Thursday, March 19, 2020

கியூபா அரசு காட்டிய `மனித நேயம்!
கொரோனா தாக்கிய பயணிகள் - தடுமாறிய கப்பல்

கியூபா துறைமுகத்தில் கொரோனா பாதித்த கப்பல்

உலக மக்களின் உயிரை கொரோனா பறித்துக்கொண்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்களைக் கூட கொரோனா தாக்கியிருந்தால், அழைத்து வர உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், கியூபா என்ற நாடு மட்டும் கொரோனா தாக்கிய மக்களைக் கருணையுடன் அணுகி, அரவணைத்துக்கொண்டுள்ளது. ஃபிடல் என்ற மாமனிதன் ஆட்சி செய்த தேசமான கியூபாவில் இதுவரை 4 பேரை மட்டுமே கொரோனா தொற்று தாக்கியுள்ளது.

இதற்கிடையே, பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கப்பலில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று தாக்கியிருப்பது தெரிய வந்தது. இதனால், கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் கப்பல் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. எந்த நாடும் அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில், கியூபா நாடு ப்ரீமர் கப்பலை தங்கள் நாட்டில் நிறுத்த அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து, கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டது. கப்பலில் இருந்த சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.

கியூபாவிடத்தில் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டதையடுத்து, மனிதநேயத்தின் அடிப்படையில், கியூபா இந்த உதவியைச் செய்துள்ளது. `கப்பலில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டும் உலகுக்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான சவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கப்பலில் பயணித்தவர்களில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பப்படுவார்கள். நோய் தாக்கியவர்களுக்கு கியூபாவில் வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது.


ஆஸ்விச் வதைக்கூடம்!
5 வருடங்கள்; 13 லட்சம் கொலைகள்; மரண ஓலத்தின் சாட்சியம்... 


உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்தே, இனத்தின் மீதான பற்று என்பது ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை அனைத்துக்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. பெரும்பாலும், உணவுக்கும் இருப்பிடத்துக்கும் மட்டுமே ஐந்தறிவு உயிரினங்கள், தான் சாராத மற்ற இனத்தின்மீது வன்முறையில் ஈடுபடுகின்றன. ஆறறிவு கொண்ட நாம்தான் ஓர் இனத்தின்மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக வன்முறையில் ஈடுபடுகிறோம். எந்த அளவுக்கு என்றால், அப்படி ஓர் இனம் வாழ்ந்ததற்கான சுவடே இருக்கக் கூடாது எண்ணுமளவுக்கு கொடூரமான இன எதிர்ப்பு.

மரணவாயில், ஆஸ்விச் கூடத்தின் கைதிகள் நுழைவுவாயில்

11-ம் நுற்றாண்டிலிருந்தே யூதர்கள் மீதான தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. இங்கிலாந்து, உக்ரைன், ஸ்பெய்ன், ரஷ்யா, அரேபியா என உலகம் முழுவதும் யூத வெறுப்பு என்பது பொதுவான ஒன்றாக இருந்திருக்கிறது. யூத மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறவும் பல யூதர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான யூதர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்களை `ஆன்டிசெமிட்' (Antisemit) என்றழைக்கின்றனர். இந்த ஆன்டிசெமிட் கொள்கைக்கு ஹிட்லரும் தப்பவில்லை. யூதர்கள் மீதான வன்மம் மற்றவர்களைவிட ஹிட்லரிடம் கொஞ்சம் வலுவாகவே காணப்பட்டது.

1939 செப்டம்பர் 1, தனக்கு எதிராக படையெடுக்கத் திட்டம் தீட்டுகிறது எனக் கூறி, போலந்தின்மீது தாக்குதல் தொடுக்கிறது ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் படை. 27 நாள்கள் போருக்குப் பிறகு, 1939 செப்டம்பர் 27ல் நாஜி ஜெர்மனியிடம் வீழ்கிறது போலந்து. 1940ல், போலந்தில் உள்ள ஆஸ்விச் (Auschwitz) என்ற இடத்தில் இருந்த போலந்து ராணுவத் தளத்தை, மிகப் பெரிய வதைக்கூடமாக மாற்றுகிறது ஜெர்மனி. இடத்தைச் சுற்றி 40 சதுர கிலோமீட்டர்கள் வரை வாழ்ந்துவந்த மக்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய வதைமுகாம் தயாராகிறது. ஹிட்லரின் ஆட்சிக்கு எதிராக இருப்பவர்கள், ஊனமுற்றோர், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் மிக முக்கியமாக யூதர்கள், இவர்களை சிறைக் கைதிகளாக வைக்கவும், வதைத்துக்கொல்வதற்குமான கொடூரமான ரசனைமிக்க கூடமாக இருக்கப்போகிறது, அந்த ஆஸ்விச் வதைக்கூடம்.
அந்த இடத்துக்கான வாயில், `மரணவாயில்' என்றழைக்கப்படுகிறது. ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட வாயிலில், ரயிலில் அடைத்துக் கொண்டுவரப்படும் கைதிகளுக்கு இருப்பது இரண்டே தேர்வுதாம். ஒன்று, உடனடியாக இறக்க வேண்டும் அல்லது வாழ்நாள் முழுவதும் வேலை செய்து, வதைபட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மடிய வேண்டும்.

