Saturday, August 21, 2010

தமிழர்களுக்கு இல்ல இல்ல taமிளர்களுக்கு ஒரு கேள்வி
எல்லா எடத்துலயும் தமிழ்தான் இருக்கணும் அப்டி இப்டின்னு என்னென்னமோ பெனாத்துரோம்
கலைஞர் குடும்பம் இங்கிலீஷ் ஸ்கூல் ல தான் படிக்கிறாங்க அப்டியும் குறை சொல்றோம் ஆனா அழகிரி பாராளுமன்றத்துல இங்கிலிஷ்ல பேச தெரியல அப்டின்னு கிண்டல் பண்றோம் .
எனக்கு அது தப்பா தெரியுதுங்க ....ஏன்னா .

சே குவாரோ ஐ.நா சபையில் பேசும்போது அவங்க மொழில தான் பேசுனாரு. ஏன் நம்ம வாஜ் பாய் பேசும்போது எதுல பேசுனாராம். எல்லா இடத்துலையும் ஹிந்தி ல தான் பேசுனாரு
அப்பறம் ஏன் அழகிரிய மட்டும் கிண்டல் பண்றோம்.

எல்லா நாடுகளும் அவங்க அவங்க மொழிய உயிரா உணர்வா கலாச்சாரமா நெனைக்கிறாங்க.
உண்மைய சொல்லணும்நா தமிழ் ல கேவலமா நெனக்கிறது தமிழ் ல பேசுறது கேவலமா நெனக்கிறது தமிழன்தான் .....

மனசாட்சிய தொட்டுசொல்வோம் நம்ம குழந்தைங்க இங்கிலீஷ் ல பேசும்போது மனசு பெருமை அடையுதா இல்லையா. ஏன் பிரெஞ்சோ ஜெர்மனியோ அல்லது ஜப்பாநீசோ பேசும்போது அவ்வளவு பெருமை அடையுறது இல்லை.



aஎந்த ஏந்த நாடுகள் பிரிட்டிஷ் காரனுக்கு அடிமையா இருந்ததோ அந்த நாடுகள் ல தான் இங்கிலீஷ் இருக்கு. நம்ம புத்தி அடிமை புத்தி .

இந்த இடத்துல கவிஞர் வைரமுத்து சொன்னதுதான் ஞாபகம் வருது

ஆங்கிலம் எனது வயிற்று மொழி

தமிழ் எனது வாழ்க்கை மொழி

இதுதான் சரியா இருக்கும்னு எனக்கு தோணுது

அப்பறம் சந்திப்போம்

1 comment:

  1. Miga sariya soneengane... aana intha mic pottu 10 perukku sonneengana... ungala kenappaiyanu solluvaaingana. enakku therinchu namma thamizhanukku onne onnulathaan thamizh patru irukku ennana... avanukku paakura ponnu illana avan ponttati mattum thamizh panbaadulla ponnunu ethu ethu penaathuraingalla apdi irukanumnu ninaippaan ....

    ReplyDelete