Monday, September 6, 2021

அயோத்திதாசப் பண்டிதர் யார், அவர் ஏன் 
திராவிடன் - தமிழன் என்ற அடையாளத்தை முன்னெடுத்தார்?
 நன்றி - கௌதம சன்னா, ஆனந்த விகடன்

அயோத்திதாசப் பண்டிதர்

'திராவிடன்', 'தமிழன்' என்கிற இரண்டு அரசியல் அடையாளச் சொற்களைத் தமிழகத்துக்கு வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் பண்டிதர் அயோத்திதாசர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

3.9.2021 தமிழக சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்கதுதான். அயோத்திதாசப் பண்டிதருக்கு வடசென்னையில் ஒரு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்ததுடன் நில்லாமல் பண்டிதர் முன்வைத்த இரண்டு வரையறைகளை வலியுறுத்திப் பேசினார்.

'தமிழன்', 'திராவிடம்' என்கின்ற சொற்களைத் தவிர்த்து தமிழக அரசியலைப் பேச முடியாது என்றும், இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றியவர் பண்டிதர் அயோத்திதாசர்தான் என்கின்ற வரலாற்றுக் குறிப்பையும் சொல்லி, திருக்குறளுக்கு அவரது பாட்டனார் ஆற்றிய பணிகளைப் பற்றியும் விவரித்தார்.
ஸ்டாலின்

இக்காலத்தில் இந்தக் கருத்து மிகப் புதிதாக தோன்றலாம். திராவிடம் என்ற சொல்லைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் ஒருபுறமும் அதை ஆதரிப்பவர்கள் மறுபுறமும் இருக்கின்ற அதே நேரத்தில் தமிழன் என்கிற சொல்லை உயர்த்திப் பிடிப்பவர்கள் இருதரப்பிலும் இருக்கின்றார்கள். திராவிடம் என்கின்ற சொல்லைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் அச்சொல் திராவிட இயக்கத்தின் கொடை என்கின்ற மூட நம்பிக்கையில் இருக்கின்ற காரணத்தினாலும், திராவிட அரசியல் கட்சிகளை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தினால் வரலாற்று திரிபு செய்து தங்களது எதிர்ப்பை கட்டமைத்துக் கொள்கின்றார்கள்.

அதேநேரத்தில் திராவிடக் கருத்தியலை முன்வைத்தவர்களும் திராவிடம் என்ற சொல்லை அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்திய பண்டிதரின் பங்களிப்பையும் நீண்டகாலம் பேசாமலேயே இருந்தார்கள்.

தமிழ்த்தேசியம் பேசுபவர்களுக்கும் திராவிட தேசியம் பேசியவர்களுக்கும் ஒரு மறைக்கப்பட்ட பொருளாகவே பண்டிதர் அயோத்திதாசர் இருந்து வந்தார். இப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த தடைகளை எல்லாம் உடைத்து பண்டிதருக்கு உரிய அரசு அங்கீகாரத்தை வழங்கி இருக்கின்றார்.

'திராவிடன்', 'தமிழன்' என்கிற இரண்டு அரசியல் அடையாளச் சொற்களைத் தமிழகத்துக்கு வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் பண்டிதர் அயோத்திதாசர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. எனினும் திராவிடர் என்ற சொல்லை பண்டிதர் அயோத்திதாசருடன் பணியாற்றிய ரெவரெண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் 1887-ம் ஆண்டு 'திராவிட பாண்டியன்' என்கின்ற இதழ் தொடங்கியதோடு 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி உருவாக்கியிருந்தார். 'திராவிட பாண்டியன்' இதழில் பண்டிதர் அயோத்திதாசரின் பங்கும் இருந்தது.
அயோத்திதாசர்

அதற்குப் பிறகு 1891-ம் ஆண்டு 'திராவிட மகாஜன சபை'யினைப் அயோத்திதாசர் தொடங்கினார். ஏற்கனவே ரெவரண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மட்டுமே இயங்கி மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு அவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது. இருந்தாலும் மாலை நேரப் பள்ளிகள் என்கிற செயல்பாடு தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு விரிந்து பரவின. இருந்தபோதிலும், அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபையை பெரும் இயக்கமாக கட்டமைத்தார். அந்த அமைப்பு அன்றைக்கு உருவான காங்கிரஸ் அமைப்போடு நேரடியாகவே மல்லுக்கு நின்றது. பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு மனுக்கள் மூலமாக கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தங்களை கொடுத்தது.

எனினும் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டு விடைத்தேட வேண்டியுள்ளது. ஏன் பண்டிதர் அயோத்திதாசர் திராவிடன் என்ற அடையாளத்தை அப்போது முன்னெடுத்தார்?

இந்த அடையாளத்தை முன்னெடுத்த காலத்தில் மூன்று விதமான இயக்கப் போக்குகள் தமிழகத்தில் உருவாகியிருந்தன. ஒன்று காங்கிரஸ் தலைமையில் உருவாகியிருந்த உயர் சாதியினருக்கான ஒருங்கிணைப்பு. இரண்டாவது, ஆதிதிராவிட மகாஜன சபை; இது நேரடியாகவே தலித் மக்களை முன்னிறுத்தி செயல்பட்ட ஓர் அமைப்பு. மூன்றாவது பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கிய திராவிட மகாஜன சபை. ஏறக்குறைய சம காலத்தில் உருவான இந்த இயக்கங்களினால் தமிழகம் மட்டுமன்றி இந்திய அரசியலுக்கான திசை போக்கு தீர்மானிக்கப்பட்டது. மண்ணின் மைந்தர்களாக திராவிடர்களும், சமூக அதிகாரத்தைக் கைகொண்டவர்களாகவும் ஆரியப் பண்பாட்டை கடைபிடிப்பவர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்ட காங்கிரஸ்காரர்கள்.