கைதிகளின் செருப்புகள்


ஹங்கேரி, போலந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, கிரீஸ், ஸ்லோவாக்கியா, பெல்ஜியம், இத்தாலி மற்றும் நார்வே ஆகிய நாடுகளிலிருந்து ரயில் மூலம் யூதர்கள் கொத்துக்கொத்தாக ஆஸ்விச் வதைக்கூடத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். 8 நாள்களுக்கு மேலாக நீளும் அந்த ரயில் பயணங்களில், 100 பேர் அடைக்கப்பட்ட பெட்டிகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவது தினமும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே. இயற்கை உபாதைகளுக்கு ஒரு பெட்டி. இவற்றுடன் ஆஸ்விச் வதை முகாம்களுக்கு வரும்போதே பாதி பிணமாக வந்துசேரும். கைதிகளின் (பெரும்பாலும் யூதர்கள் மட்டுமே) வாழ்க்கை வந்திறங்கிய அடுத்த 30 நொடிகளில் தீர்மானிக்கப்படுகிறது. வதைமுகாமின் உள்ளே இருக்கும் பிளாட்பார்மில் ரயில் நின்றவுடன், உள்ளே இருந்து இறங்கும் கைதிகளின் உடலை ஒரு கணம் மேலும் கீழும் பார்க்கும் மருத்துவர் தம்ஸ் அப் அல்லது தம்ஸ் டவுன் காட்ட, அந்தக் கைதி செல்வது வதைக்கூடத்துக்கா இல்லை கொலைக் கூடத்துக்கா என முடிவாகும்.

கூடத்தினுள் இருக்கும் ரயில் நடைமேடை

கொலைக் கூடத்துக்குச் செல்லும் கைதிகள், மொத்தமாக ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு, விஷவாயுவைப் தெளிப்பதன் மூலம் உடனடியாகக் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் மொத்தமாக தகனம் செய்யப்படும். எந்தவொரு கைதியும் தப்பிக்கக் கூடாது என்ற உறுதியோடு கட்டப்பட்ட முகாம் என்பதால், சுற்றிலும் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறி தப்பிக்க முயன்றவர்கள், பாரபட்சம் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எவ்வளவு குளிராக இருந்தாலும் அணிந்துகொள்ள ஒரே ஒரு மெல்லிசான துணி மட்டுமே. உணவு பற்றாக்குறை காரணமாகச் சராசரியாக ஒருவரின் எடையே 25-ல் இருந்து 30 கிலோ மட்டுமே. யூதர்கள் என்றாலே கொல்லப்பட வேண்டியவர்கள்தான் என்ற மனநிலையின் காரணமாக, இரண்டு வயது குழந்தையில் இருந்து 80 வயது முதியவர்கள் வரை எந்தப் பாரபட்சமும் இல்லை.

மின்வேலி

1940-ம் ஆண்டிலிருந்து 1945-ம் ஆண்டு வரை மட்டும் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுள் 13.5 லட்சம் பேர் இந்த ஆஸ்விச் முகாமில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 1944-ல் சோவியத் படையிடம் தோற்கும் தறுவாயில் ஜெர்மன் இருந்தபோது, ஆஸ்விச் முகாமில் இருந்த 60,000 கைதிகள் உடனடியாக ஜெர்மனியில் உள்ள மற்ற முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
வேறு முகாம்களுக்கு மாற்றும்போது, நடக்க முடியாதவர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். சோவியத் படை ஆஸ்விச்சை அடைந்தாலும், அவர்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்காத வண்ணம் அனைத்துக் கோப்புகளும் தீக்கிரையாக்கப்பட்டன. சோவியத் படை ஆஸ்விச்சை அடைந்தபோது, அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம், சவரம் செய்யப்பட்ட டன் கணக்கான முடியும், நடக்கக்கூட வலிமை இல்லாத வெறும் 6000-த்துக்கும் மேற்பட்ட கைதிகளும்தான்.

இந்த வதைக்கூடம், தற்போது அருங்காட்சியகமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அந்த வதைக்கூடத்தை நேரில் கண்ட சித்தார்த், இந்தத் தகவல்களையும் தன் அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், "அந்த இடத்தைச் சுற்றி வர்றப்போவே, வெளிப்படுத்த முடியாத ஒரு விதமான சோகம் மனசுல மோதிட்டே இருந்துச்சு. அங்கிருந்து வந்த பிறகும் சில நாள்களுக்கு, இயல்பான வாழ்க்கைக்கு என்னால வர முடியல. ஒரு மனிதனை, இன்னொரு மனிதனால இந்த அளவுக்கு கொடுமை பண்ண முடியுமான்னு ஆச்சர்யம் கலந்த ஓர் எரிச்சல். வலியோட சேர்த்த ஒரு அனுபவத்தைக் கொடுத்தாலும், உலக மக்கள் அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஓர் இடம். முக்கியமா இளைஞர்கள்!" என்றார்.

75 வருடங்கள் கழித்து, இன்றும் இறந்தவர்களின் மரணத்துக்கு சாட்சியாக நிற்கிறது, ஆஸ்விச்.

Wednesday, January 1, 2020



எங்கடா போன 

நீ பேசிப்போன அலைபேசி
உன் குரல் தேங்கி
உறைந்து போனதால் கணத்துப்போனதேடா
அதில்
என்றாவது உன் அழைப்பு வருமென்று
உன் எண்ணி அழிக்கவில்லையடா
தவறிய அழைப்பிலெல்லாம்
தாய்முகம் தேடும்
மிகச்சமீபமாய் பிறந்த சேய்போல
உன் எண்முகம் தேடினோமடா
எங்கள் பதின்ம பருவம் முடிவதற்குள்
மணமாகமலே எங்களை தந்தையாக்கினாயடா



நீ பிறந்தது முதல்
ப்பா
சொல்லுங்கப்பா
சரிங்கப்பா
இவைதான் உன்னிடம்
நாங்கள் அதிகம் கேட்ட்து
எங்களுக்கான உன் அகராதியில்

எல்லாப்பக்கங்களிலும்
இதையே எழுதிவைத்திருப்பாய் என்று
எங்களுக்கு தெரியாது
எதிர்த்தெங்களை பேசாத்தால்
எங்களுக்கு ஹிட்லர் மனதும்
மண்நோக்கி பேசும் மரியாதையும் தந்தாயடா

