உணவும் அதை தேர்ந்தெடுப்பதும்
உணவியல்
அறிஞர் மைக்கேல் போலன் உணவு விதிகள்
என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் 10 கட்டளைகளை நாம் எதைச் சாப்பிட
வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும்
என்பதற்கான விதிகளை அவர் எளிமையாக
வரையறை செய்திருக்கிறார். போலனின் வரையறைகளில் பல
நாமும் பின்பற்ற வேண்டியதே.
1
உணவுப்
பொருட்கள் வாங்க கடைக்குப் போகும்போது,
உங்கள் தாத்தா அல்லது பாட்டியை
கடைக்கு அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் எதையெல்லாம் சாப்பிட
அருகதை அற்றது என்று ஒதுக்குகிறார்களோ,
அவற்றை வாங்காதீர்கள்
2
உங்கள்
ஆரோக்கியத்தை மேம்படுத்துவற்காகவே உருவாக்கப்பட்ட உணவு என்று பெரிதாக
விளம்பரம் செய்யப்படும் உணவுகளைத் தேர்வுசெய்ய வேண்டாம்.
3
சிப்ஸ்,
நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை
ஒதுக்கி அதற்குப் பதிலாக பழங்கள், கொட்டைகள்,
பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகுங்கள்.
4
இயந்திரங்களால்
சமைக்கப்படும் உணவுகளை ஒதுக்குங்கள். மனிதர்களால்
சமைக்கப்படும் உணவில் உள்ள கவனமும்
ருசியும் அக்கறையும் ஒருபோதும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உணவுகளில் இருக்காது.
5
அந்தந்தப்
பருவ காலங்களில் விளைகின்ற பழங்கள், காய்கறிகள், கீரைகளை உண்ணுங்கள்.
6.
நான்கு
காலில் உள்ள விலங்குகளை உண்பது
செரிமானம் செய்ய நேரமாகும். ஆகவே,
குறைவாக உண்ண வேண்டும். பறவைகளின்
இறைச்சி சாப்பிடக்கூடியது. ஆனால், அளவோடு அறிந்து
சாப்பிட வேண்டும்
7
இயற்கையாக
விளையக்கூடிய தானியங்கள், காய்கறிகள், அரிசியைத் தேர்வுசெய்து சாப்பிடுங்கள். ரசாயன உரமிடப்பட்ட காய்கறிகளில்
அதன் பாதிப்பு இருக்கவே செய்யும்.
8
உப்பும்
சர்க்கரையும் அதிகம் சேர்க்காத உணவாக
தேர்வு செய்யுங்கள். இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
9
செயற்கை
குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, மோர், இளநீர் போன்றவற்றை
குடியுங்கள்.
10 தேவையான
உணவுப்பொருட்களை தரம் அறிந்து தேடிப்பார்த்து
வாங்க வேண்டும். விவசாயியிடம் இருந்து நேரடியாக உணவுப்பொருட்களை
பெற முடிந்தால் மிகவும் நல்லது.
No comments:
Post a Comment