Tuesday, November 2, 2021

ஜெய் பீம்

சில படங்கள் நம்மை உறங்க செய்வதில்லை
அப்படி ஒரு திரைப்படம் ஜெய்பீம்
ஆரம்ப காட்சியிலேயே முகத்தில் அறைந்து சொல்கிறது நம் சாதிய பாகுபாடை
இருளரின் உதவிகேட்டு வந்தும் வண்டியில் தோளில் கை வைக்கும் போது பார்க்கும் ஒரு பார்வை நம் இந்தியாவின் உண்மை முகம்
ரொம்ப வன்முறைப்பா போலீஸ் இப்டியெல்லாமா நடக்குவாங்க என்று வெள்ளந்தியாய் கேட்கும் அப்பாவி நடிக மனிதர்களுக்கு ஜெயராஜ் பென்னிக்ஸை தெரியாதது மாதிரியும் நடிப்பவர்களே
எல்லா சாதிக்காரங்க கால்லயும் விழுந்து ஓட்டு கேட்குறோம் ஒங்க கால்லயும் விழனுமாடானு கேட்கும் ஆண்ட பரம்பரை பார்வை உச்சம்
இந்த சின்ன குஞ்சு எலியா நம்ம பெருங்குடலை நிறைக்கப்போகுதுனு சொல்லும் செங்கனியின் பச்சாதாபம் நான் எக்கிட்டேரியன்னு ஜீவகாருண்யம் சொல்றவனைவிட மேலே
நாம திருடனோம்னு ஒத்துகிட்டா காலத்துக்கும் அதை நாம சொமக்கனும்னு சொல்லும்போது எளிய மனிதர்களிடம் மட்டுமே எஞ்சியிருக்கும் மானமும் அறிவும் அழகே
உங்களுக்கு நான் எந்த ஃபீஸும் கொடுக்கலனு சொல்லும் போது சந்த்ரு உன்கிட்ட பாம்பு கடிச்சு வைத்தியத்துக்கு வந்தவர் காசு இல்லைனா மருந்து கொடுக்க மாட்டியானு கேட்க...அதற்கு செங்கனி என் மாமாவ அடிச்சு கொடுமைப்படுத்துன போலீஸ் காரர் வந்தாலும் சிகிச்சை கொடுப்பேன்னு சொல்லும் செங்கனி மாதர்குல கடவுள் அமைப்பு
இந்த கேஸ்ல நியாயம் கிடைச்சு எனக்கு கிடைக்கும் நிம்மதியான தூக்கமே எனக்கு கிடைக்கும் ஊதியம் என்று சொல்லும் சந்த்ரூ பரிசு எதிர்பாரா நேர்மையின் அசல்.

எல்லா தலைவர்களும் மாறுவேடப்போட்டியில் வந்திருக்காங்க அம்பேத்கர் மட்டும் இல்லை என வினவும் சந்த்ரூ

நீ அரசியல் அமைப்பு சட்டத்தையே எழுதும் அறிவாளியா இருந்தாலும் தாழ்த்தப்பட்டவன் தானே என அம்பேத்கரை நினைக்கும் நம் ஒவ்வொருவரின் சாதிமூளையின் நகல் முகம்

இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.
இந்த படம் நமக்குள் கடத்திப்போகும் உணர்வுகள்நம்மை நிச்சயம் உறங்கவிடாது 

நம்ம நாட்டுல சட்டத்துல ஓட்டை நிறையா இருக்குபாநியாயம்லாம் கிடைக்காது என்று நேர்மை விளம்பரம் செய்வோர்க்கு சட்டத்தில் உள்ள ஓட்டை மட்டுமே தெரிகிறது நீதிமான்களுக்கு சட்டத்தின் மாண்பும் மனித நேயமும் தெரிகிறது

நீதிபதி சந்த்ரூக்களுக்கு அவை தெரிந்திருக்கிறது 

இந்த சட்டங்களை  அண்ணல் அம்பேத்கர் நமக்கு கொடுத்திருக்கும்ப்போதே நம்மை ஏறி மேய்கிறார்கள்

இன்னும் மனுநீதியை, மனுதர்மத்தை சட்டமாக்கியிருந்தால்தனக்கு மேலே உள்ள ஒவ்வொருத்தன்  பின்புறத்தையும் கீழே உள்ளவன் கழுவவிட்டுகிட்டே இருக்கும்படி வச்சிருப்பார்கள்

நாம எல்லாரும் அவா புட்டத்தை கழுவிவிட்டுகிட்டே இருந்திருப்போம்

நல்லவேளை ஆங்காங்கே அம்பேத்கர் சந்த்ரூக்களை பிரசவிச்சுகிட்டே இருக்கிறார்

நன்றி அம்பேத்கர் ஐயா 

















திரைப்படத்தில் ராசாக்கண்ணுவான மணிகண்டன், செங்கேனியான லீமா ஜோஸ், சந்த்ரூவான சூர்யா, மொசக்குட்டி, பிரகாஷ்ராஜ், சோமசுந்தரம் திரையில் வாழ்கிறார்கள். 

தவறவிடாதீர்கள் இத்திரைப்படத்தை
- ரெ

No comments:

Post a Comment