வழக்கில் குறைந்தபட்சத் தண்டனையோடு குற்றவாளிகள் வெளியே வந்துவிட்டனர். அதற்கு எதிரான மேல் முறையீடு செய்ய தலித் அமைப்புகளே முட்டுக்கட்டை போட்டுவிட்டன. இத்தகைய பிழைப்பு வாதக் கட்சிகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அரசியல் கிரிமினல்களை ஒழித்துக்கட்டி, மக்களின் மீது உண்மையான கரிசனம் உள்ள புதிய அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னலமற்ற அமைப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்'' என்கிற ரத்தினம், மாநிலம் முழுவதும் உள்ள சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து 'சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்’ என்ற பெயரில் செயல்படுகிறார். 'புத்தர் பாசறை’, 'சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு’ போன்றவை யும் இவர் உருவாக்கியவையே.
 
ரத்தினத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் புகழ் பெற்றவை. நீதிமன்றங்களையும் நீதிபதிகளை யும் வழக்கு நடக்கும்போதே நேருக்கு நேர் விமர்சிப்பார். ஆனாலும் இதுவரை 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு’ இவர் மீது பாய்ந்தது இல்லை.''ஏனெனில் உண்மை என் பக்கம் இருக்கிறது. என்னை 'ஒன் மேன் ஆர்மி’ என்பார்கள். நான் ஜூனியர்கள் வைத்துக்கொள்வது இல்லை. கூட்டத்தைத் திரட்டுவது இல்லை. உண்மையை மட்டுமே சொல்கிறேன்.
 
 
அச்சம் இல்லாமல் சொல்கிறேன். எதற்கு அஞ்ச வேண்டும்? 'தலித்துகள் எல்லாம் ஃப்ராடுகள்’ என்று ஓப்பன் கோர்ட்டில் ஒரு நீதிபதி சொல்கிறார். அவருக்கே அச்சம் இல்லை. நாம் எதற்குப் பயப்பட வேண்டும்? நீதிபதிகள் எல்லோரும் மக்கள் ஊழியர்கள்தான். நமது வரிப் பணத்தில்தான் அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், நீதிமன்றங்கள்பற்றிய மிகையான பெருமிதமும் அச்சமும் மக்களுக்கு இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணய்யர் ஓய்வுபெறும்போது, 'நான் நிறையத் தவறுகள் செய்துவிட்டேன்போல் இருக்கிறது. நீதிமன்றத்தின் மீது மக்களுக்குப் பெரிய நம்பிக்கையை உருவாக்கிவிட்டேன்’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார். மக்களின் நம்பிக்கை ஒரு பக்கம் இருக்க... 90 சதவிகித வழக்கறிஞர்களே இன்னமும் 'மை லார்டு’ என்றுதான் சொல்கிறார்கள். நீதிபதிகள் அதை விரும்பவில்லை என்றாலும் வக்கீல்கள் கைவிட மறுக்கிறார்கள். நாம் இவை அனைத்தையும் கடந்துதான் பாதிக்கப்படும் மக்களுக்கான நீதியைப் பெற வேண்டி இருக்கிறது!''

Friday, September 7, 2012

இந்தியாவின்/ இந்தியனின் மறைந்திருக்கும் முகம் 


 
நம் நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முதல் மந்திரியும் முக்கியமான பதவி வகிப்பவர்களும் திருப்பதி கோயிலுக்கு வருகை தந்தால், அவர்களுக்குப் பூர்ண கும்ப மரியாதை கொடுப்பது வழக்கம். திடீரென அவசர அவசரமாக திருப்பதி தேவஸ்தான அவசரக் கூட்டம் ஒன்றில், 'தேவஸ்தானம் விருப்பப்பட்டால் மட்டுமே நாட்டில் முக்கியப் பதவி வகிப்பவர்களுக்குப் பூர்ண கும்ப மரியாதை செய்யப்படும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதில் எங்கே தீண்டாமை இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. அப்போதுதான் தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் ஜனாதிபதி ஆகியிருந்தார்!''

