Tuesday, May 19, 2020

பிறந்ததற்கு நன்றி என்பதே பிறந்தநாள் வாழ்த்து 
சார்லி சாப்ளினின் பிறந்தநாள் பகிர்வு 
நன்றி: ப. அதியமான் 

charlie chaplin
உங்கள் ஆழ்மனதை அழுத்திக்கொண்டிருக்கும் வலிகளை மறந்து, உடலைத் தின்றுகொண்டிருக்கும் பிணிகளை மறந்து, வயிற்றுவலியையும் கண்ணீரையும் பசியால் அல்லாது சிரிப்பால் வழங்கும் ஒருவரை அதிகப்படியாக என்னவென்று அழைக்கலாம், ரட்சகர்? அப்படியெனில் சார்லி சாப்ளின், மனித குலத்தின் ரட்சகர்.

அமெரிக்காவுக்குப் பிழைக்க வந்தவர், அமெரிக்க அதிபரை விஞ்சிய புகழும், பணமும் ஈட்டியவர். மடுவென நிரம்பியிருக்கும் கண்ணீரை, வடுவையே கற்களாக்கி பாதையமைத்துக் கடந்தவர். சினிமாவின் வரலாற்றை இவர் பெயரின்றி இரண்டடி கவிதையாகக்கூட இயற்ற இயலாது. இவரை ரசிக்காத சினிமா கலைஞர்களே கிடையாது. கறுப்பு, வெள்ளை மௌனப் படங்களில் தன் பயணத்தைத் தொடங்கியவர், இன்று அனிமேஷன் வடிவம் வரைப் பயணித்து வந்திருக்கிறார்.
charlie chaplin
சார்லி சாப்ளினுக்கு ஏட்டுக்கல்வி ஏறவில்லை. நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்கிறார். தாயின் வழியில் தானும் நடிப்புத்துறைக்கே செல்லலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில், எதேச்சையாக அவருக்கு நடிக்கும் வாய்ப்பொன்று அமைகிறது. சாப்ளினுக்கு இயல்பிலேயே நடிப்புத்திறன் இருக்கிறதென நம்புகிறவர் ஹென்னா. அவர் நம்பிக்கை சரிதான் எனும் வகையில், எவ்வித முன்னேற்பாடு இல்லாதபோதும் சிறப்பாக நடித்த சார்லியைக் கண்டு எல்லோரும் அதிசயித்துப்போனார்கள். மகனின் திறமை, ஹென்னாவுக்கு சிறு மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும், அதைவிட அவர் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் அவரை மனநோயில் தள்ளி மனநலக் காப்பகத்தில் கிடத்துகிறது. தன் மகன் நடிகனாக அவதரித்த அதே மேடைதான், ஹென்னா அரிதாரம் பூசிய கடைசி மேடையும். இருமுறை குணமடைந்து, மீண்டும் பாதிப்படைந்து மூன்றாவது முறையோ நிரந்தர மனநோயில் சிக்கிவிட்டார் ஹென்னா.

பிறகு, நடிப்பையே முழுநேரப் பணியாக எடுத்துக்கொண்டு இரவு நேர பார்களின் மியூசிக் ஹால் நிகழ்ச்சிகளில் நடித்து வந்த சாப்ளினின் நடிப்புத்திறமை படிப்படியாக வளர்ச்சி கண்டது. அனுபவம் அவருக்குப் பெரும் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. அதை அவர் உள்வாங்கிக்கொண்டார். அப்போது நாடக உலகில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த வில்லியம் ஜில்லடின் `ஷெர்லக் ஹோல்ம்ஸ்' நாடகத்தில் சாப்ளினுக்குப் பணிப்பையன் வேடம் கிடைத்தது. அதில் அநாயசமாக அடித்துநொறுக்க, சாப்ளினுக்கு மேலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அத்தனை வாய்ப்புகளையும் கலையின் மீது நேர்மையும், திறமையின் மீது நம்பிக்கையும்கொண்டு பயன்படுத்திய சாப்ளினுக்கு, சினிமா வாய்ப்பு தேடிவந்தது. அதன் பின் நடந்தவை பெரும் வரலாறு!
charlie chaplin
புகழ், பணத்தோடு சர்ச்சைகளும் ஒட்டிக்கொண்டு வந்தன. சார்லி, இளம்பெண்களைத் தன் காதல் வலைக்குள் சிக்கவைக்கிறார். இவர் ஒரு சமூகவிரோதி, படங்களில் தவறான கருத்துகளை முன்வைக்கிறார், குடியுரிமை ஏதுமின்றிப் பல வருடங்களாக அமெரிக்காவில் குடி கொண்டிருக்கிகிறார் எனப் பல்வேறு புகார்களைக் கிளப்பினார்கள். அவர் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கதறினார்கள். ஹிட்லர், பிறந்து சரியாக நான்கு நாள்கள் கழித்து சாப்ளின் பிறந்தார்.

இன்னும் ஆச்சர்யமாக, அந்த அரை இன்ச் மீசையே இருவருக்குமான அடையாளமாகிப்போனது. தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் அவல நிலையை மையமாக வைத்து தனது பாணியிலேயே `மாடர்ன் டைம்ஸ்' திரைப்படத்தை எடுத்தார் சார்லி. அப்படத்தை ஜெர்மனியில் திரையிட தடைவிதித்தார் ஹிட்லர். அதன் பின் ஹிட்லரை நையாண்டி செய்து இவர் எடுத்த `தி கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் ஹிட்லர் இருமுறை பார்த்ததாகச் சில செய்திகள் உண்டு.

அமெரிக்க அரசாலும், சில மக்களாலும் பல சர்ச்சைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்ட சாப்ளினின் அமெரிக்காவுடனான உறவு, ஒருகட்டத்தில் முறிந்தேபோனது. லண்டனுக்குப் படத்தை விளம்பரம் செய்யச் சென்றவரால், மீண்டும் அமெரிக்காவில் நுழைய முடியவில்லை. தான் சம்பாதித்ததைப் பெரும் அளவில் ஏழை எளிய மக்களுக்குச் செலவழித்து வந்த சாப்ளின் மீதமிருந்த சொத்துகளை விற்று சுவிட்சர்லாந்து சென்று அங்கு ஒரு மாளிகையில் குடியேறினார். அங்கிருந்தும் தனது படங்களை உருவாக்கி வந்தார். அப்படி, அவர் உருவாக்கிய `எ கிங் இன் நியூயார்க்' அமெரிக்காவின் அப்போதைய சமூகச்சுழலை அடித்துத் துவைத்தது. பிறகு 18 ஆண்டுகள் கழித்து 1971-ம் ஆண்டு அவரை நாட்டை விட்டு விரட்டிய அதே அமெரிக்கா, மீண்டும் அழைத்து சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கி கெளரவித்தது.
charlie chaplin
சாப்ளின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் அனைவரும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். சாப்ளின் அவர் வாழ்வில் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் நாம் நினைத்துப் பார்க்கமுடியாதவை. ஒரு மனிதனுக்கு ஏன் இத்தனை இன்னல்கள் எனக் கண்ணீர் சுரக்கவைப்பவை. உன்ன உணவின்றி லண்டனின் ஏதோவொரு தெருவோரத்தில் சுருண்டு அமர்ந்திருந்த ஒரு சிறுவன், தன் திறமையால், தன் உள்ளத்தால் மொத்த உலகையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறான். தன்னைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றுவரை நேர்மறை எண்ணங்களைப் பாய்ச்சிக்கொண்டிருக்கிறான். இப்படி ஒரு வாழ்க்கையை யாராலும் வாழ்ந்திருக்க முடியாது! பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி என்னவாகப் போகிறது, நீங்கள் பிறந்ததற்கு நன்றி வேண்டுமானால் சொல்கிறேன்.

நன்றி சார்லி சாப்ளின்..!

Wednesday, May 13, 2020



மீண்டு வா

 



















குடி எவர்க்கு கேடு?
குடிப்போர் உய்க்கிறார்
அவர் வினை அவரைச்சேரும்
அது 
இயற்கை நியதி நீதி எனில்
இவர் பொருட்டு
உற்றோரும் பெற்றோரும்
என்ன வினையாற்றினர்?
அவரால் இத்துயர் பெற!
இது நீதியா, நியதியா?

