Thursday, March 19, 2020

கியூபா அரசு காட்டிய `மனித நேயம்!
கொரோனா தாக்கிய பயணிகள் - தடுமாறிய கப்பல்

கியூபா துறைமுகத்தில் கொரோனா பாதித்த கப்பல்

உலக மக்களின் உயிரை கொரோனா பறித்துக்கொண்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்களைக் கூட கொரோனா தாக்கியிருந்தால், அழைத்து வர உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், கியூபா என்ற நாடு மட்டும் கொரோனா தாக்கிய மக்களைக் கருணையுடன் அணுகி, அரவணைத்துக்கொண்டுள்ளது. ஃபிடல் என்ற மாமனிதன் ஆட்சி செய்த தேசமான கியூபாவில் இதுவரை 4 பேரை மட்டுமே கொரோனா தொற்று தாக்கியுள்ளது.

இதற்கிடையே, பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கப்பலில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று தாக்கியிருப்பது தெரிய வந்தது. இதனால், கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் கப்பல் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. எந்த நாடும் அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில், கியூபா நாடு ப்ரீமர் கப்பலை தங்கள் நாட்டில் நிறுத்த அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து, கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டது. கப்பலில் இருந்த சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.

கியூபாவிடத்தில் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டதையடுத்து, மனிதநேயத்தின் அடிப்படையில், கியூபா இந்த உதவியைச் செய்துள்ளது. `கப்பலில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டும் உலகுக்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான சவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கப்பலில் பயணித்தவர்களில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பப்படுவார்கள். நோய் தாக்கியவர்களுக்கு கியூபாவில் வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment