Friday, January 28, 2011

வெவ்வேறு களத்தில் ஒரே நிகழ்வுகள்

தளபதி ஒண்டிவீரன்


1755! இந்திய விடுதலை வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆண்டு. உலக அரங்கில் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் வீரத்தைப் பதிவு செய்த ஆண்டும் அதுதான்.

விடிந்தால் போர். அது சாதாரண போர் அல்ல. பீரங்கிகள். வெடிமருந்து குவியல்கள்.துப்பாக்கிகள் என்று பல ஆயிரம் பேர் கொண்ட பெரும்படையுடன் ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான்,மாவீரன் பூலித்தேவனின் நெற்கட்டான்செவலைத் தாக்கப் பதுங்கியிருக்கிறான்.

‘‘விடிந்தால் எங்கள் பீரங்கிகளுக்கு பூலித்தேவனின் ராஜ்ஜியமே சாம்பல். முடிந்தால் தடுத்துக் கொள்’’என்று அறைகூவல் விடுக்கிறான். தீப்பிழம்புகளைக் கக்கும் பீரங்கிகளின் பேய்வாய்கள் எல்லாமே நெற்கட்டான்செவலை நோக்கி நிறுத்தப்பட்டுவிட்டன.


ஏற்கெனவே இரண்டு முறை பூலித்தேவனை எதிர்த்து தோற்றோடிய வெள்ளைக்காரர்கள்தான் இவர்கள்.இம்முறை பூலித்தேவனின் கோட்டையை தகர்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டியபடி, இரவோடு இரவாக முகாமிட்டிருந்தார்கள்.


‘‘வரி கொடுக்க ஒப்புக் கொண்டால் சமாதானமாகப் போவோம். இல்லாவிட்டால் போர்தான். நெற்கட்டான்செவல் அழிவது உறுதி’’ என்று சவால் விட்டான், ஹெரான்.


ஆனால் பூலித்தேவன், ‘‘ஒரு நெல்மணியைக் கூட வரியாக செலுத்த முடியாது. முடிந்ததைப் பார்’’ என்று எதிர் சவால்விட்டான். ‘‘இதில் எங்களை வென்றால் நெல்லைச் சீமையைவிட்டே நாங்கள் புறப்படத் தயார்’’ என்று வேறு ஏளனம் செய்தான் வெள்ளையன். ஹெரானின் சவாலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு ஏற்ற வீரனைத் தேடினார் பூலித்தேவன்.


தளபதி ஒண்டிவீரன், ‘‘நான் ஒருவன் போதும், எதிரிகளின் படையை அழிக்க’’ என்று முன் வந்தான். பூலித்தேவன் சம்மதிக்க, புறப்பட்டான் ஒண்டிவீரன் ஒண்டியாக, எதிரிகள் முகாமிற்கு.


நெற்கட்டான் செவலுக்கு அருகில் உள்ள ‘தென்மலை’ முகாமில்தான் எதிரிப்படை முகாமிட்டிருந்தது. முகாமில் ஒரே கும்மிருட்டு. தீவட்டியுடன் சில வீரர்கள் பாதுகாவலுக்கு நின்றிருந்தார்கள்.அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவியபடி எப்படியோ முகாமிற்குள் புகுந்துவிட்டான் ஒண்டிவீரன்.


அப்படியிருந்தும் ஓரிருவர் பார்த்துவிட்டார்கள். ‘யார்?’ என்று கேட்கிறார்கள். ‘‘நான் குதிரை வாரை செப்பனிட வந்தவன்’’ என்று பொய் சொல்கிறான். நம்பிவிடுகிறார்கள்.


நடு இரவைத் தாண்டியபொழுது ஒண்டிவீரன் மெல்ல தன் வேலையைக் காட்டத் தொடங்கினான். சத்தம் எழாமல், பீரங்கிகளின் அருகில் செல்கிறான்.நெற்கட்டான்செவலை நோக்கி இருந்த பீரங்கிகளின் வாய்களை, வெள்ளையர்களின் படை வீரர்கள் தங்கியிருந்த முகாமை நோக்கித் திருப்பி விடுகிறான்.அங்கிருந்த பட்டத்துக் குதிரை ஒன்றை அவிழ்த்துக் கொண்டு, வெளியேறப் பார்க்கிறான்.