துயருரும் பெண்டிர் 
அவரீன்ற பிள்ளைகளும்
ஐயகோ! அவ்வளவு பாவம்!

பிள்ளைச்சாபம் பெறும்
பெற்றோர் 
சூனியம் பிடித்தே வாழ்வோர் 
என்று இன்னும் ஒருமுறை
சொல்ல வேண்டுமா?

மயக்கம் தெளிந்த
சமயத்திலாவது
முந்தி சிந்தி 
முற்றும் குடித்தோரே!
முப்போதும் குடிப்போரே!
இப்போதிருந்தே!

அப்போதுதான் எப்போதாவது 
தப்பாது தப்பை
திருத்த வாய்ப்பு பெறுவாய்

எது மயக்கம்?
மகிழ் வாழ்வு மயக்கமென்று
மனம் மாறு!? மாற்று!?

- சூ.ரெக்ஸ் இக்னேசியஸ்
என்னத்த சொல்ல 

A few people killed by India's ruthless coronavirus lockdown ...

பச்ச புள்ள பாலுக்கழுதா
பாட்டில் மீதிய குடுக்கலாம்
சோறில்லாம சனம் அழுதா
கைதட்டி காப்பாத்திக்கலாம்
அப்பன் குடிச்சுபுட்டு அடிச்சா
வெளக்கு வச்சு வெரட்டிரலம் 

ஆனா என்ன செய்ய?

கவர்மெண்டு நடத்தனுமாம்
காசு அதுக்கு வேணுமாம்

கபசுர நீர குடிச்சுகிட்டா
கொரானா ஓடி போய்ருமாம்

அழுவாத பாப்பா
அத்தனையும் தீரும்.
ஆண்டவன்னு
ஒருத்தன் இருந்தா
அல்லாத்தையும் பாத்துக்குவான்

நாம எல்லாரும்
வீட்டுக்குள்ளயே ஒக்காந்து
மாயச்சோறாக்கி தின்னுதீத்து 
மக்கி மாய்ஞ்சு போறதும்
தேசப்பற்றுதேன் 

- சூ. ரெக்ஸ் இக்னேசியஸ்
கருத்தின்  கேலியின்  கனம் 
நன்றி: தமீம் தந்த்ரா 
















மதுவந்தி கருத்துடன் மாறுபடலாம் ஆனால் அவர் நாடகத்தை/நடனத்தை 
கிண்டல் செய்யலாமா? என்று பலரும் கேட்கிறார்கள்.
சுருக்கமாக சொன்னால்
'மாமிசம் சாப்பிடக்கூடாது' என்பது ஒரு கருத்து.
'மாமிசம் சாப்பிடலாம்' என்பதும் ஒரு கருத்து.

மாமிசம் சாப்பிடுபவர்களை கொல்வதில் என்ன தவறு? என்று சொல்வது கருத்தல்ல அது வன்மம்/வன்முறை.
எச்.ராஜா, சம்பத், மாரிதாஸ் மதுவந்திகெல்லாம் முதலில் கருத்து என்று ஒன்றே கிடையாது, அவர்கள் சொல்வது கருத்தும் கிடையாது. அது முழுக்க முழுக்க  சகமனிதனை வஞ்சிக்கும் வன்முறை.

மேலும் ஒரு நிதர்சனத்தை புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தலைகீழ் நின்றாலும் எச். ராஜா மற்றும் மதுவந்தி போன்றவர்களின் வன்மத்திற்கு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமுதாயத்தில் ஒருபோதும் தண்டனையும் கிடைக்காது.

அவர்களின் விஷமத்தை தடுக்க பலவழிகள் உண்டு 

அதில் உடல்/பாலியல் வகையில் கேலி செய்து அவர்களை தாக்காமல் அவர்களின் செயல்களை கேலி செய்து அவர்களை காமெடி பீஸ் ஆக மாற்றி அவர்களின் "credibility"யை குறைப்பதும் ஒரு வித போராட்டம்தான்

நான் வாழவே கூடாது என்று துப்பாக்கி முனையில் என்னை மிரட்டும் ஒருவனை கேலிகூட செய்யக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் "என்ன மாறியான comfort zoneல் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்கள்தான் உங்களை கேள்விகேட்டு கொள்ளவேண்டும்.

