பகிரி பரப்பும் பதில் வினாவும்
பகிரி பரப்பு
எதிர்வரும் ஆண்டு முதல்
இவர் சிறந்த விவசாயி என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்
இவர் சிறந்த நெசவாளி என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்.
இவர் சிறந்த மருத்துவர் என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்.
இவர் சிறந்த சுகாதார பணியாளர் என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்.
இவர் சிறந்த துப்புரவு பணியாளர்
என்று ஒரு தேசிய விருது கொடுங்கள். இதுபோல ஒவ்வொரு சமுக பணியாளர்களுக்கும் தேசிய விருது கொடுங்கள். நாட்டுக்கு எந்த பயனும்
விளைவிக்காத திரைப்படத்துறைக்கு தேசிய விருதுகள் கொடுப்பதை விட
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமுதாயத்திற்காகவும் பாடுபடும்
இவர்களுக்கு கொடுப்பது எவ்வளவோ மேலானது?
உண்மை எனில் பகிரவும்
பதில் வினா
இரக்கமுள்ள இந்தியரே!
மேலே சொன்னது போல் பதிவுகள் வந்துகொண்டு இருக்கு, பரவத்தொடங்கி
உள்ளன. விருது எருது கருது என்று எதுவும் செய்ய வேண்டாம். ஒன்றே ஒன்று மட்டும் ஆரம்பித்து செய்ங்க. அது என்னவென்றால்?
துப்புறவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்து மற்ற அரசு ஊழியர்களைப்போல் PF பென்சன் என்று பிடித்தம் உட்பட Monthly Basic Pay 30000 ரூபாய் என்று அறிவியுங்கள்
அப்புறம் பாருங்க நம் இந்திய சமூகத்தில் என்னென்ன மாற்றம் நிகழும் என்று ஏனெனில் விருதுகளால் வயிறு நிரம்பாது. பூ போட்டு கும்பிடுவதால்
பைக்கு பணம் வராது. டிவி செய்திகளில் வரும் புகழும் பெருமையும் மேலே சொன்ன அனைவருக்கும் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அப்புறம்
கொரோனா முடிந்ததும். பூ போட்ட அத்தனை பேரும். இதே போல் மரியாதையை , செவிலியருக்கும் , மருத்துவருக்கும், விவசாயிக்கும், சுகாதார பணியாருக்கும், துப்புரவு பானியாளருக்கும் தருவோமா என்று பார்ப்போம்
எத்தனை பேர் இதை ஆதரிக்கிறீர்கள்?
No comments:
Post a Comment