இதில் தமிழ்நாட்டுக்கென பொது அடையாளம் ஏதும் முன் வைக்கப்படாத சூழலில்தான் திராவிடர் என்கின்ற அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் முன்வைத்தார். அதுமட்டுமின்றி 'பூர்வ தமிழ்க் குடி' என்றும் 'ஆதித்தமிழர்கள்' என்கின்ற அடையாளத்தையும் முன்வைத்து அவற்றை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதே முன்வைத்திருந்தார் அயோத்திதாச பண்டிதர்.
அயோத்திதாசப் பண்டிதர்

அதற்குப் பிறகு இடையில் பல்வேறு விதமான அரசியல் சமூக மத நடவடிக்கைகளில் பண்டிதர் அயோத்திதாசர் ஈடுபட்டிருந்தாலும் தமது திராவிடன் - பூர்வ தமிழன் - ஆதிதமிழன் என்கிற அடையாள முன்னெடுப்பை அவர் கைவிடவே இல்லை.

1897 பிற்பகுதியில் தென்னிந்திய பவுத்த சங்கம் அல்லது தென்னிந்திய சாக்கிய சங்கம் என்கின்ற பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை அவர் உருவாக்கியிருந்தார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தர்மபாலா (இவர்தான் இந்தியாவில் மகாபோதி இயக்கத்தை தொடங்கியவர்) சிங்காரவேலர் (தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படுபவர்) பேராசிரியர் லட்சுமி நரசு (கிறித்துவ கல்லூரி பேராசிரியர்) இந்த பெரும் அறிஞர்கள் இணைந்து பௌத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.

அனகாரிக தர்மபாலா வடநாட்டில் பௌத்தத்தை மீட்க வேண்டும் என்றும், பிற மதத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த புத்தர் ஞானம் அடைந்திருந்த புத்தகயாவை மீட்க வேண்டும் என்று கிளப்பிப் போய் பணியாற்றத் தொடங்கினார். சிங்காரவேலர் இடதுசாரியாக மாறிக் கொண்டிருந்தார். இருந்தும் பண்டிதர் மறைந்த 1914 வரை அவருடன் தொடர்பில் இருந்தார். பேராசிரியர் லஷ்மி நரசு பௌத்த பரப்புரையுடன் மட்டும் நின்றார்; அறிவுத் தளத்தில் செயல்பட்டார். ஆனால் பண்டிதர் அயோத்திதாசர் மட்டும்தான் பௌத்த மறுமலர்ச்சியை இயக்கமாக கட்டமைத்து அதைச் சாதித்து காட்டினார். எனவே சுமார் 800 ஆண்டுகள் தமிழகத்தில் மறைந்து போயிருந்த பௌத்த மதத்தை மீட்டெடுத்த பெருமை பண்டிதர் அயோத்திதாசரையே சேரும்.

தமது இயக்கத்துக்கென தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் பௌத்த கோயில்கள் எனப்படும் விகாரைகளை உருவாக்கினார். சென்னை பெரம்பூரில் அதற்கென தலைமை பௌத்த விகாரையினை உருவாக்கினார். பெரம்பூர் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள நெல்வயல் சாலையில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய பௌத்த சங்க விகாரத்தை நாம் காணமுடியும்.
ஒரு பைசா தமிழன்

1907-ம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்கிற இதழைத் தொடங்கினார் அயோத்திதாசர். இந்த இதழ் ஓராண்டு காலம் நடைபெற்றது. ஒரு பைசா தமிழன் என்றால் ஒரு பைசாவுக்கு கூட மதிப்பதில்லாத தமிழன் என்று பொருள். அந்த அளவுக்கு அன்றைக்கு தமிழன் என்றால் மரியாதை குறைவு என்ற சூழல். அந்த சிந்தனையை மாற்றி, ஒரு பைசாவுக்குக் கூட மதிப்பில்லாத தமிழனாக கருதப்படுகிறவன் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன் தான் என்கின்ற பொருள்பட 'ஒரு பைசா தமிழன்' என்று பெயர் வைத்திருந்தார். எனவே தமிழன் என்கின்ற சொல்லாடலைத் தமிழ்ச் சமூகம் அன்றைக்கு எவ்வளவு மோசமாக நினைத்துக் கொண்டிருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பைசா தமிழன் என்கின்ற இந்தச் சொல்லாடல் உருவாக்கப்படுவதற்கு முன்பும் சரி பின்பும் சரி, தமிழன் என்ற அடையாளத்தைத் தமிழ்பேசும் சமூகங்கள் அன்றைக்கு விரும்பவே இல்லை. ஓர் ஒற்றை பொது அடையாளத்துக்குள் வந்தால் தாங்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கக்கூடிய சாதிபேத அடையாளங்களை முற்றிலும் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தினால் தமிழன் என்கிற அடையாளத்துக்குள் தமிழர்கள் வரத் தயங்கினார்கள். அதைக் குத்திக்காட்டும் விதமாகத்தான் அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ஒரு பைசா தமிழன் என்கின்ற பெயரை வைத்து இதழைத் தொடங்கி நடத்தினார். அவர் எதிர்பார்த்தது போலவே பல்வேறு தளங்களிலிருந்து கடிதங்கள் அவருக்கு வந்தன. ஒரு பைசா தமிழன் என்கின்ற சொல் சரியானது அல்ல, அதை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் வாசகர்கள்.