இதில் தெளிவாக இருங்கள்

Our conscience is clear, So thank you very much.
Thameem Tantra.

பகிரி  பரப்பும் பதில் வினாவும் 

பகிரி பரப்பு 

எதிர்வரும் ஆண்டு முதல்
இவர் சிறந்த விவசாயி    என்று  ஒரு தேசிய விருது கொடுங்கள்
இவர் சிறந்த நெசவாளி  என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்.
இவர் சிறந்த மருத்துவர் என்று  ஒரு தேசிய விருது கொடுங்கள்.
இவர் சிறந்த சுகாதார பணியாளர் என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்.
இவர் சிறந்த துப்புரவு பணியாளர்
என்று ஒரு தேசிய விருது கொடுங்கள். இதுபோல ஒவ்வொரு சமுக பணியாளர்களுக்கும் தேசிய விருது கொடுங்கள். நாட்டுக்கு  எந்த பயனும் 
விளைவிக்காத திரைப்படத்துறைக்கு தேசிய விருதுகள் கொடுப்பதை விட
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமுதாயத்திற்காகவும் பாடுபடும்
இவர்களுக்கு கொடுப்பது  எவ்வளவோ மேலானது?

உண்மை எனில் பகிரவும்

Sanitation workers in Mumbai's Colaba sent home without notice or ...

பதில் வினா

இரக்கமுள்ள இந்தியரே!

மேலே சொன்னது போல் பதிவுகள் வந்துகொண்டு இருக்கு, பரவத்தொடங்கி
உள்ளன. விருது எருது கருது என்று எதுவும் செய்ய வேண்டாம். ஒன்றே ஒன்று மட்டும் ஆரம்பித்து செய்ங்க. அது என்னவென்றால்?

துப்புறவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்து மற்ற அரசு ஊழியர்களைப்போல் PF பென்சன் என்று பிடித்தம் உட்பட Monthly Basic Pay 30000 ரூபாய் என்று அறிவியுங்கள்

அப்புறம் பாருங்க நம் இந்திய சமூகத்தில் என்னென்ன மாற்றம் நிகழும் என்று ஏனெனில்  விருதுகளால் வயிறு நிரம்பாது. பூ போட்டு கும்பிடுவதால்
பைக்கு பணம் வராது. டிவி செய்திகளில் வரும் புகழும் பெருமையும் மேலே சொன்ன அனைவருக்கும் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அப்புறம்
கொரோனா முடிந்ததும். பூ போட்ட அத்தனை பேரும். இதே போல் மரியாதையை , செவிலியருக்கும் , மருத்துவருக்கும், விவசாயிக்கும், சுகாதார பணியாருக்கும், துப்புரவு பானியாளருக்கும் தருவோமா என்று பார்ப்போம்

எத்தனை பேர் இதை ஆதரிக்கிறீர்கள்?


அமெரிக்காவில் அமர்க்களமாய் குறள் பறை முழங்க தாலியில்லா திருமணம்!

பறையிசையுடன் திருமண நிகழ்வு
`














பஸ் லேட்டாயிடுச்சு... அதனால, தாலி கட்டற நேரத்துக்கு வர முடியல' என்று ஒவ்வொரு திருமணத்தின்போதும் உறவினர்களில் ஒருவராவது சொல்வதைக் கேட்டிருப்போம்.

திருமணத்தின்போது ஏராளமான சடங்குகள், பழக்கங்கள் இருந்தாலும் தாலிக்கட்டுவதே முதன்மையாகப் பார்க்கப்படும். ஆனால், தமிழகத்தில் மாலை மாற்றி, உறுதிமொழி ஏற்கும் சுயமரியாதைத் திருமணப் பழக்கம் சுமார் நூறாண்டுகளாக இருக்கிறது. சி.என்.அண்ணாதுரை முதல்வரானபோது, இச்சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என்று அறிவித்தார்.