Friday, August 31, 2012

வாசித்ததில் நேசித்தது 
 
தெரு விளக்கு


கடவுள் உற்பத்தி மையம்!
பாரதி தம்பி
படங்கள் : எஸ்.தேவராஜன்
ரு மாபெரும் சமூக நீதிப் போராட்டத்தை 40 ஆண்டு காலம் தனி ஓர் ஆளாக நடத்திவருகிறார் சிற்பி ராஜன். பாண்டிச்சேரி ஆரோவில் காடுகளுக்குள் நுழைந்தால், காட்டுப் பறவையின் குரலோடு சேர்ந்து ஒலிக்கிறது ராஜனின் உளியோசை. ''வாங்க... இதுதான் என் புது இடம். சுவாமிமலையில் நம்ம பசங்க 200 பேரை உருவாக்கிவிட்டாச்சு. இனிமேல் அங்கே அவங்க பார்த்துக்குவாங்க. இங்கே இனிமேல்தான் ஆட்டத்தை ஆரம்பிக்கணும்!'' - நீண்டுகிடக்கும் ராஜராஜன் சிலை அருகே கம்பீரமாக அமர்கிறார் சிற்பி ராஜன்.
பெரியாரின் அரசியல் வாரிசுகள் பலர் தடம் மாறி சுயம் ஒழிந்த நிலையில், அவருடைய சமூக நீதிக் கொள்கையை நிலைநிறுத்த இடைவிடாமல் பணி செய்கிறார் ராஜன். உயர் சாதியினர் மட்டுமே கோலோச்சும் சிற்பக் கலையை, தலித் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் வேலையையே தன் வாழ்வாக ஏற்றவர், ''தலித்தைக் கோயிலுக் குள் விட்டா, கடவுளுக்கே தீட்டுங்கிறான். ஆனா, உங்க கடவுளை உருவாக்குறதே என் தலித் பையனுங்கதான். 40 வருஷமா சிலை செஞ்சு... செஞ்சு... தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்கள் எல்லாத்துலயும் கருவறை வரை புகுந்தாச்சு. இந்து மதத்தின் தலைமை பீடமான காஞ்சிபுரம் கோயில்லயே என் பசங்க உருவாக்குன சிலைகள் இருக்கு. அதனால் இப்போ என்னா கெட்டுப் போச்சு? நீங்க தெய்வீகம்னு பக்தியோடு வழிபடுற சிலையில் மிளிரும் அழகு உங்கள் கடவுளின் சக்தியால் வந்தது அல்ல, அது எங்கள் உழைப்பால் வந்தது!'' - தங்கு தடையற்ற அழகு தமிழில் உரையாடும் ராஜனிடம் பேசுவதே ஓர் அலாதியான அனுபவம். ஒரு வருடத்துக்கு முன்பு வரை இவர் சுவாமிமலையில் நடத்திவந்த சிற்பப் பயிற்சி நிலையத்துக்கு 'கடவுள் உற்பத்தி மையம்’ என்று பெயர். இப்போது பாண்டிச்சேரியில் புதிய கடவுள்களை உற்பத்தி செய்கிறார். எப்படித் துவங்கியது இந்தப் பயணம்?
 
 
''எனக்கோ என் குடும்பத்துக்கோ சிற்பத்தில் எந்தத் தொடர்பும் கிடையாது. எனக்குச் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். எங்க வீட்டில் 12 பிள்ளைங்க. நான் 11-வது பையன். அண்ணன்கள் எல்லாம் படிச்சு அரசு உத்தியோகத்தில் இருந்தாங்க. நானும் அப்படி ஆகணும்கிறது குடும்பத்தோட விருப்பம். நமக்குப் படிப்பு ஏறலை. அப்பா திட்டினார். 'கடவுள்கிட்ட வேண்டினேன்... ஒண்ணும் நடக்கலையே’னு சொன்னேன். 'நீதான்டா படிக்கணும்’னார். அப்பவே புரிஞ்சுடுச்சு, இது வெறும் கருங்கல், இதுகிட்ட வேண்டி நடக்கப்போறது எதுவும் இல்லைனு. 13 வயசுலயே யாரும் சொல்லாம, நானே நாத்திகனா மாறிட்டேன்.
 