கூடி வாழ்வதே இப்பிறப்பின் பொருள்
அப்பிறப்பே இப்பிறப்பென்று
எப்போதும் தப்பாது வாழ்ந்தாயடா
அன்பில் வகுப்பில்லை
அன்பிற்கு வகுப்பில்லை
அது ஓர் பரந்த வெளி என்று

படரும் கொடிகள் போன்று
உன் கைக்கொடிகள்
எங்கள் மேல் படர்ந்தும் தொடர்ந்தாயடா
உணவின் உன்னதம் உணர்த்தினாயடா
அதை பெருமையாய் ஊருக்கே உரைத்து
பசித்து புசிக்க மட்டுமல்ல
ருசித்தும் புசிக்க கற்றுக்கொடுத்தாயடா
எதிரி என்று இங்கு எவரும் இல்லை
இன்னும் பழகாதவர்களே
என்றும் எங்களுக்குள்ளும்
இன்னும் கொஞ்சம் மனிதம்

விதைத்தாயடா
திசையில்லா
வர்ணமில்லா

வகுப்பில்லா
உன் மனம்
இல்லங்களெங்கும்
மகனாய் அண்ணனாய்
தம்பியாய் மாப்பிள்ளையாய்
கறையில்லா உறவாய் உலவியது

உன் ஊர்வலத்தில்
உறுதியானதேயடா
அதே திசையில்லாமல்
திரும்பிய பக்கமெல்லாம்
விரும்பிய கணங்களெல்லாம்
அதிருசி ஊண் நேரங்களிலெல்லாம்

உன் அருகாமை உணர்கிறோம்
நீ இருப்பாய் என்று
இக்கணமும் நம்புகிறோம்

நம்பத்தான் வைத்தாயடா
மாய உருவம் கலைத்து
உண்மை முகமும் உடலும்
இனி அணிய இயலா வண்ணம்

எங்கேடா போன
எங்கள் மகனே
உன் இருக்கை
உன் இலை
உன் பாடல்

உன் இசை
உன் பாய்
இன்னும் உனக்கான எல்லாம்
எங்கள் வட்டத்தில்
என்றும் இருக்கும்

நம் வட்டத்தில்
விரிசல் விழா
இணைப்புப் புள்ளியாய்
என்றும் நீ இருப்பாய்
என்று நம்புகிறோம்


மோடி ஊழல் செய்யமாட்டார்
ஊழல் செய்யவும் விடமாட்டார்
இந்தியாவில் ஊழலற்ற ஒரே கட்சி பா.ஜ.க.

மேலே உள்ள வரிகளை 50 தபால் அட்டைகளில் எழுதி உடனடியாக 50 நண்பர்களுக்கு அனுப்பினால், 24 மணி நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும்.

மேற்கு வங்கத்தில் முகுல் ராய் என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த சாரதா சிட்பண்ட் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் 200 பேருக்கு அனுப்பினர். அவர்கள் மேல் இருந்த சுரங்க வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

ஹரியானாவில் துஷ்யந்த் சௌதாலா என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவரது தந்தைக்கு உடனே ஜாமீன்  வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிராவில் அஜித் பவார் 300 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த ஒன்பது வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன.

மேலும் ஜார்கண்ட், அஸ்ஸாம் மாநிலத்திலும் தபால் அட்டை அனுப்பி பலனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ப.சிதம்பரம் என்பவர் தபால் அட்டை அனுப்பாமல் அசட்டையாக இருந்துவிட்டார். இப்போது சிறையில் சிரமப்படுகிறார்.

ஆகவே நண்பர்களே.

ஒடனே நீங்களும் ஒரு அட்டேல எழுதி
ஷேர் பன்னி ச்சீ பண்ணி
உட்ருங்க

அப்டி உட்டீங்கனா
10நாளுக்குள்ள

ஒங்க வீடு தேடி
15 லட்சம் வந்துடும்

2 கோடி பேருக்கு வேல ச்சீ
வேலை கெட்ச்சிடும்

காஷ்மீர்ல ஒரு 5 செண்ட்டாவது நம்ம காதுல
ச்சீ நம்ம பேர்ல வாங்கலாம்

திருவள்ளுவரோட 56இஞ்சி ச்சீ இன்ச் மார்ப பூணூலோடு பாக்கலாம்

எல்லா மசூதி மண்டேலயும் ராமர் கோயில் சொம்ப ச்சீ கும்பத்த பாக்கலாம்

நம்ம ஆத்துலயும் ச்சீ வூட்லயும் நன்னா இருக்கேளா ஷேமமா இருங்கோனு தமிழ்லயே பேசி பீத்திக்கலாம்

சீக்கிரமா ஹிந்தில படிச்சு ஒட்னே டெல்லிக்கு கூலி வேலைக்கு பொலாம்

நீட்டா ச்சீ நீட்டுக்கு விழ்ந்து விழ்ந்து பட்ச்சு OBC கோட்டால ஒரு கோட்டாவது ச்சீ கோட்டா சீட்டாவது வாங்கி டாட்ராய்ரலாம்

அப்பால
பட்டேல் செல கண்ல இருக்க ஜூம் லென்ஸை வச்சு பாகிஸ்தான வேவு பாத்து
போர் வெமானத்த மேகத்துகுள்ள பதுங்கி ரேடாரை ஏமாத்தி பாகிஸ்தான் செவுட்டலடிச்சு
அங்க இருக்குறவங்கள்ட்ட
கம்பெனி குடுக்கலாம் ச்சீ
அங்க இருக்க பிஜேபி தலகளோட கம்பெனிய குளோஸ் பண்ணி இந்தியாவுக்கு மாத்தி கல்லால காசு சேக்கலாம்

பெட்ரோல் வெலய முருகன் டாலரவெட ச்சீ அமெரிக்க டாலரவுட சீப்பா சீவலாம் ச்சீ குடுக்கலாம்

கட்ச்சியா
எல்லா நாட்டுக்கும் ஏத்திவுட்ட கோமாதா கறியையும் யூரினையும்

யூரினா?