சுயமரியாதை திருமணங்கள் எல்லாம், திராவிட இயக்கங்களோடு தொடர்பிலிருக்கும் குடும்பங்களில் மட்டுமே நடக்கின்றன என்ற பேச்சை உடைந்தெறிந்திருக்கிறது ராம் செல்லமுத்து - அகிலா திருமணம்.

ராம் செல்லமுத்து - அகிலா திருமணம் தாலி, மந்திரச் சடங்குகள் இல்லாது நடைபெற்றிருக்கிறது. மந்திரங்களுக்குப் பதிலாக ஐந்து திருக்குறள்கள் அடங்கிய பாடல்களை ஒலிக்கவிடுவது, மேளம், நாகஸ்வரத்துக்குப் பதிலாக பறை இசையை வாசித்தல், மணஏற்பு உறுதிமொழியாக இந்தச் சமூகத்துக்குத் தம்பதியாக என்ன செய்யப் போகிறோம் என்பதைச் சொல்வது என்று தனது திருமணத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.

கரூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராம் செல்லமுத்து. இவர், அமெரிக்காவில் யெஸ்பாஸ் க்ளவுடு (spos cloud) எனும் சாஃப்ட்வேர் கம்பெனியைச் சொந்தமாக நடத்தி வருகிறார். இவரின் தந்தை செல்லமுத்து, பிரபல மருத்துவர். ராம் கரம் பிடித்திருக்கும் அகிலாவுக்குச் சொந்த ஊர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டி. இவரும் அமெரிக்காவிலுள்ள பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற இவர்களின் இந்த வித்தியாச திருமணம், பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நான் பொறியியல், எம்.எஸ். படித்தது எல்லாம் இந்தியாவில்தான். பத்து வருஷத்துக்கு முன் மைக்ரோசாஃட் கம்பெனியில் வேலை கிடைச்சு, அமெரிக்காவுக்கு வந்தேன். இரண்டு வருஷத்துலேயே சொந்தமா யெஸ்பாஸ் க்ளவுடு சாஃப்ட்வேர் கம்பெனியைத் தொடங்கிட்டேன். நினைச்ச வாழ்க்கை; கனவை எட்டிப்பிடித்த திருப்தி எல்லாம் இருந்தாலும், திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. திருமணப் பந்தம் நம்ம கனவுகளைச் சிதைச்சிடுமோ என்ற பயம்தான். அகிலாவுக்கும் அத்தகைய எண்ணம்தான். நண்பர்கள் மூலமா மூன்று வருடங்களுக்கு முன்புதான் அகிலா பழக்கமானாங்க. பழகிய சில நாள்கள்லேயே, அவங்களை எனக்கும், என்னை அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு. அதுக்குக் காரணம் இருவரின் சிந்தனைகளும் ஒத்திசைவா இருந்ததுதான். இரண்டு வீட்டுலயும் கொஞ்சம் யோசித்துதான் எங்க காதலை ஏத்துக்கிட்டாங்க. மூன்று வருடங்கள் காதலித்துவிட்டு, இப்போது திருமணம் பண்ண முடிவெடுத்தோம்.

ஆனால், தமிழ் முறைப்படியும், தாலி இல்லாமலும் திருமணம் பண்ண முடிவு பண்ணினோம். அதை ஒரு விழிப்புணர்வா மாற்றவும் விரும்பினோம். அதனால், கரூரைவிட அமெரிக்காவில் அப்படி பண்ணினா, உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் பார்வைக்குப் போகும்னு நினைத்தோம். அதனால், இங்கேயே திருமண ஏற்பாடுகளைச் செய்தோம். கரூரிலிருந்து நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்தாங்க. இங்க பழக்கமான நண்பர்கள் 200 பேர் எங்க திருமணத்துக்கு வந்தாங்க. என்னதான் நாம் கலாசார வளர்ச்சிப் பற்றிப் பேசினாலும், ஆணோடு பெண்ணும், பெண்ணோடு ஆணும் நட்பா பழகுறதையே இன்னும் தவறாகப் பார்க்கும் சூழல் நம்மிடம் இருக்கிறது. அதை முதலில் உடைக்க நினைத்தோம்.