அதன்படி வாசகர்களின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையின் பெயரை 1908-ம் ஆண்டு 'தமிழன்' என மாற்றி அமைத்தார். இந்திய வரலாற்றில் குறிப்பாக 1920-ம் நூற்றாண்டுகளில் எந்தப் பெயரை சொல்ல மக்கள் தயங்கினார்களோ அதே பெயரை வைக்க வேண்டும் என அந்த மக்களே கோரிக்கை வைக்கக்கூடிய அளவுக்குக் கொண்டு வந்ததுதான் அயோத்திதாச பண்டிதரின் மிகப்பெரிய சாதனை. தமிழன் என்கின்ற சமூக அரசியல் அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் நிலைநாட்டி விட்டாலும், யாரெல்லாம் தமிழராக இருக்க முடியும் என்கின்ற வரையறையையும் அவர் அதில் சேர்த்து வைத்திருந்தார். தமிழன் என்றால் “சாதி பேதமற்ற திராவிடனே தமிழன்” என்கின்ற வரையறையை அவர் வைத்திருந்தார்.
அயோத்திதாசப் பண்டிதர்

அவரைப் பொறுத்தவரையில் திராவிடம் என்பது இணைய ரீதியான பெயர் அல்ல; பௌத்த அடிப்படையில் பொருள் புரிந்து கொண்ட திராவிடம் என்கின்ற சொல்லின் தொடர்ச்சியாகவே அதைப் பார்த்தார். சாதி பேதமற்ற திராவிடர்கள் தான் தமிழர்கள் என்பது அயோத்திதாச பண்டிதரின் வரையறுப்பு என்றால், தமிழர்களின் ஆதி அடையாளம் சாதி பேதமற்ற நிலை அவர் காலத்திய சாதிய அடையாளங்களோடு நேரடியாக மோதியது. சாதி எவ்வளவு புரையோடிவிட்டது என்றால், தமிழன் என்ற அடையாளத்தை மறுக்கக் கூடிய அளவிற்கு சாதி உணர்வுகள் கூர்மை பெற்று இருந்தனர் என்பதற்கும் இதுவே தெளிவான சான்று. ஆனால் தமது முயற்சியில் அவர் தளரவில்லை. தனது கருத்தியல் அடித்தளத்தைத் தமிழன் இதழின் வாயிலாக மிக விரிவாக அவர் உருவாக்கினார். விளைவாக பிற்காலத்தில் தமிழன் மற்றும் திராவிடம் என்கிற இரண்டு சொற்களும் அரசியல் அரங்கில் முதன்மை இடத்தைப் பிடித்தன. ஆனால் அவையிரண்டும் தனித்தனி பொருளில் புரிந்து கொள்ளப்பட்டு அவை பெரும் அரசியல் இயக்கமாகத் தமிழகத்தின் அரசியல் அடித்தளத்தை நிர்ணயிக்கும் இயக்கங்களாக உருமாறியிருந்தன.

இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் திராவிடம் என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கின்ற அதேநேரத்தில் மிக லாவகமாகப் பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கிய திராவிடர் குறித்த வரையறையை மறைத்து விடுவார்கள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட திராவிடம் என்ற சொல் குறித்து பண்டிதர் முன்வைத்த வரப்புகளில் அதிகமாக பேசுவதைத் தவிர்த்து விடுவார்கள். இரண்டு போக்குகளில் இருந்து மீண்டு வருவது என்பது பண்டிதருக்கு எளிதாகப் படவில்லை. ஆனால் தொடர்ந்த விவாதங்களின் மூலமும் கருத்தியல் பரிமாற்றங்களின் மூலமும் வரலாற்று ஆய்வுகளின் மூலமும் இன்றைக்குப் பண்டிதர் தனக்கான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றார்.
அயோத்திதாசப் பண்டிதர்

ராயப்பேட்டையில் மருந்து வியாபாரியாகவும், மருத்துவராகவும் வேலையார்த்து வந்த கந்தசாமியின் மகனாக, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தெளிந்து ஓடிக்கொண்டிருந்த கூவம் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த மக்கிமாநகர் அல்லது மக்கீஸ் தோட்டம் என்கிற இடத்தில் 1845ஆம் ஆண்டு மே 20ம் நாள் பிறந்தவர் காத்தவராயன். வள்ளக்காலத்தி வீ.அயோத்திதாசப்பண்டிதர் என்பவரிடம் வடசென்னை காசிமாநகர் என்று அழைக்கப்பட்ட காசிமேட்டில் கல்வி பயின்றார். மருத்துவம், இலக்கியம், இலக்கணம், சமஸ்கிருதம், சோதிடம் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சிப் பெற்றார். குருவின் மீதிருந்த பக்தியின் காரணமாக தனது பெயரை க.அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.

பாட்டனாருடன் நீலகிரி போனபோது அங்கே தோடர் பழங்குடி பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்துக் கொண்டார். ஒரு குழந்தை பிறந்தது. பிறவியேலேயே கண்பார்வையற்ற குழந்தை விரைவில் இறந்து போனது. பிறகு மனைவியும் இறந்துப் போனார். எனவே தமிழ்நாட்டைவிட்டு கிளம்பி பர்மாவில் போய் பத்தாண்டுகள் அலைந்து திரிந்தார். பின்பு நாடு திரும்பி நீலகிரியில் அத்வைதானந்த சபை என்னும் அத்வைத மடத்தினை நிறுவினார். அதன் மூலம் சித்த மருத்தவ பரப்புரையும் மேற்கொண்டிருந்தார். கொஞ்சகாலம் கழித்து ரெட்டமலை சீனிவாசனாரின் தமக்கையாரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் மெட்ராசுக்கே திரும்பினார். 1914 மே மாதம் 5-ம் நாள் மறையும் வரை ராயபேட்டையிலே வசித்து வந்தார்.
அயோத்திதாசப் பண்டிதர்

தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தையென வர்ணிக்கப்படும் பண்டிதர் அயோத்திதாசர் பிறந்து 175 ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் மறைந்து 107 ஆண்டுகள் ஆகிறது. இத்தனைக் காலம் கடந்து தமிழகத்தின் அரசியல் வரலாற்றின் அடையாள அடிப்படையை வகுத்துக் கொடுத்த அயோத்திதாச பண்டிதருக்குக் கிடைத்திருக்கின்ற அங்கீகாரத்தின் தாமதம் நெடும் போராட்டத்திற்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது.