தமிழ்ல சொன்னா ஒரு மாறி கீது அதான் இங்கிலீஸ்ல....

கோமாதா கறியையும் யூரின் மருத்துவ பானத்தையும்
நம்ம மக்களுக்கே
குடுக்கலாம்

அதனால
அட்டைய எடுங்க
பட்டைய கெளப்புங்க

எதோ எதோ
நமோ வாரியர்ஸ்
சம்போ சங்கீஸ்
காக்கும் காவீஸ்
அக்கும் பொரம்மாஸ்மீ

Tuesday, March 19, 2019

ஆண் குழந்தைகளிடம் இவற்றையெல்லாம் 10 வயதிலிருந்தே பேச ஆரம்பியுங்கள்!’

- செக்ஸாலஜிஸ்ட் கார்த்திக்

``சிறுவர்களும் வயதுக்கு வருவார்களா? அப்போது அவர்களுடைய உடம்பில் மற்றும் மனதில் நிகழ்கிற மாற்றங்கள் பற்றிச் சொல்ல முடியுமா?’’ 
``ஆண் குழந்தைகளும் வயதுக்கு வருவார்கள் என்கிற விழிப்புணர்வு இன்றைக்கு பலருக்கும் வந்துவிட்டாலும், அது எந்த வயதிலிருந்து எந்த வயதுக்குள் வரும்; அதனால் சிறுவர்களுக்குள் நிகழ்கிற மாற்றங்கள்; அந்த நேரத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. 
ஒரு சிறுவனுடைய 10 வயதில் இந்தப் பருவ மாற்றம் நிகழ ஆரம்பிக்கும். உடலளவில் ஆணுறுப்பு, விதைப்பைகள் பெரிதாக ஆரம்பிக்கும். இனப்பெருக்க உறுப்பைச் சுற்றியும், அக்குளிலும் ரோமங்கள் வளர ஆரம்பிக்கும். கை, கால்களின் தசைகள் இறுகி, மென்மையான குரல் உடைந்து கரகரப்பான ஆண் குரல் தலைகாட்ட ஆரம்பிக்கும். இவையெல்லாம் ஓர் அசெளகர்யத்தைக்கூட அந்தச் சிறுவனுக்குத் தர ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு 9 வயதாகும்போதே, அம்மாவோ, அப்பாவோ... அவர்களைக் குளிப்பாட்டும்போது `நீ உச்சா போற இடம் சின்னதா இருக்கா... இனி நீ வளரப்போற, நெறையா தண்ணீர் குடிக்கணும். நிறைய உச்சா போகணும். ஸோ நீ உச்சா போற இடம் பெருசாகும். நம்ம உடம்புல முடி வளர்றதே உடம்பு சூடாகிறதைத் தணிக்கத்தான். உனக்கு உச்சா போற இடம், கைக்கு அடியில எல்லாம் முடி வளர ஆரம்பிக்கும். அப்படினா நீ கொஞ்சம் கொஞ்சமா பெரிய பையன் ஆகுறேனு அர்த்தம் என்று அவர்களுக்கு ஏற்ற பாஷையில் உடல் வளர்ச்சியை விளக்கிக் கூறுங்கள். நிச்சயம் பெற்றோரில் ஒருவராவது இதைச் சொல்ல வேண்டும். நம் நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு உடல் அளவில் கொடுக்கப்படுற அக்கறை ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆம், பெண் பிள்ளைகளுக்கு பீரியட்ஸ், சுத்தம், நாப்கின் உபயோகிப்பது பற்றி ஒவ்வோர் அம்மாவும் ஆழ யோசித்து அவர்களை மனதளவில் உடல் அளவில் தயார் செய்கிறார்கள். அதே அம்மாக்கள் தன் மகன்கள் வயதுக்கு வரும்போது எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்திருக்கிறார்களா என்றால் குறைவே.
ஆண் குழந்தைகள் வயதுக்கு வரும் நேரத்தில் மனதளவில், எதிர்பாலினமான பெண்கள் மேல் ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அதனால், பெண்களைப் பற்றி நண்பர்களிடம் அதிகமாகப் பேச ஆரம்பிப்பார்கள். அடுத்தது, எதிர்பாலினம் பற்றி நெட்டில் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நெட்டில் நல்ல விஷயங்கள் மட்டுமா இருக்கின்றன..? நெட்டில் டாய்ஸ் என்று தேடினால், அது செக்ஸ் டாய்ஸா என்றே கேட்கிறது. ஆண்  குழந்தைகளுடைய உலகத்தின் பல பிரச்னைகள் இன்றைக்கு இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.
பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பின்பு, இதுதொடர்பான சந்தேகங்களை இயல்பாகத் தங்கடைய அம்மாவிடம் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு இங்கேயும் சிக்கல் ஆரம்பிக்கிறது. பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில், சிறுவர்கள் பொதுவாக அம்மாக்களிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், எத்தனை அம்மாக்கள் தன் மகன்களிடம் வயதுக்கு வருதல் பற்றியோ, அந்த வயதில் வருகிற எதிர்பாலின கவர்ச்சி பற்றியோ, செக்ஸ் பற்றியோ பேசுகிறார்கள்? பருவமடைகிற நேரத்தில் இதெல்லாம் சகஜம் என்பதைப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து எடுத்துச் சொல்லி, ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும்.  பேரண்ட்ஸ் - டீச்சர் அஸோசியேஷன் என்று சொல்கிறார்கள் இல்லையா? அதுபோல ஒன்றிணைந்து எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்று டிஸ்கஸ் செய்து பதின்ம வயது சிறுவர்களை வழி நடத்த வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