அப்போ பள்ளிக்கூடத்தில் கிடைக்கிற காகித அட்டைகளைவெச்சு உருவங்கள் செய்வேன். அப்படியே ஓவியம், சிலைகள் மீது ஆர்வமும் ஈர்ப்பும் வந்துச்சு. ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சுட்டு, 17 வயசுல நான் சிற்பம் படிக்கப்போறேன்னு சொன்னதுக்கு வீட்ல எதிர்ப்பு. 'கைத்தொழில் கத்துக்கிட்டா, பிச்சைதான் எடுப்பே’ன்னாங்க. வீட்டைவிட்டு வெளியில் வந்துட்டேன். 41 வருஷம் ஆச்சு. இதுவரை ஒரு தடவைகூட வீட்டுக்குப் போனது இல்லை. கல்யாணமும் கட்டிக்கலை. நானே ராஜா, நானே மந்திரி. ஆனா, எனக்கு லட்சியங்கள் இருக்கு. இல்லாத கடவுளின் பெயரைச் சொல்லி, இல்லாத மதத்தைச் சொல்லி, இல்லாத சாதியைச் சொல்லி மக்களைப் பிரிக்கும் கடவுள், மதம், சாதி... இது மூணையும் காலி பண்ணணும். 41 வருஷமா அதுக்குத்தான் போராடிக்கிட்டு இருக்கேன்'' என்கிற ராஜன், வீட்டைவிட்டு வெளியேறியதும் சுவாமிமலையில் உள்ள அரசு கைத்திறன் வளர்ச்சிக் கழகத்தில் ஒரு வருடம் படித்துவிட்டு, அங்கேயே பாரம்பரியமாகச் சிற்பம் செய்யும் சிற்பி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
 
''அந்த ஏழு வருஷமும் கொடுமையானது. சேர்க்கும்போதே, நீ என்ன சாதினு கேட்டாங்க. சிற்பம் செய்யுற சாதி என்னவோ, அதைச் சொன்னேன். பொய்தான். சேர்ந்து வேலை கத்துக்கிட்டேன். அங்கே தலித்துகளை நடத்துற விதம் சகிக்க முடியாம இருக்கும். தொட்டுப் பேச மாட்டாங்க. பாத்திரத்தில் தண்ணீர் தர மாட்டாங்க. அப்பவே, 'நாம எப்போ தனியாப் பட்டறை போடுறமோ, அன்னைக்கு தலித் பையன்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுக்கணும்’னு முடிவு பண்ணி னேன். ஒரு கட்டத்தில் தலித்துகளுக்கு அவங்க பண்ண கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் கேள்வி கேட்டேன், அப்போ என் சாதி என்னன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருச்சு. அங்கிருந்து வெளியேறி, 27 வயசுல சுவாமிமலையில் தனிப் பட்டறை போட்டேன்.
சுற்று வட்டாரத்தில் யாரெல்லாம் சாதிரீதியா ஒடுக்கப்படுறாங்களோ, யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ... அவங்களை எல்லாம் தேர்ந்தெடுத்து சிற்பப் பயிற்சி கொடுத்தேன். தலித் பையன்களைச் சாமி சிலை செய்ய விடுறதானு எதிர்ப்பு வந்துச்சு. அப்புறம் தனியா ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, அதுல 'கடவுள் உற்பத்தி மையம்’ தொடங்கினேன். இப்போ இன்னும் அதிகமான பையன்கள் கத்துக்க வந்தாங்க. யார்கிட்டயும் ஒரு பைசா கட்டணம் வாங்கினது இல்லை. முடிஞ்சவரைக்கும் நானே எல்லாருக்கும் சமைச்சுப் போடுவேன். எல்லாரும் முழு மனசோட ஆர்வமா கத்துக்க ஆரம்பிச்சாங்க.
 