பகவன் புத்தரை குறித்து பண்டிதர் எழுதிய ஒரு சிறு நூலுக்கு அவர் வைத்த தலைப்பு 'இரவு பகலற்ற ஒளி' என்பதாகும். அந்தத் தலைப்பையே அயோத்திதாசரின் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அணியாகச் சேர்த்திருந்தார். நிச்சயம் அயோத்திதாசர் அவர்களுடைய பணிகள் இரவு பகலற்ற ஒளி போல ஒளிரும் என நம்புவோம்.

Monday, June 14, 2021

கொரோனாவின் முதல் இலக்கான முதியோரை பாதுகாக்க 


தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் முதியோரை வதைக்கவேண்டாம். அவர்களுக்குத் தேவை ஆதரவு. சமூக இடைவெளி இருக்கட்டும். தூரத்தில் இருந்தாலும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுங்கள். அவர்களோடு உரையாட மறக்காதீர்கள். முதியோருக்குத் தனிமை, கொரோனாவைவிடக் கொடுமையான நோய்.

முடிந்த அளவு முதியவர்களோடு இருங்கள். பிடித்தமான செயல்களைச் செய்யவிடுங்கள். படிப்பவர்களாயின், அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கித்தாருங்கள்.

உறவினர்களோடு பேச விரும்பினால் அனுமதியுங்கள். அது அவர்களுக்கு ஆறுதல் தரும்.

டயட் ரொம்பவே முக்கியம். முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். பழங்கள் கொடுக்கலாம். குறிப்பாக நெல்லி, ஆரஞ்சு, கொய்யாப் பழங்கள் நல்லது. பாதாம் தரலாம். உணவில் இஞ்சி, பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

எதிர்மறைச் செய்திகள் அவர்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாசிட்டிவான செய்திகளாக அவர்களிடம் சொல்லுங்கள்.

தடுப்பூசி ரொம்பவே முக்கியம். அதுபற்றிய மூடநம்பிக்கைகளை அகற்றி, நம்பிக்கை தந்து தடுப்பூசி போடச் சொல்லுங்கள். நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள், நிமோனியா வந்தவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். செப்டம்பர் வாக்கில் மூன்றாம் அலைத் தாக்குதல் இருக்கலாம் என்கிறார்கள். அதனால் தடுப்பூசி அவசியம்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். வயதானால் தாக உணர்ச்சி குறைந்துவிடும். வீட்டில் இருப்பவர்கள் கவனித்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் தரவேண்டும். பிரிட்ஜி்ல் வைத்து சாப்பிடுவது, அருந்துவது நல்லதல்ல... வெந்நீர் ரொம்பவே நல்லது. இதயநோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தண்ணீரின் அளவைத் தீர்மானிக்கவேண்டும்.

காற்றோட்டமான இடங்களில் முதியோரை உலவ விடுங்கள். ஏ.சி இருந்தால் குறைவாகப் பயன்படுத்துங்கள்.

 அரை மணி நேர வாக்கிங், உடற்பயிற்சி முக்கியம்.

 அதிகாலைச் சூரிய ஒளியில் இயற்கையான வைட்டமின் டி இருக்கிறது. உணவைவிட சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி ரொம்பவே நல்லது. கொரோனாவுக்கு இது தடுப்பு மருந்து.

 மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. ஆசுவாசமாக அமர்ந்து மூச்சை நன்கு இழுத்து முடிந்தவரை உள்ளே வைத்திருந்து மெதுவாக வெளியே விடவேண்டும். இது நல்லது.

கொரோனா அறிகுறி வந்துவிட்டாலும் பயப்பட வேண்டாம். உடனடியாக டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். நூற்றில் ஒருவரோ இருவரோதான் அதிதீவிர நிலைக்குச் செல்கிறார்கள்.

 அச்சம் வேண்டாம். அதுதான் பாதிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. எல்லாம் கடந்துபோகும்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

நன்றி ஆனந்தி விகடன்

 இப்போ யோசிச்சாலும் மிரட்சியாதான் இருக்கு. அப்போதான் ஒரு சிசேரியன் முடிஞ்சுது. ரிலாக்ஸா ஆபரேஷன் தியேட்டர்ல உக்கார்ந்து ரெஜிஸ்டர் எழுதிக்கிட்டிருந்தேன். பக்கத்து வார்டுல இருந்து திடீர்னு சத்தம்... எல்லாரும் அலறி அடிச்சுக்கிட்டு வெளியே ஓடுறாங்க. ஜன்னல் வழியா பாக்குறேன்... நெருப்பும் புகையுமா இருக்கு... உள்ளே நிறைய குழந்தைகள் இருக்காங்க. எல்லாம் பிறந்து ரெண்டு மூணு நாளான பச்சிளங்குழந்தைகள். ஏதோ ஒரு உந்துதல்ல ஜன்னலை உடைச்சு இறங்கிட்டேன்...”


இன்னும் சிலிர்ப்பு அடங்கவில்லை ஜெயக்குமாருக்கு. கேட்கும்போது நம்மையும் பதற்றம் பற்றிக்கொள்கிறது. ஜெயக்குமார், 58 குழந்தைகளின் உயிர்மீட்ட செவிலியர். சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சையரங்கில் செவிலியராகப் பணியாற்றும் ஜெயக்குமார், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீக்குள் இறங்கி, ஆபத்திலிருந்த பச்சிளங்குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!