அதனால், எனக்கு மணமகன் தோழியாக பவித்ரா என்பவரும், அகிலாவுக்கு மணமகள் தோழனாக ரவிக்குமார் என்பவரும் இருந்து, எங்களை இருவரும் அறிமுகப்படுத்தினாங்க. தாலி அணிவிக்காமல், அகிலாவுக்கு மாலை மட்டும் அணிவித்தேன்; அவங்களும் எனக்கு மாலை அணிவித்தாங்க. திருவள்ளுவர் சிலைகளை வைத்து, அதற்கு முன்பாக சம்ஸ்கிருத மந்திரங்களுக்குப் பதிலாக, ஐந்து திருக்குறள்கள் அடங்கிய பாடலை ஒலிக்கவிட்டோம்.
அதோடு, சமீபகாலமாக அமங்கள இசையாக மாற்றிவிட்ட பறை இசையை எல்லோரும் மங்கள இசையாக இசைத்தோம். அகிலாவும் பறை வாசித்தாங்க. தொடர்ந்து, ஜாலியான போட்டிகள், நடனம் என்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். வந்திருந்த எல்லோருக்கும் தென்னிந்திய உணவுகளைப் பரிமாறினோம். திருமணத்துக்கு வந்திருந்த யாரும் எங்களுக்கு பரிசுப்பொருள்கள் எதையும் தரக் கூடாது என்று சொல்லியிருந்தோம்.
ஆனால், நாங்கள் வந்திருந்த அனைவருக்கும் எங்க திருமண பரிசாக, சூழலுக்குக் கேடுதராத மெட்டீரியலால் ஆன வாட்டர் பாட்டிலைத் தந்தோம். இதன்மூலமாக, அனைவரையும், `பிளாஸ்டிக் பயன்பாட்டை 100 சதவிகிதம் தவிருங்கள்' என வலியுறுத்தினோம். எங்க திருமணத்தை அர்த்தபூர்வமாக நடத்தியதில் எனக்கும், அகிலாவுக்கும் அளவில்லாத ஆனந்தம்" என்றார், மகிழ்ச்சியாக.

தொடர்ந்து பேசிய, மணப்பெண் அகிலா, "தமிழ்வழி நடக்கும் திருமணங்களிலேயே பலரும், மணமக்கள் உறுதியேற்கும் விஷயத்தையே டெம்ப்ளேட்டாக வைத்திருப்பார்கள். அங்கேயும் நாங்க புதுமை பண்ண நினைத்தோம். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம் எல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிதான். அதுவும், `நமது குடும்பம்' என்ற சுயநல வட்டத்துக்குள் மட்டுமே உள்ள நிலைகள் அவை. அதைத்தாண்டி, `இந்தச் சமூகத்துக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம்' என்பதை நாங்கள் இருவரும் முடிவு செய்து அதை தனித்தனியாக நாங்களே எழுதி, அதையே மணமக்கள் உறுதிமொழி ஏற்பாக வாசித்தோம். `சமூக விஷன்' என்ற பெயரில் அதை முன்மொழிந்தோம்

ராம் செல்லமுத்து, டீன் போர்ஸ் (teen force) ங்கிற அமைப்பைத் தொடங்கி, அதன்மூலமாக 16 வயதிலிருந்து 23 வயது வரை உள்ள மாணவர்களுக்கு உதவப்போறதா உறுதிமொழி எடுத்துக்கிட்டார். அதற்காக, தனது சொத்தில் 50 சதவிகிதத்தைச் செலவிடப் போறதா அறிவித்ததும், பலரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ், அந்தக் கம்பெனி பொறுப்பில் இருந்து விலகி, தனது சொத்தில் பெரும்பகுதியை உலக அளவில் கல்விக்காகச் செலவிடப் போறதாக அறிவித்தார். என் கணவரும் தனது சொத்தில் 50 சதவிகிதத்தைக் கல்விக்காக அறிவித்த நொடியில், என் கணவர் மீதான காதல் பன்மடங்கு கூடியது.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் போட்டி யுகத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு திறன்களை வளர்த்துக்கொள்ளும் வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. குறிப்பாக, கிராமப்புற அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. இது ஒருபக்கம் என்றால், அடிப்படைக் கல்வியைக் கற்பதற்கே அவர்கள் நிதிச்சுமையில் தத்தளிக்க வேண்டிய நிலைமை. இதை மாற்ற, பல்வேறு அமைப்புகள், பயிற்சியாளர்கள் மூலமாக தமிழக மாணவர்களுக்குப் போதிய திறன்களை வளர்க்க என் கணவர் முடிவு செய்திருக்கிறார். அதேபோல், மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே ஆன்லைன் மூலமாக நல்ல சம்பளத்தில் பார்ட் டைம் வேலை பார்க்க வசதி ஏற்படுத்தி தர இருக்கிறார்.