சிலை செய்வது ஒரு கலைதான். ஆனால், அது ஒண்ணும் தெய்வீகக் கலையோ, ஒரு குறிப்பிட்ட சாதியால் மட்டுமே செய்யக்கூடியதோ இல்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால், யாராக இருந்தாலும் கத்துக்கலாம். நான் என்கிட்ட கத்துக்கிட்ட எந்தப் பையனுக்கும் இது சாமி சிலை, தெய்வீகமாப் பண்ணணும்னு சொன்னது இல்லை. சிலை செய்யுற எங்களை விடுங்க... அதை வழிபடுற யாரும் கடையில் போய் 'தெய்வீகமா ஒரு சிலை வேணும்’னு கேட்பது இல்லை. '10 கிலோ பிள்ளையார் கொடுங்க’னுதான் கேட்குறாங்க. எடை போட்டுத் தான் வாங்குறாங்க. அப்புறம் எந்த இடத்தில் அந்தச் சிலைக்குத் தெய்வீக சக்தி கிடைக்குது? கோயில் கர்ப்பக்கிரகத்தில் புரியாத சம்ஸ்கிருத மொழியில் பத்து வரி சொல்லிட்டா, சக்தி கிடைச்சுடுமா? நான் இதுக்காகவே ரெண்டு வருஷம் சம்ஸ்கிருதம் கத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகுதான் இந்தச் சாதி முறையை எப்படி நுணுக் கமா சாமியோட முடிச்சுப்போட்டு மக்களை மயக்கிவெச்சிருக்காங்கனு தெளிவாப் புரிஞ்சது.
நானும் என் மாணவர்களும் 40 வருஷமா செய்த சிலைகள் உலகம் முழுக்கப் பல கோயில்கள்ல இருக்கு. கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, ஜெர்மனி வரை எங்கெங்கோ இருக்கு. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடத்துக்கு ஏராளமான சிலைகள் செஞ்சிருக்கோம். அதே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ராமானுஜருக்கு தங்கக் கவசம், அகோபில மடத்துக்குச் சிலைகள், பெங்களூரு ராஜராஜேஸ்வரி கோயிலுக்குத் துவாரபாலகர், கும்பகோணத்தில் ஐயப்பன் கோயில் சிலை எல்லாமே தலித் மாணவர்கள் செஞ்சதுதான். இதை எல்லாம் வணங்கியதால் யாருக்கும் தீட்டு ஒட்டிக்கலையே? கம்ப்யூட்டர் செய்யுறதுக்குனு ஒரு சாதி கிடையாது. செல்போன் செய்யுறதுக்குனு ஒரு சாதி கிடையாது. சிலை செய்ய மட்டும் எதுக்குச் சாதி? டூ-வீலர் கண்டுபிடிச்சவன் என்ன சாதி? ரயில் கண்டுபிடிச்சவன் என்ன சாதி? நமக்குத் தெரியுமா? இந்தப் பொருட்கள்லாம் இல்லாம இப்போ நம்மளால ஒரு மணி நேரம்கூட இருக்க முடியலையே? ஆனா, கடவுள் இல்லாமலோ, சாதி இல்லாமலோ எத்தனை தலைமுறையும் வாழலாம். அதுவும் நிம்மதியா, சந்தோஷமா இருக்கலாம்.
 
 
நிறையப் பேர் என்கிட்ட, 'கடவுள் நம்பிக்கை இல்லைனு சொல்றீங்க? ஏன் கடவுள் சிலை செய்யுறீங்க?’னு கேட்டிருக்காங்க. குதிரைச் சிலை செய்தால், குதிரை மேல பக்தி வேணுமா? நான் ஒரு சிற்பி. நீங்கள் கேட்கிறதைச் செஞ்சு தருவேன். குதிரைக்காகத் தனி மெட்டல், கடவுளுக்காகத் தனி மெட்டல் கிடையாது.
 
'கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக’னு வள்ளலார் சொன்னார். ஒரு கலையை ரசிக்கலாம். அதைத் தெய்வீகம்னு நம்புற இடத்தில்தான் மூட நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்குது.
 