வயதுக்கு வரும் பிள்ளைகளிடம் நட்பின் அவசியம் பற்றி பேசுங்கள். நட்புனா அதுல எதுக்கு ஆண் பெண் பேதம். உனக்கு உன் கிளாஸ்ல யார்கூட பேசினா கம்ஃபர்டா இருக்கோ அவங்களை அம்மா அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வை. தாராளமா வீட்டுக்குக் கூட்டிட்டு வா. உனக்கு இந்த வயசுல உன் கிளாஸ்ல உள்ள ஏதாவது ஒரு பொண்ணு மேல ஸ்பெஷல் கேர் வரலாம். அதெல்லாம் சகஜம். அது தப்பில்லை. தாராளமா அந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வா. நாம் எல்லாம் சேர்ந்துகூட வெளிய போகலாம்’’ என்று அந்த வயதில் வருகிற பாலின ஈர்ப்பைச் சகஜம், இதெல்லாம் கடந்து போக வேண்டும் என்பதை நண்பனாகச் சொல்லி புரிய வையுங்கள். இல்லையென்றால் படங்களில் காட்டுகிற பட்டாம்பூச்சியெல்லாம் உங்கள் மகனின் வயிற்றில் பறக்க ஆரம்பிப்பதாகத் தேவையில்லாத கற்பனையில் ஈடுபடுவார்கள்.’’  
``பதினைந்து, பதினாறு வயதிலேயே ஒரு சிறுவனுக்கு காதல் வந்தால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?’’
``இந்த வயதில், ஆண் குழந்தைகளுக்கு உடன் படிக்கிற கேர்ள்ஸ் மீது நட்பும் ஈர்ப்பும்தான் இருக்கும். அதைக் காதல் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பெற்றோர்கள் எங்களைப் போன்ற டாக்டர்களை அணுகினால், இந்த ஈர்ப்பு இயல்பானது என்பதையும், இதை எந்த எல்லைக்குள் நிறுத்திக்கொண்டால் நல்லது என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்துவிடுவோம். இந்தச் சொல்லித் தருதல்கூட, மாணவனுக்கு மாணவன் வேறுபடும். 
போன தலைமுறை சிறுவர்களை, `நீ இதைத்தான் செய்யணும்’ என்று பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. இந்தத் தலைமுறை சிறுவர்களை நாம் சுதந்திரமாக வளர்த்திருக்கிறோம். அவர்களைக் கேட்டுதான் அவர்களுக்கான முடிவுகளையே தீர்மானிக்கிறோம். ஆண் பிள்ளைகளின் இன்றைய நிலைமை பெற்றோராகிய நம்மால் நிகழ்ந்ததுதான். இனிமேலும், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமானாலும் அவர்களுடைய சுதந்திரத்தில் எல்லைக் கோடுகள் போடலாம். கண்காணிக்கலாம். இத்தனை வயதுக்கு மேல் காதலிக்கலாம் என்பதுபோல எடுத்துச் சொல்லலாம். இந்த விஷயத்தில் சரியான தீர்வு இதுதான்.’’ 
உங்கள் பிள்ளை ஆபாசப் படங்களைப் பார்த்தால், எப்படி ரியாக்ட் செய்வது?’’ 
``கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என்று சிறுவர்களின் உள்ளங்கைகளுக்குள் ஆபாசப்படங்கள் வந்துவிட்டன. அதனால், உங்கள் பதின்ம வயது மகன் ஆபாசப்படம் பார்ப்பதைக் கண்ணெதிரே பார்த்துவிட்டீர்கள் என்றாலும், ஆத்திரப்படாதீர்கள். அவன் அதை விருப்பப்பட்டு, திட்டமிட்டுத்தான் பார்க்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலால் பார்க்க ஆரம்பித்திருக்கலாம். அல்லது நெட்டில் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக ஆபாச வீடியோக்கள் கண்ணில் பட்டிருக்கலாம். அதனால், இந்த விஷயத்தைக் கொஞ்சம் நிதானமாக ஹேண்டில் செய்யுங்கள். `இது உன் கவனத்தை சிதறடித்துவிடும்; இதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் இதற்கு நீ அடிமையாகிவிடுவாய்; பிறகு உன் படிப்பு, வேலை, வாழ்க்கை எல்லாம் பாழாகிவிடும். இதற்கு இது வயது கிடையாது; இதிலிருந்து நீ மீண்டு வர நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று கோபப்படாமல் எடுத்துச் சொல்லுங்கள். இப்படிச் சொல்வதிலும் சில வழிமுறைகள் இருக்கின்றன. சில சிறுவர்கள், அதட்டினால் கட்டுப்பட மாட்டார்கள். சில சிறுவர்களை அதட்டித்தான் சீர்ப்படுத்த முடியும். உங்கள் மகன் எந்த ரகம் என்று உங்களுக்குத் தெரியும் என்பதால், அதற்கேற்றாற்போல அதட்டியோ, அன்பு காட்டியோ வழிக்குக் கொண்டு வாருங்கள்.’’
``பெண்கள் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை... கேலி செய்யும் பதின்ம வயது சிறுவர்கள்... என்ன தீர்வு?’’
``இந்த இடத்தில்தான் செக்ஸ் எஜூகேஷன் நம் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு உதவும். நமக்கு ஆணுறுப்பு, விதைப்பை வளர்வதைப்போல பெண்களுக்கு மார்பகம் வளரும்; இடுப்பு விரிவடையும், மாதந்தோறும் ரத்தப்போக்கு நிகழும், அந்த நேரத்தில் அவர்களுக்கு வலி இருக்கும், சோர்வாக இருப்பார்கள்’ என்பதை சிறுவர்களுக்கு அவர்களுடைய டீன் ஏஜின் ஆரம்பத்திலிருந்தே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை சொல்லித் தராதபட்சத்தில்தான், பெண்களின் ஆடையில் ரத்தத்திட்டு இருந்தால் பையன்கள் அதைக் கேலி, கிண்டல் செய்கிறார்கள்.’’
``ஆண் குழந்தை வளர்ப்பில் யாருக்குப் பொறுப்பு அதிகம்... அம்மாவுக்கா, அப்பாவுக்கா?’’
``பன்னிரண்டு, பதிமூன்று வயதுகளில்கூட ஆண் குழந்தைகள் அம்மாக்களிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கலாம். அதனால், அப்பாக்கள்தான் இந்த வயதில் ஆண் பிள்ளை வளர்ப்பில் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். இதுதான் சிம்பிளான, சரியான தீர்வு. நீங்கள் அவர்களுக்குக் காதுகொடுத்தால், அவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். பதின்ம வயது சிறுவர்களிடம் ஒரு தோழன் போலவும் நடந்துகொள்ளுங்கள். முக்கியமாக, மகனுடைய கண் முன்னால் அவனுடைய அம்மாவுக்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள். பின்னாளில் அவன் மற்றப் பெண்களுக்கு மரியாதை கொடுப்பான்.’’
குழந்தைகளில் ஏன் வேறுபாடு காட்ட வேண்டும். நமக்கு ஆணோ, பெண்ணோ சிறு வயதிலிருந்தே அவர்களை உடல் மற்றும் மனதளவில் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் அவ்வளவே. அது நம் கடமையும்கூட என்று நச்சென சொல்லி முடித்தார் டாக்டர்.