குதிரை கலவரப்பட்டு மிரண்டு போக, சத்தம் கேட்டு சில வீரர்கள் ஓடி வருகிறார்கள்.அதற்குள் ஒண்டிவீரன் அருகில் இருந்த குதிரையின் காடிக்குள் படுத்து,தன் மேல் புற்களைத் தூவி யாரும் அறியாதபடி ஒளிந்து கொண்டான்.



குதிரையைப் பிடித்த எதிரி வீரர்கள், குதிரையைக் கட்டிப் போட இடம் தேடுகிறார்கள். ஒரு வீரன் பெரிய ஈட்டி போன்ற ஆயுதத்தை காடியில் அறைகிறான்.அது ஒண்டிவீரனின் இடது கை வழியாக தரைக்குள் இறங்குகிறது. ஈட்டி இறங்க இறங்க வலி அதிகரிக்கிறது. ஆனால் ஒண்டி வீரன் கத்தவில்லை.வலியைத் தாங்கிக் கொள்கிறான்.அந்த ஈட்டி முளையில் குதிரையைக் கட்டிவிட்டு வீரர்கள் தூங்கப் போய் விடுகிறார்கள்.



அந்த முளையிலிருந்து கையை எடுக்க முடியாத நிலை.வலி கூடிக்கொண்டே போகிறது.விடிய இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது. வேறு வழியே இல்லை.அங்கு களவாடிய பட்டாக்கத்தியால் சத்தம் எழாமல் தன் இடக்கையை தானே வெட்டித் துண்டாக்குகிறான். யாருக்கு அந்தத் துணிச்சல் வரும்
 

 
அமெரிக்காவின் உடா பகுதியில் அமைந்திருக்கும் இடுங்கிய இடுக்குகளைக்கொண்ட மலைப் பள்ளத்தாக்கு அது. வெட்ட வெளியில் இரண்டு கிலோ கேக்கை எடுத்துவைத்தால்கூட, ஓர் ஈ, எறும்பு, காக்காகூட மொய்க்காமல் கேட்பாரற்றுக்கிடக்கும் பிரதேசம். அந்தப் பிராந்தியத்தில் ஒற்றை ஆளாக மலையேறிக்கொண்டு இருக்கிறார் 28 வயது ஆரன் ரால்ஸ்டன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், சட்டென்று கிளம்பிச் சென்று இப்படித்தான் எங்கேனும் மலை ஏறிக்கொண்டு இருப்பார். அன்றும் அப்படித்தான் இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையிலான மிகக் குறுகலான ஓர் இடைவெளியில் ஊர்ந்து சென்றுகொண்டு இருந்தார். ஒரு திடுக் நிமிடத் தில் மேலே இருந்து ஒரு பாறை உருண்டு விழுந்தது. கடைசி நிமிடத்தில் சுதாரித்த ஆரன், தலையை விலக்கிக்கொண்டார். ஆனால், அந்தப் பாறை அவரது வலது கையில் நச்சென்று பதிந்து மலைச் சுவரோடு இறுக்கி அழுத்திச் சொருகிக்கொண்டது. ஓர் அங்குலம்கூட 'அங்கிட்டு இங்கிட்டு’ நகர முடியாத இறுக்கம். கை எலும்பு விரிசல் அடைந்ததில் வலி கிளம்பி உடல் முழுக்கப் பரவுகிறது.


'ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ!’ என்று கூப்பாடு போடுவதன் மூலம் மிச்சம் இருக்கும் சக்திதான் வீணாகும். வலியைப் பொறுத்துக்கொண்டு பாறை இளகும் சமயம், கையை விடுவிப்பதற்காகப் பொறுமையாகக் காத்திருந்தார் ஆரன். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், ஐந்து மணி நேரம் அல்ல... முழுதாக ஐந்து நாட்கள்!

ம்ஹூம்... அடித்து இறுக்கி அச்சில் வார்த்ததுபோல ஐந்து நாட்களும் ஒரு மில்லிமீட்டர்கூட அசைய முடியாமல் அங்கேயே இருந்தார் ஆரன். தோளில் மாட்டி இருந்த சின்ன தண்ணீர் பாட்டிலில் இருந்து அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார். சமயங்களில் உதட்டை மட்டும் நனைத்துக்கொண்டார். சிறுநீராகப் பிரியும் நீரையும் வீணாக்குவானேன் என்று அதையும் அவ்வப்போது குடித்துக்கொண்டார். ஐந்து முழு நாட்கள் கடந்த பிறகு, தீர்க்கமாக ஒரு முடிவு எடுக்கிறார்.