இப்படிப் பேசுறதால் பல நடைமுறைப் பிரச்னைகள் வந்துச்சு. ஆர்டர் கொடுத்ததுக்கு அப்புறம் நான் நாத்திகன்னு தெரிஞ்சதும் டெலிவரி எடுக்க மாட்டாங்க. நான் பரம்பரையா சிலை செய்யுற சாதினு நினைச்சு வந்து திரும்பிப்போனவங்களும் உண்டு. கிராமங்கள்ல இருந்து வர்றவங்ககிட்ட அவ்வளவு சீக்கிரம் ஆர்டர் வாங்க மாட்டேன். முடிஞ்ச வரைக்கும் பேசித் திருப்பி அனுப்பப் பார்ப்பேன். பாவம், அவங்க விவசாய வேலை செஞ்சு உழைச்ச காசு. அதை இந்தச் சிலை மேல கொட்டுறாங்களேனு பரிதாபமா இருக்கும்.
 
என் மாணவர்கள்ல சுமார் 200 பேருக்கும் மேல இந்தத் தொழிலைச் செய்றாங்க. 40 பேர் தனியாப் பட்டறை போட்டிருக்காங்க. சுவாமிமலையில் 32 வயசுப் பையன், தன் உழைப்பில் 45 பேருக்கு வேலை கொடுத்திருக்கார். இவங்க அத்தனை பேரும் என்னைப் போலவே கொள்கை பேசுறவங்கனு சொல்ல மாட்டேன். ஆனா, யாரும் தெய்வீகச் சிலைனு ஏமாத்த மாட்டாங்க. அது அவங்களோட தொழில். எல்லாத்தையும் தாண்டி, காலம் காலமா கடவுளின் பெயரைச் சொல்லி ஒடுக்கப்பட்டவர்கள், இன்னைக்குக் கடவுளை உற்பத்தி செய்றாங்க. உங்க உயர் சாதிக் கடவுளை உருவாக்குறது என்னோட தலித் மாணவர்கள். இனி, கடவுளைப் பயபக்தியோடு வணங்கும்போது மனசுல வெச்சுக்குங்க... நீங்க வணங்குறது ஒரு தலித் மாணவனின் உழைப்பை. கோயில் கர்ப்பக்கிரகத்தில் நுழைஞ்சு உங்க சாதி அடுக்குக்கு நாங்க சவால் விடுகிறோம். முடிஞ்சா, தடுத்துப் பாருங்க!''

Thursday, August 23, 2012



லை விற்கும் அஞ்சலை
கையாலாகாத மாமனோடு
வாழாததையும் சேர்த்து
கூவிக் கூவிச் சொல்கிறாள்
'வாழலே... வாழலே!’
- நா.கிருஷ்ணமூர்த்தி


 
நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் போட்டியில் குவோர் மாரியல் என்ற வீரர் ஓடினார். அவர் 47-வது இடம்தான் பிடித்தார். ஆனால், அவர் படைத்திருப்பது ஓர் அசாத்திய சாதனை.

மாரியல் சூடான் நாட்டைச் சேர்ந்தவர். சூடானின் அரசப் படைகள் தெற்கு சூடான் மக்களை மோசமாகச் சித்ரவதை செய்து, கொலை செய்தது. மாரியலின் சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 12 வருடங்களுக்கு முன்பு சூடானில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வந்தார் மாரியல். லண்டன் ஒலிம்பிக்கின் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றும் அவரால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாத நிலை. ஏனெனில், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வேண்டுமாயின் ஒரு நாடு வேண்டும். அமெரிக்காவில் வசிப்பிட உரிமைதான் உண்டே ஒழிய, குடியுரிமை கிடையாது. அண்மையில் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று தனி நாடாகிவிட்டது என்றாலும், அதனிடம் ஓர் ஒலிம்பிக் குழு இல்லை

'மாரியல் விரும்பினால் சூடான் சார்பாக ஓடலாம்’ என்று சூடான் அதிபர் அழைப்புவிடுத்தார். ஆனால், தன் சகோதரர்களைக் கொலை செய்த, தன்னை நாட்டை விட்டு விரட்டியடித்த சூடான் சார்பாக ஓட மாரியல் விரும்பவில்லை. அந்த அழைப்பை நிராகரித்தார்.