பல கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகளிடம் அணுகி, அதற்கான வாய்ப்பை உருவாக்க இருக்கிறார். இது அவர் முன் வைத்த சமூக விஷன். அதேபோல், நான் வைத்த சமூக விஷன் என்னவென்றால், சமூகத்தில் சமத்துவத்தை உருவாக்கப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். சாதி, மதம், ஆண், பெண், பொருளாதாரம் என்று இந்தச் சமூகம் பிரிந்து கிடப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், அதெல்லாம் வேண்டியதில்லை; நாம் அனைவரும் மனிதர்கள்; நமக்கு எல்லோரும் சமமே' என எல்லோருக்குள்ளும் மனிதநேயத்தை, அன்பை விதைப்பதற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்ய இருக்கிறேன்" என்றார், உறுதி மேலிட!

மேகமாய் வந்து மறைந்த கவிஞர் விஜயன் 

- இயக்குநர் எழில்

மேகமாய் வந்து போனவன்.. காலமானார் ...
மறைந்த பாடலாசிரியர் முத்து விஜயனிடம் பணியாற்றிய அனுபவங்களை இயக்குநர் எழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 

துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் பாடல்கள்தான். அதிலும் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடலைப் பாடாதவர் யாரும் இருக்க முடியாது. இன்றைக்கும் அந்தப் பாடலுக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' பாடலும் இன்றளவும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. தவிர, 'தென்னவன்', 'வல்லதேசம்', 'நெஞ்சினிலே', 'கள்வனின் காதலி' உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் நேற்று காலமானார். அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் எழில். 

நான் உதவி இயக்குநரா இருக்கும்போதிலிருந்தே முத்து விஜயனைத் தெரியும். வையாபுரிதான் என் ரூமுக்கு அவரை கூட்டி வருவார். அப்போவே நிறைய கவிதைகள் எழுதுவார். ஏழ்மையா இருந்ததுனால கவிஞருக்கு உண்டான எந்த விஷயமும் அவர் தோற்றத்துல இருக்காது; ரொம்பவே சாதாரணமா இருப்பார். 'கவிஞர்னா கொஞ்சம் பந்தாவா இருக்கணும். அதெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோ'னு சொல்லுவேன். ஆனா, அதைப் பண்ணமாட்டார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் சாரையும் வைரமுத்து சாரையும் கமிட் பண்ணிட்டேன். உனக்கு இதுல வாய்ப்பு இருக்குமானு தெரியலை. இருந்தாலும் ஒரு டம்மி வரிகள் எழுதிக்கொடு'னு சொல்லியிருந்தேன். வைரமுத்து சார் கொஞ்சம் பிஸியா இருந்ததுனால ஒரு பாடலை அவரால் எழுத முடியலை. அப்போ முத்து விஜயன் எழுதின டம்மி வரிகளை ராஜ்குமார் சார்கிட்ட கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுதான் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடல். அந்தப் பாடல் இந்தளவுக்கு ஹிட்டாகும்னு யாரும் நினைக்கலை.