ஜெர்கின் கோட்டுக்குள் இருந்த ஒரு சின்ன கத்தியை எடுத்துத் தனது வலது கையைத் தானே அறுக்கத் தொடங்குகிறார். மிகவும் மொண்ணையான அந்தக் கத்தியால் ஒரு தர்பூசணிப் பழத்தையே வெட்ட முடியாது. ஆனால், வேறு வழி இல்லை. மெதுவாக, மிக மெதுவாக, வலியைப் பொறுத்துக்கொண்டு, சின்னச் சின்ன இளைப்பாறலுக்குப் பிறகு, சக்தியைத் திரட்டி கையை அறுத்துக்கொண்டே இருந்தார். வலித்து, வலியில் மரணித்து, வலி மரத்து... ஒருவழியாகப் பாறையில் இருந்து விடுதலை ஆனார் ஆரன். பள்ளத்தில் இருந்து மேலே ஏறிக் கீழே பார்த்தபோது... அந்த ஒற்¬றக் கையில் இருந்து இன்னும் ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது!

ஆரன் அந்த மலை இடுக்கில் சிக்கி இருந்த 127 மணி நேரங்களை ஒன்றரை மணி நேர சினிமா ஆக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் '127 Hours’!

 
யோசித்து விட்டீர்களா Tony Boyle copy  அடிசுட்டாரா......................
 
இதுவும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். டைரக்டர் ஸ்ரீதர் நெஞ்சில் ஒரே ஆலயம் எடுத்த போது 13 பேர் வழக்கு போட்டாங்களாம் அது என் கதை என்று.
ஸ்ரீதர் கோர்ட்டில் கூலா சொன்னாராம். 13 பேருக்கு தோணின கற்பனை எனக்கு மட்டும் தோணாத என்று. சிவன் பிட்டுக்கு மண் சுமந்த கதையில் அவர் முதுகில் அடி விழும் இதே போல பைபிள் லும் ஒரு கதை உண்டு. அதனால பைபிள் நம் இந்து மத இதிகாசங்களும் COPY என்று சொல்லி விட முடியாது.. இது எங்கேயும் எப்போதும் நடக்க கூடியதே அவ்வளவுதான்.
தமிழன் என்னைக்குமே மானமுள்ளவண்டா

கேரளாக்காரங்களுக்கு ஓணம் மட்டும் சந்தோஷமான பண்டிகையல்ல... ஒவ்வொரு தமிழனின் சாவும்தான்!’’

சபரிமலை கூட்ட நெரிசலில் தன் தந்தையையும், தங்கையையும் காவு கொடுத்துவிட்டு கண்ணீருடன் நிற்கும் நம் தமிழர் ஒருவர்

‘‘அப்பாவைக் காணோம்... பிள்ளையைக் காணோம்... அண்ணனைக் காணோம்.. தம்பியைக் காணோம்... என்று அன்பான உறவை கூட்டநெரிசலில் தொலைத்து விட்டு அருகில் உள்ள ஊர்களுக்கு வந்து தொலைக்காட்சியில் ஏதாவது தகவல் வருகிறதா என்று பார்த்தால், ‘இறந்தவர்களில் யாரும் கேரளாக்காரர்கள் இல்லை.... பீதி வேண்டாம் கவலை வேண்டாம்!’ என்று நம் இதயத்தை இனவெறியெனும் பழுக்கக்காய்ச்சிய இரும்புக் கம்பியால் கிளறியது கேரள சேனல்கள்.... சிங்களவர்களுக்குக் கூட தமிழன் மீது இவ்வளவு கோபம் இருந்திருக்காது
கணிப்பொறியை கல்யாணம் செய்தவர்களுக்கு

அமெரிக்காவில் ஒரு இளைஞன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு ஆபிஸ் பையன் வேலை கேட்டுச் சென்றான்.நான்கு பேர் அவனை இண்டர்வியூ செய்தார்கள். எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்னதால் அவனுக்கு அந்த உத்தியோகத்தைக் கொடுத்தார்கள். அப்பொழுது, “நீ எப்பொழுது வேலையில் சேரவேண்டும் என்பதை இ-மெயில் அனுப்புகிறோம். உன் இ-மெயில் ஐடியைக் கொடு’’ என்று கேட்டார்கள். அந்தப் பையன் சொன்னானாம், “சார் எனக்கு இ-மெயிலும் கிடையாது, ஐடியும் கிடையாது, கம்ப்யூட்டரும் கிடையாது’’ என்று.