இதற்கிடையே, தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று ஓட முடியாத மாரியலுக்கு ஆதரவாகப் பல தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்தது. ஏராளமானோர் கையெழுத்திட்டு மனு அனுப்பினார் கள். இறுதியில் மாரியல் ஒலிம்பிக்கில் பங்கெடுக்க அனுமதித்தது ஒலிம்பிக் நிர்வாகக் கமிட்டி. ஆனால், அவருக்கு என்று ஒரு நாடு இல்லாத தால் ஒலிம்பிக் கொடியே அவருடைய அடை யாளம் ஆனது. 'என்னிடம் தெற்கு சூடான் கொடி இல்லை. ஆனால், நான் ஓடும்போது ஒட்டுமொத்த நாடும் என் பின்னால் இருக்கும்’ என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் மாரியல்.
 
இதைப் பற்றித் தனது இணையதளத்தில் எழுதி இருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், 'குவோர் மாரியல் ஓடும்போது சூடான் உள்நாட்டுப் போரில் மடிந்த 1.5 மில்லியன் மக்களை நினைத்துக்கொள்வேன். போரில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மாரியலின் எட்டு சகோதரர்களை நினைத்துக்கொள்வேன். என் கண்கள் மாரியலின் ஓட்டத்தை மட்டுமே பார்க்கும். அவன் முதலாவதாக வந்தாலும் சரி, கடைசியாக வந்தாலும் சரி, 2012 ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டவீரன் அவன்தான், நாடற்றவன்!’ என்று முடித்திருக்கிறார். வெற்றி என்பது முதல் இடம் மட்டும்தானா

Sunday, August 5, 2012

நான் எழுதி கிழித்தது 

எனக்கு கனவு உண்டு
கனவு காண.
ஆனால்
நினைவு தப்பாத கனவே வருகிறது
மற்றவரின் நகைப்புக்குள்ளாகும் அக்கனவால்
நான் வேடிக்கை மனிதனைப்போல்
விளையாட்டு பொம்மையானேன்
ஓடி ஒளிந்து கனவு காண
இடமில்லா இவ்வெளியில்
கனவு காணச்சொல்லி
அந்தக் கனவே என்னை விரட்டுகிறது.

Tuesday, July 31, 2012

ரு கழுதையையும் ஒரு நாயையும் பற்றிய கதை இது.
'உள்ள யாரோ போறாங்க. நீ குரைச்சு நம்ம முதலாளியை எழுப்பு'' என்றது கழுதை.
 அது பழக்கப்பட்ட வாசனைதான். நீ ஒண்ணும் கவலைப்படவேண்டாம். எனக்குத் தெரியும். எப்ப குரைக்கணும்னு'' இது நாய்.
' அவன் கையிலப் பாரு. எவ்ளோ பெரிய கம்பி வெச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன்''
கழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது
'நீ இப்ப குரைக்கப் போறியா இல்லையா?''
 முடியவே முடியாது. உள்ளே முதலாளியோட சின்னக் குழந்தை தூங்குது. நான் குரைச்சு குழந்தை முழிச்சுட்டா ராத்திரி முழுக்க அழுதுக்கிட்டே இருக்கும். பாவம். நான் மாட்டேன்பா''
நாய் சோம்பல் முறித்தபடி வசதியாகப் படுத்துக்கொண்டது. கழுதைக்குக் கோபம் தலைக்கு ஏறியது. உள்ளே நுழைந்த மனிதர் கதவுப் பக்கம் போகவே தன் எஜமானரை எழுப்பக் கழுதை தன் வழக்கமான குரலில் கத்தத் தொடங்கியது. கழுதை போட்ட சத்தத்தினால் குழந்தை விழித்து அழத்தொடங்கியது
கழுதை கத்துவதைக் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு எஜமானன் தன் வீட்டுக்கு வந்த அந்த மனிதரை வீட்டுக்குள் அனுப்பி விட்டு 'நேரம் கெட்ட நேரத்தில் கத்தியதற்காககழுதையை நாலு சாத்து சாத்தினார். அவர் உள்ளே போனதும் நாய் சொன்னது, 'அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செஞ்சாப் போதும். மத்தவங்க வேலையில தலையிட்டுக் குழப்பம் விளைவிச்சா தனக்கே கேடு விளையும்!''