சென்னையின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனைகளில் ஒன்று கஸ்தூரிபாய் மருத்துவமனை. தினமும் நூற்றுக்கணக்கில் பிரசவங்கள் நடக்கும். நான்கு தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருக்கிறது பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு. பிறந்து சில நாள்களேயான குறைபாடுடைய குழந்தைகள், வெண்டிலேட்டரில் வைக்க வேண்டிய குழந்தைகள், குளுக்கோஸ் தேவைப்படும் குழந்தைகளெல்லாம் இங்கே வைத்துப் பராமரிக்கப்படுவார்கள். தாய்மார் அவ்வப்போது வந்து பாலூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

கடந்த 26ம் தேதி. அந்தப் பிரிவில் 3 செவிலியர்கள், 58 குழந்தைகள், 11 தாய்மார் உள்ளே இருந்தார்கள்.

“எனக்கு அன்னைக்கு நைட்ஷிப்ட். இரவு 7 மணிக்கு ஆரம்பிச்சு காலை 7 மணிக்கு முடியும். வந்தவுடனே அடுத்தடுத்து ரெண்டு சிசேரியன். பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுக்குப் பக்கத்துலதான் ஆபரேஷன் தியேட்டர். சிசேரியன் முடிஞ்சு மாஸ்க், டிரெஸ்கூட கழற்றாம உக்காந்து ரெஜிஸ்டர் எழுதிக்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரே சத்தம். ரேம்ப்ல எல்லாரும் பதறிக்கிட்டு ஓடுறாங்க. உள்ளே கடுமையான புகைமூட்டமா இருக்கு. எல்லாரும் வெளியே ஓடிவர முயற்சி செய்றாங்களே ஒழிய உள்ளே நுழைஞ்சு தீயை அணைக்க யாரும் முயற்சி பண்ணலை. உள்ளே புகையைத் தவிர எதுவும் தெரியலே. பின்பக்கமா ஓடிப்போய் தரை துடைக்கிற மாப் கம்பியை வச்சு ஜன்னலை உடைச்சேன். மருத்துவமனையில வரிசையா தீயணைப்புக் கருவிகள் இருக்கு. நான் பழவேற்காடு அரசு மருத்துவமனையில வேலைசெஞ்சப்போ ‘ஹாஸ்பிடல் சேப்டி மேனேஜ்மென்ட் பயிற்சி’ எடுத்திருந்தேன். தீயணைப்புக் கருவியை எப்படிப் பயன்படுத்தனும்னு தெரியும். ஜன்னலுக்கு வெளியே நின்னு சிலிண்டரைத் திறந்து அடிச்சேன். கீழே எரிஞ்சுக்கிட்டிருந்த தீ ஓரளவுக்கு அணைஞ்சிருச்சு. ஆனா, மேலே தீவிரமா எரிஞ்சுக்கிட்டிருக்கு. குறிப்பா ஏ.சி அவுட்லெட்ல இருந்து எரிஞ்சு நெருப்புக் கொட்டுது. மின்கசிவாலதான் தீப்பிடிச்சுச்சு போல... கரன்ட்டை கட் பண்ண முடியாது. 3 குழந்தைங்க உள்ளே வெண்டிலேட்டர்ல இருக்கறதாச் சொல்றாங்க.

எனக்கு ஆஸ்துமா பிரச்னை வேற... புகை மூக்குக்குள்ள போய் சுவாசிக்கவே முடியலே. வேறு யாருக்கும் சிலிண்டரை ஆபரேட் பண்ணத் தெரியலே. வேற வழியில்ல... உள்ளே இறங்கிட்டேன். கார்பன் டை ஆக்சைடு சிலிண்டரை வச்சு மேலே அடிச்சேன்... 90 சதவிகிதம் தீ தணிஞ்சிருச்சு. பத்தடி உயரத்துக்கு மேல ஏசியில எரிஞ்ச தீயை அணைக்க முடியலே. சிலிண்டரோட ஓஸ் ரெண்டு அடிதான் இருக்கு. தோள்ல தூக்கி சிலிண்டரை வச்சுக்கிட்டு அடிச்சேன்... அண்ணாந்து அடிச்சதுல புகை நேரடியா மூஞ்சியில அடிச்சிருச்சு. முழுசா தீ அணைஞ்சபிறகு, தள்ளாடிக்கிட்டே வெளியே வந்து விழுந்துட்டேன்...” இன்னும் ஜெயக்குமாரின் முகத்தில் மிரட்சி இருக்கிறது.

அரை மணி நேரம் கடுமையாகப் போராடி தனி நபராகத் தீயை முழுமையாக அணைத்த ஜெயக்குமார், ஐந்து நாள்கள் ஐசியூவில் சிகிச்சையிலிருந்து மீண்டிருக்கிறார். இந்த வார்டுக்குக் கீழ்த்தளத்தில்தான் ஆக்சிஜன் ரூம் இருக்கிறது. கோவிட் காரணமாக 7 அடி அளவிலான 30 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த பிளாக்கில் உள்ள எல்லாத் தளங்களிலும் ஆக்சிஜன் செல்லும் வகையில் காப்பர் குழாய் இணைப்புகளும் இருக்கின்றன. ஜெயக்குமார் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் இழப்பு மிகப்பெரிதாக இருந்திருக்கும் என்கிறார்கள்.

