வணக்கம் நண்பர்களே
நந்தலாலா திரைப்படம் பார்த்தேன். மிக மிக எளிமையான ஒரு படைப்பு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல ஒரு இயற்கையான நறுமணம் வீசும் ஒரு மலர். திரைப்படத்தின் ஆரம்ப காட்சி மொத்த திரைப்படத்தின் சுருக்கம். புற்களின் மேல் தண்ணீர் தழுவி செல்லும்போதே திரையில் எழுத்துக்கள் மிதக்கும். புரிந்துவிடுகிறது இது ஒரு இயல்பான படம். அந்த ஒரு காட்சி என் கிராமத்தின் வயல் வரப்பில் நடக்கும்போது பார்த்ததை மீட்டது. மரத்தின் உச்சியிலிருந்து ஊர்ந்து கீழிறங்கும் ஒளிப்பதிவாளரின் கண்கள் ரசனையானது. என்னைப் பொறுத்தவரை இதுவே உலகத்தரம். ஒவ்வொரு காட்சியுமே உறைந்து ஆரம்பிக்கிறது மீண்டும் உறைகிறது. திரைக்கதை பயணம் நமக்கும் ஒரு இருக்கை இட்டு இழுக்கிறது. எனக்கு இருக்கையிலிருந்து எழ இயலவில்லை. தனியான, பார்வையாளனை அதிர்வுக்குண்டாக்கும் இறுதிக்காட்சி இல்லை. அதுவே ஒரு உலக தரத்திற்கான படம். மிக மிக மகிழ்வை தரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால். ஒளிப்பதிவாளர் காமெராவை ஆட்டி ஆட்டி கதை சொல்லவில்லை. இல்லையென்றால் இந்த டெக்னாலஜி யின் தொல்லை தாங்க முடியவில்லை. இசை நம்முடன் பேசிக்கொண்டே இருப்பதால் காட்சிக்கு வசனங்கள் பேசித்தான் புரிய வேண்டும் என்ற முறையை அடித்து நொறுக்குகிறது. இங்கே நல்ல படமென்றால் துயரத்தையே காட்டனம்னு சிலர் தவறா புரிஞ்சிருக்காங்க. இப்படம் அவ்வாறு இல்லாமல் இயல்பையே காட்டுகிறது. எனக்கு எந்த ஒரு காட்சியிலும் அழவேண்டும் என்று தோன்றவில்லை. சில காட்சிகள் மனதை நெகிழ செய்தது . குறைகள் எனக்கு தெரிந்து சில மட்டுமே. மிஷ்கின் ஏன் கொஞ்சம் நிறுத்தி உறைந்து அப்புறம் பேசுகிறார் மறுபடியும் உறைந்து கொள்கிறார். உண்மையிலேயே மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கு வராத நடிப்பு அவருக்கு.
திரையில் ஒரு நல்ல நடிகர் கிடைத்ததுக்கு சினிமாவுக்கு நன்றி. நிறைய காட்சிகள் மிக மிக நன்றாக இருந்தது.... மிஷ்கினும் சிறுவனும் சாலையில் நிற்கும் போது இடையில் வெள்ளைக்கோடு இருப்பது. பாம்பு ஊர்ந்து செல்வது. நிழல் சிறுவனுக்கு வழிகாட்டுவது. பாலத்துக்கு அடியில் உட்கார்ந்து இருக்கும் போது வெளியே மழை பெய்வது...கிளையிலிருந்து வேரை பார்த்து இருக்கும் கோணம்.... நிறைய... இந்த திரைப்படம் ஒரு ஜப்பானிய படத்தின் தழுவல் என்று குறை சொல்வதை நிறுத்த வேண்டும். எத்தனை பேர் தழுவி எடுத்து தரங்கெட்ட படத்தை தருகிறார்கள். அதற்கு இது எவ்வளவோ மேல். கீழே kikkujiro என்ற அந்த ஜப்பானிய படத்தின் link வைத்துள்ளேன் பார்த்து copy யா இல்லையான்னு சொல்லுங்க.
ஒரு சந்தோசம் நல்ல இயக்குனர்களும் நல்ல நடிகர்களும் நம் திரைத்துறைக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.
வாழ்க நல்ல திரைப்படம் கொடுக்கும் இயக்குனர்கள்.
http://www.mysoju.com/kikujiro/the-movie/part-1/
எந்த மொழி திரைப்படத்தின் தழுவலாக இருந்தாலும் இது தமிழில் சிறந்த படம்தான். ஆனால் ஜப்பானிய படமான கிக்குஜுரோ படத்தில் இருக்கும் சில காட்சியமைப்பு இதில் இடம்பெற்றதை இயக்குனர் ஒப்புக்கொள்ளாததுதான் அவர் மேல் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.அவர் அடுத்து படமான யுத்தம் செய் படமும் கொரியன் திரைப்படமான தி மெமரிஸ் ஆஃப் மர்டர் திரைப்படத்தின் தழுவல்தானாம்.
ReplyDelete