Wednesday, September 5, 2018

நல் ஆசிரியர்கள் வாழ்க !

சிறந்த கவிஞரும், சமுக சீர்திருத்தவாதியும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவித்திரிபாய் பூலே அவர்கள்தான் ஆசிரியர்கள் தினத்தில் நினைவு கூறத்தக்கவரே ஒழிய இராதாகிருஷ்ணன் அவர்களல்ல..!
At least அப்துல்கலாம் அய்யா பேரிலாவது மாற்றலாம்

(ஏன்? குறிப்பா ராதா கிருஷ்ணன் பெயரால் இருக்கக்கூடாது என்பதன் காரணம் கடைசியில்)


அதற்குமுன்பு 

சாவித்திரிபாய் பூலே  பற்றி அறிந்து கொள்வோம். இவர் 1831 இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை( 13 வயது) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.  யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். 


ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமுகத்து பெண்களுக்குக் கல்வி புகட்டினார். 

1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. 

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார்.

1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

1897 இல் ஏற்பட்ட பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக,சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இறந்தார்.


1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள்.

பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயில் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது.

2015 இல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.


மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல் துறை இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைத் தேடிக் கொண்டது. 

ஆசிரியர் தினத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக தன் வாழ்வை அர்பணித்த அன்னையைப் இந்நாளில் போற்றுவோம்..!

இப்பொழுது ஏன்? குறிப்பா ராதா கிருஷ்ணன் பெயரால் இருக்கக்கூடாது என்பதன் காரணத்திற்கு வருவோம்

கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த வேலை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு (Indian ambassador) இந்திய தூதுவர்  வேலை வேண்டுமென்று பணியில் சேர்ந்து *சேவை* செய்தார்.

என்ன மக்கள் சேவை அல்லது கல்விப்பணி செய்தார் என்று நீங்களே தேடிப்பாருங்கள் அல்லது கேட்டுப்பாருங்கள்.

அப்துல் கலாம் அவர்கள் NASA உள்பட உலகின் பல நாடுகள் தங்கள் நாட்டில் உயரிய வேலை தருகிறோம் என்ற போது நான் என் நாட்டுக்காகத்தான் சேவை செய்வேன் என்றார். அதே போல் ஜனாதிபதி பணியிலிருந்து  ஓய்வு பெற்ற பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்ட போது நான் ஆசிரியராக பணிபுரிய ஆசைப்படுகிறேன் என்று சொன்னார். செய்தும் காட்டினார். தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுடன் உரையாடுவதையே விரும்பினார். தன் உயிரையும் மாணவர்களுடன் உரையாடும் போதே துறந்தார்.

Monday, July 9, 2018


இதுவும் இந்தியாதான்!
ஆ.சாந்தி கணேஷ்
நன்றி: ஆனந்த விகடன்
 
சென்னை மாநகரம் கோடை மழையை ருசித்துக்கொண்டிருந்த ஒரு மாலை. ‘இப்போது வீடற்றவர்கள் என்ன செய்வார்கள்? கையளவு மறைவுகூட இல்லாமல் மழையிலும் வெயிலிலும் வானமே கூரையாக வாழும் சாலையோரப்  பெண்களின் வாதை என்ன?’ கேள்விகள் அறுத்தன. மறுநாள் அதிகாலை மணி 5. 45. சென்ட்ரலை ஒட்டிய வால்டாக்ஸ் ரோடு. முந்தைய தினம் பெய்த மழையில் சேறும், அழுக்குமாய் கால் வைக்கவே கூசும் தெரு. பிய்ந்துபோன பாய்களில், மீன்பாடி வண்டிகளில், கடைகளின்படிக்கட்டுகளில், பெரிய பெரிய பார்சல்களின் மேல்... எனப் பெண்கள், தங்களை மறந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கட்டிக்கொண்டு சில குழந்தைகளும். தெருவோரங்களிலேயே பிறந்து, வளர்ந்து, திருமணம் முடித்து, கிடைத்த மறைவுகளில் தாம்பத்யம் சுகித்து, அடுத்த தலைமுறைகளையும் இதே அழுக்குத் தெருக்களுக்கு வாரிசாகக் கொடுத்தவர்கள். 

