Wednesday, August 25, 2010
நாம எல்லாருமே கலப்படமயிட்டோம்
கலாச்சாரத்த கலப்படமாகிட்டோம்
குடும்பத்த கலப்படமாக்கிட்டோம்
ஊர கலப்படமாகிட்டோம்
கல்விய கலப்படமாகிட்டோம்
கலைய கலப்படமாக்கிட்டோம்
சினிமா வ கலப்படமாகிட்டோம்
இயற்கையை கலப்படமாகிட்டோம்
நேர்மையா இருந்த எதாவது பரிசு கெடக்கும்னு
எதிர்பார்க்கிரோம் அந்த அளவுக்கு கலப்படமஆயிட்டோம் ......
காசு வாங்கிட்டு ஓட்டு போடுறோம்ல
அப்படிநா காசுக்காக எது வேணாலும் செய்வோம்னு தான அர்த்தம்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்
உண்மையில் என்னான்னா
காசு வேணும் அதும் சீக்கிரமே சம்பாதிக்கணும்
நேர்மை எங்கிருந்து வரணும்னா
நாம பெறக்குற தாய் தந்தை இடமிருந்து
நாம படித்த ஆசிரியரிடமிருந்து
நாம படித்த வகுப்பறைஇலிருந்து
இத தவிர நாம் வேறெங்குமிருந்தும்
நேர்மை நியாயம் எதையும் பெற முடியாது..
இது எல்லாத்துக்கும் தான்
இயற்கை ஆப்பு வச்சுக்கிட்டே இருக்கு
இன்னும் நமக்கு புத்தி வரல
ஓகே அடுத்த ஆப்புக்கு தயாராவோம்
.......
Sunday, August 22, 2010
மறந்தே போய்ட்டேன்
எந்திரன் படத்துல அரிமா அரிமா ன்னு ஒரு பாட்டு இருக்கு. அந்த பாட்டோட prelude அதாவது ஸ்டார்டிங் ல trumpet அல்லது saxophone ல ஒரு சின்ன பிட் வரும் அது எங்க ஊர்ல பாஸ்கா திருவிழா ல jesus வாழ்க்கையை நாடகமா போடுவாங்க jesus பிடிக்கும்போது இதே மியூசிக் bit தான் வரும். இது எனக்கு தோணினது. அதுக்காக A.R.Rahman காபி பண்ணிட்டாரு அப்டின்லாம் சொல்ல வரல.
வேற ஒரு சமயம் சந்திப்போம்
நன்றி
Saturday, August 21, 2010
எல்லா எடத்துலயும் தமிழ்தான் இருக்கணும் அப்டி இப்டின்னு என்னென்னமோ பெனாத்துரோம்
கலைஞர் குடும்பம் இங்கிலீஷ் ஸ்கூல் ல தான் படிக்கிறாங்க அப்டியும் குறை சொல்றோம் ஆனா அழகிரி பாராளுமன்றத்துல இங்கிலிஷ்ல பேச தெரியல அப்டின்னு கிண்டல் பண்றோம் .
எனக்கு அது தப்பா தெரியுதுங்க ....ஏன்னா .
சே குவாரோ ஐ.நா சபையில் பேசும்போது அவங்க மொழில தான் பேசுனாரு. ஏன் நம்ம வாஜ் பாய் பேசும்போது எதுல பேசுனாராம். எல்லா இடத்துலையும் ஹிந்தி ல தான் பேசுனாரு
அப்பறம் ஏன் அழகிரிய மட்டும் கிண்டல் பண்றோம்.
எல்லா நாடுகளும் அவங்க அவங்க மொழிய உயிரா உணர்வா கலாச்சாரமா நெனைக்கிறாங்க.
உண்மைய சொல்லணும்நா தமிழ் ல கேவலமா நெனக்கிறது தமிழ் ல பேசுறது கேவலமா நெனக்கிறது தமிழன்தான் .....
aஎந்த ஏந்த நாடுகள் பிரிட்டிஷ் காரனுக்கு அடிமையா இருந்ததோ அந்த நாடுகள் ல தான் இங்கிலீஷ் இருக்கு. நம்ம புத்தி அடிமை புத்தி .
இந்த இடத்துல கவிஞர் வைரமுத்து சொன்னதுதான் ஞாபகம் வருதுஆங்கிலம் எனது வயிற்று மொழி
தமிழ் எனது வாழ்க்கை மொழி
இதுதான் சரியா இருக்கும்னு எனக்கு தோணுதுஅப்பறம் சந்திப்போம்
சூப்பர் பக் கிருமி குணப்படுத்த முடியாத நோயையும் விளைவுகளையும் உண்டாக்கும் அப்டின்னு நம்ம தமிழ்நாட்டு கார விஞ்ஞானி சொல்றாரு அபாரம் திடீர் பல்டி அடிக்கிறாரு . இங்கிலாந்து காரர்கள் இந்தியா விளுருந்துதான் பரவுச்சுன்னு கிளப்பிவிடுறாங்க.
