''பரோட்டா சாப்பிடாதீங்கோ!''
தளிர்கள் மற்றும் ஐந்தினை நடுவம் ஆகிய அமைப்புகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 22-ம் தேதி 'மாற்று வாழ்வியலுக்கான ஒன்றுகூடல்’ மற்றும் 'சிறுதானிய உணவுத் திருவிழா’வை தர்மபுரியில் நடத்தின. கொள்ளுச்சாறு, தினை அல்வா, கேழ்வரகு லட்டு, வரகு பாகுவடை, சாமை மல்லிச் சோறு, பனிவரகு சாம்பார் சோறு, பலதானியக் கொழுக்கட்டை, ராகி இட்லி, சோள தோசை, குதிரைவாலிப் புட்டு, தினைப் பாயாசம் என பலவிதமான சிறுதானிய உணவுகளையும் ருசி பார்த்தனர் தர்மபுரிவாசிகள்!
நிகழ்ச்சியில் பேசிய 'ஹீலர்' உமர் ஃபாருக், ''நோய்களுக்கு அடிப்படையே, உணவுகள்தான். உணவுப் பழக்கத்தையும், உணவுகளையும் முறைப்படுத்திக் கொண்டால்... உங்களுக்கு நீங்களே மருத்துவராக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் பற்பசைகளில், 18 மில்லி கிராம் அளவுக்கு 'நிக்கோடின்’ கலக்கப்பட்டுள்ளது. இவை, ஆறு சிகரெட் பிடித்தற்கு சமம்'' என்று அதிர்ச்சி கிளப்பிய ஃபாரூக்,
'
'இன்றைக்குப் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களிலேயே மிகவும் பயங்கரமானது பலரும் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் 'மைதா’தான். இந்த பரோட்டாவைத்தான் பலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். மைதாவில் தயாரான பொருட்களை தொடர்ச்சியாகச் சாப்பிடும்போதுதான்... நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதற்கெல்லாம் சரியான தீர்வு... நல்ல உணவுகளை நோக்கி நாம் நகர்வதுதான்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
No comments:
Post a Comment