புது ஆட்களின் அரவம் கேட்டுத் தெரு நாய்கள் தங்கள் கடமையைச் செய்ய, உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்த சில பெண்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். ‘`ஒரு நிமிசம் மேடம்’’ என்றவர்கள்,  ஓடிப் போய், தெருவோரக் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு வந்தார்கள்.


‘`நைட்டெல்லாம் தூறல் போட்டுட்டே இருந்துச்சே, தூங்க முடிஞ்சதா?”
‘’எங்க தூங்கறது? குழந்தைகள தோ, இந்தமாரி கடைப் படிக்கட்டுகள்ல படுக்க வெச்சிட்டு நாங்க மழை நிக்கிற வரைக்கும் விடிய விடிய நின்னுகிட்டேதான் இருந்தோம். விடியல்ல ரெண்டு, மூணு மணிக்குத்தான் படுத்தோம். நேத்து ராத்திரி மட்டுமில்ல, எங்களமாரி தெருவுல இருக்கிற பொம்பளைங்க டெய்லியுமே விடியக்காலைலதான் தூங்கவே ஆரம்பிப்போம். ஏன்னா, நைட்ல ஜன நடமாட்டம், வண்டிங்க நடமாட்டம் குறைஞ்சதுக்கப்புறம்தான் பாயையே விரிக்க முடியும். அப்படியே படுத்தாலும் உடனே தூங்கிட முடியாது. தண்ணிய போட்டுட்டு ரோடுல போறவனுங்க எங்க பொம்பளைப் புள்ளைங்க பக்கத்துல வந்து படுத்துக்கினு தொல்லை பண்ணுவானுங்க. அவனுங்கள விரட்டி விடணும்; எங்க புள்ளைங்கள காவல் காக்கணும். எல்லாப் பிரச்னைகளும் அடங்கி நாங்க தூங்கறதுக்கு விடிகாலை ஆயிடும். எங்களமாரி ரோட்டோரத்துல வாழ்ற பொம்பளைங்க பொழுது விடிஞ்சுகூட தூங்கறதுக்கு இதான் காரணம்’’ என்ற செல்வி, இதே வால்டாக்ஸ் ரோடு, பிள்ளையார் கோயில் சந்துத் தெருவோரத்தில்தான் பிறந்திருக்கிறார்.
இங்கேயே திருமணம் முடித்து, நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். ‘`புள்ளைங்க தலையெடுத்த பெறகுதான் வாடகைக்கு வீடு பார்க்கணும்’’ என்று செல்வி சொல்ல, வள்ளி அவரை நம்பிக்கைக்குறைவாகப் பார்க்கிறார்.
‘`நாங்க என்ன அடுப்பும் சிலிண்டருமா வெச்சிருக்கோம்? விறகடுப்புலதான் சமைக்கணும். அப்படி சமைச்சா, அக்கம் பக்கம் இருக்கிற பெரிய கடைங்கள்ல புகைபடியுதுன்னு திட்டுவாங்க’’ என்கிறார் பரிதாபமாக. கிழிந்த பாயில் அமர்ந்தபடி நாங்கள் பேசிக்கொண்டிருக்க, ‘`அக்கா...’’ என்றழைத்தாள் அந்த இளம்பெண். ‘`குளிக்கப்போற இடத்துலேயும் எங்களுக்குப் பாதுகாப்பு கிடையாதுக்கா.

‘`அப்படியே வாடகை வீடு பார்த்துக்கிட்டுப் போனாலும் தொடர்ந்து எங்களால வாடகை கொடுத்து இருக்க முடியலீங்க. ஏதோ ஐந்நூறு, ஆயிரம்னா பரவாயில்லீங்க. ஐயாயிரம், ஆறாயிரம் வாடகைக்கு நாங்க எங்க போறது? இதுல நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு அட்வான்ஸ் வேற. இங்க ஆம்பளை, பொம்பளை எல்லாரும் தினக்கூலிக்கும், வாரக்கூலிக்கும் போறவங்கதான். வாங்குற கூலி சாப்பாட்டுக்கும், கக்கூசுக்குக் கொடுக்கிறதுக்குமே சரியாப்பூடுது. காலங்காத்தால ஒண்ணுக்குப் போறதுக்கு அஞ்சு ரூபா, ரெண்டுக்குன்னா பத்து ரூபா, குளிக்கணும்னா அதுக்கொரு பத்து ரூபா. கையில் காசில்லைனா குளிக்கவே முடியாது. அழுக்குப் புடிச்சு நாறிப்போயிதான் கிடக்கணும். நாங்க சாப்பிடறதும் ஓட்டல் கடைங்கள்லதான். அப்புறம் எங்கிருந்து காசு சேர்த்து, அட்வான்ஸ் கொடுத்து வாடகை வீட்டுக்குப் போவறது?’’ - கேள்வியுடன் நிறுத்துகிறார் வள்ளி.
‘`நீங்களே சமைக்கலாமே?”
பாத்ரூம், மேலே தொறந்துதான் இருக்கும். குளிச்சிக்கிட்டே இருக்கிறப்போ திடீர்னு நிழலாட்டமா தெரியும். நிமிர்ந்து பார்த்தா, எவனாவது நாங்க குளிக்கிறதைப் பார்த்துக்கிட்டிருப்பான்; வீடியோ எடுத்துட்டிருப்பான். உயிரே போயிடும்க்கா’’ - பாதி வார்த்தைகளும் மீதி பரிதவிப்புமாகச் சொன்னவளின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன்.