வியாதிக்கு இடம் பொருள் ஆட்கள் வித்தியாசம்லாம் தெரியாது.
AIDS அமெரிக்காவிலிருந்து பரவுச்சு
Swine flu ஐரோப்பாவிலிருந்து பரவுச்சு
SARS பாகிஸ்தானிலிருந்து பரவுச்சு
அதுக்காக நாம் ஒவ்வொருத்தரையும் குறை சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா
ஆக்கபூர்வமான சக்திக்கு பயன்படாத விஞ்ஞானம்
அவசியமே இல்ல
ஆதாம் ஏவாள் காலத்துல அல்லது ஒரு முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி
உலகம் சுத்தமா சுகதாரமா இருந்துச்சு ஆனா இப்ப
????????????????????????????????????????
ஆனா ஒண்ணுங்க
இயற்கையை நாம் அழிக்க அழிக்க
நாம் இன்னும் அனுபவிப்போம் .......
Friday, August 20, 2010
Wednesday, August 18, 2010
ஓல்ட் மெட்ராஸ் படத்துல காட்னதுனால தப்பிச்சாங்க
அதுனால படத்துல தவறுகள் மறந்துடுது
ஏற்கனவே நம்ம பாரதிராஜா நாடோடி தென்றல் பாத்துட்டோம்
ஆனா படம் ரொம்ப slowவா இருக்கும்
அந்த படத்துல பாட்டெல்லாம் நம்ம இளைய ராஜா பின்னிருப்பரு
இதுல GV பிரகாஷ் ரெண்டு பாட்ட நல்லா கொடுதுருக்காப்ள
ஆருயிரே .... மற்றும் பூக்கள் பூக்கும் தருணம்
காதல் மதுரைல, அருவாளுக்கு மத்தில,பரட்ட தலைக்கு மததில கக்கூசுக்கு
பக்கத்துல இல்லாம
பழைய மெட்ராசுக்குள்ல நடக்ரதுனால
ஓகே ஓகே .....
இல்ல மவனே படம் ஊத்திருக்கும்
எந்திரன் பாடல்கள் கேட்டீங்களா
எனக்கு கிலிமாஞ்சாரோ பாட்ட தவிர எல்லாமே பிடிச்சிருக்கு
ஆனா
மூன்று பாடல்கள்தான் டிரன்ட் செட்
இரும்பிலே ஒரு இதயம்
புதிய மனிதா
பூம் பூம்
இதில் இரும்பிலே ஒரு இதயம் பாட்டு
நியூயார்க் நகரம் பாட்ட பாஸ்ட்டா கேட்ட மாதிரி
ஆனா நல்லா இருக்கு
அதுவும் அந்த ஹிப் ஹோப் , ராப் ஸ்டைல்
கும்னு இருக்கு
அரிமா அரிமா நல்ல இருக்கு
கிலிமாஞ்சாரோ மற்றும் காதல் அணுக்கள்
பழைய ஸ்டைல்...பா
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்
Wednesday, August 11, 2010
இந்தியன் மெடிக்கல் கவுன்சில் டைரக்டர்
கேதான் தேசாய் ஆயிரத்து ஐநூறு கோடி ஊழல் இது இல்லாம ஆயிரம் கிலோ தங்கம் வீட்ல இருந்தது.
பிடிச்சிட்டாங்க சரி
இப்ப காமன் வெல்த் விளையாட்டு போட்டி அரங்கம் அமைக்கிரதுல ஊழல்
பிடிச்சிட்டாங்க சரி
பாராட்டுக்கள் .........
ஊழல் பண்றது அப்பறம் பிடிக்கிறது எல்லாம் சரி
ஆனா அந்த பணம் மட்டும்
எங்கே போகுது
எங்க இருக்குனு
சொல்லவே மாட்டிக்கிரீங்கலே
இப்ப நம்ப ஊர் பக்கம் மழை வெள்ளம் மக்கள்லாம் ரொம்ப அவஸ்தை படறாங்க
மக்கள் தொகைல பாதி பேர் வறுமைல இருக்காங்க
அந்த பந்த செலவு பன்லாம்ல
ஏதாவது உள்குத்து இருக்கும்ப்பா
எல்லாரும் இப்பிடித்தான் சொல்றாங்க
சரி உள்ளயே குத்திக்கிங்க
வெளிய வந்து மக்களை குத்தாதீங்க
முக்கியமா ஏழை மக்கள் மேல குத்தாதீங்க
குத்து வாங்கி வாங்கி மூஞ்சியே மாறிபோச்சு
அப்பறம் சந்திப்போம்