அவர்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ‘என்ன இது? இவர் மைக்ரோசாஃப்டில் வேலை செய்யப் போகிறேன் என்கிறார், இ-மெயில் இல்லையாம்’ என்று. பிறகு, “உனக்கு வேலை கொடுக்க முடியாது’’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.


அப்பொழுது அந்தப் பையன் கையில் 100 டாலர்தான் இருந்தது. அதை வைத்துதான் அவன் வாழ்க்கையை ஓட்டவேண்டும்.அங்கேயே சாலையின் ஓரத்தில் ஒரு சின்ன கடையைத் தொடங்கினான், அவன். கிடுகிடுவென்று வளர்ந்து அந்தக் கடை ஒரு பெரிய பிஸினஸ் சென்டராகிவிட்டது.


நம்ம சினிமாக்களில் ஹீரோ ஒரே பாட்டில் பணக்காரனாகிவிடுவது போல்,நூற்றுக்கணக்கான கடைகளைத் திறந்து அவன் பெரும் பணக்காரனாகிவிட்டான்.அவனை ஒரு பிஸினஸ் பத்திரிகையில் இண்டர்வியூ செய்தார்கள்.


‘‘இந்தக் கட்டுரையை உங்களுக்கு இ-மெயில் அனுப்புகிறோம், உங்கள் இ-மெயில் ஐடியைக் கொடுங்க’’என்று அந்தப் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ”எனக்கு இ-மெயில் ஐடி இல்லையே’’ என்று அவர் சொன்னார். அப்பொழுது அந்த பத்திரிகை-யாளர் “கம்ப்யூட்டரும் இ-மெயிலும் இல்லாமலேயே நீங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கீங்க.இ-மெயில் இருந்திருந்தால் நீங்கள் எங்க இருப்பீங்கன்னு தெரியுமா?’’ என்று கேட்டார். அப்பொழுது நம்ம ஆள் சொன்னார், “எனக்கு நல்லாத் தெரியும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆபிஸ் பையனாக இருந்திருப்பேன்

Friday, January 21, 2011

நாசமாகப் போகும்  நாய்கள்


2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலையின்போது, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பெரும் பாதிப்பு. செய்வதறியாது திகைத்தன அந்த நாடுகள். நாட்டின் நிதி மறைமுகமாக ‘ஸ்விஸ்’, பஹாமாஸ் உள்ளிட்ட நாற்பது நாடுகளில் உள்ள வெளிநாட்டு வங்கிகளில், முடக்கப்பட்டிருப்பது தெரிஞ்சுது.

உடனே அந்த நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு பணத்தை திரும்பப் பெற அந்த வங்கிகளோடு ஒப்பந்தம் செய்தன. அதன்மூலம் இத் தாலிக்கு திரும்பக் கிடைத்த தொகை 75 ஆயிரம் கோடி ரூபாய். ஜெர்மனிக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய். கிரீஸுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இப்படி எந்த ஒப்பந்தத்தையும் அந்த வங்கிகளோடு இந்தியா இன்று வரை செய்து கொள்ளவில்லையே ஏன்? அப்படிச் செய்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

நெனச்சா ஆத்திரம் வருது
ஸ்விஸ் வங்கியில் இந்தியன் வைத்திருக்கும் கருப்பு பணம் மொத்தம்
8600000 0000000  முடியலீல எண்பத்தாறு லட்சம் கோடி .......புரியுதா நம்ம நாட்டு நெலமை.

ஒபாமா அமெரிக்கன் அந்த பாங்க்ல வச்ச பணத்தை  ஒரு போன்ல ஒரே வாரத்துல வாங்கிட்டாரு எவ்வளவு தெரியுமா 20000 கோடி
அவர் வாங்கின உடனே german நாட்டு ப்ரெசிடென்ட் ம போன் பண்ணி அவுங்க நாட்டு மக்கள் போட்ட பணத்தையும் வாங்கிட்டாரு........