இதுக்குப் பிறகு, நம்மளால இதே மாதிரி பாடல்களைக் கொடுக்க முடியுமானு அவருக்குள்ள பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. அப்படியே குடிப்பழக்கமும் வந்திடுச்சு. நிறைய பேர், அவங்ககிட்ட ஒண்ணுமே இல்லன்னாலும் ரொம்ப பாசிட்டிவா இருப்பாங்க. ஆனா, இவர்கிட்ட எல்லாத் திறமையும் இருந்தும், நெகட்டிவா யோசிக்கிறதுனால இவருக்குள்ள தாழ்வு மனப்பான்மை அதிகமாகிடுச்சு. என்னுடைய 'பெண்ணின் மனதைத் தொட்டு' படத்துல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா' பாடல்ல 'நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே...'னு ஒரு வரி எழுதியிருப்பார். அதைப் பார்த்துட்டு கவிஞர் தாமரை என்கிட்ட இவரைப் பத்தி புகழ்ந்து பேசுனாங்க. இந்தப் படத்துக்கு கம்போஸிங் பண்ண மாமல்லபுரம் போயிருந்தோம். அந்த நேரத்துல என் அப்பா இறந்துட்டார். அப்போ என்கூடவே ஊருக்கு வந்து ஒரு வாரம் இருந்து என்னை அந்த சோகத்துல இருந்து மீட்டார் முத்து விஜயன்.

இவருக்கு அடுத்தடுத்து பாடல்கள் எழுத படங்கள் கமிட் பண்ண இந்த ரெண்டு ஹிட் பாடல்கள் போதும். ஆனா, இயக்குநர்களை அணுகுறதுல தயங்குவார். யார்கிட்டேயும் அதிகமா பேசமாட்டார். அந்தத் தயக்கம், பயம் எல்லாமே குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வெச்சது. அதுக்குப் பிறகு, என்கூட அவர் தொடர்புலயே இல்லை. நானும் கொஞ்ச வருடங்கள் படங்கள் பண்ணாமல் இருந்தேன். நா.முத்துக்குமாருக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். 'தீபாவளி' படம் பண்ணும்போது நா.முத்துக்குமார் என்கிட்ட, 'முத்து விஜயனுக்கு ஒரு பாட்டு கொடுங்க'னு சொன்னார். ஆனா, யுகபாரதியை கமிட் பண்ணி வெச்சிருந்ததுனல கொடுக்க முடியாம போயிடுச்சு. வெளியே போய் நிறைய பாடல்கள் எழுதிட்டுதான் இருந்தார். 

சரவணன் இருக்க பயமேன்' பண்ணிட்டு இருந்தப்போ மறுபடியும் வந்தார். அவர் தோற்றம் மாறி இருந்தது. குடிப்பழக்கத்தை விட்டிருந்தார், ரொம்பவே தெளிவா இருந்தார். அவர் ரொம்ப நம்பிக்கையா பேசுனதைப் பார்த்து எனக்கு சந்தோஷமா இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு, பிரசன்னானு ஒரு இசையமைப்பாளரை கூட்டிடுட்டு வந்தார். முத்து விஜயனுடைய ப்ளஸ்ஸே கிராமத்து படங்களுக்கு பாடல் எழுதுறதுதான். 'அதுக்கு தகுந்த மாதிரி ஒரு படம் அமையணும். நிச்சயமா மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்'னு பிளான் பண்ணிட்டு இருந்த சமயத்துல இப்படி ஆகிடுச்சு.

குடிப்பழக்கத்தை விட்டிருந்தவர் மறுபடியும் ஆரம்பிச்சதும் மஞ்சள் காமாலை வந்திருக்கு. அதைக் கவனிக்காமல் குடிச்சிக்கிட்டே இருந்ததுதான் அவர் இறப்புக்குக் காரணம். மதுவும் மஞ்சள் காமாலையும்தான் சினிமாவுடைய சாபக்கேடு. ஏகப்பட்ட பேர் இதனாலதான் இறந்திருக்காங்க. அவர் பாடலாசிரியர் சங்கத்துல தங்கியிருந்தார்னு இன்னைக்குதான் எனக்குத் தெரியும். ஆனா, கடைசி ஆறு மாசத்துல அவருடைய வாழ்க்கையே மாறி, இப்போ எங்களை விட்டுப் போனது ரொம்ப வருத்தமா இருக்கு" என்றார் எழில்!