ஜெயக்குமாருக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம். அப்பா நெசவாளி. அம்மா இல்லத்தரசி. வறுமை சூழ்ந்த குடும்பம். அக்கா, அரசு உதவித்தொகை பெற்று செவிலியர் படிப்பில் சேர, ஜெயக்குமார் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல் ஒரு மருந்தகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஜெயக்குமார் எடுத்த மதிப்பெண்கள் பற்றி அறிந்த மருந்தகத்தின் உரிமையாளர், தன் செலவில் டிப்ளமோ செவிலியர் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்து முடித்தவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணி கிடைத்திருக்கிறது. 2016-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

தீ விபத்து நடந்த உடனேயே தகவல் கிடைத்து அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் எவருக்கும் ஜெயக்குமார்தான் தீயை அணைத்தார் என்பது தெரியவில்லை. ஐ.சி.யூவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபிறகு வழக்கம்போல பணிக்குச் வந்து சென்றிருக்கிறார் ஜெயக்குமார். திடீரென்று, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமிருந்து போன் வந்திருக்கிறது.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

“அமைச்சர் கூப்பிட்டு, ‘நீங்க செஞ்சது மிகப்பெரிய செயல் தம்பி... சி.எம். உங்களைப் பாக்கணும்ங்கிறார். கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு நாளைக்குக் காலையில வந்திடுங்க’ன்னு சொன்னார். மனைவி, குழந்தைகளோட முதல்வர் வீட்டுக்குப் போயிட்டேன். முதல்ல உதய் சார் வந்தார்... ‘நீங்கதானா அது’ன்னு கேட்டுட்டு குழந்தைகளோட விளையாட ஆரம்பிச்சுட்டார். பிறகு அவரே உள்ளே கூட்டிட்டுப் போனார். சேகர் பாபு சார், துரைமுருகன் சார், அன்பில் மகேஷ் சார் எல்லாரும் இருந்தாங்க. முதல்வர் சார் என்னை துரைமுருகன் சார்கிட்ட அறிமுகம் செஞ்சார். ‘எந்த ஊருப்பா’ன்னு கேட்டார் துரைமுருகன். ‘குடியாத்தம்’ன்னு சொன்னேன்... ‘நம்ம ஊருப் பயடா... அப்படித்தான் இருப்பான்’னு அவர் சொல்ல, எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அரை மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டிருந்தாங்க. கிளம்பும்போது, ‘எதைப்பத்தியும் கவலைப்படாம பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்க’ன்னு பாராட்டி ஒரு லட்ச ரூபாய் பணமும், பெரிய கேடயமும் பரிசாகக் கொடுத்தார் முதல்வர். எல்லாமே கனவு மாதிரியிருந்துச்சு...” என்கிறார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் என்னும் ரட்சகன்!

சிகிச்சை முடிந்து பணியில் இணைந்த ஜெயக்குமாரைத் தேடிவந்து சந்தித்திருக்கிறார் ஓர் இளம்தாய். கையில் ஒரு சிசு. “தம்பி... நீங்க இல்லேன்னா, என் குழந்தை என் கையில இருந்திருக்குமான்னு தெரியலே... உங்களை வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்” என்று சொல்லி, கையெடுத்து வணங்கியிருக்கிறார். “வாழ்க்கையில் அதுவும் மறக்கமுடியாத தருணம் சார்” என்கிறார் ஜெயக்குமார்.

Wednesday, June 2, 2021

வதந்தி வாயனுக தொல்லை தாங்க முடியல 

கொரோனாப் பேரிடர் காலத்தில் வாட்ஸப் வதந்தி வாயர்கள் கைக்கு வந்ததையெல்லாம் கண்டதையும் ஃபார்வர்டு செஞ்சு அரை வைத்தியனா அட்ராசிட்டி பண்ணின வதந்தி வாயர்களின் நாற்றமெடுத்த சில புருடாக்கள் 

காலை மாலை இரவு வேளைகளில் கருஞ்சீரகப்பொடியைச் சுடுநீரில் கரைத்துக் குடிப்போம். தேவைப்பட்டால் அதில் இரண்டு துளி எலுமிச்சை கலப்பது நல்லது.

சாப்பிட்டபிறகு மறக்காமல் நான்கைந்து மிளகை வாய்க்குள் கடித்து விழுங்குவோம். அதன் காரத்தன்மை நுரையீரலுக்குச் செல்லவிருக்கும் வைரஸை வெளியிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறது. இவ்வாறு மூன்று நாள்கள் தொடர்ந்து செய்தால் மூச்சுக்குழாயில் இருக்கும் கெட்ட செல்கள் அழிவதோடு உடலுக்குள் வைரஸ் கிருமிகள் பரவாமல் அரணாக இருக்கும் செயலை மிளகும் கருஞ்சீரகமும் செய்கிறது.

நாலு மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்?

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இரண்டு கிராம்பு போதும் என்ற வீடியோ வதந்திதான் அது. மாஸ்க் அணியும்போதெல்லாம் இரண்டு கிராம்பை மென்று விழுங்கினால் போதுமாம். இதில் ஒவ்வொருமுறை ஆக்சிஜன் லெவல் கூடுவதை கிராம்பு சாப்பிடும் முன் - கிராம்பு சாப்பிட்ட பின் என பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வெச்சு டெமோ வேறு செய்து காட்டியிருக்கிறார் ஒரு டாக்டர். ஆனால், அவர் அலோபதி, ஹோமியோபதி, சித்தா டாக்டர் அல்ல. இன்ஜினீயரிங் படித்த டாக்டராம்

சமீபத்திய இன்னொரு வாட்ஸப் டிரெண்ட் `ஆவி பிடித்தல்.' டீத்தூள் விளம்பரத்தில் வரும் மருத்துவப் பொருள்களையோ, பிரியாணி மசாலாவில் சேர்க்கும் பொருள்களையோ குந்தாங்கூறாக குக்கரில் வேக வைத்து அதன் ஆவியை டியூப் வைத்து மூஞ்சியில் அடித்து ஆவி பிடிக்கிறார்கள். ஆவியைவிட முக்கியம் இந்தப் பாவிகள் அதை கேமராவில் படம் பிடிப்பது. ஆளாளுக்கு நொச்சி இலை, யூகலிப்டஸ் இலை, வேப்பிலை என இலையை மட்டும் மாற்றிமாற்றிக் கொதிக்க விடுகிறார்கள்.