எப்டி நம்ம நாட்டுல...
அறிவாளி சனியனுக .....சட்டம் பேசுதுக.
supreme கோர்ட் சொன்னாலு கேக்க மாட்டங்களாம்....

தெருவுல உடுத்த துணியில்லாம் குடும்பம் நடத்துறான்
குடிக்க கஞ்சி இல்லாம ஏழ பாள இருக்கான்
படிச்சிட்டு வேலை இல்லாம பயலுக திரியுறான்
தற்கொல செய்ய விவசாயி தயாரா இருக்கான்

நாட்டுக்கு நல்லதுதான் செய்ய மாட்டேங்குறீங்களே
அந்த பணத்தவாவது வாங்கி தரலாம்ல
தரங்கெட்ட அரசியல் நடத்துற
தலைவர்களே..,,,,,




 

What is to be done about it?
இலங்கை தமிழன் அடைந்த துயருதுக்கு நாம் என்ன செய்யலாம்.
இது ஒரு அமெரிக்க எழுத்தாளரும் நமது புகைப்பட கலைஞர் ஒருவரும் இணைந்து வெளியிட்டிருக்கும் ஒரு புத்தகம். அதன் வெளியீட்டு விழாவில் பலர் பேசினார்கள். திரைப்பட நடிகர் நாசர் பேசினார் ஒரு நடிகனா என்ன அவரால் செய்ய முடியுமோ அதை சொன்னார் அதாவது அவர் படப்பிடிப்புக்கு போகும் தளங்களில் எல்லோரிடமும் இப்புத்தகத்தை பரப்புகிறேன் என்று... மேலும் சீமான், இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண் மற்றும் பலர் பேசினார்கள் எனக்கு தமிழருவி மணியன் அவர்கள் பேசியது மிகப்பிடித்தது... இலங்கைப் பிரச்சனையில் நாம் நடந்து கொண்டது ....அரசியலாக்கியது ....மேடை போட்டு பேசியது.....மேலும் பல பல...அவர் எப்போதும் சொல்வது.. பரப்புரை செய்யாமல் விட்டது நமது, மற்றும் விடுதலைப் புலிகளின் குறை.. ஆகவே உலகளாவிய பரப்புரை நமக்கு இப்போது தேவை என்று சொன்னார். மேலும் நம் அரசாங்கம் இந்திய மலிந்த அரசியல் எப்படியெல்லாம் விளையாடுகிறது,,,, பற்றி மிக மிக சுருக்கமாக பேசினார். நிஜமாகவே நான் வெட்கப்படுகிறேன். என்னால் எதுவும் செய்யமுடியாததர்கு. என்னால் முடிந்தவரை பரப்புரை என் நண்பர்களிடத்தில் செய்வேன். நீங்களும் செய்யுங்களேன்.

