Wednesday, April 26, 2017

நகம் சொல்லும் அகம் 
நகத்தில் வெண்மையான அரை நிலவின் தோற்றம் தென்படுவது தைராய்டும் செரிமானமும் நலமாக இருப்பதன் அறிகுறி.
நகத்தில் இருண்ட வரி இருந்தால் அல்லது நகமே இருண்டு இருந்தால், அது மெலனோமா என்ற தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.
நகம் வளைந்திருந்தால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B 12 குறைபாடு இருக்கலாம்.
அரை நிலவு வடிவம் தெரியாமல் இருந்தால், அது தைராய்டு பிரச்னை இருப்பதன் அறிகுறி. இது மனச்சோர்வு, மனநிலை மாற்றம், எடை அதிகரித்தல், அடர்த்திக் குறைவான முடி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
மிகச்சிறிய பிறை வடிவம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதையும் அஜீரணத்தையும் குறிக்கும். வளர்சிதை மாற்றமும், உடலில் நச்சுப்பொருள்களின் தேக்கமும் இதற்கான காரணங்கள்.
நகத்தில் வெடிப்பு, பிளவுபட்ட நகங்கள் இருந்தால் தோல் நோய்க்கான அறிகுறி.
நகங்களில் வெள்ளைப்புள்ளிகள் தெரிவது, வைட்டமின் குறைபாடு அல்லது அலர்ஜியின் அறிகுறி.
மிகவும் வெண்மையான நகம், மஞ்சள் நகம் ஆகியவை ஹெபடைட்டிஸ், மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள்.
வெளிறிய நிறமுடைய பிறை தெரிந்தால் சர்க்கரை நோய் இருப்பதைக் குறிக்கும். மஞ்சள் நிற நகம் பூஞ்சைத்தொற்றைக் குறிக்கும்.
அரை நிலவு வடிவத்தைச் சுற்றி நீல நிறம் இருப்பது, நுரையீரல் அல்லது சுவாசப் பிரச்னைகள் இருப்பதைக் குறிக்கும். உள்ளுறுப்புகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் நகங்கள் இப்படி மாறும்.

No comments:

Post a Comment