 




ஒரு பெண் இடுப்பில் குடத்துடன், கையில் சோப்பு டப்பா, தோளில் சுடிதார் சகிதம் பொதுக் குளியலறைக்குக் கிளம்ப, ‘அப்பா... குளிக்கக் கிளம்பியாச்சா?’ என்று அவருக்குக் கையசைக்கிறார்கள் என்னுடன் அமர்ந்திருந்த பெண்கள். ‘`அந்தப் பொண்ணுதான் அவங்க குடும்பத்துக்கு அப்பா. இங்க மூத்ததா பொறந்த பொண்ணுங்கதான் ஸ்டீல் பட்டறையில வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்தறாங்க. அந்தப் பொண்ணுங்களை எல்லாம் நாங்க அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவோம்’’ என்றவர்கள், அவர்கள் குடும்பத்து ஆண்களைப் பற்றியும் சொன்னார்கள். 

 ‘எங்க ஆம்பளைங்க எல்லாம் குடி, போதைன்னு சீரழிஞ்சு கிடக்கிறாங்க. கேட்டா, ‘உழைக்கிறோம். உடம்பு வலிக்குது’னு சொல்வாங்க. இதாவது பரவாயில்ல, பல ஆம்பளைங்க பொண்டாட்டி, புள்ளைங்கள அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போயிடுவாங்க. இதெல்லாம் மீறி மிச்சம் மீதி இருக்கிற ஆம்பளைங்களையும்  இந்த ஏரியாவுல ஏதாவது பிரச்னைன்னா, போலீஸ்காரங்க இஸ்துக்கினு போயிடுவாங்க’’ என்று சொன்ன பெண்களின் கண்களில், அனுபவங்கள் கண்ணீராய் அரும்புகின்றன. ஆறேழு மாதங்களுக்கு முன்னால்தான் இந்தத் தெருவோர வாழ்க்கையில் இருந்து வாடகை வீட்டுக்குக் குடி போயிருக்கிறார் பிரேமா. ‘`என் பொண்ணுங்க வேலைக்குப் போனவுடனே வாடகை வீட்டுக்குப் போயிட்டேன். தெருவுல தூங்கினது, இருட்டுல குளிச்சது, தார்ப்பாய்க்குள்ள புருசன்கூடக் குடும்பம் நடத்தினதெல்லாம் என்னோட போகட்டும்ங்க’’ என்கிறார். 

ஒரு பெண் இடுப்பில் குடத்துடன், கையில் சோப்பு டப்பா, தோளில் சுடிதார் சகிதம் பொதுக் குளியலறைக்குக் கிளம்ப, ‘அப்பா... குளிக்கக் கிளம்பியாச்சா?’ என்று அவருக்குக் கையசைக்கிறார்கள் என்னுடன் அமர்ந்திருந்த பெண்கள். ‘`அந்தப் பொண்ணுதான் அவங்க குடும்பத்துக்கு அப்பா. இங்க மூத்ததா பொறந்த பொண்ணுங்கதான் ஸ்டீல் பட்டறையில வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்தறாங்க. அந்தப் பொண்ணுங்களை எல்லாம் நாங்க அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவோம்’’ என்றவர்கள், அவர்கள் குடும்பத்து ஆண்களைப் பற்றியும் சொன்னார்கள்.  

‘`எங்க ஆம்பளைங்க எல்லாம் குடி, போதைன்னு சீரழிஞ்சு கிடக்கிறாங்க. கேட்டா, ‘உழைக்கிறோம். உடம்பு வலிக்குது’னு சொல்வாங்க. இதாவது பரவாயில்ல, பல ஆம்பளைங்க பொண்டாட்டி, புள்ளைங்கள அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போயிடுவாங்க. இதெல்லாம் மீறி மிச்சம் மீதி இருக்கிற ஆம்பளைங்களையும்  இந்த ஏரியாவுல ஏதாவது பிரச்னைன்னா, போலீஸ்காரங்க இஸ்துக்கினு போயிடுவாங்க’’ என்று சொன்ன பெண்களின் கண்களில், அனுபவங்கள் கண்ணீராய் அரும்புகின்றன. ஆறேழு மாதங்களுக்கு முன்னால்தான் இந்தத் தெருவோர வாழ்க்கையில் இருந்து வாடகை வீட்டுக்குக் குடி போயிருக்கிறார் பிரேமா. ‘`என் பொண்ணுங்க வேலைக்குப் போனவுடனே வாடகை வீட்டுக்குப் போயிட்டேன். தெருவுல தூங்கினது, இருட்டுல குளிச்சது, தார்ப்பாய்க்குள்ள புருசன்கூடக் குடும்பம் நடத்தினதெல்லாம் என்னோட போகட்டும்ங்க’’ என்கிறார்.

‘`இங்க எல்லார்கிட்டேயும் வோட்டர் ஐ.டி இருக்குக்கா.  எங்களுக்கு அட்ரஸே இல்லன்னாலும் அதை மட்டும் தேடி வந்து கொடுத்துடுறாங்க. ஆனா, கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட் இல்ல. அது இருந்தா, எங்களுக்கான சலுகைகள்ல படிச்சி, எப்படியாவது மேலே வந்துடுவோம்’’ என்று எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையாகப் பேசுகிறார் சங்கீதா. (சாதி சர்ட்டிபிகேட்டை கிழித்தால் சாதி ஒழிந்துவிடும் )
‘`உங்க பொஸ்தகத்துல எங்களப் பத்தி வர்ற நேரத்துலயாவது எங்களுக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கணும்மா’’ என்றபடி வீட்டு வேலை, ஹோட்டல்களுக்குத் தண்ணீர் பிடித்துக் கொடுக்கிற வேலை, ஸ்டீல் பட்டறை வேலை என்று  என்னைச் சூழ்ந்து நின்ற பெண்கள் எல்லோரும் அவரவர்  வாழ்வாதாரத்துக்காகக் கலைய ஆரம்பித்தார்கள்.
சில்லிட்டது தூறல். மழை எல்லோருக்குமானதுதான். அதன் பாடுகள் சிலருக்கே!