சிலர், ‘ஆவிதானே பிடிக்கணும்?' என இட்லி சட்லியில் முகத்தைக் காட்டி வியர்க்க வியர்க்க வீடியோ எடுத்து எதையோ சாதிச்சதுபோல வாட்ஸப்பில் பரப்புகிறார்கள். 

அப்துல்கலாம் சொல்லாததை மட்டுமே ஷேர் செஞ்ச ஆட்கள் எல்லாம் இப்போது வாட்ஸப்பில் தப்பும் தவறுமான மருத்துவக்குறிப்புகளை யார் பெயரையாவது போட்டு ஷேர் செய்வதை டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள். 

லேட்டஸ்ட்டாய், சிவகங்கை டாக்டர் ஃபரூக் அப்துல்லா, கு.சிவராமன், டாக்டர் அஸ்வின், வீரபாபு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சொன்னதாகப் பல போலி ஷேரிங்ஸ் சுற்றுகின்றன.

‘நீ விரும்புபவரைவிட உன்னை விரும்புபவரை நேசி! - அப்துல் கலாம்' என்ற மெசேஜையே ஷேர் செஞ்சுக்கங்கப்பா. மக்கள் உசிரோட விளையாடாதீங்கப்பா!'

அண்மையில் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதும், மற்றொரு 90s கிட்ஸ்களின் நாயகனான சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்-க்கு டிஜிபி போஸ்ட்டிங் கொடுத்து சுத்தலில் விட்டார்கள். அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், இது அதுக்கும் மேல... `சித்த மருத்துவர் வீரபாகுவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கிடப் பரிந்துரை செய்தது இந்திய அரசாங்கம். இதற்கான ஐநா சபை நடத்திய வாக்கெடுப்பில் 1850065 வாக்குகள் பெற்று முதல் பத்துப் பேரில் 8வது இடத்தில் இருக்கிறார். எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கும் சாதனைத் தமிழனை உச்சத்தில் உட்காரவைக்க அழகான வாய்ப்பு. இந்த மெசேஜை அதிகம் பகிருங்கள். ஒவ்வொரு பகிர்தலும் அவருக்கான வாக்காக மாறி ஒரு தமிழன் நோபல் பரிசெனும் உச்சபட்ச அங்கீகாரத்தைப் பெறுவான்' என ஏக்கர்கணக்கில் புளுகியிருந்தார்கள். 

‘வெற்றிலையில் அமினோ பொளாடியம்(!)என்ற தனிமம் இருக்கு. அது நெஞ்சுச் சளியை நீக்க வல்லது!'

‘பாகற்காயில் இருக்கும் பொட்டாசியம் நைட்ரேட் நிமோனியா காய்ச்சல் உண்டாக்கும் வைரஸைக் கொல்லும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி சொல்கிறது!'

‘லவங்கப்பட்டைப் புகையில் அம்மோனியம் பெலரோஃபோர்' என்ற ஆக்சிஜன் செறிவூட்டி இயற்கையாகவே இருக்கிறது!'

‘மெக்னீசியம் டார்டாய்ஸ்' என்ற நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே வேப்பிலையில் காணப்படுவதால் வேப்பிலையையும் மஞ்சளையும் முகக்கவசத்தோடு சேர்த்துக் கட்டிக்கொண்டால் கிருமிகள் உடலுக்குள் செல்வதைத் தடுத்துவிடுகிறது!'

ஆந்திராவில் இப்படிப் பரவிய வாட்ஸப் வதந்தியால் ஒரு பள்ளி ஆசிரியர் இறந்தே போயிருக்கிறார். எலுமிச்சைச்சாற்றை சில துளிகள் மூக்கினுள் செலுத்தினால் கொரோனா வைரஸ் அழியும் என்ற வதந்தியே அது!

வடக்கன்ஸ் இன்னும் வேற லெவல். மீரட்டில் கோபால் சர்மா என்ற பா.ஜ.க தலைவர் இஞ்சி, சுக்கு, அதிமதுரம், கசகசா, மாவிலை, மஞ்சள், வேப்பிலையை எரியவிட்டு அந்தப் புகையைத் தெருத்தெருவாக `ஸ்நேக் பாபு'வைப்போல பரப்பி கொரோனாவை விரட்டுகிறாராம்! 

சர்ச்சை புகழ் பிரக்யாசிங் தாக்கூர்லாம் ‘கோமியம் இஸ் மை சீக்ரெட் ஆஃப் எனர்ஜி!' என தம்ஸ்-அப் காட்ட, பல பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், ‘கோமுத்ர... ஆப்பிள் ஆரஞ்சு, மேங்கோ ஃப்ளேவரில் இருக்கு!' என போட்டோக்களைப் பரப்பினார்கள். 

‘நம்ம ஊரில் நாங்க மட்டும் சும்மாவா’ என கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்து வழிபடவே ஆரம்பித்துவிட்டார்கள். அதையும் இங்கிருக்கும் சில வாட்ஸப் வதந்திவாயர்கள், ‘கொரோனா தேவிக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டால் தடுப்பூசிக்கே அவசியமில்லை தோழா’ என சீரியஸாய் ஷேர் செய்திருக்கிறார்கள். 

இந்த வதந்திகளில் எதுவும் ஆய்வுக்கு உட்பட்டதல்ல
நிரூபிக்கப்பட்டதும் அல்ல 
இவற்றில் சில அவரவர் அலைபேசியில் உருவாக்கப்பட்டது 
சில சாணிமூளையுள்ள மாட்டுமூத்திரம் குடிக்கும்
கோமகன்கள்களால் உருவாக்கப்பட்டதே

வதந்திகளை நம்பி சுய மருத்துவம் செய்து கொண்ட 
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மட்டையான 
மட்டையாகப்போகும் அந்த மங்கி மூளையர்களை 
என்ன சொல்லி திட்ட??


Tuesday, March 23, 2021

திமுக என்ன கிழித்தது?  