Monday, January 17, 2011

வணக்கம் நண்பர்களே

நந்தலாலா திரைப்படம் பார்த்தேன். மிக மிக எளிமையான ஒரு படைப்பு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல ஒரு இயற்கையான நறுமணம் வீசும் ஒரு மலர். திரைப்படத்தின் ஆரம்ப காட்சி மொத்த திரைப்படத்தின் சுருக்கம். புற்களின் மேல் தண்ணீர் தழுவி செல்லும்போதே திரையில் எழுத்துக்கள் மிதக்கும். புரிந்துவிடுகிறது இது ஒரு இயல்பான படம். அந்த ஒரு காட்சி என் கிராமத்தின் வயல் வரப்பில் நடக்கும்போது பார்த்ததை மீட்டது. மரத்தின் உச்சியிலிருந்து ஊர்ந்து கீழிறங்கும் ஒளிப்பதிவாளரின் கண்கள் ரசனையானது. என்னைப் பொறுத்தவரை இதுவே உலகத்தரம். ஒவ்வொரு காட்சியுமே உறைந்து ஆரம்பிக்கிறது மீண்டும் உறைகிறது. திரைக்கதை பயணம் நமக்கும் ஒரு இருக்கை இட்டு இழுக்கிறது. எனக்கு இருக்கையிலிருந்து எழ இயலவில்லை. தனியான, பார்வையாளனை அதிர்வுக்குண்டாக்கும் இறுதிக்காட்சி இல்லை. அதுவே ஒரு உலக தரத்திற்கான படம். மிக மிக மகிழ்வை தரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால். ஒளிப்பதிவாளர் காமெராவை ஆட்டி ஆட்டி கதை சொல்லவில்லை. இல்லையென்றால் இந்த டெக்னாலஜி யின் தொல்லை தாங்க முடியவில்லை. இசை நம்முடன் பேசிக்கொண்டே இருப்பதால் காட்சிக்கு வசனங்கள் பேசித்தான் புரிய வேண்டும் என்ற முறையை அடித்து நொறுக்குகிறது.  இங்கே நல்ல படமென்றால் துயரத்தையே காட்டனம்னு சிலர் தவறா புரிஞ்சிருக்காங்க. இப்படம் அவ்வாறு இல்லாமல்  இயல்பையே காட்டுகிறது. எனக்கு எந்த ஒரு காட்சியிலும் அழவேண்டும் என்று தோன்றவில்லை. சில காட்சிகள் மனதை நெகிழ செய்தது . குறைகள் எனக்கு தெரிந்து சில மட்டுமே. மிஷ்கின் ஏன் கொஞ்சம் நிறுத்தி உறைந்து அப்புறம் பேசுகிறார் மறுபடியும் உறைந்து கொள்கிறார். உண்மையிலேயே மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கு வராத நடிப்பு அவருக்கு.
திரையில் ஒரு நல்ல நடிகர் கிடைத்ததுக்கு சினிமாவுக்கு நன்றி. நிறைய காட்சிகள் மிக மிக நன்றாக இருந்தது.... மிஷ்கினும் சிறுவனும் சாலையில் நிற்கும் போது இடையில் வெள்ளைக்கோடு இருப்பது. பாம்பு ஊர்ந்து செல்வது. நிழல் சிறுவனுக்கு வழிகாட்டுவது. பாலத்துக்கு அடியில் உட்கார்ந்து இருக்கும் போது வெளியே மழை பெய்வது...கிளையிலிருந்து வேரை பார்த்து இருக்கும் கோணம்.... நிறைய... இந்த திரைப்படம் ஒரு ஜப்பானிய படத்தின் தழுவல் என்று குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.  எத்தனை பேர் தழுவி எடுத்து தரங்கெட்ட படத்தை தருகிறார்கள். அதற்கு இது எவ்வளவோ மேல். கீழே kikkujiro  என்ற அந்த ஜப்பானிய படத்தின் link வைத்துள்ளேன் பார்த்து copy  யா இல்லையான்னு சொல்லுங்க.
ஒரு சந்தோசம் நல்ல இயக்குனர்களும் நல்ல நடிகர்களும் நம் திரைத்துறைக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்க நல்ல திரைப்படம் கொடுக்கும் இயக்குனர்கள்.



http://www.mysoju.com/kikujiro/the-movie/part-1/

Sunday, January 2, 2011

வணக்கம் நண்பர்களே
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
எனக்கு புது வருடம் இதில் எல்லாம் ஒரு நம்பிக்கை இல்லை
அது ஒரு கொண்டாட்டம் இருப்பதினால் அதை நான் ஆமோதிக்கிறேன். ஏனென்றால் உலகம் மணிநேர கணக்கையே நம்புகிறேன். அதையே நான் வயதாகக் கணக்கிட்டு கொள்கிறேன். இதுவே நமக்கும் நம்புகிறேன். ஆகையினால் பிறந்த நாளில் கூட எனக்கு ஒப்புதல் இல்லை. ஏனென்றால் கடந்த நொடி, நிமிடம், நாள், மாதம், வருடம் திரும்புவதே இல்லை. அது ஒரு ஏக்கதுக்கான நம் நினைவுப் பையில் உறங்க வேண்டியவை. அது ஒரு
மருந்தாகவே நாம் நம் மன நோயுக்காக பயன் படுத்திக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் அதுவே சிலருக்கு நோயாகவே மாறிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் ஒரு உண்மை மட்டும் எனக்கு புரிய வருகிறது.

நம் வாழ்க்கை
ஒவ்வொரு நொடியும்
உடலும் மனமும் உயிர்ப்போடு இருக்க
நன்கு பசிக்க புசிக்க வேண்டும்
அதற்கு அன்புதான்
உணவாக இருக்க வேண்டும்.
எனக்கும் எல்லோருக்கும்
அன்பு உணவு கிடைக்க வேண்டும்
கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நொடியும்.