படிச்சு தெறிஞ்சுக்க

1.  அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2.  பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது 

    கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்

9. கை ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் 

     வகுத்தது கலைஞர்

11.குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது 

     கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது 

      கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது 

     கலைஞர்

15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.

16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் 

     அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26.இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27.பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது 

     கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்

30.உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் 

     இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச  

      கல்வி இளம்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது 

      கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் 

      பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59.உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது 

     கலைஞர்.

60.இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது 

     கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62.முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ 

     கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66.தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு 

     செய்தது கலைஞர்

67. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69. செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை 

      துன்புறுத்தாதவர் கலைஞர்

72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் 

      கலைஞர். (2006-2011 வரை ஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் 

      தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள்

     சோம்பு, சீரகம், மிளகுபட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை

     முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் 

     கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு 

     எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.

75. நன்றிக் கடனாக, சரியான(தேர்தல்) நேரத்தில், பழி கலைஞர் மீது விழும் என்று 

     தெரிந்தே தமிழகத்தில் வைத்து ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர் 

     விடுதலைப் புலிகள். அதனால் கொலைபழியை சுமந்தது கலைஞர்.

76. ராஜீவ் படுகொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் 

     சொன்னபோது, கழகத்தின்மீது படிந்த கொலைப்பழியைத் துடைத்தவர் 

     கலைஞர்

76. சமத்துவபுரம் கண்டது கலைஞர்.

77. உழவர் சந்தை தந்தது கலைஞர் .

78. டைடல் பார்க் முதல் ELCOT IT SEZ பார்க்குகளை கொண்டுவந்தவர் கலைஞர் !

79.தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணிணிப் புரட்சியையும் 

    கொண்டுவந்தவர் கலைஞர் !

80. தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது கலைஞர் !

81. சமச்சீர் கல்வி கொண்டு வந்தது கலைஞர் !

82. இந்தியாவிலே முதன் முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை 

    அடுக்கு மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள்                       கட்டியது கலைஞர் !

83. ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து 

      நிலையம் கட்டியது கலைஞர்.

84. திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது  

      கலைஞர் ! (அதை அழித்தவர் ஜெயலலிதா)

85.வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய 

     அமைச்சரவையில் தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு 

      மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தியவர் கலைஞர் !

86. சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் 

      கழகம். (National Marnie University)

87. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University)

88. கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம்.

89. திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM)

90. ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட 

      உடல் ஊனமுற்றோர்க் கான தேசிய நிறுவனம்.

91. சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

92. திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (National Law School)

93. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

94. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் 

      வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.

95. கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் 

      பெரியமேம்பாலங்கள்துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக 

      முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த 

      காலகட்டத்தில் உருவாகின...

96. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

97. 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் 

     மருத்துவமனை """"சூப்பர் ஸ்பெஷாலிட்டி"" மருத்துவமனையாக மேம்பாடு.

98. கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் 

      மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.

99. 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 

      பறக்கும் சாலைக்கான துவக்கம்.

100. 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.

101.908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் 

       மற்றொரு திட்டம்.

102. தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் 

        பாதைகளாக மாற்றிட அனுமதி.

103. 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு 

        அனுமதி.

104. சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

105. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

106. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

107. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு 

        உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

108. கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 

       இலட்சம் ரூபாய்ச்செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்                                   சாலைகளில்3,276 கிலோ மீட்டர் சாலைகள்நான்கு வழிச் சாலைகளாக 

        மேம்பாடு..

109. நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

110. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் 

       பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் 

      தள்ளுபடி.

111. இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.

112. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவது, பல 

        மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்..

113. திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன

114. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973 ஆம் ஆண்டு துவக்கி

        செயல்படுத்தியது கலைஞர்

115. அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் 

     "பவானி அத்திக்கடவு திட்டம்" என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் 

       செயல்படுத்தியவர் கலைஞர்

116. சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி 

       கட்டிடம்நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் 

       சென்டர், புதிய தலைமைசெயலகம்அண்ணா நூற்றாண்டு நூலகம்.... இப்படி 

        எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்..

117.செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா

       அண்ணா நகர் பூங்கா.... இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் 

       உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்...

118. சோழிங்கநல்லூர் SEZ, சிறுசேரி SEZ, IT ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என 

       முக்கிய நகரங்களில் IT பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை 

       கொண்டுவந்து மென்பொருள் துறையில் சென்னையை முக்கிய இடம்                          பிடிக்கசெய்தது திமுக...

119.சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி 

      துறைமுகம்நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று 

       சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை கொண்டுவந்ததும் திமுகதான்...

120.பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை 

      அமைத்து தொழில் வளர்ச்சிக்கு உதவியது திமுக.. தமிழ்நாடு மென்பொருள் 

      ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னிலை வகிக்க 

      காரணம் திமுக..

121. 2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி 

        நிலையங்களை மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் 

        துவக்கப்பட்டன..

122. தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது 2006-11 திமுக ஆட்சியின் 

       போதுதான்...தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை 

       மாநிலமாக்கியது கலைஞரின் திமுக ஆட்சி.. அதின் காரணமாக

       இந்தியாவிலேயே GDPயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடு..

       GST வரிவசூலிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி                மாநிலமாக தமிழ் நாடு முன்னிலை வகிக்கிறது..

123. தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் 

        போடப்பட்டது திமுக ஆட்சியில்..

124.2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி 

       நடைபெற்று குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன..

125. ஆசியாவிலே பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 

        1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970 

       ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் 

       கலைஞர்..


இப்படி சாதனை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்...


உதாரணத்துக்கு 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய்.


1960 இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின்    வளர்ச்சியடைந்த மாநிலமாக விளங்கியது.